அத்தியாயம் 2 கவுரி நாச்சியார்
இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜய
ரகுநாத சேதுபதியின் ஒரே மகள். செல்ல மகள். வீர மகள். பன்மொழிப் புலமை வாய்ந்தவர்.
நிர்வாகத் திறன் மிக்க மாட்சியர். குதிரையேற்றம், யானையேற்றம், சிலம்பம், வாள்
வீச்சு அனைத்திலும் வித்தகர்.
இராமநாதபுரம் அரண்மனையிலே பிறந்தவர்,
வளர்ந்தவர். மருமகளாய் குடியேறியது சிவகங்கைச் சீமையில். சிவகங்கைச் சிமையின் மன்னர்
சசி வர்ணத்தேவரின் திருமகன், இளவரசர் முத்து வடுக நாதரின் கரம்
பற்றியவர்.
சிவகங்கை அரண்மனை, சிறுவயல் அரண்மனை, திருப்பத்தூர் அரண்மனை,
திப்பூவனம் அரண்மனை, கமுதி அரண்மனை, காளையார் கோயில் அரண்மனை, உறுதிக் கோட்டை
அரண்மனை, பிரான்மலை அரண்மனை, கொல்லங்குடி அரண்மனை. இந்த அரண்மனைகள் எல்லாம்
சிவகங்கைச் சீமையின் அரண்மனைகள்.
ஒரு நாள் கொல்லங்குடி அரண்மனையில் இருந்து,
சாரட் வண்டியில், சிவகங்கைச் சீமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார் வேலு
நாச்சியார்.
வரும் வழியில், காட்டுப் பகுதியில்,
தனித்து நிற்கும் குதிரை ஒன்றினைக் கண்டார்.
மன்னரின்
குதிரையல்லவா இது? இங்கே எப்படி?
சாரட் வண்டியில் இருந்து இறங்கி, தனித்து
நடந்தார். தூரத்தே அவர் கண்ட காட்சி அவரை நிலை குலையச் செய்த்து. மரத்தடியில் ஒரு
அழகிய பெண்ணின் மடியில் முத்து வடுகநாதர்.
---
வேலு நாச்சியார், இராஜராஜேசுவரி அம்மன்
கழுத்தில் இருந்த, தாலிக் கயிற்றை எடுத்துத் தன் கணவரிடம் தருகிறார்.
கட்டுங்கள்
தாலியை.
தாயே
கதறியபடியே, வேலு நாச்சியாரின் காலடியில்
விழுகிறார் அந்த இளம் பெண். வேலு நாச்சியார் குனிந்து, தோளைத் தொட்டு, அப்பெண்ணைத்
தூக்குகிறார்.
இனி நான் உன்
தாயல்ல. உன் சகோதரி
தன் கணவரைப்
பார்க்கிறார்.
கட்டுங்கள்
தாலியை.
---
மறு நாள், வேலு நாச்சியாரைச்
சந்திக்கிறார், அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை.
தாயே,
மன்னர்கள், தங்கள் மனைவியிருக்க, மற்றொரு பெண்ணின் மீது மோகம் கொள்வது ஒன்றும்
புதிதல்ல. ஆசைப்பட்ட பெண்களை, தங்களின் அந்தரங்க நாயகிகளாக, தனியொரு அரண்மனையில்
வைத்து, அழகு பார்ப்பதும் புதிதல்ல.
நம் மன்னர் ஒரு
பெண்ணின் அழகில் மயங்கியிருக்கிறார். அவரோடு பொழுதையும் கழித்திருக்கிறார் உண்மை.
அதற்காகத்
தாங்களே, மாங்கல்யத்தைக் கையில் எடுத்து, மன்னரிடம் கொடுத்து, அப்பெண்ணின்
கழுத்தில் கட்டச் சொன்னது, மிகுந்த வேதனையளிக்கிறது தாயே.
அப்பெண்
இசைவேளாளர் வகுப்பைச் சார்ந்தவர் என்பதைக் கூட அறியாமல், அவசரப்பட்டுவிட்டீர்கயே
தாயே.
ஒரு நிமிடம் அமைதிகாத்த வேலு நாச்சியார்,
நிதானமாகத் தெளிவாகப் பேசினார்.
ஒரு பெண்ணை
அனுபவிப்பதும், பின்னர் கைவிடுவதும், ஆண்களுக்கும், மன்னர்களுக்கும் வேண்டுமானால்
வாடிக்கையாக இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணின் நிலையில் இருந்து, இப்பிரச்சினையினை
எண்ணிப் பாருங்கள் அமைச்சரே, அப்பொழுதுதான் இதன் வலியும், வேதனையும் தங்களுக்குப்
புரியும்.
ஆண்களின்
ஆதிக்கத்திற்கும், ஆண்களின் இச்சைகளுக்கும், போதைப் பொருளாக, பெண்கள் பயன்படுத்தப்
படுவதை எதிர்ப்பவள் நான்.
என் கணவர்,
அந்தப் பெண்ணின் அழகில் மயங்கியபோது சாதி தெரியவில்லை.
அப்பெண்ணின்
நினைவாகவே, இரவெல்லாம் விழித்திருந்து, தவித்தபோதும் சாதி தெரியவில்லை.
காதலால்,
கசிந்துருகி, காதல் மொழிகளைப் பேசியபோதும் சாதி தெரியவில்லை.
அப்பெண்ணின்
மடியில் தலைவைத்து, இவ்வுலகினையே மறந்து இருந்தபோதும் சாதி தெரியவில்லை.
நான் தாலி
எடுத்துக் கொடுத்தவுடன், சாதி தலை தூக்குகிறதா அமைச்சரே?
இரண்டு
இதயங்கள் இணையும்போது, சாதிக்கு சமாதி கட்டுவதுதான், நமது வரலாறு அமைச்சரே.
இனி மன்னரின்
கவனம், நாட்டின் மீது மீண்டும்
திரும்பும். என் கவனமும், இனி நாட்டின் மீதுதான்.
பதிலுரைக்க வார்த்தைகள் இன்றி, கண்களில்
இருந்து கண்ணீர் வடிய, அமைச்சர், தன் இரு கரம் கூப்பி, அரசி வேலு நாச்சியாரை
வணங்கினார்.
தாயே, தங்களின்
உள்ளம் பெரிது, தங்களின் எண்ணம் பெரிது, தங்களின் செயல் பெரிது, வணங்குகிறேன்
தாயே.
---
திருமணமாகி சில மாதங்களே கடந்த நிலையில்,
இதோ, காளையார் கோயிலின் வாசலின் முன், இருவரும், ஒருவரை ஒருவர் அணைத்தபடி, இரத்த
வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர்.
ஊரெங்கும் பிண வாடை. வானில் கழுகுகளின்
பெருங் கூட்டம்.
மன்னர்
முத்து வடுகநாதர்
இளைய
ராணி கவுரி நாச்சியார்
இருவரின்
கண்களும், ஒரே திசையை நோக்கியவாறு, குத்திட்டு நிற்கின்றன.
அத்திசையில் இருந்து பாய்ந்து வருகிறது ஒரு
குதிரை. குதிரையின் மேல் வேலு நாச்சியார்.
தொடரும்
வணக்கம் ஐயா
பதிலளிநீக்குவேலு நாச்சியாரின் துணிச்சல் அசாத்தியமானது. பாருங்கள் அன்றே புதுமைப் பெண்ணாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். கவுரி நாச்சியார் செய்தி இன்று தான் இப்பதிவின் மூலம் அறிந்தேன். அறிய தந்தமைக்கு நன்றிகள் ஐயா.
பாரதி புதுமைப் பெண்ணைப் பற்றுப் பாடுவதற்கு முன்னரே தேர்ன்றிய புதுமைப் பெண்தான் வேலு நாச்சியார்
நீக்குநன்றி நண்பரே
அமைச்சருக்கு ராணியின் பதில் எத்துனை அருமை!! அந்தக் காலத்திலேயே!! பகிர்விற்கு நன்றி அண்ணா. தொடர்கிறேன்..
பதிலளிநீக்குத.ம.1
ஆம் சகோதரியாரே
நீக்குஅந்தக் காலத்திலேயே வேலு நாச்சியாரின் தெளிவான சிந்தனை செயல் வியக்க வைக்கிறதல்லவா
நன்றி சகோதரியாரே
தாலியை எடுத்துக்கொடுத்தற்கான காரணத்தை வேலு நாச்சியார் நியாயப்படுத்தியமை மனதைத் தொட்டுவிட்டது. வேலு நாச்சியார் கதையில் இவ்வாறான ஒரு நிகழ்வு தற்போதுதான் அறிந்தேன். தொடருங்கள்.
பதிலளிநீக்குவேலு நாச்சியாரின் நியாயம் நியாயமானதுதானே ஐயா
நீக்குநன்றி
.படித்து விட்டேன்.
பதிலளிநீக்குதொடர்கிறேன். நன்றி.
நன்றி நண்பரே
நீக்குஅருமையான பதிவு. நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅருமையாக கதையை சொல்லி செல்கிறீர்கள்.
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
நன்றி சகோதரியாரே
நீக்கு// சாதிக்கு சமாதி கட்டுவது தான் // இது தான் சிறப்பான வரலாறு...
பதிலளிநீக்குதொடர்கிறேன்...
http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Speed-Wisdom-9.html
சாதிக்கு அன்றே சமாதி கட்டியவர்தான் வேலு நாச்சியார்
நீக்குநன்றி ஐயா
வீர வரலாறு..
பதிலளிநீக்குநிகழ்வுகளைத் தாங்கள் சொல்லும் பாங்கு அலாதியானது..
தொடர்கின்றேன்!..
நன்றி ஐயா
நீக்குவரலாற்றை சுவைமிக்க ஒரு கதையாக சொல்லிக்கொண்டு வருகிறீர்கள். வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநானும் தொடர்கிறேன்.
அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅருமை அருமை ஐயா! நான் அறியாத பல தகவல்கள் உங்கள் கட்டுரையில்...!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குதுணிச்சலான முடிவை தக்க காரணத்துடன் விளக்கிய விதம் மெய்சிலிர்க்க வைத்தது. தொடருங்கள்.
பதிலளிநீக்குதுணிச்சலான முடிவுதான்
நீக்குநன்றி சகோதரியாரே
வேலு நாச்சியார்! அடே டே, இவர்கள் பெயர் தெரிந்து இருந்தாலும் இவர்களை பற்றிய விஷயத்தை அறியாமல் இருந்தேனே... தொடர்ந்து எழுந்துங்கள் கரந்தையாரே...
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா..
மனதை நெருடும் வகையில் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் அறியாத தகவலை அறிந்தேன் பகிர்வுக்குநன்றி த.ம 6
கவியதையாக என்பக்கம் வாருங்கள் அன்போடு
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எப்போது மலரும்…………….:
நன்றி நண்பரே
நீக்குஇதோ தங்கள் வலைக்கு வருகின்றேன் நண்பரே
சரித்திரக் கதை விறுவிறுப்பாக ஆரம்பித்துவிட்டது. 'நீங்கள் படம் வெளியிடும்போது, அதைப் பற்றிக் கீழே எழுதவும். முதல் படம், வேலு நாச்சியார் சிலைக்காகவா அல்லது பெரிய மாளிகை போன்று இருக்கிறதே அதற்காகவா?
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே
நீக்குபடத்தில் இருக்கும் மாளிகைதான்
சிவகங்கைச் சீமையின் அரண்மனை
இனி படத்தின் கீழே, படம் பற்றிய விவரத்தினை குறிப்பிடுகிறேன்
நன்றி நண்பரே
பதிலளிநீக்குதாயே, தங்களின் உள்ளம் பெரிது, தங்களின் எண்ணம் பெரிது, தங்களின் செயல் பெரிது, வணங்குகிறேன் தாயே.
அசாத்தியமான வீர வரலாறு.
அசாத்தியமான வீர வரலாறுதான் சகோதரியாரே
நீக்குநன்றி
உங்கள் நடை, ஒரு வரலாற்று நாவல் உருவாகிக் கொண்டு இருக்கிறது என்பதனைச் சொல்லாமல் சொல்லுகிறது.
பதிலளிநீக்குத.ம.7
நன்றி ஐயா
நீக்குவேலு நாச்சியார் பற்றித் தகவல்கள் தரும்பதிவு. தொடர்கிறேன்
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குநான் தாலி எடுத்துக் கொடுத்தவுடன், சாதி தலை தூக்குகிறதா அமைச்சரே?
பதிலளிநீக்குஇரண்டு இதயங்கள் இணையும்போது, சாதிக்கு சமாதி கட்டுவதுதான், நமது வரலாறு அமைச்சரே.
என்னே ஒரு உயந்த சிந்தனை இவரே புதுமைப்பெண் அருமை நண்பரே.... தொடர்கிறேன்
தமிழ் மணம் 8
வேலு நாச்சியார் புதுமைப் பெண்தான் நண்பரே
நீக்குநன்றி நண்பரே
சுவாரசியமான சரித்திரக் கதையாக மிளிர்கிறது/ வேலுநாச்சியாரின் பண்பு மெய் சிலிர்க்க வைக்கிறது
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குவேலு நாட்சியார் அறிமுகம் ஆகும் இடத்தில் அன்பு பெருகி பின் அனல் பிடிக்கத் தொடங்கியிருக்கிறது கதை!! செம மாஸ் அண்ணா!
பதிலளிநீக்குஆகா அப்படியே திரைப்படம் எடுக்கலாம் போல இருக்கிறது ..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
முக நூலில் பகிர்ந்திருக்கிறேன்
நன்றி நண்பரே
நீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குசென்ற வாரம் வேலு நாச்சியார் அவர்களின் தொடர் பற்றிய முன்னோட்டமே இந்தப் பதிவு கண்டிப்பாக கனமான செய்தி ஒன்றினை தரப்போகிறது என்பதற்கு கட்டியம் கூறி விட்டது. அதனை இன்றையப் பதிவு நிரூபித்து விட்டது. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே
நீக்குவீர மங்கை வேலு நாச்சியாரைப் பற்றி படிக்கும் போது சிலிர்க்கிறது ஐயா...
பதிலளிநீக்குதொடருங்கள் ஐயா... தொடர்கிறோம்...
நன்றி நண்பரே
நீக்குநாச்சியாரின் அந்த சாதி வார்த்தைகள் எவ்வளவு அருமை! உண்மை! துணிச்சல் மிக்க மிகவும் மனதில் உயர்ந்த பெண்மணி! தொடர்கின்றோம்...
பதிலளிநீக்குசாதியை அன்றே ஒழித்தவர்தான் வேலு நாச்சியார்
நீக்குநன்றி நண்பரே
அருமையான வரலாறு ஐயா!
பதிலளிநீக்குகதை சொல்லிச் செல்லும் விதம் மனதில் நிற்கின்றது.
தொடருங்கள் ஐயா!..
நன்றி சகோதரியாரே
நீக்குஎன் அன்னையளின் வரலாறு வீரத்தின் விளைநிலம் .சாதியைத்தகர்த்தெறிந்தவள்.
பதிலளிநீக்குவேலு நாச்சியார் வீரத்தின் விளை நிலம்
நீக்குவிவேகத்தின் உறைவிடம்
நன்றி சகோதரியாரே
ttha.ma.13
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குவர்ணனைகளை தவிர்த்து விட்டு பார்த்தால்
பதிலளிநீக்குஇன்னொரு சாண்டில்யனை கண்முன் கொண்டு வந்து
நிறுத்துகிறீர்கள். இன்றைய நிகழ்வுகள் யாவும் நாளைய
வரலாறு என்பதை சொல்லாமல் சொல்லி வருகிறிர்கள்.
நன்றியுடன்,
புதுவை வேலு
நன்றி நண்பரே
நீக்குபெண்ணாக சிந்தித்து வேலு நாச்சியார் எடுத்த முடிவு சிறப்பு! அருமை! தொடர்கிறேன்!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅருமை அய்யா!.
பதிலளிநீக்குதொடருக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன்.
தொடருங்கள்!
முதல் அத்தியாயமும் அருமை. புதுமையான முயற்சிக்கு எனது வாழ்த்துகள்!.
மிக்க நன்றி ஐயா
நீக்குமிக அருமை.தொடரட்டும் தங்களின் கட்டுரை.தொடரும் நல் இதயங்களுடன் நாணும்.மிக்க நன்றி.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குgood dialogue writing, please keep going.back to memory
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குநம் நாட்டின் விடுதலைக்கு போராடிய முதல் பெண் என்ற வகையில் வேலுசாச்சியார் என் உளம் கவர்ந்தார். இன்றோ நான் வணங்குகிறேன் அவரை. என் இன (பெண்) மானம் காத்தவர் என்று. அது சரி இன்னொரு கல்கி கரந்தையாரோ,,,,,,,,,,,,, இது வெறும் வார்த்தையில்லை வரலாறு. தொடரட்டும்.தொடர்கிறோம்.
பதிலளிநீக்குபாலமகி,,,,,,,,,
ஆகா
நீக்குஇது அதிகம் சகோதரியாரே
வருகைக்கு நன்றி
ந்ல்லதொரு தொடர்
பதிலளிநீக்குதொடரட்டும்
அப்பொழுதே பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக இருந்திருக்கிறாரே....
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
த.ம. +1
நன்றி ஐயா
நீக்குஅருமை! தொடருங்கள்! நன்றி!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவணக்கம்சகோ, எனக்கு கதை படிப்பதைவிட கவிதைகள்
பதிலளிநீக்குபடிப்பதுமிகப்பிடிக்கும் தங்கள் தளம் வருவேன் பிறகு
பத்தி பத்தியா இருக்கேனுட்டுதிரும்பிவிடுவேன்
ஆனா நீங்க சொன்னவிதம், அடுத்து தங்களின்
பதிவு எப்போ? என்று உள்ளது ஐந்ந்து நாட்களுக்கு
ஒருமுறையா? சகோ.நாச்சியார்முதல் புதுமைப்பெண்தானே
சகோ.
ஐந்து நாட்களுக்கு ஒரு பதிவு என ஏழு பதிவுகளை வெளியிட எண்ணியுள்ளேன் சகோதரியாரே
நீக்குவருகைக்கு நன்றி சகோதரியாரே
நல்ல பதிவு வாழ்த்துக்கள் சார்.இப்போழுது நிலைகொஞ்சம் பரவாயில்லை என்றாலும் கூட பெண்டாள நினைக்கிற மனோபாவம் இன்னும் முற்றிலுமாய் அகலவில்லை/அது ஆண்களுக்கே உரித்தான குணமா,அல்லது சாபமானவரமா தெரியவில்லை/
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஎத்தனை நூற்றாண்டு மனோபாவம், அவ்வளவு எளிதில், விரைவில் மாறிவிடுமா என்ன?
காலையிலிருந்து உங்கள் வலைப்பக்கம் திறக்கவே இல்லை. நீக்கி விட்டோம் என்றே பதில் வந்தது. இப்போது தான் திறந்தது.
பதிலளிநீக்குஆளுமை நிறைந்த பெண்மையை ஆண் ஏற்கவில்லையோ? அடங்கிக் கிடக்கும் பெண்மையைத் தான் ஏற்பானோ? மனம் வருந்தினாலும் வேலு நாச்சியார் தன் மதிப்பை நிலை நாட்டிக் கொண்டு விட்டார். பெரிய மனம் படைத்தவர்.
பதிலளிநீக்குவீரமங்கை வரலாறு வாசித்தேன்
பதிலளிநீக்குநன்றி
வேதா. இலங்காதிலகம்:
அருமையான பதிவு
பதிலளிநீக்குஅந்த நாட்களில் 'ராஜா-ராணி' படம் என்று சொல்லப்பட்ட திரைப்படம் பார்ப்பது போல ஓர் உணர்வு ....................உடுவை
பதிலளிநீக்குவணக்கம் அய்யா... வேலு நாச்சியார் பற்றித் தாங்கள் எழுதி இருக்கும் பதிவுகள் அருமை.
பதிலளிநீக்குவேலுநாச்சியார் தன் கணவர் முத்துவடுகநாதருக்குக் கவுரி நாச்சியாரைத் திருமணம் செய்து வைத்தது பற்றிய குறிப்பு எனக்குப் புதிதாக உள்ளது. இந்தக் குறிப்புக்கள் எந்தப் புத்தகத்தில் உள்ளன என்பது பற்றிய தங்களை அறியத்தர இயலுமா? நன்றி