25 டிசம்பர் 2014

வேலு நாச்சியார் 5


அத்தியாயம் 5 ஹைதர் அலி


புதிய மன்னர் உம்தத்-உல் உம்ரா வாழ்க
தளபதி ஜோசப் சுமித் வாழ்க

முத்து வடுகநாதரைத் தீர்த்துக் கட்டிய
மாவீரத் தளபதி பான் ஜோர் வாழ்க

கைக் கூலிகளின் முழக்கங்கள் சிவகங்கைச் சீமையின் அரண்மனையில் ஓங்கி ஒலித்தன.

     சசிவர்ணத் தேவரும், முத்து வடுகநாதரும் வேலுநாச்சியாரும் உலாவிய அரண்மனை இன்று ஆங்கிலேயர் வசம்.


     சிவகங்கைச் சீமையின் பெயரைக் கூட மாற்றி விட்டார்கள்.

உசைன் நகர்

---

    வேலு நாச்சியார் சிவகங்கைச் சீமையை விட்டு, விருப்பாட்சிக்கு வந்து, ஒன்றல்ல, இரண்டல்ல, எட்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

     எட்டாண்டுகளில், ஒரு நாள் கூட ஓய்வெடுக்கவில்லை வேலு நாச்சியார். படை திரட்டிக் கொண்டிருந்தார். பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார்.

     1780 ஆம் ஆண்டு. ஐப்பசி மாதம் 5 ஆம் நாள். விருப்பாட்சி வயல் வெளிகளில் எல்லாம், எங்கு பார்த்தாலும் வீரர்கள், வீரர்கள்.

      ஆண்கள் படையை மட்டுமல்ல. பெண்கள் படை ஒன்றினையும் உருவாக்கியிருந்தார் வேலு நாச்சியார்.

       பெண்கள் படையின் பெயர் என்ன தெரியுமா?

உடையாள் பெண்கள் படை

      தன்னைக் காத்த, தன்னைக் காக்கத் தன் இன்னுயுரையும் ஈந்த, உடையாளை, வேலு நாச்சியார் மறக்கவே இல்லை. இன்று உடையாளின் பெயரில் ஒரு படை.

      பெண்களின் படைக்குத் தலைமையேற்றது ஒரு பெண் சிங்கம்.

குயிலி.

     வாட் படை ஒன்றும், வளரிப் படை ஒன்றும் உருவாக்கப் பட்டது. இப்படைகளுக்குத் தலைமை ஏற்றவர்கள் யார் தெரியுமா?


வாட் படைக்குத் தலைமை ஏற்றவர்
பெரிய மருது
வளரிப் படைக்குத் தலைமை ஏற்றவர்
சின்ன மருது

மருது சகோதரர்கள்

     படை வீரர்கள், சிவகங்கைச் சீமையினை மீட்க எழுச்சி கொண்டு, புறப்படத் தயாரான போது, தூரத்தே ஓர் புழுதிப் புயல். பீரங்கிப் படை ஒன்று விருப்பாட்சியை நோக்கி வந்து கொண்டிருந்தது.

---

    


திண்டுக்கல் கோட்டை. அரியாசனத்தில் ஹைதர் அலி. எதிரில் அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையும், வேலு நாச்சியாரும்.

வாருங்கள்

    ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த, ஹைதர் அலி, இருவரையும் வரவேற்றார். வேலு நாச்சியார் ஒரு பெண்தானே என்ற எண்ணம் ஹைதர் அலியின் மனதில்.

     இராமநாதபுரம் சீமையும், சிவகங்கைச் சீமையும் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் கொடுமைகளை, வேதனைகளைத் தாங்கள் அறிவீர்கள். எனது கணவரை வஞ்சகமாக, வெள்ளையர்கள், மறைந்திருந்து கொன்றதையும் தாங்கள் அறிவீர்கள்.

     என்னைப் பற்றித் தாங்கள் அறிந்ததை விட, தங்களைப் பற்றி அதிகமாகவே நான் அறிவேன்.

     வேலு நாச்சியார் பேசத் தொடங்கிய, அந்நொடியே, வியப்பின் உச்சிக்கே சென்றார் ஹைதர் அலி. அவரது காதுகளையே, அவரால் நம்ப முடியவில்லை. தான் காண்பது கனவா, கேட்பது நினைவா என்பது கூட புரியவில்லை.

      ஹைதர் அலியின் வியப்பிற்குக் காரணம் என்ன தெரியுமா? வேலு நாச்சியார் பேசிய மொழி. வேலு நாச்சியார் தமிழில் பேசவில்லை, உருதுவில் பேசினார். ஹைதர் அலியின் தாய்மொழியான உருதுவில் பேசினார்.

     வேலு நாச்சியார், தனது தாய் மொழியை அல்லவா, இவ்வளவு சரளமாகப் பேசுகிறார். நம்மவே முடியவில்லை ஹைதர் அலிக்கு.

     உங்கள் மாவீரத்தையும், உங்கள் பெயர் உச்சரிக்கப்படும் பொழுதெல்லாம், வெள்ளையர்கள் குலை நடுங்குவதையும் நான் அறிவேன்.

     தங்களின் எதிரிகளான வெள்ளையர்கள்தான் எங்களுக்கும் எதிரிகள்.

     நாங்கள் வெள்ளையரிடம் இழந்த, எங்களது நாட்டை, மீட்டாக வேண்டும். வீரத்திற்கும் விவேகத்திற்கும் எங்களிடம் பஞ்சமில்லை.

     ஆனால் வெற்றியை ருசிக்க இவை மட்டும் போதாது என்பதை அறிவேன். நவீன ஆயுதங்களும், போர் வீரர்களும் எங்களுக்குத் தேவை. இவ்விரண்டையும் கேட்கத்தான் தங்களை நாடி வந்துள்ளேன்.

     உருதுவிலேயே பேசி முடித்தார்.

     ஹைதர் அலியின் கண்களில் இருந்து, கண்ணீர் துளி மெல்ல எட்டிப் பார்த்தது.

     தாயே, முதலில் உங்களிடம், நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். ஏற்கனவே உதவிகள் வேண்டி, தாண்டவராயன் பிள்ளை, உங்கள் சார்பில் ஓலை அனுப்பினார்.

     கணவரைப் பறிகொடுத்த, ஒரு பெண்ணைச் சந்திப்பதால் என்ன நடந்துவிடப் போகிறது என்று அலட்சியமாக இருந்து விட்டேன். அதற்காக இப்பொழுது வருந்துகின்றேன்.

      உங்கள் வாழ்வின் அத்துணை சோகங்களையும் புறந் தள்ளிவிட்டு, நாட்டை மீட்பதற்காக, நீங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சியைக் கண்டு மெய் சிலிர்க்கின்றேன் தாயே, மெய் சிலிர்க்கின்றேன்.

      உங்களைப் போன்ற ஒரு வீரத் தாயை இதுவரை நான் கண்டதில்லை, தாயே. வீரம், விவேகம், நாட்டுப் பற்று, இவற்றோடு, என் மொழியை, எங்களின் தாய் மொழியை, உருதுவை, தங்களின் தாய் மொழிபோல், தாங்கள் உச்சரிக்கும் அழகு கண்டு வியக்கின்றேன் தாயே, வியக்கின்றேன்.

     என்னால் மட்டுமல்ல, எங்கள் மத போதகரால் கூட, உருதுவை, இவ்வளவு இனிமையாகவும், அதே சமயத்தில் ஆவேசமாகவும் உச்சரிக்க இயலாது, தாயே, உச்சரிக்க இயலாது.

     உங்களுக்கு உதவிட, எனக்கு வாய்ப்பு கிடைத்ததை எண்ணிப் பெருமை கொள்கிறேன். உங்களின் தாய் மண்ணை மீட்கும் உரிமைப் போருக்கு, எனது ஆதரவும், எனது உதவியும் என்றும் உண்டு தாயே. என்றும் உண்டு.

      பன்னிரெண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக் கணக்கானத் துப்பாக்கிகள், ஆயிரக் கணக்கானப் படை வீரர்களுடன், ஹைதர் அலியின் படை, இதோ விருப்பாட்சியை நெருங்கி விட்டது.
     

ஹைதர் அலி, இப்படைக்குத் தலைமையேற்று நடத்த, தன் தளபதிகளுள் ஒருவரை அனுப்பியிருக்கலாம். ஆனால் வேலு நாச்சியாரின், நாட்டுப் பற்று கண்டு மெய் சிலிர்த்த ஹைதர் அலி, தனது புதல்வனையே அனுப்பினார்.

திப்பு சுல்தான்.

                                                                                                                         - தொடரும்
93 கருத்துகள்:

 1. ஹைதர் அலி தன் தளபதிகளுள் ஒருவரை அனுப்பாமல் வேலு நாச்சியாரின் நாட்டுப் பற்று கண்டு மெய் சிலிர்த்த ஹைதர் அலி தனது புதல்வனையே அனுப்பியனார் என்பதைப் படித்தபோது நான் மெய் சிலிர்த்துப்போனேன். இதுதான் நாட்டுப்பற்று.

  பதிலளிநீக்கு
 2. விறு விறு சுறு சுறு...
  வாழ்த்துக்கள் ...
  காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு

  பதிலளிநீக்கு
 3. ஆஹா புதிய புதிய தகவல்களாக அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்களே ஐயா , அருமை வீர காவியம் தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 4. மிகவும் சிறப்பான தொடர் நன்றி....த.ம5

  பதிலளிநீக்கு
 5. உண்மை ஆண் உடையில் அவர் ஹைதரலியிடம் பேசி உதவி பெற்று வெற்றி பெற்ற வீரமகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹைதர் அலியே வியந்து போற்றியவர் அல்லவா வேலு நாச்சியார்
   நன்றி சகோதரியாரே

   நீக்கு
 6. அட!! கதை வேகம் கூடிகொண்டே போகிறதே!!!

  பதிலளிநீக்கு
 7. அருமை அருமை ஐயா. படிக்கும்போதே காட்சிகள் கண்முன் விரிகின்றன!

  பதிலளிநீக்கு
 8. திப்புவின் வருகை ,எங்களுக்கெல்லாம் உவகை ,என்னே ஒரு நாட்டுப் பற்று !
  த ம 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேலு நாச்சியாரின் நாட்டுப் பற்று போற்றுதலுக்கு உரியது நண்பரே
   நன்றி

   நீக்கு
 9. தங்களின் கைவண்ணத்தில் வரலாறு - கண்முன்னே விரிகின்றது!..

  பதிலளிநீக்கு
 10. படித்தேன், ரசித்தேன்.

  எங்கிருந்து இந்த விவரங்கள் தருகிறீர்கள் ஸார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேலு நாச்சியார் தொடர்பான சில நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது நண்பரே
   இணையத்திலும் பல செய்திகள் , பல தளங்கள் இருக்கின்றன
   அவற்றில் இருந்து தொகுத்துதான் எழுதுகின்றேன்
   நன்றி நண்பரே

   நீக்கு
 11. ஐயா,
  சிறப்பாக உங்களுக்கே உரிய விதத்தில் வரலாற்று உண்மையை அள்ளித் தந்துள்ளீர்கள். தொடரை முழுமையாகத் தொடர்வீர். அடுத்து முடிந்தால் புலித்தேவரைக் குறித்து வரலாற்று கதையை எழுதவும்.

  பதிலளிநீக்கு
 12. கதை மிக அருமையாக போகிறது. வேலுநாச்சியாரின் வீரம் , விவேகம் வியக்க வைக்கிறது.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வேலு நாச்சியார் பற்றிய அரிய தகவல்கள். அந்தக்காலத்தில் எப்படி மற்ற மொழிகளைக் கற்க வாய்ப்பிருந்தது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராமநாதபுரத்தின் ஒரே வாரிசு வேலுநாச்சியார். ஆண் குழந்தை இல்லாத குறையினைப் போக்குவதற்காக, இவரை ஆண் குழந்தையைப் போலவே வளர்த்தனர், சிறு வயது முதலே பல மொழிகளைப் கற்றுத் தேர்ந்தார்.
   பிற்காலத்தில் உடல் நலம் குன்றிய வேலு நாச்சியாருக்கு, பிரஞ்சு மருத்தவர்கள் சிகிச்சை அளித்தனர், அப்பொழுது கூட அவர்களிடமிருந்து பிரஞ்சு மொழியைக் கற்பதற்கு முயன்றார்

   நீக்கு
 14. மிக அருமை.வேலுநாச்சியாரின் நாட்டுப்பற்று மெய்சிலிற்க்கிறது.நன்றி..

  பதிலளிநீக்கு
 15. இன்றுதான் பார்க்கிறேன். முதலில் இருந்து படிக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 16. வேலு நாச்சியார் தொடர் குதிரைப் பாய்ச்சல்தான் ....!

  வீரமும், விவேகமும் இணைந்தால் வெற்றி!

  விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் இணைந்தால் ஆனந்தம்!

  மனகிலேசம் கொள்ளும் தங்கள் தொடர் பேரானந்தம் கொடுக்கிறது வாசர்களுக்கு!!!
  வாழ்த்துக்களுடன்,
  மும்பை சரவணன்

  பதிலளிநீக்கு
 17. வணக்கம்
  ஐயா.
  சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை... அப்படி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள். ஒவ்வொரு கட்டங்களும் படிக்க படிக்க படிக்கத்தான் சொல்கிறது.. தொடருங்கள் அடுத்த பகுதியை த.ம12

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் ஐயா!

  இடையிற் தடைப்பட்டுவிட்டது என் வாசிப்பு!
  வந்து படிக்கின்றேன்! இங்கு வந்ததைப் பதிவு செய்கின்றேன் இப்போது..

  வாழ்த்துக்கள் ஐயா!
  த ம +

  பதிலளிநீக்கு
 19. வேலு நாச்சியார் குறித்த அரிய தகவல்களை அள்ளித் தருகிறீர்கள். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வேலு நாச்சியார் நினைவு தினம் இன்றுதான் என்பதையும் இப்போதே அறிந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோதரியாரே இன்றுதான் வேலு நாச்சியாரின் நினைவு தினம்

   நீக்கு
 21. தொடர் சிறப்பாக செல்கிறது ஐயா! தொடர்கிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 22. வேலு நாச்சியாரின் சரித்திரத்தோடு, இன்று நினைவு நாள் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
  கதையும் விறுவிறுப்பாக செல்கிறது. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 23. பயனுள்ள பதிவு நண்பரே. தொடருங்கள்..

  பதிலளிநீக்கு
 24. கணிதப் பெண்ணுக்கு வந்த காதல் கடிதத்தை வாசிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன் ஐயா.

  http://www.gunathamizh.com/2014/12/blog-post_24.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வலைக்கு வந்து மகிழ்ந்தேன் நண்பரே
   கணிதத்தை கவிக்குள் அடங்கிய தங்களின் மாணவி
   பாராட்டிற்கு உரியவர்

   நீக்கு
 25. வேலு நாச்சியாரின் வீரம் கண்டு படிக்கும்போதே சிலிர்க்கிறது நண்பரே...
  த.ம. 15

  பதிலளிநீக்கு
 26. அய்யா வீரவசனம் மெய்சிலிர்க்க வைக்கிறது...
  வேலுநாச்சியார் உருது பேசிய செய்தி எனக்குப் புதிது..
  உஙக்ளின் தேசபக்த வரலாற்றுப்பயணம் தொடர வாழ்த்துகள். த.ம.16

  பதிலளிநீக்கு
 27. பல புதியவிடயங்களை தொடரில் அறிகின்றேன் ஐயா. தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 28. தங்கள் தொடர் வரும் இந்த கால கட்டத்திலேயே வீர வேலு நாச்சியாரின் நினைவு நாளும் வந்தது என்பது சிறப்பான ஒன்று. தொடர்கின்றேன். நன்றி.
  த.ம.18

  பதிலளிநீக்கு
 29. மெய் சிலிர்க்க வைக்கும் தொடர்... வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 30. தங்களுடைய நடைக்காகவே தங்களைத் தொடர்கிறேன் கரந்தையாரே!
  த ம 19

  பதிலளிநீக்கு
 31. வேலு நாச்சியார் கதையை முதல் பாகத்திலிருந்து படிக்க வேண்டும். கொட்டிக் கிடக்கிறது தகவல்கள். கதையைத் தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 32. பெயரில்லா26 டிசம்பர், 2014

  வியப்புடன் வாசித்தேன்.
  தொடருங்கள்
  மிக மிக அருமை..
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 33. வேலுநாச்சியார்வீரநாச்சியார் ஆனால் சாதுர்யம்
  மிக்க பெண் இப்பொழுதுகூட
  (இருபத்திஒன்றாம் நூற்றாண்டில் கூட)பெண்களைஒருகூட்டத்திற்கு,
  ஒன்றுகூட்டுவதே பெரும்பாடு !!!!!!!!!!!!.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் சகோதரியாரே
   வேலு நாச்சியார் வீரப் பெண்மணி மட்டுமல்ல, விவேகம் நிறைந்தவரும் ஆவார்
   நன்றி சகோதரியாரே

   நீக்கு
 34. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  வேலு நாச்சியாரின் பன்மொழிப் புலமையும் ஹைதர் அலியின் தாய் மொழிப் பற்றையும் மிக அழகாக பதிவு செய்தமைக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 35. வணக்கம் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது ...
  வாழ்த்துக்கள்
  அறிமுகம் செய்தவர் குருநாதசுந்தரம்
  link is here click now!

  பதிலளிநீக்கு
 36. வேலுநாச்சியார் வரலாற்றை சுவாரஸ்யமான சாகச கதை போன்ற நடையில் தந்துள்ளீர்கள்... வரலாற்று பாடங்கள் இதே போன்று இருந்திருக்குமானால் நம்மவர்கள் வரலாறு மறந்த கதை நிகழ்திருக்காது !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 37. இப்போதுதான் அனைத்து அத்தியாயங்களையும் படித்து முடித்தேன். அருமை. அழகான நடை. சுதந்திர உணர்வை தூண்டும் வார்த்தைகள். மிகவும் அற்புதம். தயவு செய்து ஏழு அத்தியாயங்களோடு நிறுத்தி விடாதீர்கள். இன்னும் விரிவாக எழுதினாலும் படிக்க தயார். இப்போது தொடராகவும் பின்பு நூலாகவும்.

  பதிலளிநீக்கு
 38. வேலு நாச்சியார் பற்றி சுவராஸ்யமாக எழுதியுள்ளீர்கள். பழைய பதிவுகளை இனிதான் படிக்கவேண்டும். தொடரட்டும் தங்களது இந்த சிறப்பான பணி. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 39. உங்களைப் போன்ற ஒரு வீரத் தாயை இதுவரை நான் கண்டதில்லை, தாயே. வீரம், விவேகம், நாட்டுப் பற்று, இவற்றோடு, என் மொழியை, எங்களின் தாய் மொழியை, உருதுவை, தங்களின் தாய் மொழிபோல், தாங்கள் உச்சரிக்கும் அழகு கண்டு வியக்கின்றேன் தாயே, வியக்கின்றேன். மொழி பற்று பாருங்கள். இன்று நாம் செய்வது என்ன

  பதிலளிநீக்கு
 40. வீராங்கனைக்கு ஏற்ற விறு விறுப்பானத் தொடர்! மிக அழகாக கம்பீரத்துடன் நடை போடுகின்றது நணப்ரெ! தொடர்கின்றோம்.

  பதிலளிநீக்கு
 41. அண்ணா, உடலும் உள்ளமும் சிலிர்க்கின்றன..நாட்டுப்பற்றைக் கண்டு தன் மகனையே அனுப்பினார் ஹைதர் அலி!! எவ்வளவு பெருமை!! அருமையான செயல் செய்கிறீர்கள் அண்ணா, நம் வரலாற்றைத் தேடி பகிர்கிறீர்களே , மிக்க மகிழ்ச்சி அண்ணா...தொடர்வதற்கு ஏற்ற உடல் உள்ள நலமும் நேரமும் எப்பொழுதும் உங்களுக்கு இருக்க பிரார்த்திக்கிறேன்..
  த.ம.22
  நன்றி அண்ணா

  பதிலளிநீக்கு
 42. தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ...!

  பதிலளிநீக்கு
 43. Its going well. Hyder Ali gives great hope to Velu Nachiyar

  பதிலளிநீக்கு

 44. "வேலு நாச்சியாரின் நினைவினை போற்றுவோம்"
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 45. தாய்மாருக்கும் தாய் நாட்டுப்பற்று அதிகம் ......எங்கள் நாட்டிலும் வீர வேங்கைகள் வாழ்ந்திருக்கிறார்கள் ..................................உடுவை

  பதிலளிநீக்கு
 46. ஐயா தாண்டவராயன் பிள்ளை பற்றி முழுமையாக சொல்ல முடியுமா।

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு