ஒரு பள்ளிக் கூடத்தின் அறையில் அவரை சிறை
வைக்கின்றனர். அது ஒரு அசுத்தமான அறை. அறையின் ஒரு ஓரத்தில் படுக்க
வைத்திருந்தார்கள். அவரது கைகள் பின்புறம் கட்டப்பட்டிருக்கின்றன. பரட்டைத் தலை.
பிய்ந்து போன காலனிகள். அழுக்கேறிய உடைகள்.
![]() |
சே அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையும், பள்ளிக் கூடமும் |
யாரது?
தங்களுக்கு
உணவு கொண்டு வந்திருக்கிறேன். மெதுவாக அச்சத்துடன் பதில் கூறுகிறார் ஆசிரியர்.
இது எந்த இடம்?
பள்ளிக் கூடம்.
இத்தனை மோசமாக
இருக்கிறதே. இங்கே எப்படி வகுப்புகள் நடத்துகிறீர்கள்? சிரம்மாக இல்லையா?
அந்த நிமிடம். அந்த நொடி அப்படியே உறைந்து
போகிறார் ஆசிரியர். இவரால் இந்தச் சூழ்நிலையில் எப்படி, இப்படி ஒரு கேள்வியைக் கேட்க
முடிகிறது. வார்த்தைகள் இன்றி மலைத்து நிற்கிறார் ஆசிரியர்.
கவலை வேண்டாம். ஒரு வேளை நான்
பிழைத்திருந்து, புரட்சியும் வெற்றி பெற்றுவிட்டால், உங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக்
கூடம் கட்டித் தருகிறேன்.
கொண்டு வந்த உணவை, கீழே வைத்துவிட்டு,
அழுதபடியே வெளியே ஓடுகிறார் ஆசிரியர்.
நண்பர்களே, இவர்தான் சே குவேரா. மரணத்தின்
வாயிலில் நின்ற போதுகூட, பள்ளிக் கூடம் பற்றிக் கவலைப் பட்டவர்தான் சே.
தெரியாதவர்கள் கற்றுக்
கொள்ளுங்கள்
தெரிந்தவர்கள்
கற்றுக் கொடுங்கள்
இத்தான்
எழுத்தறிவு இயக்கத்தின் தாரக மந்திரம்.
சுரங்கத் தொழிலாளர்கள் பணி முடிந்ததும்,
மாலையில் நேராக வகுப்பறைகளுக்குப் படையெடுத்தனர். கடற்பாறையை வாசலுக்கு வெளியே
வைத்துவிட்டு, எழுதுகோல் ஏந்தி எழுதக் கற்றுக் கொண்டார்கள். மரம் அறுப்பவர்கள்
கத்தியை மூலையில் வைத்துவிட்டு, புத்தகத்தை மடியில் வைத்துக் கொண்டார்கள்.
பிள்ளைகள் பெற்றோர்களுக்குப் பாடம்
நடத்தினார்கள். பற்களைத் தொலைத்த மூதாட்டிகளும் படிக்கத் தொடங்கினார்கள்.
ஒரே ஆண்டு நண்பர்களே, சொன்னால்
நம்பமாட்டீர்கள், ஒரே ஆண்டில், கியூபாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின்
சதவீதம் 98.2 ஆக உயர்ந்தது. மாணவர்களிடமாகட்டும், படிக்கச் சென்ற முதியவர்களிடமாகட்டும்,
கட்டணமாக ஒரு பைசாவைக் கூட அரசாங்கம் வசூலிக்கவில்லை. அனைவருக்கும் இலவசக் கல்வி.
நண்பர்களே, கியூபாவின் அடித்தளம் பள்ளிக்
கூடங்களில் இருக்கிறது. கியூபாவின் இன்றைய முன்னேற்றத்தின் ரகசியம் இதுதான்.
எனக்கும், உங்களுக்கும் இடையில் நெருங்கிய
உறவுண்டு என்று நான் நினைக்கவில்லை. உலகில் நடக்கிற அநீதியைக் கண்டு, நீங்கள்
கோபம் கொள்வீர்கள் என்றால், நாம் தோழர்கள்தான் என்று கூறியவர் சே குவேரா. அநீதியைக்
காணும் பொழுதெல்லாம் கொதித்து எழுந்தவர்தான் சே குவேரா.
கியூபாவில் தான் வகித்து வந்த அமைச்சர்
பதவியைத் துறந்து விட்டு, பொலிவிய மக்களின் சுதந்திரத்திற்காகத் துப்பாக்கி
ஏந்திச் சென்றவர்தான் சே குவேரா.
எனது நாட்கள் மதிப்பு மிக்கதாக இருந்தது.
துன்பம் நிறைந்தது என்றாலும், ஒளி மிகுந்த கரீபியப் போராட்ட நாட்களில் உங்களுடன்
நிற்கும்போது, நமது மக்களின் பிரிக்க முடியாத பகுதியாக ஆவதன் கர்வத்தை நான்
அறிந்தேன்.
அந்தக் காலத்தில் உங்களைவிடச் சிறந்த
சூத்திரதாரியைக் காண்பது அபூர்வமாக இருந்தது.
எந்த ஒரு விருப்பு, வெறுப்புமின்றி உங்களைப் பின் தொடர்ந்ததிலும், சிந்தனையிலும்
பார்வைகளிலும் ஆபத்துகளை முடிவு செய்வதிலும், தத்துவங்களை விளக்குவதிலும் உங்களது
வழியுடன் ஒத்துப் போக முடிந்ததிலும் நான் கர்வம் கொள்கிறேன்.
நிங்கள் எனக்குக் கற்றுத் தந்த அந்த
நம்பிக்கை வலிமையுடனும், எனது மக்களின் முழுமையான புரட்சிகர வாழ்வும், எங்கு
வேண்டுமானாலும், ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் பேராடுவது என்கிற தூய்மையான,
தர்மத்தை நிறைவேற்றும்போது உண்டாகிற அனுபவங்களுடன், நான் புதிய போர்க் களத்துக்குச்
செல்கிறேன் என
கியூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோவுக்கு ஒரு நீண்ட, நெடிய உயர்ச்சி மயமான
கடிதம் எழுதி, எழுதுகோலைக் கீழே வைத்துவிட்டு, துப்பாக்கியை ஏந்திச் சென்றவர்தான்
சே குவேரா.
நண்பர்களே, பிடல் காஸ்ட்ரோவுக்கு மட்டுமல்ல,
தன் செல்லக் குழந்தைகளுக்கும் ஓர் கடிதம் எழுதினார் சே.
எனது
குழந்தைகளுக்கு,
என்றாவது நீங்கள் இந்தக் கடிதத்தைப் படிக்க
நேர்ந்தால் அதன் அர்த்தம், நான் உங்களை விட்டுப் பிரிந்து விட்டேன் என்பதாகும்.
சரியானது என்று தோன்றுவதைச் செய்யவும், தனது
தத்துவத்தில் இருந்து, ஒரு போதும் பின்வாங்காமல், வாழவும் செய்த ஒருவராக இருந்தவர்
உங்கள் தந்தை.
நீங்கள் நல்ல புரட்சியாளர்களாக வளர வேண்டும்
என்பதுதான் இந்தத் தந்தையின் விருப்பம்.
நீங்கள் மனதில் பதிகிற மாதிரிப்
படிக்கவும், இயற்கையை நமது சொற்படி நிறுத்துகிற, தொழில் நுட்ப வித்தையில்
நிபுணத்துவம் பெறவும் வேண்டும்.
பள்ளியில் உள்ள நல்ல மாணவர்களில் நீங்களும்
ஒருவராக ஆக முயற்சிக்க வேண்டும். நல்ல மாணவர் என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன்
என்ற சொல்லவேண்டியதில்லை அல்லவா.
எல்லா விசயங்களிலும் முன் வரிசையில் நிற்க
வேண்டும். படிப்பிலும், புரட்சிக்கு ஏற்ற நடவடிக்கைகளில் எல்லாம்.
மற்றொரு முறையில் சொன்னால், விஷய ஞானத்துடன்
வேலை செய்யவும், தாய் நாட்டிடமும், புரட்சியுடனும் ஈர்ப்பு காட்டவும், தோழர்களைப்
போல் நடந்து கொள்ளவும் வேண்டும்.
அதைவிட முக்கியமானது, அநீதியை எங்கு
பார்த்தாலும், எதிர்க்க முடிய வேண்டும் என்பதுதான். ஒரு புரட்சியாளனின் மிகவும்
வணக்கத்திற்குரிய குணம் அதுதான்.
குழந்தைகளே, இந்தத் தந்தையைப் போக
அனுமதியுங்கள். என்றாவது ஒரு நாள், நாம் பார்க்க முடியுமென்று நம்பலாம்.
இறுதியாய் தனது மனைவிக்கும் ஒரு கடிதம்
எழுதினார்.
பிரியமானவளே,
உன்னைப் பிரிந்து போவது கடினமாகத்தான்
இருக்கிறது. என்னை நீ புரிந்து கொண்டிருப்பாய். ஏகாதிபத்தியத்தை அழிக்கும்
புனிதமான காரியத்துக்காகத் தியாகங்கள் செய்ய விரும்புகிற, இந்த மனிதனை நீ நன்கு
அறிவாய்.
தைரியத்தை இழந்துவிடாதே. ஒருவேளை, நான்
இறந்து போனால், நம் குழந்தைகள் வளர்ந்ததும், நான் விட்டுச் செல்லும் பணியைத்
தொடர்ந்து செய்வார்கள் என்று எண்ணுகிறேன். மக்களின் துன்பங்களைக் கண்டு நம்மைப்
போலவே, அவர்களும் கோபம் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
காலமும் தூரமும் நம்மைப் பிரித்தாலும்,
எப்போதும் நான் உங்களுடன்தான் இருப்பேன். என் நேசத்திற்குரிய மனிதர்களை, உன்னை,
நம் குழந்தைகளை விட்டுப் பிரிகிறோம் என்று எண்ணும்போது, என் வேதனை அதிகரிக்கிறது.
ஆனால் மக்களைச் சுரண்டும் எதிரிகளோடு, போரிடுவதற்குத்தான், நான் சென்று கொண்டிருக்கிறேன்
என்று நினைக்கும் பொழுது, என் வேதனை குறைகிறது.
உன் நடல் நலத்தைக் கவனமாகப் பார்த்துக்
கொள். குழந்தைகளை கவனித்துக் கொள். என் தாய் நாட்டில் பிறந்ததையும், உன்னை என்
மனைவியாகப் பெற்றதையும் எண்ணி நான் பெருமைப் படுகிறேன்.
இந்தப் போராட்டத்தில், நான் இறக்க
நேர்ந்தால், அந்த இறுதித் தருணத்தில் உன்னைப் பற்றித்தான் நினைத்துக்
கொண்டிருப்பேன்.
நண்பர்களே, நெஞ்சம் நடுங்குகிறதல்லவா?
கண்கள் கலங்குகின்றதல்லவா? இப்பொழுது புரிகிறதா சே குவேரா யாரென்று. அவரின் உள்ளம்
புரிகிறதல்லவா.
நாடு, மக்கள், மனைவி, குழந்தைகள் அனைவரையும் துறந்து, துப்பாக்கி
ஏந்தி பொலிவியாவில் நுழைந்தவர், இதோ ஒரு அசுத்தமான பள்ளிக் கூட அறையில், கைகள்
கட்டப்பட்டுக் கிடக்கிறார்.
மிகுந்தத் தயக்கத்துடன், சே குவேரா இருந்த
அறைக்குள் நுழைகிறார் மேஜர் டெர்ரன். சே குவேராவைக் கொல்வதற்கானப் பணி
இவரிடம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
டெர்ரன் உள்ளே நுழைவதைப் பார்த்த உடனே
சேவுக்குத் தெரிந்து விட்டது. கைகளை ஊன்றியபடி மெதுவாக எழுந்து நிற்க முயன்றார்.
மிகவும் சிரம்மாக இருந்தது.
கொஞ்சம் பொறு,
எழுந்து நின்று கொள்கின்றேன்.
டெர்ரனுக்குத்
துணிச்சல் வரவில்லை. தயங்கித் தயங்கி நிற்கிறார்.
நீ எதற்காக
வந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். நான் தயார்.
டெர்ரன்
துப்பாக்கியை உயர்த்தினான்.
ஒரு
மனிதனைத்தானே கொல்லப் போகிறாய். சுடு
நெஞ்சம்
நிமிர்த்தி நிற்கிறார் சே.
சேவின் கண்களை டெர்ரனால்
நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. தனது முகத்தைத் திருப்பிக் கொள்கிறான்.
மொத்தம் ஆறு குண்டுகள் வெடித்தன.
சே புதைக்கப்பட்டு முப்பது ஆண்டுகள் கடந்த
நிலையில், 1996 இல், பொலிவியாவில் சே புதைக்கப்பட்ட வாலேகிராண்டே மீண்டும் தோண்டப்
பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் விசாரிக்கப் பட்டனர். சே புதைக்கப்பட்ட இடம்
பற்றிய தகவல் கிடைத்தது. மண் பரிசோதனைகள் நடத்தப் பெற்றன. ஒன்றல்ல, இரண்டல்ல,
ஆயிரக் கணக்கான புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டன. பத்தாயிரம் சதுர மீட்டர் நிலம்
தோண்டப் பட்டது.
இறுதியில் உடற்கூறு நிபுணர்கள், அந்த
எலும்புக் கூட்டைத் தனியாகப் பிரித்து எடுத்தார்கள். அந்த எலும்புக் கூடுகளின்
மீது படிந்திருந்த புழுதியைத் துடைத்தனர். 1967 அக்டோபரில், கருப்பு பெல்ட்
அணிந்திருந்த, ஒரே கொரில்லாத் தலைவர் சே குவேரா மட்டும்தான். இதோ அந்த கருப்பு
பெல்ட்.
சே குவேராவின் மகள் அலெய்டிடாவிடம்
அப்பொழுது ஒரு நிருபர் கேட்டார்.
நீங்கள் உங்கள்
தந்தையைப் போல் இருக்க விரும்புகிறீர்களா?
மகள் பதில்
கூறினார்.
நான்
மட்டுமல்ல. கியூபாவில் உள்ள ஒவ்வொருவரும்.
பொலிவியாவில், வாலேகிராண்டாவில், சே
குவேராவின் உடல் தோண்டியெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகிலிருந்த, ஒரு தபால், தந்தி
அலுவலகத்தின் சுவரில், ஒரு வாக்கியம் எழுதப்பட்டு இருக்கிறது.
அவர்கள் நினைத்தது போலில்லாமல் நீ வாழ்ந்து
கொண்டிருக்கிறாய், சே.
ஆம்
நண்பர்களே, சே குவேரா வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்.
நேற்றும்,
இன்றும், நாளையும்
என்றென்றும்.
//ஒரு வேளை நான் பிழைத்திருந்து, புரட்சியும் வெற்றி பெற்றுவிட்டால், உங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக் கூடம் கட்டித் தருகிறேன்.//
பதிலளிநீக்குஅருமையான வீரம் மிக்க பகிர்வு. பகிர்வுக்கு நன்றிகள்.
தங்களின் உடனடி வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா
நீக்குவரவர உங்களின் பதிவுகளின் நெகிழ்ச்சி கூடிக்கொண்டே போகிறது அய்யா...
பதிலளிநீக்குதங்களின் வருகையும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்வினைத் தருகின்றன
நீக்குநன்றி நண்பரே
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
சே குவேரா பற்றிய வரலாற்று குறிப்பு மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் அவர் பற்றிய தகவல்தேடல் லுக்கு முதலில் எனது பாராட்டுக்கள் ஐயா.
அவர் தனது பிள்ளைகளுக்கு எழுதிய கடிதம் மற்று மனைவிக்கு எழுதிய கடிதம் எல்லாம் படிக்கும் போது.. மனதை ஒருகனம் சாய்த்தது....அந்த வரலாற்று நாயகனின் வீர செயலை நான் படித்திருக்கேன்.... ஆனால் உங்களின் எழுத்து வடிவில் எழுதியது.. மிக இரசனையாக உள்ளது. அவரின் புகழ் என்றென்றும் இந்த பூமியில் நிலைத்து நிக்கட்டும்..... வாழ்த்துக்கள் ஐயா.
தங்ளுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சே குவேராவின் புகழ் இவ்வுலகு உள்ளவரை நிலைத்து நிற்கும்
நீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
த.ம 2வது வாக்கு.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி நண்பரே
நீக்குசே குவேரா பற்றிய அனைத்து தகவல்களும் சிறப்பு... நன்றி ஐயா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
நீக்குஉலக வரலாற்றில் சிலர்தான் இவ்வாறாகப் பதியப்படுகிறார்கள். சே என்ற ஓரெழுத்து மந்திரத்தால் ஈர்க்கப்படாத இதயங்களே இல்லை எனலாம். சே என்றாலே மனதில் ஒருவித எழுச்சி மனதில் எழும். அத்தகைய மாமனிதரைப் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குசே எழுச்சியின் நாயகன்
நீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
சேக்குவேரா வாழ்ந்தார்.வாழ்ந்து கொண்டிருக்கிறார்.இன்னமும் வாழ்ந்து கொண்டிருப்பார்.இது போன்ற போர்க்குணமிக்கவர்களின் சுவடுகளை அழிக்க நடக்கிற வெகுபிரயத்தனமான முயற்சி ஒருபுறமாய் இருக்க,மற்றொருபுறம் சே மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிற அதிசயம் மக்கள் இன்னமும் உலர்ந்து போகவில்லை என்பதைக்காட்டுகிறது,நல்ல அழுத்தம் மிக்க எழுத்து,வாழ்த்துக்கள் சார்.தலைபணிகிறேன்/
பதிலளிநீக்குசே போன்ற மாமனிதர்களின் சுவடுகள் காலத்தால் அழிக்க இயலாத தன்மை வாய்ந்தவை. சே என்றென்றும் வாழ்வார்
நீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே
சே வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார் நம் உள்ளங்களில்
பதிலளிநீக்குஇன்று எத்தனையோ இளைஞர்கள் சே படம் பொறிக்கப்பட்ட
சட்டையும் ,சாவிக்கொத்தும் வைத்திருகிறார்கள் ஆனால் அவர்களுக்கு சே பற்றி முழுமையாய் தெரியுமா என்பது ஐயமே ?
இப்பதிவு பலரை சென்று சேரவேண்டும் அண்ணா .வாழ்த்துக்கள்
இன்றைய இளைஞர்களுக்கு சே அவர்களை முழுமையாக அறியமாட்டார்கள் என்றே எண்ணுகின்றேன்.
நீக்குசே பற்றிய முழுமையான புரிதல் இளைஞர்களிடைய ஒரு உத்வேகத்தை மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!
பதிலளிநீக்குஅருமையான விடயம். அறியாத பல தகவல்களை உங்கள் பதிவினால் அறிகின்றேன்.
படங்களுடன் உணர்ச்சிமிக்க வசனங்கள் மனதில் ஆழப் பதிந்தன.
நல்ல பதிவு. நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!
த ம.3
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே
நீக்குபள்ளியில் உள்ள நல்ல மாணவர்களில் நீங்களும் ஒருவராக ஆக முயற்சிக்க வேண்டும்.//உண்மை எழுச்சி மிகுந்த வார்த்தைகள்
பதிலளிநீக்குபள்ளியின் பெருமையினை அன்றே முழுமையாய் உணர்ந்தவராக சே இருந்திருக்கிறார். ஆனால் இன்று மதிப்பெண்ணிலேயே குறியாக இருந்து, கல்வியின் உண்மையான ஆற்றலை இழந்து நிற்கிறோம்.
நீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
பதிலளிநீக்குபல தெரியாத விஷயங்கள். பல ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் பிறருக்குக் கல்வி புகட்டும் இயக்கம் ஒன்று தோன்றியது. கற்றவர் கல்லாதோருக்குக் கற்பித்தல் என்ன ஆயிற்று தெரியவில்லை. தொடர்கிறதா.? தெரிந்தால் சொல்லுங்கள்.பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
நீக்குகியூபாவில் பாடிஸ்டா அரசை அகற்றியவுடன், பிடல் காஸ்ட்ரோவும், சே குவேராவும் தோற்றுவித்த முதல் இயக்கம், எழுத்தறிவு இயக்கம்.
பதிலளிநீக்குதெரியாதவர்கள் கற்றுக் கொள்ளுங்கள்
தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள்
இத்தான் எழுத்தறிவு இயக்கத்தின் தாரக மந்திரம்.//
அருமையான தாரக மந்திரம்.
//சே குவேரா வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்.
நேற்றும், இன்றும், நாளையும்
என்றென்றும்.//
ஆம், உண்மை.
நல்ல பதிவு.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே
நீக்குஅற்புதமான படைப்பு. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்கள் கட்டுரைப் படித்ததும் என்னை அறியாமலேயே என் பழைய நினைவலைகளுக்கு சென்றேன். 1981 அல்லது 82 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். சே குவேராவின் வாழ்கை வரலாற்றைப் படிக்க நேரிட்டது. அவரது வரலாற்றை எழுத வேண்டும் என்று எனக்கு மனதில் ஒரு ஆசையும் எழுந்தது. ஆனால் நான் எழுத்தாளன் அல்ல என்பதினால் யார் பிரசூரிப்பார்கள் என்ற தாக்கம் இருந்தது. அப்போது என்னுடைய நண்பர்களாக இருந்தவர்கள் காலம் சென்ற திரு வலம்புரி ஜான் மற்றும் இன்றையக் கவிஞரான திரு பொன்னடியான் அவர்கள். எனது ஆசையை இருவரிடமும் கூறியபோது திரு வலம்புரி ஜான் அவர்கள் ஆசிரியராக இருந்த தாய் எனும் வாரப்பத்திரிகையில் என்னை சில கட்டுரைகள் எழுதுமாறு கூறினார். அவர் சாந்திப்பிரியா என்ற புனைபெயரை எனக்கு சூட்டி அவற்றை வெளியிட்டார்.
திரு பொன்னடியானோ என்னை சே குவேராவின் வரலாற்றை எழுத அனுமதிக்க, அன்று அவர் வெளியிட்டு வந்த முல்லை சரம் என்ற மாத இதழில் நான் சே குவேராவின் வாழ்க்கை வரலாற்றை ''இன்னும் கண்ணீர் வற்றவில்லை'' என்ற தலைப்பில் ' அக்ஜெய்' என்ற புனைபெயரில் எழுதத் துவங்கினேன். ஏன் எனில் சே குவேரா மட்டுமே எனக்கே தெரியாத காரணத்தினால் இன்றுவரை என்னுடைய இதயத்தில் ஆழ்ந்து நிற்கும் அற்புதமான மனிதர். அவர் வரலாற்றை இறுக்கமான முடிவுடன் எழுத ஆசை கொண்டு கட்டுரையை தொடர்ந்தபோது யாரோ ஒருவருடைய தூண்டுதல் என்று நினைக்கிறேன், திரு பொன்னடியான் அதை பாதியிலேயே நிறுத்தி விட, என் ஆசை நிறைவேறாமல் போயிற்று. நானும் சென்னையை விட்டு வெளியூருக்கு சென்று விட அதன் பின் என்னுடைய எழுத்தும் நின்றுவிட்டது.
அதன் பின் இன்று உங்கள் கட்டுரையில் இருந்த கீழுள்ள இரண்டு பத்திகளைப் படித்தபோது என்னை அறியாமலேயே நான் எழுத நினைத்ததை எண்ணிப் பார்க்கத் தோன்றியது. என் கண்களும் பனித்தன.
...............'' 1966 ஆம் ஆண்டு, அக்டோபர் 8 ஆம் நாள். ஒட்டிய கன்னத்துடன், தாடியுடன், முகமெல்லாம் சோர்வுடன், ரத்தம் வடிவ வடிய நின்று கொண்டிருக்கிறார். காலில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருக்கின்றன. ராணுவத்தினர் அவரைச் சுற்றி வளைத்து விட்டனர்.
ஒரு பள்ளிக் கூடத்தின் அறையில் அவரை சிறை வைக்கின்றனர். அது ஒரு அசுத்தமான அறை. அறையின் ஒரு ஓரத்தில் படுக்க வைத்திருந்தார்கள். அவரது கைகள் பின்புறம் கட்டப்பட்டிருக்கின்றன............
ஜெயராமன்
(சாந்திப்பிரியா)
தங்களின் நீண்ட கருத்துரை, மனதில் மகிழ்ச்சி அலைகளைத் தோற்றுவிக்கின்றன ஐயா.
நீக்குமுல்லைச் சரத்தில் எழுத இயலாவிட்டால் என்ன ஐயா
இதோ உங்களுக்கே உங்களுக்கென்று சொந்தமாய் ஒரு வலைப் பூ இருக்கின்றதே ஐயா
தர்ங்கள் தற்பொழுது எழுதி வந்த தொடரும் நிறைவடைந்து விட்டது. விரைவில் சே பற்றியும்முழுமையாய் எழுத வேண்டும் என்பது என் போன்றோரின் விருப்பம் ஐயா
காத்திருக்கின்றோம் தங்களின் எழுத்துக்களில் சே வைப் பார்க்க..
நன்றி ஐயா
அன்புடையீர்!..
பதிலளிநீக்குஆறாது.. ஆறாது. அழுதாலும் தீராது.. ஆனாலும் வழியில்லை!..
சே குவேரா என்ற உன்னதம் - ஒரு புரட்சியாளர் என்று மட்டுமே அறிந்திருந்தேன். மேலதிகமாக எடுத்து அறிந்து கொள்ள இயலாத சூழ்நிலை.
இன்று தங்கள் பதிவினைக் கண்டதும் பொங்கி வந்த
கண்ணீரை அடக்க முடியவில்லை. அந்தக் கண்ணீருடன் தான் பதிலிடுகின்றேன்.
சே குவேரா வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்.
நேற்றும், இன்றும், நாளையும் - என்றென்றும்!..
மாவீரனுக்கு - தலை தாழ்ந்த வணக்கங்கள்!..
ஐயா, பதிவினைப் படித்து முடித்ததும், என்னை அலைபேசியில் அழைத்து, நேற்று இரவு தாங்கள் பேசிய பேச்சி என்றென்றும் என் மனதில் நிலைத்து நிற்கும் ஐயா.
நீக்குதங்களை நான் ஏற்கனவே நன்கு அறிந்தவன்தான் நான்
இருப்பினும் தங்களின் இளகிய மனதினை முழுமையாய் உணரக்கூடிய ஒரு வாய்ப்பு நேற்று எனக்குக் கிட்டியது.
தங்களைப் போன்றவர்களின் நட்பினைப் பெற்றதை பெரும் பாக்கியமாய் நினைக்கின்றேன் ஐயா.
நன்றி மிக்க நன்றி
மாவீரன் சே குவேரா பற்றிய சிறப்பான தகவல்கள்....
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்ட தங்களுக்கு நன்றி.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
நீக்குஉலகில் நடக்கிற அநீதியைக் கண்டு, நீங்கள் கோபம் கொள்வீர்கள் என்றால், நாம் தோழர்கள்தான் என்று கூறியவர் சே குவேரா.
பதிலளிநீக்குநினைவில் வாழும் மனிதரைப்பற்றிய அருமையான பகிர்வுகள்..!
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே
நீக்குஉலகில் நடக்கிற அநீதியைக் கண்டு, நீங்கள் கோபம் கொள்வீர்கள் என்றால், நாம் தோழர்கள்தான் என்று கூறியவர் சே குவேரா.
பதிலளிநீக்குஆனால் இன்று கியூபா இலங்கையை ஆதரிக்கிறது சேஜின் மகன் மகிந்த ராஜபக்சவுடன் போஸ்குடுப்பதும் நடக்கிறது இது அவருக்கு செய்யும் அவமரியாதை .
கியூபாவும், சே அவர்களின் மகனும் இலங்கையை ஆதரிப்பது என்பது விந்தைதான் நண்பரே.
நீக்குஇலங்கை பிரச்சினை பற்றிய சரியான புரிதல் இல்லாததே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும்.
நன்றி உங்களின் பதிலுக்கு .புரிதல் இல்லாமை என்று கூறினாலும் இலங்கையின் நிலவரம் உலகின் கண்முன்னே பலவிதங்களிலும் தெரியவருகிறதே ? கியூபா அமெரிக்க எதிர்ப்பு என்ற அடிப்படையில் மட்டுமே இதை பார்கிறது .உலகில் நடக்கிற அநீதியைக் கண்டு, நீங்கள் கோபம் கொள்வீர்கள் என்றால், நாம் தோழர்கள்தான் என்றதன் அடிப்படையில் இல்லை .
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குநண்பரே தாங்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன். நான் இந்தக் கோணத்தில் யோசிக்கவில்லை.
நீக்குயாசிர் அரஃபாத்தைப் பற்றிக் கூட இத்தகைய செய்தியைப் படித்த நினைவு இருக்கிறது.
ஈராக் படைகள் குவைத்துக்குள் நுழைந்த பொழுது, உலகமே அச்செயலைக் கண்டித்த பொழுது, அரஃபாத் மட்டும் சதாம் உசேனுக்கு ஆதரவைத் தெரிவித்ததால்,உலக நாடுகளிடம் அதுவரை சம்பாதித்து வைத்திருந்த அனுதாபத்தைக் கூட இழந்தார் என்று எழுத்தாளர் பா.இராகவன்அவர்கள் தன்னுடைய ஒரு நூலில் எழுதியிந்ததாக நினைவு இருக்கிறது.
இதே போல அமெரிக்க எதிர்ப்பு என்ற ஒற்றை வரியைப் பிடித்துக் கொண்டுதான் கியூபா, இலங்கையை ஆதரித்திருக்க வேண்டும். ஆனால் இச் செயல், அவர்களது கொள்கைகளுக்கு முற்றிலும் முரணான செயல் என்பது விளங்குகிறது.
பிடல் காஸ்ட்ரோ போன்று, இன்று சே குவேரா உயிரோடிருந்திருந்தால், இந்நிலை நிச்சயம் மாறியிருக்கும் நண்பரே.
மீண்டும் வலைத் தளத்திற்கு வந்து, கருத்துரைத்தமைக்கு நன்றி நண்பரே
தங்களின் மின்னஞ்சல் முகவரியினைத் தெரிவிப்பீர்களேயானால் , தொடர்ந்து எனது பதிவுகள் பற்றிய விவரங்களை , உடனுக்குடன் தங்களுங்ககுத் தெரிவிக்க ஆவலாய் இருக்கின்றேன் நண்பரே
(எழுத்துப் பிழைகள் காரணமாக, மேலுள்ள கருத்துரையினை அகற்றி விட்டேன்)
மனதை நெகிழச்செய்யும் அற்புதமான பதிவு ! அவருடைய "நாட்குறிப்பு" போன்ற பல நூல்களைப் படித்திருக்கிறேன் ! உங்கள் பதிவு உயர்ந்த தளத்தில் "சே" அவர்களை படம் பிடிக்கிறது ! 1975ம் ஆண்டு சர்வதேச திரப்பட வீழாவில் (பங்களூரு)" hours of the furness " என்ற திரைப்படத்தில் இந்தக் காட்சியைக் காட்டுவார்கள் ! வாழ்த்துக்கள் !---காஸ்யபன்.
பதிலளிநீக்குதங்களின் வருகையும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன ஐயா. மிக்க நன்றி
நீக்கு.ஆம் , சே குவேரா வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்.
பதிலளிநீக்குபெறுமதி மிக்க பதிவு.
உலகில் எத்தனையோ பேர் இப்படி.....
இனிய பாராட்டு.
வேதா. இலங்காதிலம்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே
நீக்குஎல்லா விசயங்களிலும் முன் வரிசையில் நிற்க வேண்டும். படிப்பிலும், புரட்சிக்கு ஏற்ற நடவடிக்கைகளில் எல்லாம்.
பதிலளிநீக்குமிக அற்புதமான பகி்ா்வு. வாழந்த கொண்டிருக்கும் மனிதா்.. பகிா்வுக்கு நன்றிங்க.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே
நீக்குஅருமை கரந்தையாரே....
பதிலளிநீக்குமேலும் இதுபோல் பதிவுகள் பல வெளியட வேண்டுகிறேன்.
நன்றி நண்பரே
நீக்குதாங்கள் விரும்பிய படியே தொடர என்றென்றும் முயல்வேன்
விஷயங்களைத் தேடி எடுத்து தொய்வில்லாமல் கோர்வையாக எழுதுவது ஒரு கலை .சிறந்த முயற்சி
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஅநீதியைக்கண்டு கொந்தளிக்கும் ஒவ்வொரு மனதிலும் சே வாழ்ந்து கொண்டுள்ளார்.சிறந்த பதிவு வாழ்த்துக்கள் சார்.
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே
நீக்குசேகுவராவைப்பற்றி நான் கொஞ்சம் அறிந்திருந்தாலும் உங்களுடைய விளக்கமான உணர்வு பூர்வமான எழுத்து நடை ஒரு உத்வேகம் கொள்ள வைக்கிறது.சிறப்பான பதிவு
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.
நீக்குமிக அற்புதமான பதிவு.சே குவேரா போன்ற போராட்ட தலைவர்களை இன்றைய இளைஞர்களுக்கு முன்னிலைப்படுத்தவேண்டும்.அநீதிக்கு எதிராக போராடும் குனம் வேறூன்றவேண்டும்.மிக்க நன்றி.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குமிக அற்புதமான பதிவு.சே குவேரா போன்ற போராட்ட தலைவர்களை இன்றைய இளைஞர்களுக்கு முன்னிலைப்படுத்தவேண்டும்.அநீதிக்கு எதிராக போராடும் குனம் வேறூன்றவேண்டும்.மிக்க நன்றி.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குமிகத் தேவையான பதிவு
பதிலளிநீக்குபோராடி பெற்றெடுத்த குழந்தை நலமாக வாழும் தான் இல்லாவிட்டாலும் என அறிந்தவுடன்
அடுத்த போராட்ட களம் நோக்கி தன் வாழ்வை அமைத்து கொண்டவனின் வாழ்க்கை.
கல்வி வியாபாரமாகி கொண்டிருக்கும் இந்நாட்களில் நமக்கு அப்படியொரு தலைமை தேவைப்படுகிறது அல்லவா?
சே குவேரா போன்று கல்விக்கண் கொண்டு பார்க்கும் தலைவர்கள் கிடைப்பார்களேயானால்,,,,
நீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
தோழர் சே குறித்து அற்புதமாகப்
பதிலளிநீக்குபதிவு செய்தமைக்கு மனமார்ந்த நன்றி
படங்களுடன் சொல்லிச் சென்ற விதம்
கவித்துவமாகவும் உணர்வு பூர்வமாகவும் இருந்தது
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
நீக்குtha.ma 7
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஉணர்ச்சிகரமான வீரன்!
பதிலளிநீக்குஉணர்வுட்டும் எழுத்துக்கள். தொகுப்பிற்கு நன்றி!
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே
நீக்குவணக்கம் அய்யா. வரலாற்றை இலக்கியமாக்கித் தருவது பெரிய வேலை. அதை அற்புதமாகத் தந்திருக்கிறீர்கள். அந்த மாவீரனைப் பற்றிய வரலாறு தெரியாத விடலைகள் பலர் அவரது படத்தைமட்டும் தன் டிசர்ட்டில் போட்டுத் திரிவது ஒருபக்கம் வேடிக்கையாக இருந்தாலும், அவர்கள் எல்லாம் உங்களின் இந்தப் பதிவைப் படித்தால் நாட்டில் பெரிய மாற்றமே வரும் என்பது உறுதி. நன்றி அய்யா, உங்களின் பதிவுப் பயணம் இலக்கியத்திலும் வரலாற்றிலும் மாறிமாறித் தொடர வேண்டுகிறேன். வணக்கம்.
பதிலளிநீக்குதங்களின் வருகையும் வாழ்த்தும் பெருமகிழ்வினை அளிக்கின்றன ஐயா. தங்களின் எண்ணப்படியே தொடர விரும்புகின்றேன் ஐயா நன்றி
நீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு., இந்த கட்டுரையை நான் படிப்பதற்கு முன்பே நமது பள்ளியின் ஆசிரியர் திரு.சு. கோவிந்தராஜன் அவர்களுக்கு நமது பள்ளியின் தலைமையாசிரியர் அறையில் அமர்ந்து தாங்கள் கூறிக்கொண்டிருந்ததை என்னுடைய வேலையை செய்து கொண்டே செவிமடுத்த பொழுதே என்னையறியாமல் என் கண்களும் மனமும் கசிந்தது. திரு.முத்துநிலவன் அய்யா குறிப்பிட்டதை போன்று நமது இளைஞர்கள் பனியனில் மாவீரன் சே குவாரா படத்தினை அணிந்திருந்தாலும் அவரைப் பற்றி இந்த அளவில் 1%த்தையாவது அறிந்திருக்க முடியாது. இருப்பினும் சே குவாரா மற்றும் பிடல் காஸ்ட்ரோ ஆகியோர் கருத்தான ”தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளுங்கள், தெரிந்தவர்கள் கற்றுக்கொடுங்கள்.” என்பதை முன்மாதிரியாக கொண்டு அந்த இளைஞர்களுக்கு தெரியாத செய்திகளை நமக்கு தெரிந்த செய்திகளை அவர்களுக்கு கற்றுக்கொடுப்போம். திரு.என்.ஆர்.ஜெயராமன் அய்யா அவர்கள் குறிப்பிட்டதை போன்று சே குவாரா பற்றி சில செய்திகள் அறிந்திருந்த போதிலும் தங்களின் பதிவு படிப்போரின் மனதினை உலுக்கி எடுப்பது உண்மை.இந்த உயர்ந்த மனிதனின் வாரிசு இலங்கையில் நடப்பதை புரிந்து கொள்ளாத நிலையில் கருத்துகளை வெளியிடுவது ஒரு வெட்க கேடான செயலாகும். ஒரு திரைப்படதிற்கு முன்னோட்டம் போன்று இ மெயிலில் சுருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் ஒரு நிகழ்வினை குறிப்பிடுவதும் வலைப்பூவினில் அந்த விறுவிறுப்பு குறையாமல் விரிவாக அதே நிகழ்வினை பதிவிடுவதும் தங்களின் அற்புதமான மற்றும் தனித்துவமான பாணியாக அமைந்து எனக்கு மிகவும் மகிழ்வினை ஏற்படுத்துகிறது. நன்றி நண்பரே. தொடருங்கள் உங்களின் பணியினையும் பாணியினையும்.
பதிலளிநீக்குமிக நீண்ட கருத்துரைககும் அன்பிற்கும் நன்றி நண்பரே
நீக்குஇதில் எதுவுமே புதிதில்லைதான். ஆனால் இதிப் படிக்க படிக்க சத்தியமாய் அழுதேனே அது எதனால்.
பதிலளிநீக்குமிக நேர்த்தியான பதிவு தோழர்
நன்றி நண்பரே
நீக்குசேகுவேரா நிச்சயமாக் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். தாங்கள் ஒரு நல்ல ஆசிரியர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்!! ஆசிரியரே!!! அதை கொடுத்த விதம் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது போல, அருமையான படங்களுடன் தொகுத்து வழங்கி உள்ளீர்கள்!! வாசிப்பவர்கள் எல்லோரும் மாணவர்கள்தானே! தெரிந்திருந்தாலும், அதிலும் தெரியாத, அறிந்திராத, புதிய விஷயகளைக் கற்கிறோம் என்பதால்!! அருமையான தொகுப்பு!!!!
பதிலளிநீக்குவாழ்த்டுக்கள்!! தொடருங்கள் ஆசிரியரே!!!
உங்கள் இடுகையை வாசிக்க சிறிது தாமதமாகி விட்டது. இருவருக்குமே. அதனால் தான் தாமதமான பின்னூட்டம்!
தாமதமானால் என்ன நண்பரே
நீக்குதங்களின் வாழ்த்து என்னை நெகிழச் செய்துவிட்டது
மிக்க நன்றி
மாணவர்கள் தாமதமாக வந்தால் அனுமதிப்பீர்கள் தானே?!!!!! ஆசிரியரே!!!
பதிலளிநீக்குத.ம.+
தங்களின் வருகையே எனது மகிழ்ச்சி
நீக்குவெகு நாட்களாக நான் யாரைபற்றி அறிய வேண்டும் என நினைத்திருந்தேனோ அவரை பற்றிய உங்களின் பதிவு கண்டும் மிகவும் மகிழ்ந்து போனேன்... அதைவிட, படித்ததும் நெகிழ்ந்தும் போனேன்... மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்கு