தாய் மண்ணே வணக்கம்
சூரியனில் இருந்து வரும்
அணுக் கதிர்களால், பூமியின் காந்த வட்டத்திற்குள் காலடி எடுத்து வைக்க
முடிவதில்லை.
காரணம் பூமியின் அணுக்
கதிர்கள், சூரியஅணுக் கதிர்களை நேருக்கு நேராய் எதிர்கொண்டு, இது எங்கள் ஏரியா,
உள்ளே வராதே என நெஞ்சம் நிமிர்த்தி நிற்பதுதான்.
ஆனாலும் பூமியின் வட துருவத்திலும், தென்
துருவத்திலும் இந்தக் காந்த வட்டம் மிகவும் குறைவாக இருக்கும்.
எனவே சூரியனின் கதிரியக்க
அணுக்கள் இவ்விரு பகுதிகளிலும், பூமிக்கு மிக அருகில் வருகின்றன.
அப்படி பூமிக்கு மிக அருகில்
வரும் கதிரியக்க அணுக்களும், வட தென் துருவ கதிரியக்க அணுக்களும், ஒன்றை ஒன்று
நேருக்கு நேராய் சந்தித்து, வான வீதியில், ஒரு மாபெரும் மல்யுத்தத்தினையே
நடத்தும்.
கர்னல் அவர்கள் உறைபனியில் மல்லாந்து
படுத்துக் கொண்டு முழுக் காட்சியினையும் கண்டு ரசிக்கத் தொடங்கினார். உறை பனி
உலகில் இத்தனை நாள் பட்ட துன்பமெல்லாம், இக் காட்சியினைக் காண்ணாரக் காணத் தானோ
என்று எண்ணி எண்ணி வியந்தார்.
மின் காந்த மோதல்களால் வானமானது. பல
வித வண்ணங்களில், பலவித உருவங்களில், நிமிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டே இருந்தது.
ஐந்தாவது குளிர்காலக்
குழுவினருக்கு இயற்கை அளித்த விருந்து இந்த வண்ண ஜாலம்.
இவ்வாறாக கர்னல் கணேசன்
அவர்களின் தலைமையில், இக் குழுவினர், அண்டார்டிகாவில் செலவிட்ட நாட்கள் ஒன்றல்ல,
இரண்டல்ல, முழுதாய் 480 நாட்கள்.
நினைத்துப் பாருஙகள், குடும்பத்தினரை
விட்டுவிட்டு, வெளியூர் சென்றால், இரண்டாம் நாளே குடும்பத்தின் நினைவு வந்து,
நம்மை வாட்டும். எப்பொழுதடா வீட்டிற்க்குச் செல்வோம் என மனது ஏங்கும்.
முழுதாய் குடும்பத்தை
விட்டுப் பிரிந்து 480 நாட்கள். அதுவும் உறை பனி உலகில். அதுவும் முன் பின்
அறிமுகமற்ற 14 பேருடன்.
தக்ஷின் கங்கோத்ரியில் கால் பதித்த
முதல் நாளே, ஆய்வகத்தின் சுவற்றில், அனைவரும் பார்க்கும் வகையில், கர்னல் கணேசன்
எழுதினார்.
You are amongst the Brave.
இப்பொழுது நீங்கள் உலகிலேயே, தைரியமானவர்களின் மத்தியில் இருக்கிறீர்கள்.
தனது குழுவினரைத் தொடர்ந்து
உற்சாகப் படுத்தியும், அவ்வப்போது குழுவினரிடையே ஏற்படும் சிறு சிறு கருத்து
வேறுபாடுகளை, சலசலப்புகளை, விரக்தி எண்ணங்களை எல்லாம், ஒரு தாயின் பரிவோடு
உணர்ந்து, பாசமிகு தந்தையாய் அரவணைத்து, பேசிப் பேசி சரிசெய்து, தன் பயணத்தை
வெற்றிப் பயணமாக்கினார் கர்னல் கணேசன்.
தொடக்கம் என்று
ஒன்றிருந்தால், முடிவு என்று ஒன்றிருக்க வேண்டுமல்லவா.
1988 ஆம் ஆண்டு டிசம்பர் 21
ஆம் நாள், அடுத்த குளிர்காலக் குழுவினர், தக்ஷின் கங்கோத்ரிக்கு வருகிறார்கள்
என்னும் செய்தி வந்தது.
செய்தி கிடைத்த மறு நொடி,
கர்னலின் மனம், தங்களுக்குக் கிடைத்த வரவேற்பை எண்ணிப் பார்த்தது. அதுவா வரவேற்பு?
நாங்கள் தருகிறோம், வரவேற்பு, உண்மையான வரவேற்பு.
அடுத்த நொடி செயலில் இறங்கினார்.
டிசம்பர் 21, காலை 8.00 மணி. அடுத்த
குளிர்காலக் குழுவினரைத் தாங்கிய ஹெலிக்காப்டர், கப்பலில் இருந்து புறப்பட்டு,
வின்னில் வட்டமிட்டது.
ஹெலிகாப்டர் இறங்க வேண்டிய இடம்,
உறைபனியில், நீல வண்ணத்தில் பளிச்சிட்டது. அதன் அருகிலேயே, காற்றின் திசையினைத் தெரிவிக்கும்,
துணியிலான கூம்பு வடிவிலான (wind socks )
கொடி.
ஹெலிகாப்டர் இறங்கிய இடத்தில் இருந்து,
ஆய்வுத் தளம் வரை, இரு மருங்கிலும், பல்வேறு ஆய்வுத் துறைகளின் கொடிகள் காற்றில்
படபடத்து, புதுக் குழுவினரை வாருங்கள், வாருங்கள் என்று அழைத்தன.
ஆய்வுத் தளத்தின் முன், கைகளை முடிந்த
வரையில் உயர்த்திய நிலையில், இரண்டு கிரேன் வண்டிகள். அதில் குழுவினரை வரவேற்கும்
வரவேற்புப் பதாகை.
ஹெலிகாப்டர் பனியில் இறங்கியதும்,
குழுவினர் அலங்கரிக்கப் பட்ட வண்டிகளில் ஏற்றப் பட்டனர்.
இரண்டு, இருசக்கர பனி வாகனங்கள் (Snow Scooter) வழி காட்டியவாறு முன் செல்ல, வண்டிகள்
பின் தொடர்ந்தன.
இதுமட்டுமல்ல, கர்னல் அவர்கள்,
குழுவினருக்கு சந்தன மாலைகளை அணிவித்து வரவேற்கும் பொழுது, இதோ நாங்களும்
வரவேற்கிறோம் என்று கூறி இணைந்து கொண்டன, தொடர் வெடி முழக்கங்கள். வான
வேடிக்கைகள்.
முதன் முதலில் உறை பனியில் கால் வைத்தக்
குழுவினர் மயங்கித்தான் போனார்கள். பூமிப்பந்தின் மூலையில், இப்படி ஒரு வரவேற்பா?
நெகிழ்ந்துதான் போனார்கள்.
தன் பணியினைச் செம்மையாகச் செய்து
விட்டோம் என்ற நிறைவு கர்னலுக்கு.
தாய் மண் வா,வா என்றழைக்கின்றது.
தாயகம் திரும்புவதற்கான நேரம்
வந்து விட்டது.
உறை பனியில் வாழ்ந்த நாட்களின்
நினைவாக, நினைக்கும் பொழுதெல்லாம், நெஞ்சம் இனிக்கும் வகையில், உறை பனி உலகில்
இருந்து, எப் பொருளை எடுத்துச் செல்ல்லாம் என்று யோசித்தார்.
தக்ஷின் கங்கோத்ரியில் குடி
புகுந்த முதல் நாளே, கர்னல் கணேசன், சன்னா நல்லூர் மண்ணையும், அண்ணா நகர்
மண்ணையும், ஜம்மு காஷ்மீர் மண்ணையும், உறை பனியில் தூவி, விதையாய் வித்திட்டதை
அறிவீர்கள்.
இமயம் வரை படையெடுத்து வென்ற, சேரன்
செங்குட்டுவன், இமய மலையில் இருந்து கல் எடுத்து வந்து, கண்ணகிக்குச் சிலை எடுத்த
காட்சி, கர்னல் அவர்களின் கண் முன்னே தோன்றி மறைந்தது.
நவீன சேரன் செங்குட்டுவன், கர்னல்
கணேசன் அவர்கள், சுமார் 50 கோடி ஆண்டுகளாக, உறை பனியில் மூழ்கிக் கிடந்த
கற்பாறைகள் பலவற்றைப் பெயர்த்தெடுத்தார்.
கிரேன்களில் உதவியுடன்
கப்பலில் ஏற்றி, தாயகம் நோக்கிப் பயணித்தார்.
1989 ஆம் ஆண்டு மார்ச் 26
அன்று கோவா கடற்கரையில் கால் பதித்தனர்.
தாய் மண்ணே வணக்கம்.
உறை பனி உலகினல், உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த கற்கள்,
இன்று
பெங்களூர்,
இந்திய இராணுவத்தின்பொறியாளர் படைப பிரிவின்,
மூத்த பிரிவான
Madras Engineer Group
அலுவலகத்தின் முன்பாகவும்,
கர்னல் கணேசன் அவர்களின்
வீட்டு வரவேற்பறையிலும்,
சன்னா நல்லூர்,
அகத்தூண்டுதல் பூங்காவிலும்,
பேரளம் காரைக்கால் சாலையில் அமைந்துள்ள,
மாங்குடி கிராமத்தில்,
வேதாத்ரி மகரிஷியின் சீடர்களுள் முதன்மையானவரான,
டாக்டர் அழகர்மானுஜம் அவர்கள் அமைத்துள்ள
பெரு வெளி ஆலயத்திலும்
சென்னை, அண்ணா நகர் வீட்டு வாசலுக்கு அருகிலும்
தலை நிமிர்ந்து நிற்கின்றன.
---------------
![]() |
சன்னா நல்லூர் அகத்தூண்டுதல் பூங்காவில் கர்னல் அவர்களுடன் நானும் நண்பர்களும் |
நண்பர்களே,
கடந்த ஒரு மாத காலமாக,
உறை பனி உலவில்
என்னுடன் இணைந்து பயணித்த
தங்களுக்கும்,
இத்தொடரினை எழுதிட அனுமதி வழங்கிய
குடியரசுத் தலைவரின்,
வசிஸ்ட் சேவா விருது பெற்ற
கர்னல் பா.கணேசன் அவர்களுக்கும்
நண்பர்களே,
பூமிப் பந்தின் தென் கோடியில்,
முழுதாய் 480 நாட்களைச் செலவிட்டு,
இந்தியாவிற்கும், நம் தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்த,
வீரத் தமிழரும்,
இரு இந்தியப் போர்களில் பங்கு பெற்று
விழுப்புண் விருது பெற்றவரும்,
குடியரசுத் தலைவரின்
வசிஷ்ட் சேவா விருது பெற்றவருமான
கர்னல் பா.கணேசன் அவர்கள்,
ஒரு வலைப் பதிவரும் ஆவார்.
அக்டோபர் 11 ஆம் நாள்
புதுகையில் நடைபெறவிருக்கும்
பதிவர் சந்திப்புத் திருவிழாவிற்கு
வருகை தர இருக்கிறார்.
நம்முடன் கலந்துரையாட ஆவலுடன் காத்திருக்கிறார்.
கர்னல் அவர்களின்
மின்னஞ்சல்
pavadai.ganesan@gmail.com
அலைபேசி எண்
94440 63794
மிகவும் அருமையாக எங்களை உறைபனி உலகில் வழிநடத்தினீர்கள்..
பதிலளிநீக்குமெய்சிலிர்க்கின்றது.. என்றும் நினைவில் இருக்கும்!..
நன்றி ஐயா
நீக்குநிறைவாயிருக்கிறது.
பதிலளிநீக்குதம +1
உறை பனி உலகின் இன்ப துன்பங்களை விளக்கிக்காட்டி விட்டீர்கள்.
பதிலளிநீக்குஅருமை
நன்றி ஐயா
நீக்குமிகவும் நன்றாக இருந்தது. அடுத்தடுத்த தொடர்களில் என்ன நடக்குமோ? என்ற ஆவலைத் தூண்டுவதாக இருந்தது.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅருமையான சுவை நிறைந்த தொடர். இதை தந்த திற்கு உங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குகர்னல் கணேசனைக் காண ஆவல் பெருகுகின்றது. அவரைத் தொடர்பு கொள்ள முடியமா?
நிச்சயமாக சந்திக்கலாம் ஐயா
நீக்குகர்னல் அவர்களின் மின்னஞ்சல் முகவரி
மற்றும்
அலைபேசி எண் முதலியவற்றை
தங்களக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன் ஐயா
கட்டுரையிலும் சேர்த்து விட்டேன்
நன்றி ஐயா
ஒரு சரித்திர நிகழ்வுகளை கண்முன் கொண்டுவந்து நிறுத்திய நண்பருக்கு நன்றி கர்னல் திரு. கணேசன் அவர்களுக்கு எமது ராயல் சல்யூட்.
பதிலளிநீக்குதமிழ் மணம் 4
நன்றி நண்பரே
நீக்குஉங்களுடனான இந்த உறைபனி உலகப்பயணம் என்றுமே மறக்க இயலாதது!
பதிலளிநீக்குமறக்க இயலாத பயணம்தான்
நீக்குநன்றி சகோதரியாரே
இனிய தமிழில் தெளிவான நடையில் விருவிருப்பான திருப்பங்களுடன் கூடிய நிறைவான தொடர்.......
பதிலளிநீக்குஇனிய தமிழில் தெளிவான நடையில் விருவிருப்பான திருப்பங்களுடன் கூடிய நிறைவான தொடர்.......
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குகடைசியில் சொன்னதுதான் ஹைலைட்..
பதிலளிநீக்குவருக வருக ...
இருகரம் கூப்பி வரவேற்கிறோம்...
தொடர் அருமை தோழர்
அழைத்தமைக்கு நன்றி நண்பரே
நீக்குதிருவிழாவில் சங்கமிப்போம்
நன்றி
தோழர்
பதிலளிநீக்குதம +
நன்றி நண்பரே
நீக்குஉங்களுடன் ...இல்லை இல்லை கர்னலுடன் நாங்களும் உறைபனியில் இருந்தது போன்ற ஒரு தாக்கத்தைத் தாங்கள் தங்கள் எழுத்தின் மூலம் ஏற்படுத்திவிட்டீர்கள். ஆஹா கர்னல் வருகின்றாரா புதுக்கோட்டைக்கு!!1 சந்திக்க மிகவும் ஆவலுடன் இருக்கின்றோம்..நண்பரே! அவரது தொடர்பு எண்ணையும், மின் அஞ்சலையும் குறித்துக் கொண்டோம்...மிக்க நன்றி...
பதிலளிநீக்குகர்னலுக்கு ராயல் சல்யூட்!
புதுகையில் சந்திப்போம் நண்பரே
நீக்குநன்றி
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
இப்படியான வீரன் தேசத்தின் விடி வெள்ளி போற்றப்பட வேண்டிய காவல் தெய்வங்கள். சிறப்பாக எடுத்துரைத்தமைக்கு நன்றி ஐயா த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி நண்பரே
நீக்குதிகிலூட்டும், திடுக்கிட வைக்கும் நிகழ்வுகளையும், அதே சமயம் உறுதி மனப்பான்மையையும் கொண்ட நம் வீரர்களின் சாகசங்களையும் கர்னலுடன் அழைத்துச்சென்று காட்டிய விதம் போற்றத்தக்கதாகும். இவரைப் போன்ற மண்ணின் மைந்தர்களை மறவாமல் இருப்பதே நாம் அவர்களின் தியாகத்திற்குச் செய்யும் மரியாதை. புதுக்கோட்டையில் அம்மாவீரரைச் சந்திப்போம்.
பதிலளிநீக்குஇவரைப் போன்ற மண்ணின் மைந்தர்களை மறவாமல் இருப்பதே நாம் அவர்களின் தியாகத்திற்குச் செய்யும் மரியாதை.
நீக்குஉண்மைதான் ஐயா
நன்றி
ஆஹா மகிழ்ச்சி தரும் செய்தி.பதிவுலகம் சார்பாக அந்த சாதனையாளரை வரவேற்போம்
பதிலளிநீக்குநிச்சயமாக பதிவுலகம் சார்பாக வரவேற்போம் ஐயா
நீக்குநன்றி
நாங்களும் உறைபனி உலகில் அவரோடு இருந்த மாதிரி உணர்வு. சிறப்பான மனிதரைப் பற்றி அவரது அனுபவங்கள் பற்றி எங்களுடனும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்குநிறைவான தொடர். பகிர்ந்தமைக்கு நன்றி. புதுக்கோட்டையில் சந்திப்பு இனிமையாக நடைபெற வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குநடுவில் இரண்டு பதிவுகளை படிக்காமல் இருந்திருக்கிறேன். மீண்டும் வந்து முழுவதுமாக படிக்கவேண்டும்.
பதிலளிநீக்குஉறையவைக்கும் அனுபவங்களை அழகான தலைப்பிட்டு பகிர்ந்த உங்களுக்கும் கர்னலுக்கும் எனது வணக்கமும் வாழ்த்தும்.
நன்றி சகோதரியாரே
நீக்கு'உறைபனி உலகில்..’ நிறைவாக மனதில்..
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குகர்னல் .கணேசன் ஜி அவர்கள் , பதிவர் சந்திப்பில் பங்கேற்பதுடன் சிறப்புரை ஆற்றினால் நல்லாயிருக்குமே :)
பதிலளிநீக்குகர்னல் அவர்கள் சிறப்புரை ஆற்றத் தயாராகத்தான் இருக்கிறார் நண்பரே
நீக்குஆனால் நேரம் கிடைக்குமா என்பதுதான் தெரியவில்லை
பார்ப்போம்
நன்றி நண்பரே
சுவாரஸ்யமான தொடர். 10 தொடர் பதிவுகள் தொடர்ந்து வந்த வேகமே தெரியவில்லை. நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குgood narrations.good writing.good taste of expressions
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஉறைபனிப் பயணம் நிறைவாய் முடிந்ததில் மகிழ்ச்சி. புதுகை வர இயன்றால் கல்னல் கணே சனை சந்திக்கலாமே.....! வாழ்த்துகள்
பதிலளிநீக்குபுதுகைக்கு வர முயன்று பாருங்கள் ஐயா
நீக்குநன்றி
அருமையான தொடர்! சிறப்பாக நிறைவு செய்தமைக்கு பாராட்டுக்கள்! புதுகைக்கு வர இயலுமானால் கர்னலை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்! நன்றி!
பதிலளிநீக்குஅவசியம் புதுகைக்கு வாருங்கள் நண்பரே
நீக்குநன்றி
ஒரு மூச்சில் படித்தேன். மிகவும் ஸ்வாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறீர்கள்..
பதிலளிநீக்குவிருவிருப்பான தொடர். அருமையான நடை. எண்ணியதை எழுத்தில் வடிக்கும் ஆற்றல் உங்களிடம் உள்ளது. வாழ்க.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குதொட்ர் பதிவு எழுவது கடினம் ஐயா அதை சிற்ப்பாக தொடர்ந்து எழுதி ஒரு வரலாற்றை நம் கண்முன்னே அறிமுகம் செய்ததுக்கு வாழ்த்த்துகள்! நேரம் வரும் போது கர்னல் அவர்களையும் சந்திக்கும் ஆசையில்!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குதொடர் நிறைவுப் பகுதியா ஐயா!
பதிலளிநீக்குமீண்டும் வந்து படிக்கின்றேன்!
இன்று வந்து போனதைப் பதிவு செய்கின்றேன்!
வாழ்த்துக்கள் ஐயா!
த ம +1
நன்றி சகோதரியாரே
நீக்குA million thanks to Mr.Jayakumar and through him to the Blog viewers.I went to Antarctica in Nov 1987 and returned in 1989 march.I felt that not only the Govt but also the public took such expedition very very casual and unpatriotic.But the person who are entrusted with such a mission can not do so.I was selected in may 1987 and preparation started since then.Both for self as I was to settle my wife and children for 1.5 years and for the team whom I had not met till the date of departure.So I had mentally lived in Antarctica from may 1987.As the viewers would have appreciated the wintering of my team was a great success and set presidence in many aspect.The bubbling(could be boiling also)feeling of mine was looking for an outlet which came out in the form of my book "Ven panip parappilum sila viyarvaith thuligal. the book was priced Rs.150 by M/SPalaiappa Bros and some one had ordered 7500 copies.After some time many unknown people kept on calling me in appreciation of the book.The aim of the book was to kindle patriotic spirit amongst the readers and motivate younger generations to scale new heights.I am gratefull to Mr.J for puting across my points in his own way.Thanks a lot to all viewers and their expressions.we will meet at Pudukkottai.
பதிலளிநீக்குதங்களின் சாதனை தமிழகத்தின் வரலாற்றிலும், இந்தியாவின் வரலாற்றிலும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
நீக்குதங்களுக்கு எனது சார்பிலும், வலைப் பூ நண்பர்களின் சார்பிலும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா.
தங்களைப் புதுக்கோட்டையில் சந்திக்க வலை அன்பர்கள் மகிழ்வுடன் காத்திருக்கிறார்கள்.
உறைபனி உலக உலா திகிலையும் மகிழ்வையும் தந்தது. நன்றி..உடுவை
பதிலளிநீக்குஎன் இனிய தமிழ் உலகிர்க்கு வண்க்கம்.இப்பொழுதுதான் தமிழ் பழகிக்கொண்ட்ருக்கிறேன்.மீண்டும் எழுதுவேன்.
பதிலளிநீக்கு