12 நவம்பர் 2014

சுவாசிப்போம்


ஆண்டு 1968. செப்டம்பர் 14. அமெரிக்காவின் நியூயார்க் நகரம். மெமோரியல் மருத்துவமனை. அறுவை சிகிச்சையில் புகழ் பெற்ற மருத்துவர் தியோடர் மில்லர் அவர்கள், மெதுவாக, அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்கிறார்.

      படுக்கையில் குள்ளமாக ஒரு மனிதர் அசந்து போய் படுத்திருக்கிறார். அவரின் தலையணை அருகே, தலையணையைப் போலவே, ஓர் பெரிய புத்தகம்.

நாளை காலை உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளேன். தயாராக இருங்கள்.


     ஒரு கணம் தயங்கிய அம் மனிதர், மருத்துவரைப் பார்த்துக் கேட்டார்.

அறுவை சிகிச்சையினை ஒரு நாள் தள்ளிப் போடலாமா?

     மருத்துவருக்குத் தன் செவிகளையே நம்ப முடியவில்லை.


நீங்கள், ஒரு சிறந்த பகுத்தறிவுவாதி என்றல்லவா கூறினார்கள். நீங்களுமா, நல்ல நாள், நல்ல நேரம் பார்க்கிறீர்கள்?.

அம்மனிதர் மெல்லச் சிரித்தார். தனது தலையணையின் அருகில் இருந்த, பெரிய புத்தகத்தைச் சுட்டிக் காட்டினார்.

இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். படித்து முடிக்க இன்னும் ஒரு நாள் கால அவகாசம் தேவைப் படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்தபின், உயிருடன் இருப்பேனோ? இல்லையோ? என்பது தெரியாது. எனவே உயிருடன் இருக்கும்பொழுதே, இப்புத்தகத்தை முழுமையாய் படித்து முடித்துவிட விரும்புகிறேன்.

     இப்படியும் ஒரு மனிதரா? மருத்துவர் பேச்சின்றி நின்றார்.

நண்பர்களே, இம் மாமனிதர்தான்
பேரறிஞர் அண்ணாதுரை.

---

        

ஆண்டு 1931 மார்ச் 23. திங்கட் கிழமை. லாகூர் மத்திய சிறைச்சாலை. இரவு மணி 7.15. சிறைக் கண்காணிப்பாளர், காவல் துறை கண்காணிப்பாளர், அவ்வூர் நீதிமன்ற நீதிபதி, சிறை மருத்துவர்,  காவலர்கள் சிலர், என ஒரு சிறு கூட்டமே, சிறைக் கொட்டடியை நோக்கி நடக்கிறது.

     ஒரு அறையின் கதவினைத் திறந்தவர்கள், மறு நொடி அதிர்ந்து போனார்கள். அவர்களின் கண்களை அவர்களாலேயே நம்பமுடியவில்லை.

அவ்வறையில் கை, கால்களில் விலங்குகள் மாட்டப்பெற்ற நிலையில் மூவர். மூவருமே தூக்கு தண்டனை விதிக்கப் பட்டவர்கள். விடிந்தால் தூக்கு. ஆனால் அவர்களின் முகங்களில் வருத்தமே இல்லை. ஏதோ நாளைக்கு விடுதலை என்பதைப் போல், கவலைச் சிறிதும் இன்றி அமர்ந்திருக்கின்றனர்.

     அதிலும், அம்மூவரில் ஒருவர் செய்து கொண்டிருந்த செயலைத்தான், அறைக்குள் நுழைந்த கூட்டத்தால், நம்பவே முடியவில்லை.

     ஒருவர் மட்டும், சம்மணமிட்டுத் தரையில் அமர்ந்தவாறு, தலைகுனிந்து, லெனின் அவர்களின், அரசும் புரட்சியும் என்னும் நூலினை, நாளைய பள்ளித் தேர்விற்குப் படிக்கும் மாணவனைப் போல, படித்துக் கொண்டிருக்கிறார். ஒரு கூட்டமே, அறைக்குள் நுழைந்ததைக் கூட அறியாமல், கவனியாமல், உணராமல், புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறார்.

      சிறைக் கண்காணிப்பாளர் கனைக்கவே, தலை நிமிர்ந்து பார்க்கிறார்.

உங்கள் மூவரையும், இப்பொழுதே தூக்கிலிடுவதற்கு உத்தரவு வந்துள்ளது. கிளம்புங்கள்.

    படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைப் பொறுமையாக மூடி, பத்திரமாய் பக்கத்தில் வைத்துவிட்டுக் கேட்டார்.

நாளை 24 ஆம் தேதிதானே, எங்களைத் தூக்கிலிட உத்தரவிட்டிருந்தார்கள்.

ஆம். அது பழைய உத்தரவு. இப்பொழுது புதிய உத்தரவு வந்திருக்கிறது. இப்பொழுதே தூக்கிலிடுமாறு. கிளம்புங்கள்.

    அம்மனிதர், அச்சூழ்நிலையிலும் சிரித்தார்.

ஆங்கிலேய அரசுக்குத்தான் எங்கள் மீது எவ்வளவு கருணை. இந்த அடிமை இந்தியாவில், மேலும் 12 மணி நேரம் அதிகமாக, நாங்கள் அடிமைப் பட்டிருக்கக் கூடாது, விடுதலை கொடுப்போம் என்று முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது. இதோ நாங்கள் தயார்.

    என்ன ஒரு மன உறுதி. அதிகாரிகள் ஆடித்தான் போய்விட்டார்கள்.


புத்தகம் படித்துக் கொண்டிருந்தவரை முதலாவதாக தூக்கு மேடையில் ஏற்றினர். கை விலங்குகளை அகற்றி விட்டு, கைகளைப் பின்புறமாகக் கட்டினர். கண்களில் கருப்புத் துணியினைக் கட்டினர்.

     நீதிபதி கேட்டார்.

உங்களின் கடைசி ஆசை ஏதாவது?

ஒரே ஒரு ஆசை உள்ளது.  எங்களை சமூக விரோதிகளைப் போல், தூக்கில் போடாதீர்கள். இராணுவ வீரர்களைக் கொண்டு, எம் மார்பில் சுடுங்கள்.

     ஒரு நிமிடம் நீதிபதிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

உங்களைத் தூக்கில் போடத்தான் உத்தரவு. அதனை மாற்ற முடியாது.

பரவாயில்லை. கண்களைக் கட்டியுள்ள கருப்புத் துணியையாவது அகற்றுங்கள். எங்கள் தாய் மண்ணைப் பார்த்தபடியே, உயிர் துறக்கிறோம்.

     கருப்புத் துணிகள் அகற்றப் பட்டன. ஒருவர் பின் ஒருவராக, கண்களை அகலத் திறந்தபடியே, பாரத மண்ணைப் பார்த்தபடியே, கயிற்றில் உயிரை விட்டனர்.

அவர்கள்தான்,
பகத் சிங்
ராஜ குரு
சுக தேவ்.
----

     நண்பர்களே, நாளை, உயிரோடு இருப்போமா, இருக்க மாட்டோமா என்பது கூட தெரியாத நிலையில், படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை முடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் அறிஞர் அண்ணா.

     நிச்சயமாக நாளை உயிரோடு இருக்க மாட்டோம், என்பது உறுதியாகத் தெரிந்த பிறகும் கூட, கலங்காமல் புரட்சி பற்றி படித்தவர் மாவீரன் பகத் சிங்.

ஈழக் கவி சச்சிதானந்தன் பாடுவார்

சாகும் போதும் தமிழ்ப் படித்துச் சாக வேண்டும்
எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்.

     நண்பர்களே, புத்தக வாசிப்பில், இவர்களை எட்டிப் பிடிக்க மட்டுமல்ல, அண்ணாந்து பார்ப்பதற்குக் கூட நம்மால் இயலாது.

இருப்பினும்,
நாள் ஒன்றுக்கு, ஒரு பக்கமாவது வாசிக்கலாம் அல்லவா?
வாசித்ததை நேசிக்கலாம் அல்லவா?
நேசித்ததை சுவாசிக்கலாம் அல்லவா?

நண்பர்களே, தஞ்சையில் ஓர் புத்தகக் கண்காட்சி

ரோட்டரி கிளப் ஆஃப் தஞ்சாவூர் கிங்ஸ்
நடத்தும்
6 ஆம் ஆண்டு
ரோட்டரி புத்தகத் திருவிழா
நவம்பர் 14 முதல் நவம்பர் 23 வரை
பத்து நாட்களுக்கு.

வாருங்கள் நண்பர்களே,
வா        ரு        ங்        க        ள்


90 கருத்துகள்:

  1. படித்த சம்பவங்கள்தான். தெரிந்ததுதான். ஆனாலும் படிக்கும்போதெல்லாம் சிலிர்க்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்கள் இருவரும் அதுமாதிரியான ஆளுமைகள்
      நன்றி நண்பரே

      நீக்கு
  2. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    வாசித்தலை சுவாசித்தல் போன்று நித்தமும் செயல்படுத்தல் வேண்டும் என்பதை இவ்வளவு அழகாக அருமையாக பதிவிட தங்களைப் போன்ற மிக சிலரால் மட்டுமே முடியும் என்பதை இந்தப்பதிவின் மூலம் நிரூபித்து காட்டியது மிகவும் மகிழ்ச்சிக் கொள்ள செய்கின்றது. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பகத் தெரிந்த விசயம்
    தெரியாத விசயம் அண்ணாதுரை...
    படங்கள் உங்களின் அற்பணிப்பை விளக்குகின்றன

    பதிலளிநீக்கு
  4. புத்தகம் படிப்பதின் அவசியத்தை விளக்கும் பதிவு.
    புத்தகத் திருவிழாவிற்கு அழைப்பு.
    சிறப்பான பதிவு!!!

    பதிலளிநீக்கு
  5. மாலையில் வந்து படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. வாசிப்பை நேசிப்போம், சுவாசிப்போம்.
    புத்தகங்கள் போல சிறந்த நண்பன் யாருமில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே
      புத்தகமே சிறந்த நண்பன்
      நன்றி நண்பரே

      நீக்கு
  7. படிக்கையிலே புல்லரிக்கிறது. என்னே ஒரு மனிதர்கள். இதை படித்தவுடன் எனக்கும் பகத் சிங், ராஜ் குரு மற்றும் சுக்தேவ் போன்றவர்கள் மேல் உள்ள மரியாதை இரட்டிப்பு ஆகின்றது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களைப்போன்ற மனிதர்கள் இனி தோன்றுவது அரிது
      நன்றி நண்பரே

      நீக்கு
  8. அடுத்த பதிவை அறிய ஆவலய் தூண்டுகிறீர்கள்

    பதிலளிநீக்கு
  9. அபூர்வ பிறவிகள். நெஞ்சம் கனத்துப் போனது. சுவாசம் உள்ள வரை வாசித்தவர்கள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வணங்குகிறேன். பகிர்வுக்கு நன்றிங்க அண்ணா.

    பதிலளிநீக்கு
  10. மிக அருமை.ஆழ்ந்து படித்தால் ஆனந்தம் காணலாம்.பணம் இன்றி நாம் பெரும் மமிகப்பெறிய ஆற்றல் புத்தகம் வாசித்தல்.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வாசிப்புக்கூட வரம்தான் ஐயா!
    வாய்ப்பதில்லை எல்லோருக்கும்!

    அருமையான பகிர்வு!
    அறிந்து கொண்டேன் கலைக் களஞ்சியமான உங்களிடமிருந்து!
    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  12. அறிஞர் அண்ணாவைப் பற்றி வலைப்பூவில் மறந்து விட்டார்களோ, என்று எண்ணியவேளையில், உங்களின் உயிர்த் துடிப்பான கட்டுரை. மற்றும் பகத்சிங்கைப் பற்றியும் அவரது தோழர்களைப் பற்றியும் உண்ர்ச்சி மயமான வரிகள்.
    த.ம. 6

    பதிலளிநீக்கு
  13. தெரிந்த விஷயம் என்றாலும் மறுபடி படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாசித்தல் ஒரு கலை அதை கற்றவர்களால் மறந்து வாழமுடியாது. அருமையாக புத்தகக் கண்காட்சி அறிமுகம் தந்தீர்கள்

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா12 நவம்பர், 2014

    நாள் ஒன்றுக்கு, ஒரு பக்கமாவது வாசிக்கலாம் அல்லவா?
    வாசித்ததை நேசிக்கலாம் அல்லவா?
    நேசித்ததை சுவாசிக்கலாம் அல்லவா?

    aam...aam...
    Vetha.Langathilakam.

    பதிலளிநீக்கு
  16. புத்தகத் திருவிழாவுக்கு இதைவிட உருக்கமாக அழைப்பு விடமுடியுமா. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. ஆங்கிலேய அரசுக்குத்தான் எங்கள் மீது எவ்வளவு கருணை. இந்த அடிமை இந்தியாவில், மேலும் 12 மணி நேரம் அதிகமாக, நாங்கள் அடிமைப் பட்டிருக்கக் கூடாது, விடுதலை கொடுப்போம் என்று முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது. இதோ நாங்கள் தயார்.

    பகத்சிங்கின் இந்த வார்த்தையை படிக்கும்போதே நமக்கு சிலிர்க்கிறதே கேட்ட ஆங்கிலேயனுக்கு எப்படி இருந்திருக்கும் இப்படிப்பட்ட வீரர்கள் பெற்றுக்கொடுத்த சுதந்திரம் இப்போது திருடர்களின் கையில் என நினைக்கும்போது.....
    நெஞ்சு பொறுக்குதில்லையே....

    பதிலளிநீக்கு
  18. பதிவினைப் படித்ததும் மனம் கனக்கின்றது..

    பதிலளிநீக்கு
  19. இரண்டு சம்பவங்களுமே படித்தது தான் என்றாலும் புகைப்படத்துடன் படிப்பது முதல் முறை... தினமும் ஒரு பக்கமாவது படிக்கலாமே... மனதில் போட்டுக்கொள்கிறேன். பகிர்விற்கு நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  20. மாபெரும் மனிதர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள்! மனதில் பதிய செய்த நல்ல பதிவு! புத்தக கண்காட்சி சிறக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  21. எத்தனை தடவைகள் படித்தாலும் எழுச்சியூட்டும் அனுபவங்கள்.
    ஒவ்வொருமுறையும் இந்த சுதந்திர வீரர்களின் முடிவு மனதுக்கு வேதனை அளிக்கிறது. வீர சுதந்திரத்தை வாங்கித் தந்த இவர்களைப் பற்றி நினைவுபடுத்தியதற்கு நன்றி!

    அண்ணா அவர்களுக்கு புத்தகங்களின் மேல் இருந்த பற்று வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  22. புத்தகம் படிக்கசொல்லும் பயனுள்ள பகிர்வு அண்ணா! வியப்பாய் இருக்கிறது அவர்களை நினைத்தால்!!!

    பதிலளிநீக்கு
  23. தாங்கள் கூறிய இரு நிகழ்வுகளும் நான் முன்னர் படித்தவைதான். இருப்பினும் தங்களது நடையில் அவை இன்னும் சிறப்பாக உள்ளன. எங்களுக்கு படிக்கும் உணர்வைத் தூண்டி மேம்படுத்தும் தங்களது முயற்சிக்கு எங்களின் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. நல்ல அறிவுரை ஜெயக்குமார் ஐயா.
    படிக்க வேண்டும்....
    ம்... படிக்கனும்... நல்ல புத்தகம் கிடைத்தால். (என் மனசு)

    பதிலளிநீக்கு
  25. அவர்களைப் போலவே எனக்கும் படித்துக் கொண்டிருக்க ஆசைதான் ,ஆனால் ஒரு சிலர் எழுதியவைகளைப் படித்தால் , நமக்கு நாமே தூக்கில் தொங்க வேண்டும் போலாகி விடுகிறதே :)
    த ம 8

    பதிலளிநீக்கு
  26. வித்தியாச அழைப்பு புத்தகக்கண்காட்சிக்கு.
    பகத்சிங்பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டதுதான், அண்ணாத்துரைபற்றியான தகவல் புதிது எனக்கு,
    இப்படியான அரிய மற்றும் புதிய தகவல்கள் அடங்கியதாகவும் பயனுள்ளதாகவுமேஇருக்கிறது தங்களின் பதிவுகள்.
    வாழ்த்துக்கள் சார்/நன்றி வணக்கம்/

    பதிலளிநீக்கு
  27. புத்தகத் திருவிழாவுக்கு வரவேற்கப் பொருத்தமான பதிவு.
    படங்களைத் தேடி எப்படித்தான் எடுப்பீர்களோ? அந்த இறப்புச் சான்றிதழை இப்போதுதான் பார்க்கிறேன். தங்களின் தேடுதலுக்கு வணக்கம் அய்யா.
    (கடந்த புத்தகவிழாவில் உ.வே.சா.அவர்களைப் பற்றிப் பேச வந்தபோது தங்கள் வீட்டுக்கு வந்தது இன்றும் நினைவிலிருக்கிறது அய்யா! இப்போது சற்று முன்னரே வருவது போலிருக்கிறது)

    பதிலளிநீக்கு
  28. அறிந்த சம்பவங்களாக இருந்தாலும் உங்கள் எழுத்தில் படிப்பது சிறப்பு ஐயா...
    புத்தக விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
  29. இரண்டு சம்பவங்கள் வாசிப்பையும் நாட்டுப்பற்றையும் உணர்த்தியது... அருமையான பதிவு ஐயா...

    பதிலளிநீக்கு
  30. அண்ணாந்து பார்ப்பதற்குக் கூட நம்மால் இயலாது என்பது உண்மை தான்...

    சிறப்பான பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
  31. பெயரில்லா13 நவம்பர், 2014

    புத்தகத்திருவிழாவுக்கு அழைப்பு விடுத்திருக்கும் விதம் அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  32. ஒரு புத்தக கண்காட்சிக்கு அழைக்கும் விதமே மிகவும் அலாதியாக இருக்கிறது ஜெயக்குமார் சார்.

    சிறைக் கொட்டடி - இந்த தமிழ் வார்த்தையை இன்று தான் தெரிந்து கொண்டேன். நன்றி

    பதிலளிநீக்கு
  33. அறிந்த செய்திதான் , என்றாலும் மீண்டும் படிக்கும் போது.......?

    பதிலளிநீக்கு
  34. படிப்பதன் அருமையை அழுத்தமாக சொல்லியிருக்கிறீர்கள். குறிப்பிட்டிருக்கும் சம்பவங்க்ள் எவரையுமே சிந்திக்க வைப்பவை...

    பதிலளிநீக்கு
  35. வாசிப்பே ஸ்வாசம் என்பதை மிக அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  36. வாசிப்பின் வேந்தன்
    அறிஞர் அண்ணா பற்றிச் சொன்னீர்கள்...
    முகத்தின் ஒரு பக்கம்
    மழிப்பதற்களுள் (Save செய்வதற்குள்)
    அறுபது பக்கம் பொத்தகத்தையே
    வாசித்துவிடுவாரே - அது
    அவரது வாசிப்பின் வேகமென
    நானறிந்தேன்!

    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  37. அன்பின் ஜெயக்குமார்

    தெரிந்த செய்தி தான். இருப்பினும் இன்று இப்பொழுது தான் நடந்த செய்தி போல உள்ளது. பொறுமையாக மறுபடி படித்தேன். அறிஞர் அண்ணா - பகத்சிங், ராஜகுரு - சுக்தேவ் - ஆகிய அனைவரும் கல்யாண வீட்டில் சாப்பாட்டுக்கு அழைத்தது போல மகிழ்ச்சியுடன் தண்டனையை ஏற்றுக் கொண்டது புல்லரிக்க வைக்கிறது.

    மிகவும் அருமையான பதிவு

    மிக மிக இரசித்தேன்

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  38. எல்லா விசயங்களையும் சுவைபடகூறுகிறீர்கள்
    நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  39. படிக்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டும் விதத்தில் எழுதுவது உங்கள் சிறப்பு. அருமை. இனிமேல் எப்படியாவது நேரத்தை ஒதுக்கி ஒரு பக்கமாவது படிப்பேன்.

    பதிலளிநீக்கு
  40. அறிந்த விஷயங்களே ஆனாலும் கூட இவர்களைப் பற்றிப் படிக்கப் படிக்க அவர்கள் மேல் உள்ள மரியாதை கூடுகின்றதே! புல்லரிக்கின்றதே!

    உங்களின் கடைசி ஆசை ஏதாவது?

    ஒரே ஒரு ஆசை உள்ளது. எங்களை சமூக விரோதிகளைப் போல், தூக்கில் போடாதீர்கள். இராணுவ வீரர்களைக் கொண்டு, எம் மார்பில் சுடுங்கள்.//

    என்ன ஒரு வீரமான வார்த்தைகள்!!!! புல்லரிக்கின்றது! அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  41. மனிதர்களின் அறிவும் உணர்வும் ஒன்றையொன்று மீறி செயல் படும்போது அவர்களின் புகழ் மேலும்மேலும் நினைவுறுத்த படுகிறது
    நன்றி வண்ணக்கம் மீதும் எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  42. இனிய நண்பரே தங்களை தொடர்பதிவில் இணைத்திருக்கிறேன் எனது வலைப்பூ வந்து அறிந்து கொள்ளவும்,
    அன்புடன்
    தங்களின் நண்பன்
    கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  43. புத்தகக் காட்சிக்கு தங்களது முன்னுரை அருமை!.

    //தமிழ் மணந்து வேக வேண்டும்.// என்ற சொற்றொடர் பாரதிதாசன் பேசியது என்று நிணைத்துக் கொண்டு இருந்தேன். இத் தகவல் சரியானதுதானா அய்யா?.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு