18 அக்டோபர் 2014

தில்லையாடி

     

தில்லையாடி வள்ளியமை


ஆண்டு 1914. தென்னாப்பிரிக்கா. ஜோகனஸ்பர்க். அதை வீடு என்று கூற முடியாது, ஒரு குடிசை. அக்குடிசையினுள், கிழிந்த பழையத் துணியினைப் போலத்தான், அப்பெண் கிடக்கிறார். எலும்புகளும், எலும்புகளை மூடிய தோலும் மட்டுமே மிச்சமிருக்கினறன. குழி விழுந்த கண்கள். அவ்வப்பொழுது ஏற்படும் சிறு சிறு அசைவுகள் மட்டுமே, அப் பெண்ணின் உடலில், இன்னமும் உயிர் இருக்கிறது என்பதை உணர்த்துகின்றன.

     கோட், சூட் அணிந்த வழக்கறிஞர் ஒருவர், கவலை தேய்ந்த முகத்துடன், அக்குடிசையினுள் நுழைகிறார். கிழிந்த பாயில் படுத்திருக்கும் உருவத்தைக் கண்டவுடன், அவரது கண்கள் கலங்குகின்றன. எப்படி இருந்த பெண் இப்படி ஆகிவிட்டாரே? இனி இப்பெண் பிழைக்கப் போவதில்லை என்பது பார்த்தாலே தெரிகிறது. நான்தானே, இந்நிலைக்குக் காரணம். என்னால்தானே, இப்பெண் போராட்டத்தில் குதித்தார்.


நீ சிறை சென்றதை எண்ணி வருத்தப் படுகிறாயா?

     குழி விழுந்த கண்களில், ஓர் பரவசம், ஒரு புத்துணர்வு பொங்கி எழுகிறது.

உங்கள் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணிப் பெருமைப் படுகிறேன்.

    அதற்குமேல் அவரால் பேச முடியவில்லை. மூச்சு வாங்குகிறது. சிறிது நேரம் கண்களை மூடி, உடலில் மீதமுள்ள சக்தியை எல்லாம் சேமித்து, பின் பேசுகிறார்.

நீங்கள் மீண்டும் ஆணையிட்டால், அடுத்தப் போராட்டத்தில், நான் தான் முதல் ஆளாக, முன் நிற்பேன்.

     கையைத் தரையில் ஊன்றி, எழுந்து உட்காருவதற்குக் கூட, உடலில் வலு இல்லை. ஆனால் உள்ளத்திலோ, போராட்ட உணர்வு கொழுந்து விட்டு எரிகிறது. மீண்டும் போராட, வெற்றி கிட்டும் வரை போராட, உள்ளம் துடியாய் துடிக்கிறது.

      எவ்வளவோ முயன்றும், அப்பெண்ணைக் காப்பாற்ற முடியவில்லை. 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் நாள், அவ்வீராங்கைனையின், மூச்சு அடங்கியது.

     நண்பர்களே, இப்பெண் யாரென்று தெரிகிறதா? இவர்தான் தில்லையாடி வள்ளியம்மை. இவரின் குடிசை வீட்டிற்கு வந்த வழக்கறிஞர்தான் மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி.


    
தென்னாப்பிரிக்கச் சிறைச் சாலைக்கு வெளியில் காந்திஜி

அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தில், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள, தில்லையாடி என்னும் சிற்றூரைச் சேர்ந்த தம்பதிகள்தான் முனுசாமி, ஜானகியம்மாள் தம்பதியினர். முனுசாமி ஒரு நெசவாளி.

     ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில், ஆங்கிலேய நாட்டில், ஆங்கிலேய ஆலைகளில் உற்பத்தியான துணிகள், கப்பல் கப்பலாக, நம் நாட்டிற்கு வந்து இறங்கின. நமது நாட்டின் நெசவுத் தொழில் நசிந்தது. நெசவாளர் குடும்பங்கள் பட்டினியினைத் தத்தெடுத்துக் கொண்டன. பிழைக்க வழியில்லை.

     நிறைமாத கர்பினியான தன் மனைவியுடன், கப்பல் ஏறி தென்னாப்பிரிக்கா சென்றார் முனுசாமி. ஜோகஸ்பர்க்கில், ஓர் குடிசை கட்டிக் குடியேறினார். பெட்டிக் கடை வைத்தார்.

     முனுசாமி ஜோகனஸ்பர்க்கில் காலடி பதித்த, இரண்டே மாதங்களில் 1898 இல் பிறந்தவர்தான் வள்ளியம்மை.

     1913 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் நாள், தென்னாப்பிரிக்காவின், கேப் உயர் நீதி மன்றம், ஓர் உத்தரவினைப் பிறப்பித்தது.

     இந்தியர்கள் தங்கள் பரம்பரை வழக்கப்படி திருமணம் செய்து கொண்டால், அத்திருமணம் செல்லவே செல்லாது. கிறித்துவ மதச் சம்பிரதாயப்படி, திருமணங்கள் பதிவு செய்யப்பட்டே ஆக வேண்டும்.

     போராட்டம் வெடித்தது. போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தியவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. வள்ளியம்மைக்கு அப்பொழுது வயது பதினைந்து.

     பள்ளியில் படித்து வந்த வள்ளியம்மைக்கு, போராட்டத்தில் குதித்தே ஆக வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. சிறு வயது முதலே, அந்நிய தேசத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளைக் கண்ணெதிரிலேயே கண்டு வளர்ந்தவர் அல்லவா.

    மகளிர் அணியில் இடம் பெற்றார் வள்ளியம்மை. ஒவ்வொரு மகளிர் அணிக் கூட்டத்திலும், வள்ளியம்மையின் குரலே ஒங்கி ஒலித்தது.

     பள்ளியைத் துறந்தார். போராட்டம், போராட்டம் என, போராட்டத்திலே முழு மூச்சாய் ஈடுபட்டார். விளைவு கைது செய்யப் பட்டார். மாரிட்ஸ் பர்க் என்னும் சிறையில்  அடைக்கப் பட்டார்.

     சிறையில் சரியான உணவு கிடையாது. தூக்கம் கிடையாது. மோசமான உணவைத் தின்றே ஆக வேண்டிய கட்டாயம். கடுமையான வேலைகள். உடல் நலிந்து, மெலிந்து போனார். உடல் மெலிந்தாலும், உள்ளம் பாறைபோல் வலிமையுடன் விளங்கியது.

     சிறையில், வெள்ளைக்கார சிறையதிகாரி, வள்ளியம்மையிடன் ஒரு நாள் கத்தினார். எதற்காக இந்த வீண் போராட்டம். பேசாமல் தென்னாப்பிரிக்கராகப் பதிவு செய்து பிழைக்கப் பாருங்கள். உங்கள் இந்தியாவிற்குக் கொடி கூடி கிடையாது, மேலும் அது நாடே அல்ல. எதற்காக இல்லாத இந்தியாவிற்காகத் தேவையில்லாமல் போராடுகிறீர்கள்.

      தளர்ந்திருந்த வள்ளியம்மையின் உடலில், எங்கிருந்துதான், பலம் வந்ததோ தெரியவில்லை. கண்கள் நெருப்பினைக் கக்க, நிமிர்ந்து நின்றார், தன் சேலையின் ஒரு பகுதியை, வெறியுடன் கிழித்தார்.
    


தனது புடவையினையே கொடியாக, அவ்வெள்ளையன் முன் ஆட்டினார். இதோ எங்கள் கொடி, எங்கள் தாய்த் திருநாட்டின் வெற்றிக் கொடி, இதோ எங்கள் கொடி. பாரடா வெள்ளையனே, இதோ எங்கள் கொடி.

    காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள் அடுத்தடுத்து அமைந்திருந்த சேலை அது.

    நண்பர்களே, நமது தேசியக் கொடியை, நமக்கு அளித்த பெருமைக்கு உரியவர் இந்த வீரத் தமிழச்சி, தில்லையாடி வள்ளியம்மைதான்.  உண்மை, நண்பர்களே, உண்மை.

     தில்லையாடி வள்ளியம்மை சிறையில் இருந்ததென்னவோ, சில மாதங்கள்தான். அதற்குள்ளேதான் எத்தனை எத்தனை கொடுமைகள், சித்திரவதைகள். 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் நாள், வள்ளியம்மை விடுதலை செய்யப் பட்டார்.

     நண்பர்களே, வள்ளியம்மையால் நடக்கக் கூட முடியவில்லை. விடுதலையாகி, தன் குடிசைக்கு வந்து படுத்தவர்தான், பின் எழவேயில்லை.

    சிறையில் இருந்து மீண்ட பிறகு, அவர் உயிருடன் இருந்த நாட்கள், வெறும் எட்டே எட்டுதான்.

    தில்லையாடி வள்ளியம்மை தன் பதினாறாவது வயதிலேயே, இம் மண்ணுலக வாழ்வு துறந்தார்.
    


தில்லையாடியில் கருவாய் உருவெடுத்த போதும், தமிழகத்தில் கால் பதிக்காமலேயே, ஏன், இந்திய மண்ணைத் தொட்டுக் கூட பார்க்காமல், தென்னாப்பிரிக்காவில் பிறந்து, அங்கேயே வளர்ந்து, அங்கேயே மறைந்த,
வீரத் தமிழச்சி
தில்லையாடி வள்ளியம்மையின்

நினைவினைப் போற்றுவோம்.

-----



68 கருத்துகள்:

 1. அண்ணா,
  வழக்கம் போல உங்கள் பதிவில் தான் இவரை பற்றி அதிகம் தெரிந்துகொண்டேன்.
  ஆனால் தயவுசெய்து இந்த you tube லிங்க் கை பாருங்கள்
  https://www.youtube.com/watch?v=vzFI_L5oDgY&hd=1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோதரியாரே
   நமது தேசியக் கொடியினை வடிவமைத்த பெருமைக்கு உரியவர் வெங்கையா என்பதை அறிந்து கொண்டேன் சகோதரியாரே,
   தவறாக பகிர்ந்தமைக்கு மன்னிக்கவும்.
   ஒரு வலையில் படித்ததை நினைவில் கொண்டு எழுதிவிட்டேன்
   அக்குறிப்பிட்ட பகுதியை நீக்கமும் செய்துவிட்டேன்
   நன்றி சகோதரியாரே

   நீக்கு
 2. She was indeed the torch bearer for all Freedom Movement in India.

  subbu thatha.

  பதிலளிநீக்கு
 3. மிகப்பெரும் வீராங்கனை பற்றி மிக அருமையான பதிவு....

  பதிலளிநீக்கு
 4. தில்லையாடி வள்ளியம்மை பற்றி இன்று தான் முழுமையாக தெரிந்து கொண்டேன். வந்தேமாதரம். அவரை வணங்குகிறேன்.நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 5. அருமையான இடுகை! இவரது பெயரில் சென்னையில் ஒரு தெருவே இருக்கின்றது!

  //தில்லையாடி வள்ளியம்மை, சிறையில் உயர்த்திப் பிடித்த கொடியைத்தான், தில்லையாடி வள்ளியம்மையை மனதில் கொண்டுதான், மகாத்மா காந்தி, இந்திய தேசியக் கொடியையே வடிவமைத்தார். இது வரலாற்றின் பக்கங்களில், பொன்னழுத்துக்களால் பொறிக்கப் பட்ட உண்மை.//

  நண்பரே! தேசியக் கொடியை வடிவமைத்தவர் காந்தி இல்லை நண்பரே! அப்படித்தான் நினைவு. தாங்கள் எழுதியிருப்பதால் கண்டிப்பாக சரியாகத்தான் இருக்கும் ஆய்வு செய்து நீங்கள் எழுதுவதால்..

  ஆயினும் எங்கள் சிற்றறிவுக்கு எட்டியவரை அது வெங்கைய்யா என்பது நினைவு! தவறாக இருந்தால் திருத்திக் கொள்கின்றோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ////Valliammai, 16 years of age was arrested by the South African police while she was in the protest march and spent three months in Jail. She suffered a fatal fever in jail, when she was released, she was very weak and could barely walk. She heard some South African prison officers yelling at her, `why don`t you people register and become South Africans instead of Indians. Your India doesn`t even have a flag and it is not even a country. What are you really fighting for.`

   If having a flag is what would give form to India, then here it is, she said, tearing off her saffron-white-green sari and she waved it triumphantly, MY FLAG! MY MOTHERLAND

   Mahathma Gandhi met her and asked: Do you not regret having been to jail? Look at you! If going back to jail again would add to the cause, I would do it again she replied.

   She gave us our National flag (Gandhi designed the flag with the same three colours as her sari), a greater resolve (in his own words) to Gandhi`s freedom fight, undying fiery guts to women and a soul full of strength for her, our country. /////
   தாங்கள் கூறியதுதான் சரியான செய்தி நண்பரே
   நான்தான் தவறாகக் குறிப்பிட்டு விட்டேன்
   மன்னிக்கவும்.
   அப்பகுதியினை கட்டுரையில் இருந்து நீக்கம் செய்து விட்டேன்.
   ஒரு வலைப் பகுதியில் இவ்வாறுதான் படித்தேன், அதனையே எழுதிவிட்டேன்.
   சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்களும் இதனை சுட்டிக் காட்டியுள்ளார்
   நன்றி நண்பரே

   நீக்கு
 6. நமது தேசீயக் கொடியின் முன்னோடி வள்ளியம்மையார் என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன் !
  த ம 3

  பதிலளிநீக்கு
 7. தில்லையாடி வள்ளியம்மையைப் பற்றி படித்திருந்தாலும் தங்கள் பதிவின் மூலம்தான் நிறைய அறிய முடிந்தது. பகிர்வுக்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 8. அன்பின் ஜெயக்குமார்

  அரிய தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - தில்லையாடி வள்ளியம்மை பற்றிய பதிவு அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 9. வீரத் தமிழச்சி தில்லையாடி வள்ளியம்மையின் நினைவினைப் போற்றுவோம். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 10. அன்பின் ஜெயக்குமார் - தமிழ் மண வாகு : 4 - வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் - நல்வாழ்த்துகள் - ந்ஃட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 11. அன்பின் ஜெயக்குமார் - தமிழ் மண வாகு : 4 - வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் - நல்வாழ்த்துகள் - ந்ஃட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 12. மிக அற்புதமான பதிவு.வீரமங்கைக்கு வீரவணக்கங்கள்.வாழ்க பாரதம் வளர்க இந்தியனின் புகழ்.மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 13. தில்லையடி வள்ளியம்மையை உணர்வுப்பூர்வமாக எழுதியுள்ளீர்கள். அருமை..

  பதிலளிநீக்கு
 14. வள்ளியம்மை நாம் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒரு பெண்மணி. குறிப்பாக மாணவர்கள் இந்த செய்தியை அறிய வேண்டும். அவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் ...வாழ்த்துக்கள் ...
  த.ம ஆறு சைக்கில் ஒட்டலாம் வாரீங்களா? ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே
   சைக்கிள் ஓட்டத்தான் ஆவலுடன் வந்தேன்
   விலையை பார்த்ததும்
   ஓட்டாமலேயே
   ஓடிவந்து விட்டேன்

   நீக்கு
 15. தில்லையாடி வள்ளியம்மைப்பற்றி பள்ளியில் படித்து இருக்கிறோம்.
  இப்போதும் பாடப் புத்தகத்தில் உண்டு என்று நினைக்கிறேன்.
  நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. அருமையான பதிவு. உங்கள் பதிவு மூலம் இவரைத் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி.

  த.ம. +1

  பதிலளிநீக்கு
 17. இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்தவர்க: எந்த பலனையும் அனுபவிக்கவில்லை. பலனை அனுபவிப்பவர்கள் சுதந்திரத்தையே தியாகம் செய்து விடுகின்றனர். பெற்ற விடுதலை கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் நேரத்தில் தியாகிகளின் வரலாற்றைப் படித்தாலாவது நாம் உணர்வு பெற வேண்டும். சரியான நேரத்தில் எழுதப்பட்ட வரலாறு. பாராட்டுக்களும் நன்றிகளும்.

  பதிலளிநீக்கு
 18. !அனைத்தையும் தொகுத்து நூலாக வெளியிடுங்கள்

  பதிலளிநீக்கு
 19. தில்லையாடி வள்ளியம்மை பற்றி அறியத் தந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 20. தில்லையாடி வள்ளியம்மை அவர்களின் வரலாற்றினைப் படிக்கும் போதே மனம் உருகும். அவர்களைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி..ஐயா!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனதை உருகச் செய்யும், நெகிழச் செய்யும் வரலாற்றிற்குச் சொந்தக்காரர் தில்லையாடி வள்ளியம்மை
   நன்றி ஐயா

   நீக்கு
 21. தில்லையாடி வள்ளியம்மை அவர்களைப் பற்றி அரிய தகவல்கள் அறிந்துகொண்டேன்! நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 22. கையைத் தரையில் ஊன்றி, எழுந்து உட்காருவதற்குக் கூட, உடலில் வலு இல்லை. ஆனால் உள்ளத்திலோ, போராட்ட உணர்வு கொழுந்து விட்டு எரிகிறது. மீண்டும் போராட, வெற்றி கிட்டும் வரை போராட, உள்ளம் துடியாய் துடிக்கிறது.
  தில்லையாடி வள்ளியம்மை அவர்களைப் பற்றிய
  நினைவலைகளைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் ஐயா!

  எப்பொழுதும் உங்கள் பதிவில் அற்புதமான விடயம் இருக்கும்!
  எனக்கு அத்தனையும் புதிது! அறிகிறேன் பல இங்கே!
  நல்ல ஒரு களஞ்சியம் ஐயா உங்கள் வலைத்தளம்!

  மிகச் சிறப்பு! நல்ல பகிர்வு!
  நன்றியுடன் தீபாவளி வாழ்த்துக்களையும்
  சேர்த்தே சொல்கின்றேன்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 24. பெயரில்லா19 அக்டோபர், 2014

  தில்லையாடி வள்ளியம்மை வீரத் தகவல் நன்று.
  மிகக நன்றி.
  தங்களிற்கும் தீபாவளி நல் வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 25. தீபாவளி வாழ்த்துகள் ஐயா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே
   தங்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

   நீக்கு
 26. தில்லையாடி வள்ளியம்மை குறித்த ஏராளமான தகவல்கள் கிடைத்தன! அருமையான பதிவு! நன்றி!

  பதிலளிநீக்கு
 27. ஏற்கெனவே படிச்சிருந்தாலும் மீண்டும் படிக்க அலுக்கவில்லை. அருமையான பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 28. இருந்தது வேற்றிடமாயினும் நினைவுகள் மையமிட்ட இடம் இந்தியாவாக இருந்ததே,அதுவே பெருமைக்குரிய விஷயமாய்.வழக்கம் போல் ஆழமான பதிவு.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 29. பதிவர் திருவிழா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 30. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  உடல் வலிமையைக் காட்டிலும் மனவலிமைக்கு ஆற்றல் அதிகம் என்பதைக் காட்டியவராக நமது தமிழச்சி தில்லையாடி வள்ளியம்மை திகழ்ந்துள்ளார். அவரை நினைவு கூர்ந்து அற்புதமான ஒரு பதிவினை பதிவிட்டதற்கு பாராட்டுகளும் நன்றிகளும். தங்களின் தீபாவளி வாழ்த்திற்கு நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே
   தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும் தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்

   நீக்கு
 31. பெயரில்லா19 அக்டோபர், 2014

  நெஞ்சம் நெகிழச்செய்த பதிவு ஐயா. தென்னாப்பிரிக்காவில் காந்தியின் போராட்டத்துக்கு தமிழர்கள் தோளோடு தோள் நின்றனர் என்பதற்கு சான்றாக இருப்பது வள்ளியம்மையின் வரலாறு மட்டும்தான். இன்னும் பலரது போராட்டம், வெளியில் தெரியாமலே போய்விட்டது ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஐயா காந்திஜியின் தென்னாப்பிரிக்கப் போராட்டத்திற்குத் துணைநின்றவர்கள் தமிழர்கள்தான்
   ஆயினும் வெளியில் தெரியாமல்தான்போய்விட்டது நண்பரே
   ஒரு வேளை தமிழர்கள் என்பதால் மறைக்கப் பட்டுவிட்டதோ என்னமோ?
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே

   நீக்கு
 32. உண்மையில் இன்று தான் வள்ளியம்மையின் முழு வரலாறும் தெரிந்து கொண்டேன். நன்றி

  பதிலளிநீக்கு
 33. தில்லையாடி வள்ளியம்மையா பற்றி தெரியாத தகவலை தெரிந்து கொண்டேன்.
  பதிவர் திருவிழா வெற்றி பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 34. மகாத்மா காந்தியின் சரிதம் பேசப்படும் வரை தில்லையாடி வள்ளியம்மையின் தியாகமும் நினைவு கூறப்படும்! பகிர்வுக்கு நன்றி!
  த.ம.11

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ளம் கொண்ட ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு, எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

   நீக்கு
  2. நன்றி ஐயா
   தங்களுக்கும் என் உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயா

   நீக்கு
 35. வணக்கம் ஐயா,

  தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
  நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

  வலைச்சர இணைப்பு
  http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_21.html

  நன்றி

  பதிலளிநீக்கு
 36. குடும்பத்தினர் மற்றும் நட்பும் தோழமைகளுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு
 37. வணக்கம்
  ஐயா.
  அறிய முடியாத தகவலை தங்களின் பதிவு வழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 38. தில்லையாடி வள்ளியம்மை என்ற பெயரை கேட்டு அறிந்திருந்தாலும் அவரை பற்றிய தகவல்களை உங்கள் பதிவின் மூலமே அறிந்தேன்.

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 39. அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு