பனியில் புதைந்தவர்
சாலைகளோ, அறிவிப்புப் பலகைகளோ இல்லாத, அண்டார்டிகாவில்
நடக்கும் பொழுது, சிறிது வழி மாறினாலும், நம் கதி அதோ கதிதான்.
ஆறு மாதங்கள் இருளில் மூழ்கிக் கிடக்கும்
பகுதியில் அல்லவா இனி குடியிருந்தாக வேண்டும். எனவே இது ஒரு முக்கியப் பயிற்சி
ஆகும்.
ஆய்வுத் தளத்திற்கு வெளியே இருக்கும்
பொழுது, பனிக் காற்றில் சிக்கிக் கொண்டால், பாதை தெரியாது. அச்சமயங்களில், நாம்
நேராகத்தான் நடக்கிறோம் என்று எண்ணி நடக்கத் தொடங்கினால், முற்றிலும் மாறுபட்ட
திசையில் பயணித்து, ஆபத்துடன் கை குலுக்க வேண்டிய சூழல் உருவாகும்.
எனவே, பனிக் காற்றில் சிக்கிக் கொண்டால்,
நடக்கவே வேண்டாம். அங்கேயே உட்கார்ந்து விடுங்கள். பனிக் காற்றில், கொட்டும்
பனியில் முழுவதுமான் மூழ்கிப் போகா வண்ணம், அவ்வப்போது இடம் மாறி அமர வேண்டும்
என்பதே, கர்னல் அவர்கள், தன் குழுவினருக்கு அளித்த பயிற்சி ஆகும்.
தகவல் அறிந்த கர்னல், அனைவரையும் ஒன்று
கூட்டினார்.
என் குழு உறுப்பினர்களைக் காப்பது என்
பொறுப்பு. நானே செல்கிறேன். பனிப் புயலுள் நுழைந்து தேடுகிறேன் எனக் கிளம்பினார்.
மருத்துவ முதலுதவிக்கான ஏற்பாடுகளைச்
செய்தார். ஒரு வேளை சுதாகர் ராவ் அவர்களைத் தேடச் செல்லும் இருவருமே திரும்பி
வராவிட்டால், குழுவினை வழி நடத்த, தலைமையேற்க வேண்டியவர் யார் என்பதையும்
அறிவித்து விட்டுப் புறப்பட்டார்.
கதவுகளைத்
திறப்பது என்பது இயலாது. காரணம் ஆய்வுத் தளமே பனிக்குள் புதைந்திருந்தது. புகைப்
போக்கியைத் தவிர வேறு வழியில்லை.
இருவரும் ஏணியில் ஏறி,
வெளிப்புற ஏணி வழியே இறங்கினார்கள்.
ஒரு மிகப் பெரிய நைலான்
கயிற்றில் தன்னையும், சிறிது இடைவெளி விட்டு ஸ்ரீகுமாரையும் பிணைத்துக் கொண்டார்.
கயிற்றின் மறு முனையை வெளிப் புற ஏணியில் கட்டினார்.
தன்னிடம் இருந்த கயிற்றை கொஞ்சம் கொஞ்சமாகத் தளர விட்டுக் கொண்டே, ஒவ்வொரு இடமாக, பனியில் தடவிக் கொண்டே இருவரும் நகர்ந்தார்கள்.
பனிப் புயலின் வேகத்தில்
கண்களைக் கூட முழுதாய் திறக்க இயலாத நிலை. 30 நிமிடத் தேடலுக்குப் பின்,
காலடியில், மிருதுவாய் ஏதோ இடிபட்டது.
தொடரும்
சுதாகர் ராவ் அவர்கள் நிலை என்னவாயிற்று..? ஆவலுடன்...
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஉங்கள் ஆரம்ப வரிகள். நான் தினமும் இது போல நடந்து பழகுகிறேன். நாற்பது அடிகள் என்னால் நேராக நடக்க முடிகிறது!
பதிலளிநீக்குபனிப்புயலில் இப்படி இறங்குவதற்கு தனி தைரியம் வேண்டும். தலைமைப் பண்பு.
நாற்பது அடிகள் நேராக நடப்பது என்பது ஒரு சாதனை நண்பரே
நீக்குவாழ்த்துக்கள்
நன்றி
ஆகா என்ன இவ்வளவு சஸ்பென்ஸ்
பதிலளிநீக்குஜோரா இருக்கு சார் என்று ஸ்ரீ சொன்னார்
அவர் எப்போதும் ஜோர் என்று சொன்னேன்.
தம +
தங்களுக்கும் ,நண்பர் ஸ்ரீ அவர்களுக்கும்
நீக்குநன்றி நண்பரே
ஆச்சரியமான தகவல்கள். அடுத்த பகுதிக்கு ஆவலுடன்.
பதிலளிநீக்குஅய்யா தாங்கள் ஏன் பதிவு இடுவது இல்லை
நீக்குஜோதிஜி ஐயா அவர்களின் பணி அத்தகையது
நீக்குஓய்வறியா உழைப்பிற்குச் சொந்தக்காரர்
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
நீக்குமனதை உறைய வைக்கும் தொடர் . புத்தக மாக வரவேண்டிய தகவல்கள்
பதிலளிநீக்குபனிக்காட்டு பயணத்தை தொடர்கிறோம்
நன்றி ஐயா
நீக்குபனிப்புயலின் தேடுதலுக்குள் -
பதிலளிநீக்குநானும் தொடர்கின்றேன்!..
நன்றி சகோதரியாரே
நீக்குகாப்பாற்றப்பட்டாரா சுதாகர்? தொடர்கிரேன் அண்ணா
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குரொம்பவும் அழகாய் எழுதி வருகிறீர்கள்! இறுதி வரி ..பகீரென்கிறது....
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குவணக்கம் சகோ,
பதிலளிநீக்குபனிப்புயலின் தேடுதலுக்குள் நானும் உறைந்துபோய்,,,,,,,,,,
தொடர்கிறேன்.
நன்றி சகோதரியாரே
நீக்குபதிவைப்படித்துக் கொண்டிருக்கும்போது காலை நன்கு ஊன்றிக் கொண்டேன். புயலிலிருந்து தப்பித்துக்கொள்ள. தொடர்ந்து படிக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குவீரர்களைப் பற்றிய ஈரமான - பனி கலந்த - வரிகள். தொடர் நன்கு செல்கின்றது.
பதிலளிநீக்குஐயா,
நீக்குமதங்களும் சில விவாதங்களும்
வாங்கிவிட்டேன்
படிக்கவும் துவங்கிவிட்டேன்
நன்றி ஐயா
மனதை அதிரவைக்கும் தொடர்!..
பதிலளிநீக்குஉங்கள் எழுத்து என்னும் கயிறால் கட்டப்பட்டு நாங்களும்
உங்கள் பின்வருகிறோம்.. அல்ல தொடருகிறோம் ஐயா!...
த ம +1
நன்றி சகோதரியாரே
நீக்குஒரே திக் திக் திக் தான்! மனம் பதைக்கிறது. அடுத்து என்ன ஆயிற்றோ! :(
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குத்ரில்லிங்க் தொடர்தான்!
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குசின்னச் சின்னவிஷயங்களாகத் தோன்றுபவை உண்மையில் நல்ல படிப்பினைகளைத் தரவல்லவை. சுபமாகச் செல்லும் என்று எதிர் நோக்குடன்
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குபனிப் புயலில் சரியாய் குளிர்கிறது
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஹப்பா என்ன ஒரு திகில் சுவாரஸ்யங்கள் நிறைந்த அனுபவம் அவர்களுக்கு! தைரியமிக்கவர்கள்! கர்னல் குழுவின் மிகச் சிறந்த ஒரு தலைவராக இருந்திருக்கின்றார்....ஆளுமைத்திறன் மிக்க தலைவர்!
பதிலளிநீக்குஅருமை...தொடர்கின்றோம்...என்னாயிற்று ராவிற்கு என்று அறிய...ஒன்றும் ஆகியிருக்காது...என்ற நம்பிக்கையுடன்
கர்னல் அவர்கள் ஆளுமைத் திறன் மிக்கவர்தான் நண்பரே
நீக்குநன்றி
நல்லதொரு சஸ்பென்ஸ் அருமை நண்பரே தொடர்கிறேன்...
பதிலளிநீக்குதமிழ் மணம் 13
நீக்குநன்றி நண்பரே
நீக்குபனிப் புயலின் கொடூரத்தை உங்கள் பதிவின் மூலம் உணர முடிந்தது !
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஒரு திகில் தொடர். சொல்வதை மட்டுமல்ல எழுதுவதையும் சுவையும் எதிர்பா்ர்ப்பும் இருக்கத் தக்க வகையில் எழுதி வரும் தங்களுக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குபடிக்கவே இவ்ளோ திக் திக்... உண்மையில் கர்னல் அவர்களின் மனநிலை அப்பொழுது என்னவாய் இருந்திருக்கும்... அருமை அய்யா தொடர்கிறேன்
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே
நீக்குஉலகின் கோடியில், கர்னல் அவர்களின் மனநிலை குறித்து எண்ணி எண்ணி வியந்துள்ளேன்
நெஞ்சுரம் படைத்தவர்
நன்றி நண்பரே
அன்புள்ள கரந்தையாரே!
பதிலளிநீக்குஆறு மாதங்கள் இருளில் மூழ்கிக் கிடக்கும் பகுதியில் அல்லவா இனி குடியிருந்தாக வேண்டும்.
பனியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசி கொள்ளும்
அந்தி பொழுதில் வந்து விடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரை திருப்பி தந்து விடு
30 நிமிடத் தேடலுக்குப் பின், காலடியில், மிருதுவாய் ஏதோ இடிபட்டது.
விறுவிறுப்பாக இருக்கிறது.
த.ம.15
அருமை அருமை பர பர .... பனிப்புயல் ....
பதிலளிநீக்குஅருமை அருமை பர பர .... பனிப்புயல் ....
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குதொடர் அருமையாக கயிற்றில் இறங்குவது போல நானும் பின் வருகின்றேன்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குதிகிலோடு முடிக்கிறீர்கள் ஒவ்வொரு தடவையும் ஆவலோடு தொடர்கிறேன் நன்றி சகோ !
பதிலளிநீக்குகர்னலின் கடமை உணர்வும், அவர் நானே தேடிச் செல்கிறேன் என்று சென்றதும் பிரமிக்க வைக்கிறது.
பதிலளிநீக்குகர்னல் அவர்களின் கடமை உணர்வு போற்றுதலுக்கு உரியது ஐயா
நீக்குநன்றி
இறுதி வரி என்னவாக இருக்குமோ என்ற திகிலைத் தந்தது.
பதிலளிநீக்குதொடருங்கள் சகோ. தொடர்கிறேன்.
சுவையான பதிவு
பதிலளிநீக்குசிறந்த வழிகாட்டலும் கூட
தொடருங்கள்
என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குஒரு இராணுவத் தலைமைப் பண்பினையும் நெஞ்சுரத்தையும் கடமையுணர்வினையும் கர்னல் அய்யாவிடம் உணரமுடிகிறது. அத்துடன் அவருடைய பல்வேறு பாதுகாப்பு உத்திகளையும் அறியும்பொழுது அவர்மேல் ஏற்படும் பிரமிப்பு பெருகுகிறது. தங்கள் தொடருடன் தொடர்கிறேன்.
அருமை... தொடர்வேன் சகோதரா!
பதிலளிநீக்குஅவர்களின் உணவு, தினப்படி வாழ்க்கை முறைகளெல்லாம் வருமா? ஐந்து வருடங்களுக்குத் தேவையான உணவு - எப்படி பாக்கெட்டில் இருக்குமா?
பதிலளிநீக்கு