பனிப் புயலின் கோரப் பிடியில்
காற்றின் வேகத்தையும்,
திசையினையும் காட்டும் கருவி சரிவர வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்தார்.
வெளியில் உள்ள கருவியில்
இருந்து, ஆய்வகத்தில் உள்ள கருவிக்கு வரும் இணைப்பில், ஏதோ கோளாறு என்பது தெரிந்தது.
புகைப் போக்கி போன்ற அமைப்புடைய அவசர கால, பாதை வழியே ஏறி மெதுவாக எட்டிப்
பார்த்தார். வானிலைக் கருவி இருக்கும் இடம் 15 மீ தூரத்தில் தெளிவாய் தெரிந்தது.
நிமிர்ந்து பார்த்த பொழுது,
ஆய்வகத்தையே காணாமல் திகைத்தார். பனிக் காற்றின் அடர்த்தி ஆய்வகத்தையே மறைத்து
விட்டது.
காற்றானது கிழக்கு திசையில்
இருந்து மேற்கு நோக்கி, வெகு வேகமாய் வீசிக் கொண்டிருந்தது.
சுதாகர் ராவ் யோசித்தார்.
ஆய்வகம் இருக்கும் திசையை நோக்கி நடந்தால், புயல் காற்றானது, தன்னை அதன் போக்கில்
தள்ளும் என்பதையும், அதனால் பாதையில் இருந்து விலகி தத்தளிக்க நேரிடும் என்பதையும்
உணர்ந்தார்.
கிழக்கு நோக்கி காற்றை
எதிர்த்து நடக்கத் தொடங்கினார். ஆனாலும்தான்
இறங்கி வந்த ஏணியைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
பனிப் புயலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, திசை
மாறிவிட்டோமோ என்ற பயம் அவரைத் தொற்றிக் கொண்டது.
பனிப் புயலின்போது பின்பற்ற வேண்டிய
நடைமுறைகளை பற்றி, கர்னல் அவர்கள் சொன்னது நினைவிற்கு வரவே, அவ்விடத்திலேயே அமர்ந்து
கொண்டார். அமர்ந்த சில நிமிடங்களிலேயே, பனி உடம்பின் அத்தனை எழும்புகளிலும்
புகுந்து, நாடி நரம்புகளை எல்லாம் சில்லிடச் செய்தது.
நேரம் செல்லச் செல்ல, கொஞ்சம்
கொஞ்சமாக நினைவினை இழக்கத் தொடங்கினார்.
தொடரும்
பதட்டமாக இருக்கிறது நண்பரே தொடர்கிறேன்
பதிலளிநீக்குதமிழ் மணம் இணைப்புடன் ஒன்று
நன்றி நண்பரே
நீக்குஎன்ன ஒரு பயங்கர அனுபவம். ஆனால் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருக்கக் கூடாது என்றும் அவர் சொல்லியிருந்ததாய் நினைவு.
பதிலளிநீக்குஆமாம் நண்பரே
நீக்குதாங்கள்சொல்வது உண்மைதான்
ஆனால் இவரோ, உறை பனியைத் தாங்கும்
உடையினைக் கூட அணியாமல் சென்று விட்டதால்
தாக்குப் பிடிக்க இயலவில்ல
நன்றி நண்பரே
TM +1
பதிலளிநீக்குசார்... கொஞ்சமாக எழுதி நிறைய சஸ்பென்ஸ்ல நிறுத்திவிடுகிறீர்களே... இது அ'நியாயம் அல்லவா...
பதிலளிநீக்குஆனாலும், அண்டார்டிகாவின் சூழ்னிலையைக் கண்ணில் கொண்டுவருகிறது. எண்ணிப்பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.
நன்றி நண்பரே
நீக்குஅந்த சூழலை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது
பதிலளிநீக்குதொடர்கிறேன்
நன்றி நண்பரே
நீக்குஅருமையாக செல்கிறது சகோ, அதே திக் திக் நெஞ்சுடன்,,,,
பதிலளிநீக்குதொடருங்கள்.
நன்றி நண்பரே
நீக்குthikkuth theriyaatha panik kaattil ,panik katalil
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குதிகில்... திகில்... அருமை.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குநினைத்துப் பார்த்தாலே பயமாக இருக்கிறது ஐயா...
பதிலளிநீக்குஉண்மைதான் ஐயா
நீக்குஆனாலும் ஆய்விற்காக அண்டார்டிகாவில் இன்றும் விஞ்ஞானிகள் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்
நன்றி ஐயா
பனிக்குளிரில் அவரின் அவலம் அறியும் ஆவலுடன்!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஒவ்வொரு முறையும் ஆங்கிலத் திரைப்பட இடைவேளை போல நிறுத்தி விடுகின்றீர்கள். ஆவல் மிகுகிறது.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குவணக்கம் !
பதிலளிநீக்குதிகில்கள் தொடரட்டும் நண்பரே தொடர்ந்துவர முயல்கிறேன்
தம கூடுதல் ஒரு வாக்கு
நன்றி நண்பரே
நீக்குபயங்கர அனுபவம் தான்..
பதிலளிநீக்குஎன் மகன் ஒரு இரண்டு வருடம் முன்பு கங்கோத்ரிக்கு(Mountaineering ) மலை ஏறிப்போனான்..
அந்தப் பதினைந்து நாட்களும் நான் பயந்துகொண்டே இருந்தேன்.
தங்கள் பதிவு அந்த ஞாபகத்தைக் கிளறிவிட்டது.
தங்கள் மகன் மலை ஏறியிருக்கிறாதா
நீக்குஅதனையும் தாங்கள் அனுமதித்திருக்கிறீர்கள்
உண்மையிலேயே தாங்கள் வீரத் தாய்தான்
நன்றி சகோதரியாரே
திக்... திக்...கென இருக்கிறது. திக்குத் தெரியாத இடத்தில்... திகிலுடன் காத்து இருக்கின்றோம்.
பதிலளிநீக்குத.ம.10
நன்றி ஐயா
நீக்குதிக்கு தெரியாத காட்டில் என்பார்கள்..
பதிலளிநீக்குஇது, அதை விடவும் பயங்கரமாக இருக்கின்றது..
பதற்றத்துடன் தொடர்கின்றேன்!..
நன்றி ஐயா
நீக்குஓர் இலக்கை அடைவதுசுலபமானகாரியமல்லஜில்லிட்டுவிடுவதைவிட
பதிலளிநீக்குவலிக்கதொடங்கிவிடுமல்லவா?அருமைசகோ.
நன்றி சகோதரியாரே
நீக்குதிகில்.. திகில்..
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குதிகில்..அனுபவம்...நல்ல இடத்தில் தொடரும் போட்டுவிடுகின்றீர்கள் ..என்னாயிற்று என்று தெரிய பதட்டம்...அது சரி ஒரே இடத்தில் அவர் அமரக்கூடாதே அதுதானே அறிவுறுத்தல் கர்னல் கொடுத்தது...இல்லையா...அடுத்து என்ன....காத்திருக்கின்றோம்..
பதிலளிநீக்குஒரே இடத்தில் அமரக் கூடாது என்பதுதான் அறிவுறுத்தல் நண்பரே
நீக்குஆனாலும் சுதாகர் ராவ் அவர்கள் குளிர்கால உடை ஏதுமின்றி சென்றுவிட்டதால்,அவரால் தாக்குப் பிடிக்க இயலாமல் நினைவினை இழந்துவிட்டார்
நன்றி நண்பரே
அதெப்படி இந்தக் குளிர்க் கொடுமையை அனுபவித்துப் பார்த்தவராக
பதிலளிநீக்குஉங்கள் எழுத்துக்கள் அமைந்துள்ளன ஐயா!..
கதையின் சுவாரஸ்யமுடன் உங்களின் கதை நடை அபாரம்!
தொடர்கிறேன்..!
நன்றி சகோதரியாரே
நீக்குஆகா திரும்ப சஸ்பென்ஸ்?
பதிலளிநீக்குஅருமையாக இருக்கிறது
நன்றி நண்பரே
நீக்குபயங்கரமான அனுபவமாக இருந்திருக்கும். பதட்டத்துடன் நானும் தொடர்கிறேன்....
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஒரு திரில்லரைப் படிப்பது போல் இருக்கிறது வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குதொடர்ந்து படித்து வருகிறேன்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅடக் கடவுளே என்ன ஆச்சு. நான் பார்த்த சில ஆங்கிலப் படங்கள் ஞாபகம் வருகின்றன.. :(
பதிலளிநீக்குஇப்படி பனிச்சிகரத்தில் ஏறி ஒரு பள்ளத்தில் விழுந்த ஹீரோவை அவரது நண்பர்கள் தேடிக் கண்டுபிடித்துக் காப்பாற்றுவார்கள். தப்பித்தாரா இவர். ?
வருகைக்கு நன்றி சகோதரியாரே
நீக்குதப்பித்திருப்பார் என நம்புகிறேன். கவலையாக இருக்கிறது. :(
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குதொடர்ந்து படித்து வருகிறேன். ஆனால் ஒவ்வொரு பதிவும் மனதை கனக்க வைக்கிறது.
பதிலளிநீக்குஎவ்வளவு கஷ்டம் என்பதை மனக்கண்ணில் காட்டி விட்டீர்கள் !
பதிலளிநீக்கு// சுதாகர் ராவ் அப்பொழுது, கடும் குளிரினை எதிர் கொள்ளும் உடையினைக் கூட அணிந்திருக்க வில்லை. சாதாரண உடையிலேயே இருந்தார். 15அடி தூரம்தானே, ஒரு சில நிமிடத்தில் திரும்பிவிடலாம் என்று நினைத்தார். இறங்கினார். நடந்தார். கருவியைச் சரி செய்தார்.
பதிலளிநீக்குநிமிர்ந்து பார்த்த பொழுது, ஆய்வகத்தையே காணாமல் திகைத்தார். பனிக் காற்றின் அடர்த்தி ஆய்வகத்தையே மறைத்து விட்டது.//
வாழ்வின் சில சமயங்களில் சாதாரணமாக நினைத்து நாம் எடுக்கும் முடிவுகள் மாறா ரணமாகி மறக்க முடியாமல் செய்து விடும் என்பதை எல்லோருக்கும் உணர்த்தும் நிகழ்ச்சிப் பகிர்வு.
வார்த்தைகளும், வர்ணனைகளும் அருமை ஐயா.
திரு.சுதாகர்ராவிற்கு அடுத்து என்ன ஆச்சு என மனம் பதைபதைக்கிறது.
நன்றி நண்பரே
நீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குசுதாகர்ராவ் இடத்தில் இருந்து யோசித்தால்......கற்பனையே மனதினை நடுங்க வைக்கிறது. நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
திடுக்கிட வைக்கிறது...உடுவை
பதிலளிநீக்கு