23 நவம்பர் 2014

விருது

     

நண்பர்களே, வணக்கம். நலம்தானே. வலைப் பூ என்னும் எழுத்து உலகில், மகிழ்ச்சி உலகில் காலடி எடுத்து வைத்து, மூன்றாண்டுகள் ஆகப் போகின்றன.

     மூன்று ஆண்டுகளுக்குள் எத்தனை, எத்தனை புதுப் புது உறவுகளைச் சம்பாதித்திருக்கிறேன் என்பதை எண்ணும்போது, மனம் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடுகிறது.


     என் நினைவுகளை சற்றே, பின்னோக்கிச் செலுத்திப் பார்க்கிறேன். முதன் முதலாய், வலைப் பூவில், என் முதல் பதிவினை பகிர்ந்த பொழுது, ஒரு மாதத்திற்கும் மேலாக, இவ்வுலகின் பெரிய ரகசியமாகவே அது தொடர்ந்தது. நான் மட்டுமே தினம் தினம், அப்பதிவினைப் படித்து வந்தேன்,

     பிறகு மெல்ல, மெல்ல நண்பர்கள் ஓரிருவர், என் வலையின் பக்கம் எட்டிப் பார்க்கத் தொடங்கினார்கள். மனதில் உற்சாகம் பிறந்த்து. நம்மைப் படிக்க ஓரிருவராவது வருகிறார்களே, அவர்களுக்காகவாவது எழுதுவோம் என்ற எண்ணம் தோன்றியது. எழுதத் தொடங்கினேன்.

       துவக்கத்தில் மாதம் ஒரு பதிவுதான் எழுதினேன். தற்சமயம் வாரத்திற்கு ஒரு பதிவு.

எழுதுங்கள் என, என்னை வலைக்குள் இழுத்தவர்
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள்

     பார்த்ததை எல்லாம் எழுதுங்கள், படித்ததை எல்லாம் எழுதுங்கள், கேட்டதை எல்லாம் எழுதுங்கள், கேள்விப்பட்டதை எல்லாம் எழுதுங்கள் என எழுத்துலகிற்கு வழி காட்டியவர்

திரு ஹரணி அவர்கள்,

     கணித மேதை சீனிவாச இராமானுஜன் தொடர், எனக்கு எண்ணற்ற புதிய உறவுகளை ஏற்படுத்தித் தந்தது.

சகோதரி திருமதி உஷா அன்பரசு அவர்கள்,
முதன் முதலாக என்னை வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தினார்

தனது பல்வேறு கல்வியியல் பணிகளுக்கு இடையிலும்,
நேரம் ஒதுக்கி, என் வலைப் பூவை,
கல்வியாளர் திரு டி.என்.முரளிதரன் அவர்கள்
தமிழ் மணத்தில் இணைத்துக் கொடுத்தார்.

தமிழ் மணத்தில் இணைத்துக் கொடுத்த காரணத்தால்,
மரபின் மைந்தன் முத்தையா அவர்களின்
பார்வைக்கும் சென்ற,
கணிதமேதை சீனிவாச இராமானுஜன் தொடர்
நமது நம்பிக்கையில்
இருபது வாரங்கள் தொடராகவும் வெளி வந்தது.


     நண்பர்களே, எனக்குக் கணினியில் தட்டச்சு செய்ய மட்டுமே தெரியும். அதனைத் தாண்டி கணினியின் செயல்பாடுகள் எதனையும் நான் அறியேன்.  

இணையத்தில் பிரச்சினைகள் தலைதூக்கிய போதெல்லாம்,
தனது தொழில் நுட்பத் திறமையினால், திண்டுக்கல்லில் இருந்தவாரே,
வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள்.
சரி செய்து கொடுத்தார்.

இவ்வாறு நண்பர்களின், சகோதரிகளின் உதவியால், ஊக்குவிப்பால், தொடர் வருகையால்தான்
என் வலைப் பூ
இன்றும் தொடர்ந்து சுவாசித்துக் கொண்டிருக்கிறது.

     தங்களின் நல்லாதரவினால் மட்டுமே, எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு, ஒரு விருது வழங்கப் பெற்றுள்ளது என்பதை மன மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ரோட்டரி கிளப் ஆஃப் தஞ்சாவூர் கிங்ஸ்
சார்பில், தஞ்சையில்
6 ஆம் ஆண்டு
ரோட்டரி புத்தகத் திருவிழா
கடந்த 14.11.14 முதல் 23.11.14வரை
சிறப்புடன் நடைபெற்றதைத் தாங்கள் அறிவீர்கள்.

தொடக்கத் திருவிழா
ரசனை விழா
படைப்பாளிகளுக்குப் பாராட்டு விழா
இலக்கியத் திருவிழா
கலைத் திருவிழா
கவிதைத் திருவிழா
ஆவணப் படத் திருவிழா
பாராட்டுத் திருவிழா
வாசகர் திருவிழா
நிறைவு விழா
என ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விழாவாக, புத்தகத் திருவிழா களை கட்டியது.

கடந்த 16.11.2014 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற
படைப்பாளிகளுக்குப் பாராட்டு விழா
எனும் விழாவில், விழாக் குழுவினர்,
வலைப் பூவில் வலம் வருகின்றமைக்காக,
எனக்கும் ஒரு விருது வழங்கி மகிழ்ந்தனர்.

மேளாள் அமைச்சர், முத்தமிழ் மன்றத் தலைவர்
திருமிகு சி.நா.மீ.உபயதுல்லா அவர்களின்
தலைமையில் நடைபெற்ற விழாவில்,மத்திய நிதித் துறை, மேனாள் இணை அமைச்சர்
திருமிகு எஸ்.எஸ்.பழனிமாணிக்ம் அவர்கள்,
மண்ணின் சிறந்த படைப்பாளி விருதினை
எனக்கு வழங்கினார்.

   

  எனது தமிழாசிரியர் புலவர்  கோ.பாண்டுரங்கன் அவர்களும், எனது நண்பரும், பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களும், நண்பரும் பள்ளி உதவித் தலைமையாசிரியருமான திரு அ.சதாசிவம் அவர்களும், நண்பர்கள் திரு பி.சேகர், திரு க.பால்ராஜ் மும்பை சரவணன் அவர்களும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்தனர்.

     நண்பர்களே, தங்களால், தங்களின் அளப்பறிய அன்பினால், தங்களின் உற்சாகப் படுத்தும் பண்பார்ந்த செயலால், எனக்கு ஓர் விருது கிடைத்திருக்கின்றது.

நன்றி நண்பர்களே

    100 கருத்துகள்:

 1. மென்மேலும் வெற்றி வாகைச்சூடி பல விருதுகள் வாங்கிட வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 2. மண்ணிண் சிறந்த படைப்பாளி விருதினை பெற்றமைக்கு எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள்.மேலும் பல படைப்புகளை வழங்கி பல விருதுகளை பெறவேண்டும்.மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 3. அன்பின் நண்பருக்கு வாழ்த்துகள் இதைப்போல மென்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லா23 நவம்பர், 2014

  இனிய வாழ்த்துகள்.
  மேலும் பல விருதுகள் வெற்றிகள் குவியட்டும்.
  இறையாசியும் நிறையட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 5. தங்களுக்கேற்ற விருதுதான்.
  இன்னும் பலப்பல பெற்றிட வாழ்த்துகிறேன் ஐயா!

  பதிலளிநீக்கு
 6. மண்ணின் மைந்தனுக்கு கிடைத்த விருதுக்கு வாழ்த்துகள்!
  த ம 2

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துக்கள் சார்,மிகவும் சந்தோஷமாயிருக்கிறது,மனம் திறந்த வாழ்த்துக்கள் திரும்பவுமாய்/

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துக்கள் ஐயா..
  தங்கள் எழுத்துப் பணி தொடரட்டும்.
  கனவில் வந்த காந்தி எழுதியாச்சு.

  பதிலளிநீக்கு
 9. தஞ்சை மண்ணின் சிறந்த படைப்பாளி விருதினை பெற்ற சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு எனது உளம் நிறைந்த வாழ்த்துக்கள்! உங்களுக்கு பாராட்டு விழா, என்று தெரிந்து இருந்தால் நானும் தஞ்சைக்கு வந்திருப்பேன்.
  த.ம.5

  பதிலளிநீக்கு
 10. நானே விருது பெற்றதைப்போல மகிழ்கிறேன்
  பதிவுகளும் விருதுகளும் கணக்கின்றித் தொடர
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. மிக மகிழ்ந்தேன். விருதுகள் தொடரட்டும்!

  பதிலளிநீக்கு
 12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 13. அய்யா வணக்கம்.
  தங்கள் பணிகளுக்கு இன்னும் இன்னும் சிறப்புமிகு பரிசுகள் வந்துகொண்டே இருக்கும் அய்யா. வாழ்த்துகள்
  த.ம.(8) வணக்கம்.

  பதிலளிநீக்கு
 14. சிறப்பான விழாவில் பெருமை மிகு விருதுகள் பெற்றதற்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 15. வாழ்த்துக்கள் ஐயா! இன்னும் பணிதொடரட்டும் பல விருதுமாலைகள் தோலில் சேரட்டும்.

  பதிலளிநீக்கு
 16. மென்மேலும் விருதுகள் பெற வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 17. மேன்மை தாங்கிய விருதிற்கு வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள் நண்பரே! தங்கள் எழுத்து மேன்மேலும் வளர்ந்து பல வெற்றிகளைப் பெற எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்! நண்பரே!

  பதிலளிநீக்கு
 18. இது போன்ற அன்கீகாரனால் மேலும் சிறப்பாக தமிழ்ப் பணி புரியா ஊக்கம் ஊட்டுவதாக அமையும் வாழ்த்துகள் சார்

  பதிலளிநீக்கு
 19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 20. வாழ்த்துக்கள் ! தோழரே !---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 21. தஞ்சை மண்ணின் சிறந்த படைப்பாளி விருதினை பெற்ற சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு எனது உளம் நிறைந்த வாழ்த்துக்கள்! உங்களுக்கு பாராட்டு விழா, என்று தெரிந்து இருந்தால் நானும் தஞ்சைக்கு வந்திருப்பேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின்அன்பிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா

   நீக்கு
 22. தங்களின் பணிக்காக இத்தகைய விருது கிடைத்தது பெருமகிழ்ச்சியைத் தருகிறது. வலைப்பூவில் தாங்கள் தடம் பதிய நானும் துணையாக இருந்தேன் என்று நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. தங்களின் முயற்சியும், அயரா உழைப்பும், நண்பர்களை அரவணைக்கும் பாங்கும், வாசிப்பின் மீதான ஆர்வமும் தங்களை இவ்வாறான பெருமைக்கு எடுத்துச் சென்றுள்ளது. இது ஓர் ஆரம்பமே. இன்னும் பல விருதுகள் பெற்று நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் காட்டிய பாதையில் நடப்பவன் ஐயா நான்
   மிக்க நன்றி ஐயா

   நீக்கு
 23. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ஜெயக்குமார் சார். வாழ்த்துக்கள்.
  எங்களுக்கு தெரியாத விஷயங்களை இன்னும் நிறைய எழுதுங்கள். ஆவலோடு படிக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 24. சில தினங்கள் தஞ்சையில் இருந்தும் தங்களுக்கு விருது வழங்கிய விழாவில் கலந்து கொள்ள இயலாமல் போனது..

  அன்பின் சகோதரர் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்..
  இதைப்போல மேலும் பல விருதுகள் பெற அன்புடன்வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தவறு என்னுடையதுதான் ஐயா
   தெரிவிக்காதது என்னுடைய தவறுதான் ஐயா
   மன்னிக்கவும்
   வாழ்த்திற்கும், அன்பிற்கும், அளவிலா பாசத்திற்கும் மிக்க நன்றி ஐயா

   நீக்கு
 25. நன்றி ஐயா!
  மேன்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்!!

  உங்களைப் போன்ற நல் இதயமும், சமூகப்பணி புரிவர்களுக்கும் கிடைக்காமல் யாருக்கு கிடைக்கப்போகிறது!

  விருது மகிழும்!
  நன்றி!
  வணக்கம்!
  தங்கள் மாணவன்,
  மும்பை சரவணன்

  பதிலளிநீக்கு
 26. மிக்க மகிழ்ச்சிங்க சகோதரரே. இன்னும் பலப்பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 27. best wishes sir to you to achieve more and climb still more heights.

  பதிலளிநீக்கு
 28. உகந்தவருக்கே உரிய நேரத்தில்வழங்கப் பட்ட விருதுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 29. மிக்க மகிழச்சி.

  வாழ்த்துக்கள் நண்பரே.

  தொடர்க தங்கள் தமிழ்ப்பணி.

  பதிலளிநீக்கு
 30. மிக்க மகிழ்ச்சி ஐயா. தங்கள் பணி என்றென்றும் தொடர இறைவனை பிரார்த்திகிறேன் ஐயா

  பதிலளிநீக்கு
 31. மிகவும் மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துக்கள்...

  தங்களின் வேண்டுகோளுக்கினங்க : http://dindiguldhanabalan.blogspot.com/2014/11/Gandhi.html

  பதிலளிநீக்கு
 32. இனிய வாழ்த்துகள்!!!
  மேலும் பல விருதுகள் வெற்றிகள் குவியட்டும்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும்
   சகோதரி தீபா பார்த்தி அவர்களுக்கும்
   மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்து மகிழ்கின்றேன்

   நீக்கு
 33. ஐயா, விருதினைப் பெற்ற தங்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள். உங்கள் பணி மென்மேலும் சிறப்புப் பெற வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 34. சாதனை பல புரிந்து,உயரங்கள் பல தொட்டிட, வாழ்த்த வயதில்லாத காரணத்தினால் வணங்குகிறேன் அய்யா.

  பதிலளிநீக்கு
 35. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  சரியான நேரத்தில் சரியான நபருக்கு கொடுக்கப்பட்ட விருதானது மிகவும் பெருமைக்குரியதொன்று. அந்த நாளில் அந்த அற்புதமான நிகழ்ச்சியினை அருகே இருந்து பார்த்து ரசித்தது நண்பர்களாகிய எங்களுக்கும் நமது ஆசிரியர் திரு. கோ.பாண்டுரெங்கன் அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. இதனைப் போன்று பல விருதுகளை தாங்கள் வென்றெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

 36. தங்களுக்கு வாழ்த்துகள்
  தங்கள் படைப்பாற்றலுக்கு கிடைத்த விருது.
  மென்மேலும் விருதுகள் பெற வாழ்த்துக்கள்!
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 37. ரொம்ப சிம்பிளான மனிதராக இருப்பதால் எல்லோரின் நேசத்தையும் பெற்றிருக்கிறீர். நீவிர் வாழ்க.

  பதிலளிநீக்கு
 38. வாழ்த்துக்கள் ஐயா! உங்களின் கரந்தை மாமனிதர்கள் நூலை எனக்கு அனுப்பி வைக்க முடியுமா? உங்களின் முகவரியை இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பினால் நூலின் விலையை எம். ஓ செய்து விடுவேன். thalir.ssb@gmail.com. என்னுடைய முகவரியையும் மின்னஞ்சலில் அனுப்புகிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் முகவரிவினை
   karanthaikj@gmail.com
   என்னும் முகவரிக்கு அனுப்புங்கள் நண்பரே
   நூலினை அனுப்பிடக் காத்திருக்கிறேன்
   வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

   நீக்கு
 39. மேலும் பல விருதுகள் பெற நல்வாழ்த்துகள் ஐயா!

  பதிலளிநீக்கு
 40. உங்கள் எழுத்துக்கும் உழைப்புக்கும் , நல்ல மனதிற்கும் இன்னும் இன்னும் உயரம் காத்திருக்கிறது அண்ணா!

  பதிலளிநீக்கு
 41. http://blogintamil.blogspot.com.au/2014/11/blog-post_26.html?s
  வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 42. விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 43. மண்ணிண் சிறந்த படைப்பாளி விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 44. அன்புள்ள ஜெயக்குமார்..

  இது தொடக்கம்தான். உங்கள் திறமைக்கு இன்னும் பல விருதுகள் காத்திருக்கின்றன. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 45. அன்புள்ள ஜெயக்குமார்,
  வணக்கம். உங்கள் வலைப்பூ எழுத்துப்பணி தொடரட்டும்.
  இன்னும் பல உச்சங்களைத் தொடுவீர்கள். வாழ்க.

  பதிலளிநீக்கு
 46. உங்களுக்கு கிடைத்த விருதில் எங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி பூக்கட்டும் புது மனம் விரிக்கட்டும் சிறகை வரவேற்கும் வானம் என்றும் உங்கள் நண்பன்

  பதிலளிநீக்கு
 47. மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே, உங்கள் பணி இன்னும் சிறப்பாக தொடரட்டும். எங்கள் சங்கத்தின் இளம் தோழர் களப்பிரனும் உங்களோடு சேர்ந்து விருது பெற்றார் என்பது கூடுதல் மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. களப்பிரன் தங்கள் நண்பர் என்பதை அறிந்து மகிழ்கின்றேன்
   நன்றி நண்பரே

   நீக்கு
 48. வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும்!....
  நீங்கள் செல்லும் திசையெல்லாம் வெல்லும் திசையாக வாழ்த்துகள்...!

  பதிலளிநீக்கு
 49. வாழ்த்துகள். மேலும் பற்பல விருதுகளைப் பெறவும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு