05 செப்டம்பர் 2014

கல்வி, தியாகத் திருநாள்    1920 ஆம் ஆண்டு, மைசூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவருக்கு, தங்கள் பல்கலைக் கழகத்திற்கு வந்து பணியாற்றுமாறு கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பெற்றது. வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அப் பேராசிரியர், மைசூர் பல்கலைக் கழகத்தில் தான் ஆற்றி வந்தப் பணியினைத் துறந்து, கல்கத்தா புறப்பட ஆயத்தமானார். புகை வண்டி மூலம் கல்கத்தா செல்ல ஏற்பாடு செய்திருந்தார். பயண நாளும் வந்தது.


       பயண நாளன்று, காலை முதலே, மைசூர் பல்கலைக் கழகத்தில், அப் பேராசிரியரிடம் பயின்ற மாணவர்கள், அவரின் இல்லத்திற்கு முன் குவியத் தொடங்கினர். நேரம் ஆக, ஆக மாணவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றது. பேராசிரியரை அழைத்துச் செல்வதற்காக, குதிரைகள் பூட்டப்பட்ட கோச் வண்டி, வீட்டின் முன் தயார் நிலையில் நிறுத்திவைக்கப் பட்டிருந்தது.

          பேராசிரியர் வீட்டை விட்டு வெளியே வருகிறார். பேராசிரியர் வாழ்க வாழ்க என மாணவர்கள் முழக்கமிடத் தொடங்குகின்றனர். பேராசிரியரை கோச் வண்டியில் அமர வைக்கின்றனர். வண்டியிலிருந்த குதிரைகளை அவிழ்த்து விட்டுவிட்டு, மாணவர்களே கோச் வண்டியை இழுத்துக் கொண்டு புகை வண்டி நிலையம் நோக்கி, தங்கள் பேராசிரியரை ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். பேராசிரியர் வாழ்க வாழ்க என்னும் முழக்கம் விண்ணை முட்டுகின்றது. இதுநாள் வரை உலகம் கண்டிராத அற்புதக் காட்சி. புகை வண்டி நிலையம் வந்தவுடன், கோச் வண்டியிலிருந்த தங்கள் ஆசிரியரை மாணவர்கள்,தங்களின் தோள்களில் சுமந்து செல்கின்றனர்.

     பேராசிரியர் பயணிக்க வேண்டிய தொடர் வண்டிப் பெட்டியை அடைந்தவுடன் கீழே இறக்கி, வாய் விட்டுக் கதறி அழுதவாறு பேராசிரியருக்கு பிரியா விடை தருகின்றனர். பேராசிரியரும் கலங்கிய விழிகளுடனும், குளிர்ந்த உள்ளத்துடனும், கையசைத்து விடைபெறுகின்றார்.

      பல்கலைக் கழகப் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும், இந்தியத் தூதராகவும் பணியாற்றி இந்தியக் குடியரசுத் தலைவராகவும் உயர்ந்த இம்மாமனிதர் டாக்டர் எஸ். இராதாகிருட்டினன் ஆவார். இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாளைத் தான், ஆசிரியர் தினமாக பாரதமே கொண்டாடி மகிழ்கின்றது.

           டாக்டர் எஸ்.இராதாகிருட்டின்ன் அவர்களின் நினைவினைப் போற்றுவோம்.

     நண்பர்களே, இந்நாள் டாக்டர் எஸ்.இராதாகிருட்டின்ன் அவர்களின் பிறந்த நாள் மட்டுமல்ல.
    
 

தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் எண்ணி, எண்ணிப் பெருமைப்பட வேண்டிய நாளும் ஆகும்.


கப்பலை யோட்டி கடுங்காவல் தண்டனையில்
உப்பிலாக் கூழுண் டுடல் மெழிந்தோன் – ஒப்பிலாச்
செந்தமிழ்ச்செல்வன் சிதம்பரனை அன்போடு
சிந்தனை செய் நெஞ்சே தினம்.


எனக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போற்றும்,

செக்கிழுத்தச் செம்மல்
வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்
பிறந்த நாளும் இன்றேயாகும்.

     இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகப் போராடியதற்காக, ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தமைக்காக, இரட்டை ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் செக்கிழுத்த செம்மல், சிறையினின்று மீண்டு வந்தபின், சந்தித்ததெல்லாம் வறுமை, வறுமை, வறுமை ஒன்றினைத்தான்.

      பகலெல்லாம் செக்கிழுத்தச் சிதம்பரனார், இரவில் தான் ஆலன் எழுதிய As a man Thinketh  என்ற ஆங்கில நூலை மனம் போல வாழ் எனத் தமிழிலும், திருக்குறளின் அறத்துப் பாலை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து தமிழன்னைக்கு அமுது படைத்தார்.

     நண்பர்களே, கர்மவீரன், தென்னாட்டுத் தலைவர், செக்கிழுத்தச் செம்மல், கப்பலோட்டிய தமிழன், தொழிலாளர்களின் தோழன் என்றெல்லாம் புகழப்பட்ட சிதம்பரனார், மரணப் படுக்கையில் வீழ்ந்து, இறுதி மூச்சினை சுவாசித்த, அந்த சில விநாடிகளில் கூட, அவருக்கு ஓர் ஆசை, தன் அருகில் இருந்த, காங்கிரஸ் இயக்கத் தொண்டர் சிவகுரு நாதன் அவர்களைப் பார்த்து, ஒரு பாடலைக் கூறிப் பாடுங்கள் என்றார்.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
    என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?
    என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?

     மகாகவி பாரதியின் பாடல் வரிகள், செவிகளில் நுழைய, நுழைய, இறுதி மூச்சினைக் கூட, சுதந்திர தேசத்தில் விட முடியவில்லையே, என்ற ஏக்கத்தோடு, கண் மூடி மீளா உறக்கத்தில் ஆழ்ந்தார் வ.உ.சிதம்பரம் பிள்ளை.

செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்
நினைவினைப் போற்றுவோம்

------------------------

நண்பர்களே,

    நான் ஆசிரியராகப் பணியாற்றும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், எனது வகுப்பில், பத்தாம் வகுப்பு மாணவியருக்கு, ஆசிரியர் தினத்தை முன்னிட்டும், செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டும், பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியினை நடத்தினேன். போட்டிகளில் வெற்றி பெற்றோரை, எனது நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்கள் வாழ்த்திப் பேசி பரிசில்களை வழங்கினார்.

     இந்நிகழ்ச்சியில் எனது நண்பர்களும், பள்ளி ஆசிரியர்களுமான திரு து.நடராசன் அவர்களும், திரு வி.பாலசுப்பிரமணியன் அவர்களும், திரு சு.கோவிந்தராசன் அவர்களும் கலந்து கொண்டு, நிகழ்வினைச் சிறப்பித்தனர்.

பள்ளித் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் அவர்கள்
மாணவிகளிடைய உரையாற்றுகிறார்


உடற் கல்வி ஆசிரியர் திரு து.நடராசன் பரிசு வழங்குகிறார்

ஓவிய ஆசிரியர் திரு சு.கோவிந்தராசன் பரிசு வழங்குகிறார்


அறிவியல் ஆசிரியர் திரு வி.பாலசுப்பிரமணியன் பரிசு வழங்குகிறார்

     

58 கருத்துகள்:

 1. செக்கிழுத்த சிதம்பரனாருக்கும் இன்றுதான் பிறந்த நாளா! மனித மனம் எவ்வளவு நன்றி கெட்டது! நீங்கள் நினைவு படுத்தவில்லைஎன்றால் தெரிந்தே இருக்காது. நன்றி நண்பரே! (2) ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. வ.உ.சி. பிறந்த நாளாகிய இன்று அவரைப் பற்றிய பதிவினைப் படித்து நினைவு கூர்ந்தோம். நன்றி.

  பதிலளிநீக்கு
 3. ஆசிரியரை மாணவர்கள்,தங்களின் தோள்களில் சுமந்து செல்கின்றனர்.//ஆஹா நெகிழ்சியான விஷயம்

  பதிலளிநீக்கு
 4. செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்
  நினைவினைப் போற்றுவோம்

  ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. ''எழுத்தறிவித்தவன் இறைவன்'' அந்த போற்றுதலுக்குறிய பணி செய்யும் தங்களுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் எமது வணக்கங்கள் நண்பரே... இன்றைய நாளில் எனது ஆசிரியர் திரு.குருந்தன் அவர்களை நினைவு கூர்கிறேன்.
  இன்றைய தினம் தங்களது பதிவினை எதிர் பார்த்தேன் நண்பரே... எனது நம்பிக்கை வீண் போகவில்லை பதிவிற்க்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. பெயரில்லா05 செப்டம்பர், 2014

  இவ்விரு விடயங்களையும் காலையில் முகநூலில் வாசித்தறிந்தேன்.
  ஆசிரியர் தினம் என்று கூகிளில் போட இத்தகவல் வந்தது. தங்கள் பதிவும் மிக நன்று.
  இனிய நன்றிகள்.
  ஆசிரியரே தங்களிற்கும் வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 7. அன்பின் ஜெயக் குமார்

  மறைந்த முன்னாள் குடியர்சுத் தலைவர் சர்வ பள்ளீ இராதா கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான இன்று இத்தினத்தை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.

  இதே தினத்தில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களையும் நினைவு கூறுகிறோம். இன்று தான் அவரது பிறந்த நாளாகும்.

  கரந்தை ஜெய்க்குமார் இரு பெரும் தலைவர்களீன் பிறந்த நாளான இன்று இருவரின் தின்மாகக் கொண்டாட அவரது பள்ளியில் நல்ல முறையில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி சிறப்புற செய்திருக்கிறார். அவரைப் பாராட்ட சொற்களே கிடையாது.

  பாராட்டுகள்
  நல்வாழ்த்துகள் ஜெயக் குமார்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 8. செக்கிழுத்த செம்மலின் தியாகம் மறக்கப் படுவது வேதனைக்குரியதுதான் !
  த ம 2

  பதிலளிநீக்கு
 9. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

  செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்
  நினைவினைப் போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 10. இன்றைய மாணவ சமூகத்துக்கு வழிகாட்டும் பகிர்வு ஐயா இனிய வாழ்த்துக்கள் உங்களுக்கும்.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம்
  ஐயா.

  ஆசிரியர் தின நிகழ்வை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் அத்தோடு செக்கிழுத்த வ.உ பற்றியும்சிறப்பாக எடுத்துச்சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா.
  த.ம3வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 12. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, ஆசிரியர் தினத்தினையும் [மாண்புமிகு முன்னாள் குடியரசுத்தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள்], கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சி அவர்களின் பிறந்த நாளினையும் கொண்டாடிய காட்சிகளும் அவர்களைப் பற்றிய பதிவும் அருமை. மேலும் இதே தினம் அன்னை தெரசா அவர்களின் நினைவுத்தினமாகவும் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய தியாகத்தினையும் இந்த நாளில் போற்றுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே
   அடுத்த ஆண்டிலிருந்து அன்னை தெரசாவின் நினைவுநாளினையும் விழாவில் சேர்த்துக் கொண்டாடுவோம்

   நீக்கு
 13. // மகாகவி பாரதியின் பாடல் வரிகள், செவிகளில் நுழைய, நுழைய, இறுதி மூச்சினைக் கூட, சுதந்திர தேசத்தில் விட முடியவில்லையே, என்ற ஏக்கத்தோடு, கண் மூடி மீளா உறக்கத்தில் ஆழ்ந்தார் வ.உ.சிதம்பரம் பிள்ளை.//
  // பேராசிரியர் பயணிக்க வேண்டிய தொடர் வண்டிப் பெட்டியை அடைந்தவுடன் கீழே இறக்கி, வாய் விட்டுக் கதறி அழுதவாறு பேராசிரியருக்கு பிரியா விடை தருகின்றனர். பேராசிரியரும் கலங்கிய விழிகளுடனும், குளிர்ந்த உள்ளத்துடனும், கையசைத்து விடைபெறுகின்றார்.
  //
  நெகிழ வைத்த பதிவு! பகிர்விற்கு மிக்க நன்றி! பள்ளிப் பருவத்தை நினைவூட்டிச் சென்ற படங்களும் அருமை! நன்றி!

  பதிலளிநீக்கு
 14. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
  அரிய தகவல்களுடன் பதிவு மிளிர்கின்றது.
  தங்களுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியதில் மட்டற்ற மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா
   அலைபேசியில் அழைத்து ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைக் கூறியது மட்டற்ற மகிழ்வினை அளித்தது. நன்றி ஐயா

   நீக்கு
 15. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 16. வணக்கம்,

  1. டாக்டர் எஸ்.இராதாகிருட்டிணன் அவர்களை மாணவர்கள் சிறப்புற நடத்திய விதம் படித்து மகிழ்ந்தேன்.

  2. செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சி. பெருமகனாரும் கல்வியின் மேல் பெரும் நாட்டம் கொண்டிருந்தார் திருக்குறளின் அறத்துப் பாலை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார். அவரின் பேத்தி மும்பையில் வங்கி ஒன்றில் பணிபுரிகிறார். தியாகி வ.உ.சி. எழுதிய படைப்புகளை அச்சிட்டு வெளியி்ட்டுள்ளார். என்னிடம் பிரதிகள் உள்ளன. அடுத்தமுறை தஞ்சை வரும் போது நற்பணி புரியும் தங்களுக்கு உரித்தாக்குவேன்.

  கப்பலோட்டிய வ.உ.சி கடைசி காலத்தில் வறுமையில் உழன்று
  "வந்த கவிஞர்க்கெலாம் மாரியெனப் பல்பொருளும்
  தந்த சிதம்பரவன் தாழ்ந்தின்று
  சந்தமில் வெண்பாச் சொல்லிப்
  பிச்சைக்கு பாரால்லெம் ஓடுகின்றான்
  நாச்சொல்லும் தோலும் நலிந்து"
  என நண்பர்க்கு எழுதியதாகச் சொல்வார்கள்.
  இதை படிக்கும் போதெல்லாம் வேதனை நெஞ்சை முட்டும்.

  செந்நீர் விட்டல்லவா சுதந்திரம் பெற்றுத் தந்திருக்கிறார்கள்!!!

  3. பள்ளியில் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கியது பாரட்டதக்கது.

  தொடரட்டும் தங்கள் பணி!

  அன்புடன்,
  இரா. சரவணன்

  பதிலளிநீக்கு
 17. அரிய பல தகவல்கள், நானும் நாளிதழ் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் இன்று வ.உ.சி நினைவு நாள் என்று. படங்கள் அருமை ஐயா..

  பதிலளிநீக்கு
 18. அரிய பல தகவல்கள், நானும் நாளிதழ் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் இன்று வ.உ.சி நினைவு நாள் என்று. படங்கள் அருமை ஐயா..

  பதிலளிநீக்கு
 19. ஆசிரியர் தினம் என்று நாடே அறியும், கொண்டாடும். வ.உ.சி. நினைவு தினத்தைப் பலரும் நினைவுகூறுவதில்லையே..நானும்தான். அதை நினைவூட்டிய உங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரரே. மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தி கற்க ஊக்குவிக்கும் உங்களுக்கு என் வணக்கங்கள். ஆர்வத்துடன் பங்குபெற்று பரிசு பெரும் மாணவிகளைப் பார்க்கும்பொழுது மகிழ்வாய் உள்ளது
  த.ம +1

  பதிலளிநீக்கு
 20. எப்போதுமே நாம் ஒருவருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உரிமை உடைய அடுத்தவருக்குத் தர மறந்து விடுகிறோம்! ஆசிரியர் தினத்துக்கு நல்ல ஒரு பதிவு. வாழ்த்துகள் ஸார்.

  பதிலளிநீக்கு
 21. சிறப்பானநாளில் நல்லபகிர்வு. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 22. நல்ல பதிவு ,வாழ்த்துக்கள்.ஒரு ஆசிரியர் அமர்ந்திருக்கிற குதிரை வண்டியை மாணவர்களே இழுக்க தலைப்பட்ட மனோநிலைதான் இங்கு பெரிதாய்ப்படுகிறது.

  பதிலளிநீக்கு
 23. செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு படுத்தியது பெருமைக்குரியதே. சிறப்புப் பதிவு.
  ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சகோதரரே ...!

  பதிலளிநீக்கு
 24. முதலில் என் தாமதித்த வருகைக்கு வருந்துகிறேன். திரு ராதாகிருஷ்ணன் பற்றிய அஎய்திகள் அறிந்திருந்தாலும் அதுவேஉங்கள் தனி நடையில்மெருகு பெறுகிறது. அடுத்த ஆசிரியர் தினத்தன்று நிச்சயமாக வஉசி யும் நீங்களும் நினைவுக்கு வருவீர்கள். வௌசியும் பாரதியின் நண்பர்தானே. இருக்கும்போது கண்டு கொள்ளப்படாமல் விட்டவர்கள். இறந்தபின் தூக்கிவைத்துப்போற்றுகிறோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா, நமது சமூகம் ஒருவர் வாழும் காலத்தில் அவரைப் போற்றுவதில்லை
   மறைவிற்குப் பிறகே கொண்டாடுகிறோம்
   வருத்தத்திற்கு உரியததான் ஐயா
   நன்றி

   நீக்கு
 25. எழுத்துப்பிழைகள் கருத்து வெளியான பிறகு என்னை கூச வைக்கிறது.மன்னிப்பு வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுத்துப் பிழை இருந்தால் என்ன ஐயா
   மன்னிப்பு என்ற பெரிய வார்த்த்தையினி இனி தயவு செய்து பயன்படுத்தாதீர்கள்
   நன்றி ஐயா

   நீக்கு
 26. நல்ல பதிவு. ஆசிரியர் தினம் மட்டுமே நினைவில் வைத்து, நமது சுதந்திரத்திற்காக போராடிய மாமனிதர்களுள் ஒருவரான வ.உ.சி. யை மறந்து விட்டோம்.... :(

  ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 27. திரு இராதாகிருஷ்ணன், திரு வஉ சி இருவரையும் ஆசிரியர் தினத்தன்று நினைவு கூர்ந்து எல்லோரையும் சிந்தனைக் கடலில் ஆழ்த்திவிட்டீர்கள். இருவருமே என்றைக்கும் மறக்கக் கூடாதவர்கள்.
  பள்ளி மாணவிகளுக்கு பரிசுகள் கொடுத்து சிரித்துப் பேசி பாராட்டும் தலைமை ஆசிரியர் என்னை மிகவும் கவர்ந்தார். ஆரோக்கியமான சூழலில் மாணவிகள் கல்வி கற்பது வரவேற்கத்தக்கது. பாராட்டுக்கள், ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக இது போன்ற ஒரு தலைமையாசிரியரைப் பெற மாணவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் சகோதரியாரே
   அருமையான மனிதர், திறமையான ஆசிரியர், பழகுதற்கு இனியவர்
   நன்றி சகோதரியாரே

   நீக்கு
 28. தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் நண்பரே! கடந்த 4 தினங்களாக னேரமின்மை காரணமாக.....

  நல்ல பதிவு. செக்கிழுத்தச் செம்மலுக்கும் அதே நாளில் பிறந்த நாள்! அறியாத தகவல். மிக்க நன்றி!

  தாமதமான ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 29. தாமதமானால் என்ன நண்பரே
  வாழ்த்திற்கு நன்றி
  தங்களுக்கும் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 30. வரலாற்று நாயகர்களின் வரலாற்றை எங்களுக்குத் தந்து வரலாறு படைக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள். அண்மைக்காலமாக விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்துள்ளதால் தாமதமான எனது வருகைக்குப் பொறுத்துக்கொள்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாமதமானால் என்ன ஐயா
   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

   நீக்கு
 31. மிகவும் தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும் ஜெயக்குமார் சார்.

  தங்களின் பதிவுகளை எல்லாம் படித்து தான் நான் நிறைய வரலாற்று செய்திகளை தெரிந்து கொண்டேன். அது போல் தான் இந்த பதிவும்.

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாமதமானால் என்ன நண்பரே
   வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

   நீக்கு
 32. அருமை தோழர்

  ஆசிரியர் தின வாழ்த்தொலியில் நான் சிதம்பரனாரை மறந்துவிட்டேன்
  குற்றவுணர்வு சுடுகிறது ...
  பொறுப்புள்ள பதிவு தோழர்
  தொடர்க

  பதிலளிநீக்கு
 33. ஆசிரியர் தின வாழ்த்துக்கள், வ.வு.சி அவர்கள் பற்றிய பதிவு அருமை. உங்கள் பள்ளி நிகழ்வுகள் பற்றிய புகைப்படங்கள் மாணவர்களின் ஆர்வத்தை நன்றாகவே எடுத்துரைக்கிறது

  பதிலளிநீக்கு
 34. பெயரில்லா10 செப்டம்பர், 2014

  sir atfirst i convey my happy teachers day wshes............. such a wonderful event u r conducted in ur class sir................ In this time u remembered me our primeminster. he spell some more words in teachers day from that, the important one is teachers not only teach the relevant subject and also improve there extra curicular activities,personel skills of the students. i think u r also travel in that same path. im too proud sir to have a friendly relationship with u. thank u sir.
  By
  P.Rajadurai.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு