03 செப்டம்பர் 2015

உறை பனி உலகில் 6


பனிப் பிளவு




கர்னல் அவர்களுக்கு சில நொடிகள் ஒன்றும் விளங்கவில்லை. பின்னால் வந்து கொண்டிருந்த வண்டிக்கு என்னவாயிற்று. எங்கே போனது?

       சற்றுமுன் கேட்ட சத்தம் என்ன என்றும் முதலில் புரியவில்லை.

       கர்னல் அவர்களும், அவருடன் பயணித்த இருவரும், வண்டியில் இருந்து கீழே இறங்கினர்.

       பனிக் காற்று அவர்களின் காட்சியை மறைத்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து, பனிக் காற்று மெல்ல மெல்ல விலகிய பொழுது, தொலைவில், இரண்டாவது வண்டியின் ஒரு சிறு பகுதி மட்டும், பனித் தரைக்கு மேலே தெரிந்தது. மீதிப் பகுதியைக் காணவில்லை.


       பதறியபடி மூவரும் ஓடினார்கள். வண்டியின் அருகில் செல்வதற்குள், காரணம் தெரிந்து விட்டது. ஓட்டத்தை உடனடியாக நிறுத்தினார்கள்.

       ஓடக் கூடாது, ஓடினால் ஆபத்து என்பதும் புரிந்து விட்டது. இனி கவனமாகத்தான் காலடியினை எடுத்து வைக்க வேண்டும்.

       பனிப் பிளவு.
      

கர்னல் அவர்களைப் பின் தொட்ர்ந்து சென்ற வண்டி அல்ல இது

அண்டார்டிகா பல்வேறு பனிப் பிளவுகளைக் கொண்ட ஒரு மர்ம தேசம்.

       பனிப் பிளவுகளின் அகலமும், நீளமும், ஆழமும், சில அடிகளில் இருந்து சில கிலோ மீட்டர்களை வரை இருக்க வாய்ப்பு உண்டு.

      பனிக் காற்றின் போது, இப் பனிப் பிளவுகள் மூடப்பட்டு விடும். மூடப்பட்ட நிலையில் இருக்கும் பனிப் பிளவுகள் அதிக ஆபத்தானவை.

      காரணம் இவை கண்களுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும். தவறி இவற்றின் மீது கால் வைத்தால், முழுதாய் உள்ளே போய்விட வேண்டியதுதான்.

      அப்புறமென்ன, பனிச் சமாதிதான்.

     நல்ல வேளையாக, வண்டி விழுந்த இடத்தில், பனிப் பிளவு அதிக ஆழமில்லை.

      முதலில் வண்டியில் இருந்த ஆட்களை மெதுவாக மீட்டார்கள்.

      அடுத்து கடற்கரையில் காத்திருந்த கப்பலுக்குத் தகவல் தெரிவித்தார்கள். சிறிது நேரத்தில், தொழில் நுட்ப உபகரணங்களையும், வல்லுநர்களையும் சுமந்தபடி, ஒரு ஹெலிகாப்டர் வந்தது. வண்டி மீட்கப் பட்டது.

                                                      ,---

    இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், கர்னல் கணேசன் குழுவினரைத் தனிமையில் விட்டு விட்டு, நான்காவது குளிர்காலக் குழுவினர், தாயகம் நோக்கிப் புறப் பட்டனர்.

    1988 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல், கர்னல் குழுவினரின் தனிமை வாழ்க்கை, தொடங்கியது.

     சூரியனும் இருளைப் பரிசாய் வழங்க, மெல்ல மெல்ல மறையத் தொடங்கினான்.

    ஒவ்வொரு நாளாய் நகர்ந்து, வாரங்கள் கடந்தன. வாரங்கள் மாதங்களாகின.

     இந்தியாவின் சுதந்திர நாளும் வந்தது.
     




அகஸ்ட்டு 15, ஆண்டு 1988.

     நண்பர்களே, ஒன்றல்ல, இரண்டல்ல முழுதாய் 50 நாடுகள், தங்களது ஆய்வுக் கூடங்களை அண்டார்டிகாவில் நிறுவியுள்ளன.

     ரஷ்யா, கிழக்கு ஜெர்மனி, தென் அமெரிக்காவின் சேன், பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகள், இந்தியாவின் ஆய்வுத் தளத்துடன் ரேடியோ தொடர்பில் இருக்கும் நாடுகளாகும்.

       கர்னர் கணேசன் அவர்கள் உறை பனியாய் இருந்தால் என்ன?, கடும் குளிர்தான் வாட்டினால் என்ன? சுதந்திரத் திருநாளை சிறப்பாக கொண்டாடுவது என்று முடிவு செய்தார்.

        ஆய்வுத் தளத்தின் வெளியே, உறை பனியில் மேடை அமைத்தார். கலியான பீப்பாய்களை அழுகுற அடுக்கி, இந்தியாவின், பல ஆய்வு அமைப்புகளின் கொடிகளையும் பாங்குற பறக்க விட்டார்.

        சுதந்திர தின விழா என்றால் சிறப்பு விருந்தினர்கள் இருந்தாக வேண்டுமல்லவா?

        ரஷ்யா மற்றும் கிழக்கு ஜெர்மனியின் ஆய்வுக் குழுவின் தலைவர்கள், சிறப்பு விருந்தினர்களாய் கலந்து கொள்ள, தேசியக் கொடியை ஏற்றினார் கர்னல் கணேசன்.

      சுதந்திர தின விழாவிற்குப் பின், ஒரு மாதம் நன்றாகத்தான் நகர்ந்தது,

                 செப்டம்பர் 19 ஆம் தேதியும், வழக்கம் போல்தான் நகர்ந்து கொண்டிருந்தது. பிற்பகல் 3.00 மணி வரை.


பிற்பகல் 3.00 மணி அளவில், விஞ்ஞானி திரு குளானே என்பவருக்குத்தான், முதன் முதலில், மெதுவாக, மிக மெதுவாக, அந்த சந்தேகம் வந்தது.

      யாரோ ஒருவர் குறைவது போல் தோன்றியது. யாரிடமும் சொல்லாமல், ஆய்வுத் தளத்தின் உள்ளே, ஒரு முறைக்கு இரு முறையாய், சுற்றிச் சுற்றி வந்தார்.

      வெளியிலோ, கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து, ஓய்வின்றி வீசிக் கொண்டிருக்கும் பனிப் புயல். ஆய்வுத் தளத்தின் கதவினைத் திறந்தே பல நாட்களாகி விட்டன.

       உள்ளே இருப்பவர்களை, ஒவ்வொருவராக எண்ணினார்.


விஞ்ஞானி சுதாகர் ராவ் அவர்களைக் காணவில்லை.

                                                                                                  தொடரும்.


74 கருத்துகள்:

  1. அடடா!என்ன ஆனார் சுதாகர் ராவ்?
    ஒரு மர்மத்தொடர் மாதிரிச் செல்கிறது.
    த ம 2

    பதிலளிநீக்கு
  2. பிரமிப்பாக இருக்கிறதே... என்ன ஆனார் ? விஞ்ஞானி சுதாகர் ராவ்
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  3. கடவுளே!.. என்ன ஆச்சு அவருக்கு!..
    பனிப்பிளவுக்குள் மாட்டிக்கொண்டாரா?..

    வாசிக்கும்போதே உடல் விறைக்கிறது! எங்களின் இந்த நாட்டு வாழ்க்கை மனதில் நிழலாடுகிறது!..

    இங்கு இத்தகைய விறைக்கும் குளிர் மார்கழி, தை மாதப் பகுதியில்
    ஓரிரு தினங்கள் அல்லது வாரங்கள் ஏற்படுவதுண்டு.
    வெளியே போகும் போது தொப்பி, அல்லது தலையை வுல்லென் ஸ்காவ்வினால் சுற்றி கைகளுக்கும் கையுறை போட்டல்லாமல் போகவே முடியாது. அப்படியிருந்தும் மூச்சுக்கூட விட முடியாமல் காற்றடித்தால் விறைக்கும்.

    தொடர்கிறேன் ஐயா!..

    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறை பனி சூழலை அனுபவித்திருக்கிறீர்கள்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  4. ஆர்வத்தோடு அடுத்த பதிவினை எதிர் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. என்ன ஆனார் அவர்? ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
  6. திகில் தொடர்... ஒரு திருப்பத்தை உடைத்து மறுபடி அடுத்த திருப்பத்தை நோக்கி... தொடர்கிறேன் அய்யா

    பதிலளிநீக்கு
  7. அட ஆரம்பத்தில் இருந்து தொடர முடியாமல் போய் விட்டது. சரி முதலில் இருந்து வாசிப்போம் என்றால் நீங்கள் தொடர்ந்து போடுவதால் எனக்கு என்ன செய்வது ஏன்று தெரியாமல் இதையே வாசிக்கிறேன். மிகுதியையும் வாசித்து முடிக்கிறேன் எப்படியும் ஹா ஹா .. நாம் பனியோடு பண்ணும் போராட்டம் இப்போ புரிந்திருக்கும் இல்லையா? ம்..ம் சுதாகர் ராவ் வுக்கு என்னாச்சு என்று அறிய தொடர்கிறேன். நன்றி சகோ !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரியாரே
      போராட்டம் புரிந்து விட்டது சகோதரியாரே

      நீக்கு
  8. (இனி) ஆர்வத்துடன் தொடர்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  9. திகிலும் திருப்பமும் நிறைந்த மர்ம நாவல் படிப்பது போல் இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  10. உறை பனி உலகில் உறைய வைக்கும் பிரமிப்பான நிகழ்வுகள்..!

    பதிலளிநீக்கு
  11. அடுத்த பதிவுக்கு ஆவலுடன் தொடர்கிறேன். உறைபனியின் உக்கிரம் நன்கறிவேன் (Norway) நோர்வே நாட்டில் வசிப்பதால்... பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நார்வே உறை பனி உலகிற்கு அருகில் உள்ள நாடுதானே சகோதரியாரே
      ஆகா, கர்னல் கணேசன் அவர்கள் 480 நாட்கள் வாழ்ந்த வாழ்க்கையை தாங்கள் காலமெல்லாம் வாழ்ந்து வருகின்றீர்கள்
      தங்களின் வருகைக்கு நன்றி சகோதரியாரே

      நீக்கு
    2. இப்பொழுது வசிக்கும் இடத்தில் குறைவு சகோதரா! வடக்குப் பகுதியில் வாழ்பவர்கள் தான் இன்னும் பாதிக்கப் படுவார்கள்!

      நீக்கு
  12. பதிவு சிறியதாக இருப்பது திகில்கூட்டுவதற்கா? இந்த மாதிரி இடங்களில் அவரவர் இருக்கையையே பதிவேட்டில் அவ்வப்போது குறிக்க வேண்டும்போல் இருக்கிறது. தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  13. தெளிந்த நீரோட்டம் போன்ற நடை .....மிகுந்த ஆர்வத்துடன்

    பதிலளிநீக்கு
  14. தெளிந்த நீரோட்டம் போன்ற நடை .....மிகுந்த ஆர்வத்துடன்

    பதிலளிநீக்கு
  15. தெளிந்த நீரோட்டம் போன்ற நடை .....மிகுந்த ஆர்வத்துடன்

    பதிலளிநீக்கு
  16. என்ன ஆயிற்று. தொடர்ச்சியை எதிர்பார்க்கிறோம். விறுவிறுப்பாக வந்தபோது திடீரென நின்றதும் அதிர்ச்சியே.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் கரந்தை மாமனிதா !

    தங்கள் உறைபனி உலகில் தொடரை முதலில் இருந்து படித்திட்டு கருத்திடுகிறேன் இப்போதைக்கு எல்லாவற்றுக்கும் தமிழ்மண வாக்கினை அளித்துச் செல்கிறேன் !
    நன்றி

    என்று குறையும் இந்த வேலைப்பளு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. என்றென்றும் பணிக்குத்தான் முதலிடம் கொடுக்கப்பட்டாக வேண்டும்
      நன்றி நண்பரே

      நீக்கு
  18. #பனிச் சமாதிதான்.#
    இயற்கை மார்ச்சுவரி என்றும் இதை சொல்லலாமா:)

    பதிலளிநீக்கு
  19. சுவையுடன் தொடர் நகருகிறது.
    தொடரைப் படிக்க விருப்பம் அதிகரிக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  20. உண்மையாகவே திகில் தொடர்தான் ....தொடர்கின்றோம்...

    பதிலளிநீக்கு
  21. மர்மத் தொடர்! ஆவலைத் தூண்டுகிறது! படங்கள் அருமை!

    பதிலளிநீக்கு
  22. ஆஹா.... அவருக்கு என்ன ஆச்சு...
    மீண்டும் கிடைப்பாரா...
    ஆவலாய் ஐயா..

    பதிலளிநீக்கு
  23. என்னாச்சு ராவ்வுக்கு தொடர்கின்றேன் ஐயா!

    பதிலளிநீக்கு
  24. அன்புள்ள அய்யா,

    அண்டார்டிகா பல்வேறு பனிப் பிளவுகளைக் கொண்ட ஒரு மர்ம தேசத்தின் முடிச்சுகளை உறைய வைக்கும் பனியைப் போல... உரையும் இருக்கிறது.
    கர்னர் கணேசன் அவர்கள் சுதந்திர தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியதை விளக்கியது அருமை.

    விஞ்ஞானி சுதாகர் ராவ் அவர்களைக் காணவில்லை.... தொடருங்கள்... தொடர்கிறோம்...!
    நன்றி.
    த.ம. 15

    பதிலளிநீக்கு
  25. சுவரஸ்யமானதொடர்அதை சுவைபடதருகிறீர்கள் ,நாங்கள்தொடர்கிறோம் அருமை சகோ.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் சகோ,
    நான் சொன்ன நாவல் போல் உள்ளது தொடர், நல்ல எழுத்து நடை, அதே நேரம் வாசகனைக் கட்டிப்போடும் வார்த்தைப் பிரவாகம், அருமை,அருமை,,, தொடருங்கள் தொடர்கிறேன். வேறு பல வேலைகளால் உடன் வர இயலவில்லை,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  27. பனிப் பிளவு பயங்கரமாய் உள்ளது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலேயே பனிப் பிளவுகள் மிகவும் ஆபத்தானவைதான் சகோதரியாரே
      நன்றி

      நீக்கு
  28. மனதைப்பிசைகிற மாதிரி எழுதியிருக்கிறீர்கள்! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
  29. பெயரில்லா06 செப்டம்பர், 2015

    நல்ல தொடர் கதை.நெறைய ட்விஸ்ட் வச்சு எழுதவும்.

    பதிலளிநீக்கு
  30. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
      உறைபனியில் பாரத நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடிய மாமனிதர் கர்னல் அவர்களை மனதார பாராட்டுகிறேன், விஞ்ஞானி சுதாகர் ராவ் அவர்களை காணாமல் மனது துடிக்கிறது நண்பரே.

      நீக்கு
  31. கோகுலாஷ்டமி வேலைகளில் மும்முரமாக இருந்தபடியால் உடனே வரமுடியவில்லை. சுதாகர் ராவ் பத்திரமாக இருக்கிறார் தானே! கவலையாக இருக்கிறது. அடுத்த பதிவுக்குக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கவலை அதிக நாள் நீடிக்காது சகோதரியாரே
      நன்றி

      நீக்கு
  32. அத்தனை குளிரிலும், கஷ்டத்திலும் விடாமல் சுதந்திர தினம் கொண்டாடியதற்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் பாராட்டித்தான் ஆக வேண்டும் சகோதரியாரே
      நன்றி

      நீக்கு
  33. சுதாகர் ராவ் என்ன ஆனார் படிக்கும்போதே நடுங்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  34. ஐயோ! என்னவாயிற்று சுதாகர் ராவ் அவர்களுக்கு? அடுத்தப் பதிவிற்குத் தாவுகிறேன்

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு