30 டிசம்பர் 2014

வேலு நாச்சியார் 6


அத்தியாயம் 6 படை புறப்பட்டதுமுதலில் பெரிய மருதுவின் தலைமையில் வாட் படை

குயிலியின் தலைமையில் உடையாள் பெண்கள் படை

சின்ன மருதுவின் தலைமையில் வளரிப் படை

ஒய்யாத் தேவர் படை

வெள்ளிக் கட்டி வைரவன் படை

சிறு வயல் மும்முடியான் படை

சேத்தூர் செம்பியன் படை

மறவமங்கலம் கொங்குத் தேவன் படை


பட்டமங்கலம் கோட்டையம்பலம் படை

திருப்பத்தூர் திருகப்பக் கோன் படை

உருவாட்டி சீமைச் சாமித் தேவர் படை

உறுதிக் கோட்டை ராமச் சந்திரசாமி படை

திருப்பாச் சேத்தி சேருவைகாரன் படை

வாராப்பூர் நன்னியம்பலம் படை

மல்லாக் கோட்டை சேதுபதி அம்பலம் படை

கொடை காத்த உடையான் படை

சமாலி உடையான் படை

சக்கத்தி வேங்கைப் பெரிய உடையாத் தேவர் படை

இறுதியில்

பீரங்கிப் படை

இரண்டு வரிசையாகப் பிரிக்கப் பட்ட, படை வீரர்களின் நடுவில், தேரில் வேலு நாச்சியார்.

படை புறப்பட்டது.

---

    மானா மதுரை வைகை ஆறு.

    ஒரு கரையில் வெள்ளையர் படை, மறு கரையில் வேலு நாச்சியார் படை.

     பிரைட்டன், மார்ட்டின்ஸ், பூரிகான் மூவரும் வெள்ளையர் படைக்குத் தலைமை. பெரிய மருது, சின்ன மருது, குயிலி மூவரும், வேலு நாச்சியாரின் படைக்குத் தலைமை.

       முப்பது பீரங்கிகள், ஆயிரம் துப்பாக்கிகள் வெள்ளையர் வசம். பன்னிரெண்டே பீரங்கிகள், நூறே நூறு துப்பாக்கிகள் வேலு நாச்சியார் வசம்.

      
மனாமதுரை வைகை இன்று
இருப்பினும் சளைக்கவில்லை, வேலு நாச்சியாரின் படை வீரர்கள். நேரம் ஆக, ஆக வைகை ஆற்றுத் தண்ணீரின் நிறம் மெல்ல, மெல்ல சிகப்பாக மாறத் தொடங்கியது. இரத்த ஆறு ஓடத் தொடங்கியது.

      யானையின் மீது வேலு நாச்சியார். இடது கையில் வாளும், வலது கையில் வேலுமாக களம் புகுந்தார்.

      வெள்ளையர்கள் உயிர் பிழைத்தால் போதுமென ஓடத் தொடங்கினர்.

      வேலு நாச்சியாரின் யானை, காளையார் கோயிலை நோக்கி நடை போடத் தொடங்கியது. படைகளும் வேலு நாச்சியாரைத் தொடர்ந்து, வீர முழுக்கம் இட்டபடி, வெற்றி நடை போட்டன.

     எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, காளையார் கோயிலில் காலடி வைக்கிறார் வேலு நாச்சியார்.

      காளையார் கோயில், காளேசன் ஆலயத்தின் முன், வேலு நாச்சியாரின் யானை சிறிது நேரம் நின்றது.

        இதோ, இந்த இடத்தில்தானே, எனது கணவர் முத்து வடுகநாதரும், கௌரி நாச்சியாரும், இரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.

         இதோ, இந்த மரத்தின் பின், ஒளிந்துதானே, அந்தக் கயவன், பான் ஜோர் சுட்டான்.

          வேலு நாச்சியாரின் விழிகளில்,  கண்ணீர் துளிகள். மறு நிமிடம் வாளை உயர்த்தி வீர முழக்கமிட்டார்.

       ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித்துதான் காளையார் கோயிலை ஆண்டு வந்தான். வெறி கொண்டு நுழைந்த வேல நாச்சியாரின், வீரத் தாக்குதலைத் தாக்கு பிடிக்க முடியாமல், வெள்ளையர்கள் சிதறுண்டு ஓடினர்.

        ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித், குதிரையில் ஏறி பறந்து மறைந்தான்.

      வேலு நாச்சியாரும், மருது சகோதரர்களும், முத்து வடுக நாதரும், கௌரி நாச்சியாரும் அடக்கம் செய்யப் பெற்ற இடத்திற்குச் சென்று, கண்ணீர் மழ்க அஞ்சலி செலுத்தினர்.

         வீரர்களே, நாம் இழந்த மூன்று பகுதிகளை, ஆங்கிலேயர்களிடமிருந்து கைபற்றியபின், மன்னரின் நினைவிடத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.

    சிவகங்கைப் பகுதியின் மீதிப் பகுதிகளையும் கைப்பற்றியவுடன், மறைந்த மன்னருக்கும், இளைய ராணிக்கும், இவ்விடத்தில் நினைவாலயம் எழுப்புவோம்.

     இப்பொழுது சிவகங்கை நோக்கிப் புறப்படுவோம், வாருங்கள் வீரர்களே, வெற்றி நமதே.

      வேலு நாச்சியாரின் படை சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது.

                 வழியில் ஒரு காட்டுப் பகுதி. ஓர் பாழடைந்த கோயில். வேலு நாச்சியாரின் குதிரை நின்றது. அந்தப் பாழடைந்த கோயிலையே வேலு நாச்சியாரின் விழிகள், இமைக்க மறந்து உற்று நோக்குகின்றன.

      நினைவலைகள் பின்னோக்கிப் பறக்க, வேலு நாச்சியாரின் கண்கள் கலங்குகின்றன. விழிகளில் இருந்து வழிந்தோடும் நீர், கன்னங்களை நனைக்கின்றன.

     உட்ன் வந்த வீரர்கள், காரணம் புரியாது திகைக்கின்றனர். விழிகளின் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட வேலு நாச்சியார், வீரர்களின் பக்கம் திரும்பினார்.

    வீரர்களே, இந்த இடத்திற்கு வந்ததும், என்னால் கண்ணீரை அடக்க இயலவில்லை. என் கண்ணீருக்குக் காரணம் இருக்கிறது வீரர்களே, காரணம் இருக்கிறது. இக் கண்ணீரின் பின்னணியில் ஒரு தியாக வரலாறு ஒளிந்திருக்கிறது.

     வீரர்களே, நாம் நின்றிருக்கும் இவ்விடத்தின் பெயர் ஆரியாகுறிச்சி என்பதாகும். எட்டு ஆண்டுகளுக்கு முன், என் கணவரை, காளையார் கோயிலில் கொன்ற ஆங்கிலேயர்கள், என்னையும் தீர்த்துக் கட்ட திட்டம் போட்டனர்.

     அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் அறிவுரையின்படி, ஆளுக்கொரு திசையில் பிரிந்து சென்றோம். அப்பொழுது, இதோ, இந்த இடத்தில்தான், உடையாள் என்னும் ஒரு வீரப்பெண், என்னை வழிமறித்து, திசை மாறிச் செல்ல அறிவுறுத்தி, ஆங்கிலேயர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றினார்.

     அதற்காக அவளுக்கு, வெள்ளையர்கள் அளித்த பரிசு என்ன தெரியுமா? பெண் என்றும் பாராமல், அவரை தலைவேறு, முண்டம் வேறாக வெட்டிப் போட்டனர். இதோ, இந்த இடத்தில்தான், உடையாளின் தலை மண்ணில் உருண்டோடியது.

      அவ்வீர மங்கையின் நினைவாகத்தான், நமது பெண்கள் படைக்கு உடையாள் படை எனப் பெயரிட்டேன்.

      வீரர்களே, என்னைக் காக்க, தன் இன்னுயிரையே தந்த, இந்த வீர மங்கை என்றென்றும் போற்றப்பட வேண்டியவர். நாள் தோறும் கோயிலில் வைத்து வணங்கப்பட வேண்டியவர்.

       இவ்விடத்தில் நாள்தோறும் பூசைகள் நடத்தப்பட வேண்டும். உடனடியாக இங்கே ஒரு கோயில் எழுப்பப் பெற்றாக வேண்டும். அதற்காக இவ்விடத்தின் அருகிலுள்ள உடைவயல், கொல்லங்குடி, அரியாகுறிச்சி கிராமங்களைத் தானமாக வழங்குகின்றேன்.

      என் கணவர் இறந்த பிறகும், அவர் என் கழுத்தில் கட்டிய வைரத் தாலியை, உடையாளுக்காகத்தான், உடையாளுக்காக எழுப்பப்பெற இருக்கின்ற, இக்கோயிலுக்காகத்தான், இத்தனை ஆண்டுகளாய் பத்திரமாய் பாதுகாத்து வருகின்றேன்.

     இதோ என் தாலி. என் முதல் காணிக்கை.

                                                        - தொடரும்


வெட்டுடையாள் காளி அம்மன்
வெட்டுடையாள் காளியம்மன் கோயில்


குறிப்பு

       நண்பர்களே, உடையாளின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில், எழுப்பப் பெற்ற கோயில்தான்

அரியாக்குறிச்சி
வெட்டுடையாள் காளியம்மன் கோயில்.

      இக்கோயில், இன்றும் தலை நிமிர்ந்து கம்பீரமாய், உடையாளின் வீரத்திற்கு, தியாகத்திற்கு சாட்சியாய் விளங்கி வருகின்றது.

      வேலு நாச்சியார் வழங்கிய வைரத் தாலி,  இன்றும், இக்கோயிலில் போற்றி பாதுகாக்கப் பெற்று வருகிறது.96 கருத்துகள்:

 1. அரியாக்குறிச்சி - வெட்டுடையாள் காளியம்மன் கோயிலின் சிறப்பை அறிந்தேன்... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 2. வேலு நாச்சியாரின் துணிவு உங்களது எழுத்தின் மூலமாக வெளிப்படுவது மிகவும் சிறப்பாக உள்ளது. படையுடன் நாங்களும் செல்வதுபோல உள்ளது. எழுதும்போது கண்ணீர் வந்ததுபோல படித்தபோது எங்களுக்கும் கண்ணீர் வந்தது. தமிழகத்தின் பெருமையை, வீரத்தின் பெருமையை எடுத்துக்கூறும் இவரைப் பற்றிய தங்களின் பதிவை நூலாக வெளிக்கொணர வேண்டுகிறேன். இதைப்படித்த ஒரு வீரனின் (வாசகன் என்பது வீரன் என்று இயல்பாக வந்துவிட்டது) வேண்டுகோள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கண்ணீர் வேலு நாச்சியாருக்கு செலுத்தப்படும் உண்மை அஞ்சலியாகும்
   நன்றி ஐயா

   நீக்கு
 3. வணக்கம் சகோதரா !
  மெய் சிலிர்க்க வைக்கும் வரலாற்றுக் கதையைத் தொடரும் தங்களுக்கு
  என் மனமார்ந்த நன்றிகள் சகோதரா !விரைவில் இதன் மிகுதித் தொடரைக் காணும் ஆவலுடன் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துச் செல்கின்றேன் .வாழ்த்துக்கள் மனம் போல் வாழ்வும் செழிக்கட்டும் .

  பதிலளிநீக்கு
 4. மிக சிறப்பாக தொடர்கிறது வீர வரலாறு. அருமை அருமை

  பதிலளிநீக்கு
 5. வேலு நாச்சியாரைப் பற்றிய தகவல்கள் தங்களால்தான் அறிகிறேன் ,மெய் சிலிர்க்க வைக்கும் வீரத்தைக் கண்டு அசந்து போனேன் !
  த ம +1

  பதிலளிநீக்கு
 6. ஒரு வீரவரலாறு - தங்களின் கை வண்ணத்தால் கண்முன் விரிகின்றது..

  வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
  தெய்வத்துள் வைக்கப்படும் !..- என்பது உண்மைதானே!..

  உடையாள் - போன்ற வீர மக்களுக்கு போற்றி அஞ்சலி!..

  பதிலளிநீக்கு
 7. வெட்டுடையாள் காளியம்மன் கோயிலின் வரலாற்றை அறிந்தேன்.
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜெயக்குமார் சார்.

  பதிலளிநீக்கு
 8. மெய்சிலிர்க்க வைக்கின்றது த.ம6

  பதிலளிநீக்கு
 9. படைகள் புறப்படும் வர்ணனை காட்சியாய் விரிகிறது உங்கள் எழுத்துகளில்..

  நெகிழ்ச்சியூட்டும் வரலாறு.

  பதிலளிநீக்கு
 10. வேலு நாச்சியாரை காப்பாற்றிய பெண்ணின் நினைவாக கோவில் நித்திய பூசை நடக்க இரண்டு கிராமமே தானம்...!
  பல வகையில் வேலுநாச்சியார் அம்மை மனம் கவர்கிறார்!
  அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. தென் பகுதி வீரமங்கையை உலகுக்கு காட்டிய உமக்கு என் வணக்கம். வெட்டுடையாள் காளியம்மன் கோயிலின் வரலாற்றை அறிந்தேன். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. பெயரில்லா30 டிசம்பர், 2014

  Wow. Great adventure. Why we are not allowed to get this original history of ours in school education. What is the use of first and second panipet wars

  SESHAN

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே
   நமக்குப் பள்ளிக் கூடங்களில் ஜான்சிராணியைப் பற்றி பாடம் வைத்தார்களே தவிர, தமிழக வீரங்கனைகளைப் பற்றியோ, வீரர்களைப் பற்றியோ பாடத்தில் சேர்க்காதது பெரும் குறைதான்
   வருகைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 13. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  நன்றி மறக்கும் செயலை பொழுதுபோக்காக செய்யும் இந்த உலகில் உடையாளின் உயர்ந்த ஒப்பற்ற தியாக செயலை நினைத்துப் பார்த்து அவருக்கு நன்றி பாராட்டும் விதத்தில் வேலு நாச்சியார் அவர்கள் உடையாளுக்கு ஒரு ஆலயத்தை உருவாக்கி மிகப் பெரிய கௌரத்தினை தேடி கொடுத்துள்ளார் என்றால் அது மிகையாகாது. தங்களின் பதிவிடும் விதமும் அற்புதமாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 14. நண்பரே... காலையிலேயே படித்து விட்டேன் கருத்துரை இடமுடியாத சூழல்...

  நண்பரே தங்களின் ஒவ்வொரு வரிகளும் படிக்கும்போதே... உடல் சிலிர்க்கிறதே... அந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமாக இருக்கிறது
  வெட்டுடையாள் காளியம்மன் கோயில் தேவகோட்டை அருகில்தான் இதுவரை சென்றதில்லை தங்களால் காண வேண்டுமென்ற ஆவல் கொள்கிறது தொடர்கின்றேன்...

  தமிழ் மணம் 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த முறை தாய்நாட்டிற்கு வரும்பொழுது, வெட்டுடையாள் காளியம்மன் கோயிலுக்கு சென்று வாருங்கள் நண்பரே
   நன்றி

   நீக்கு
 15. படிக்கும் போதே சிலிர்க்கிறது ஐயா...
  வெட்டுடையாள் காளிதான்.... கொல்லங்குடி வெட்டுடையாள் காளி.
  மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வம்.
  அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே கொல்லங்குடி வெட்டுடையாள் காளிதான்
   நன்றி நண்பரே

   நீக்கு
 16. மிக அ;ருமையான எழுத்து நடை. போர் காட்ட்சி மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் நண்பரே! கோயில் பற்றிய தகவல் தெரிந்துகொண்டோம். தொடர்கின்றோம் நண்பரெ!

  பதிலளிநீக்கு
 17. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 18. வீரப்போர்!! வேலுநாச்சியார் வெற்றியைக் கண்டு மகிழ்ந்தாலும் பின்னாளில் ஆங்கிலேயர் மீண்டும் வெற்றிகொண்டது வருத்தம் தருகிறது..வெட்டுடையாள் கோவில் செல்ல வேண்டும் அங்கு வரும்போது..பகிர்விற்கு நன்றி அண்ணா..வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேலு நாச்சியாரின் சூழ்நிலைகள் அவ்வாறு அமைந்துவிட்டன
   வெட்டுடையாள் கோயில் அவசியம் செல்ல வேண்டிய கோயில் சகோதரியாரே
   நன்றி சகோதரியாரே

   நீக்கு
 19. வணக்கம்
  ஐயா.

  வேலுநாச்சியர் பற்றிய வரலாற்றை தங்களின் எழுத்து நடையில் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் அடுத்த பகுதிக்காக காத்திருக்கேன்.. பகிர்வுக்கு நன்றி த.ம10
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 20. பெயரில்லா31 டிசம்பர், 2014

  வேலுநாச்சியாரின் வீர வரலாறு சிறப்பு.
  இதைத் தரும் தங்களிற்கு நன்றி.
  தொடருங்கள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 21. நம்ம ஊர் பக்கத்தில் தான் இந்த கோவில் இருக்கு,ஆனா இப்போ தான் வரலாறு தெரியுது!! இந்த கோவிலை வைத்து வளர்ந்திருக்கும் மூடநம்பிக்கைகள் இங்கு அப்பாப்பா!! அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோயில் தோன்றியமைக்கான மூல காரணத்தை மறந்துவிட்டு,
   மூட நம்பிக்கைகளை வளர்த்து, அதன் மூலம் பணம் பார்க்க நினைக்கிறார்கள்
   நன்றி சகோதரியாரே

   நீக்கு
 22. வெட்டுடையாள் காளி கோயிலின் உண்மை வரலாறு அறிந்தேன்! மெய்சிலிர்க்க வைத்தது! அருமை! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 23. அருமையான எழுத்து... அற்புதமான தொடர்...

  பதிலளிநீக்கு
 24. 2015 சிறக்க வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு
 25. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், சகோதரரே!

  பதிலளிநீக்கு
 26. அண்ணாவிற்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 27. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 28. உளமார்ந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 29. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 30. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 31. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா

  பதிலளிநீக்கு
 32. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.

  பதிலளிநீக்கு
 33. நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..
  அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
 34. எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
  அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

  "புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

  என்றும் நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு

 35. வணக்கம்!

  பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

  புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
  சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
  தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
  நானுாறும் வண்ணம் நடந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 36. இனிய புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்
  வெட்டடுடையாள் இந்தப்பெயருக்குக் கரணம் அறியவைத்தீர்
  வீரமங்கை மட்டுமல்ல நெஞ்சில் ஈரமுள்ள மங்கையுமாய்
  இருந்தவர் போலும்.

  பதிலளிநீக்கு
 37. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

  புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
  http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 38. புத்தாண்டில் எல்லா நலமும் வளமும் பெற வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
 39. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு


 40. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
  நன்றி !

  பதிலளிநீக்கு
 41. சகோதரர் அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப்
  புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள். மீண்டும் வருவேன்.
  த.ம.12

  பதிலளிநீக்கு
 42. தாமதமான வருகை மன்னித்துக் கொள்ளுங்கள் நிச்சயம் இதை வாசிக்க வேண்டும் தொடர்ந்து நிச்சயம் வாசிப்பேன் எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டுமே சகோ ப்ளீஸ் ok வா ஹா ஹா ...!
  தங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ....!

  பதிலளிநீக்கு
 43. மிக விறுவிறுப்பான வீர வரலாறு !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 44. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  (தங்களின் இந்தத் தொடரை நான் வாசிக்க் வில்லை. அவசியம் வாசிக்க வேண்டும் ஜெயக்குமார் ஐயா. வாசிப்பேன்.)

  பதிலளிநீக்கு
 45. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றிய பகிர்வு

  http://blogintamil.blogspot.in/2015/01/hawa-mahal.html

  முடிந்த போது பார்த்து கருத்திடுங்களேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோதரியாரே
   இதோ வலைச் சரத்திற்கு வருகின்றேன்

   நீக்கு
 46. வீரத்தாய் ....வழிபாட்டுக்குரிய தெய்வமாகி விட்டார் ...வணங்குவோம் ...................................................உடுவை

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு