29 ஜூன் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன்
          1976 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 30 ஆம் நாள். இந்நாள் என் வாழ்வில் மறக்க இயலாத நாள்.

        தாயின் கருவறையில் குடியிருந்த நான், அந்த அன்புத் தாயின் கரங்களில் முதன் முதலாய் தவழ்ந்த நாள்,  இந்நாள். ஆம் நண்பர்களே, நான் பிறந்த பொன்னாள் இது.

        தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தின் கோட்டப் பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவன் நான்.

     அழகிய கிராம்ம். அன்பு நிறைந்த பெற்றோர். வேறு என்ன வேண்டும் எனக்கு.


      என் தந்தையிடம் அன்பும், பாசமும் இருந்த அளவிற்குப் பணம் இல்லை. ஆயினும் அக்குறை தெரியாமல்தான் என்னை வளர்த்தார்.

     அரசுப் பள்ளியில் மட்டுமே படித்தேன். அதுவும் தமிழ் மொழியில் மட்டுமே படித்தேன். என்ன இல்லை அரசுப் பள்ளியில்.

      எனது ஆசிரியர்கள் அனைவருமே என்னை செதுக்கி, செதுக்கித்தான் உருவாக்கினார்கள். அவர்கள் எழுத்தை மட்டும் கற்றுத் தரவில்லை. தன்னம்பிக்கையினையும், துணிவையும் கல்வியோடு கலந்து ஊட்டித்தான் என்னை வளர்த்தார்கள்.

        அமெரிக்கன் கல்லூரியின் பசுமை நிறைந்த சூழ்நிலையில் என் கல்லூரிப் படிப்பு. கல்லூரியின் இறுதி ஆண்டில், அந்தப் பயம் என்னை மெல்ல மெல்ல தொற்றிக் கொண்டது.

       கல்லூரிப் படிப்பு முடியப் போகிறது. அடுத்து என்ன செய்யப் போகிறோம்?. போட்டிகள் நிறைந்த உலகில் காலடியை வைத்தாக வேண்டுமே, என்ன செய்யப் போகிறோம்? எப்படிச் சமாளிக்கப் போகிறோம்?

    கல்லூரிக்கு அடுத்து என்? என்ற கேள்வி என் உள்ளத்தை துளைக்கத் தொடங்கியது.

          ஆனாலும் மனதில் ஓர் ஆசை. இள வயது முதலே, அந்த ஆசை என்னைத் தொடர்ந்தே வந்திருக்கிறது. ஆசை என்று கூடச் சொல்ல முடியாது, மோகம்.

ஐ.ஏ.எஸ்., படிக்க வேண்டும்.

    புது தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக கழகத்தில் சேர்ந்து படிக்க முடிவு செய்தேன். மே மாதம் 1997 இல் நுழைவுத் தேர்வு எழுதினேன். வெற்றியும் பெற்றேன்.

      

முதல், வட இந்தியப் பயணம். இந்தி மொழியில் ஒரு வார்த்தைக் கூட தெரியாத நான், துணிந்து, தனித்துப் புறப்பட்டேன்.

       எனது ஆசிரியர்கள் வழங்கிய தன்னம்பிக்கையினை மட்டும் துணைக்கு அழைத்துக் கொண்டு புறப்பட்டேன்.

    இந்தியாவிலேயே அதிக பாடச் சுமையுடைய பல்கலைக் கழகங்களில் ஒன்றுதான், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம்.

    அயராமல் படித்தேன். தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை மெல்ல மெல்ல வளர்ந்தது.

     1999 ஆம் ஆண்டு ஜுன் மாதம், மத்திய தேர்வாணைக்குழு நடத்திய முதல் நிலைத் தேர்வும் வந்தது.

       தேர்வறையில் நுழைந்தேன். தேர்வு தொடங்கிய சில வினாடிகளிலேயே, எனது தன்னம்பிக்கை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு, கனவு, இலட்சியம் எல்லாம் வெடி வைத்துத் தகர்த்தது போல் தூள் தூளானது.

   நான் இதுவரை எதிர்கொண்ட தேர்வு முறைகளுக்கு எல்லாம், முற்றிலும் எதிரான தேர்வு முறை.

      என் போன்றோர்களால், விடை எழுத இயலா கேள்வி அமைப்பு. திகைத்துத்தான் போனேன்.

        சிறு வயது முதல், என்னில் மெல்ல மெல்ல, வளர்ந்த ஆசைகள் எல்லாம், ஒரே நிமிடத்தில் தகர்ந்து தவிடு பொடியாயின.

       விழியோரங்களில் கண்ணீர் மெல்ல, மெல்ல எட்டிப் பார்த்தது.

       பாவம், என் கண்களுக்கு அது மட்டும்தானே தெரியும்.

       நண்பர்களே, தங்களுக்குப் புரியவில்லைதானே. தேர்வு முறை எப்படி எனக்கு எதிராய் திரும்ப முடியும் என்று புரியவில்லைதானே,

      உடற்குறைபாடு உடையவர்களால், எழுத முடியாத வகையில் கேள்வி முறைகள் அமைந்திருந்ததுதான், என் விழி நீருக்குக் காரணம்.

      இன்னும் புரியவில்லையா, நான் பிறவி முதல் பார்க்கும் சக்தியினை இழந்தவன்.

                                                                                                                

தொடர்ந்து பேசுவேன்.
-----------------------------------------------------------------------------

நண்பர்களே,

     வணக்கம். இந்த இனிய நண்பர் திரு வெற்றிவேல் முருகன் அவர்களை, இரண்டு வருடங்களுக்கு முன், அவரது திருமணத்தின்போது, சுவாமிமலையில் சந்தித்தோமே நினைவிருக்கிறதா?

        பிறவியிலேயே கண் பார்வையினை இழந்தபோதும், சோர்ந்து விடாமல், மூலையில் முடங்கிவிடாமல், வாழ்வினைத் துணிச்சலுடன் எதிர் கொண்டு. வெற்றி பெற்ற தீரர் இவர்.

      வெற்றிவேல் முருகன் தனது முனைவர் பட்ட ஆய்வினை மெற்கொண்டது எங்கு தெரியுமா?

      தமிழ் நாட்டில் இல்லை.

      இந்தியாவிலேயே இல்லை

      நியூ யார்க்கில்

     அமெரிக்காவின் நியூயார்க்கில்.

     கல்வி உதவித் தொகையினை மட்டுமே நம்பி, தன்னந்தனியனாய் புறப்பட்டு, விமானம் ஏறி, பறந்து, அமெரிக்காவில் ஆய்வுப் படிப்பினைப் படித்தவர் இவர்.

      சில மாதங்களுக்கு முன், வெற்றிவேல் முருகன் அவர்களிடமிருந்து, எனக்கு ஓர் மின்னஞ்சல் வந்தது.

     மின்னஞ்சலின் இணைப்பில் ஒரு பி.டி.எஃப்., பைல்

     சுமார் 120 பக்கங்களில், வெற்றிவேல் முருகன் அவர்களே, தட்டச்சு செய்த, அவர்தம் அமெரிக்க வாழ்க்கை அனுபவங்கள், ஒவ்வொரு பக்கத்திலும்.

      வியந்து போனேன் நண்பர்களே, வியந்துதான் போனேன்.

      வெற்றிவேல் முருகன் அவர்களின் அமெரிக்க வாழ்க்கை அனுபவங்களை, என் எழுத்தில், என் போக்கில், தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

       வாருங்கள், வெற்றிவேல் முருகனின் கதையினைக் கேட்போம்


என்றென்றும் தோழமையுடன்,
கரந்தை ஜெயக்குமார்39 கருத்துகள்:

 1. இக்கட்டுரை எனக்கு ஊக்கம் அளித்தது. நன்றி.

  பதிலளிநீக்கு
 2. அடடே... பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  பதிலளிநீக்கு
 3. வாவ் ... தொடர்கிறேன் அய்யா

  பதிலளிநீக்கு
 4. ஆரம்பத்தில் உங்கள் கதை என்று நினைத்தேன்.பின்னே செல்லவே புரிந்து கொண்டேன். தொடருகின்றேன்

  பதிலளிநீக்கு
 5. ஆரம்பத்தில் உங்கள் கதை என்று நினைத்தேன்.பின்னே செல்லவே புரிந்து கொண்டேன். தொடருகின்றேன்

  பதிலளிநீக்கு
 6. திரு. வெற்றிவேல் முருகன் அவர்களை தங்கள் மூலம் நான் ஏற்கனவே அறிந்தவன் மேலும் அறிய ஆவலுடன் தொடர்கிறேன் நண்பரே...
  த.ம. 3

  பதிலளிநீக்கு
 7. இவரைப் பற்றி தங்கள் பதிவில் வாசித்த நினைவு நன்றாகவே உள்ளது. தலைப்பைப் பார்த்ததுமே தோன்றியது அதுதான். இப்போது அவர் வளர்ச்சி, முன்னேற்றம் கண்டு பாராட்ட வார்த்தைகள் இல்லை! மனம் மகிழ்வில் ஒரு புறம், வியப்பில் மறுபுறம். அவரது அனுபவங்களை அறிய தொடர்கிறோம் நண்பரே. இது போன்ற பதிவுகள் பலரது தன்னம்பிக்கையையும் வளர்க்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. தன்னம்பிக்கையையும் வளர்க்கும் பதிவை நானும் தொடரப் போகிறேன்

  பதிலளிநீக்கு
 9. அஹா தன்னம்பிக்கைத் தொடர் . ! வாழ்த்துகள் இருவருக்கும் சகோ !

  பதிலளிநீக்கு
 10. உண்மையில் இவர் 'வெற்றி 'வேல் முருகன்தான் !

  பதிலளிநீக்கு
 11. உங்கள் தொடர் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க ஆவலாய் உள்ளேன்.

  பதிலளிநீக்கு
 12. இவர் பெங்களூரில்தானே வசிக்கிறார். இவருக்கு மணமாகி ஒரு குழந்தையும் பிறந்திருக்கிறது தானே ஒரு முறை இவரை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறேன் சந்திக்க வேண்டும் என்னும் ஆவல் இதுவரைக் கை கூடவில்லை. தொடரைத் தொடர்வேன்

  பதிலளிநீக்கு
 13. உண்மை நிகழ்வுகள் கற்பனைகளை விட சுவாரஸ்யமானவை. அதுவும் உங்கள் தனியான எழுத்துவண்ணம் வாசிக்கும் ஆவலை மேலும் மேலும் தூண்டுகிறது...வாழ்த்துக்கள் .......உடுவை

  பதிலளிநீக்கு
 14. வெற்றிவேல் முருகன் - என்றதுமே புரிந்து கொண்டேன்..

  தங்களின் பணி தொடரட்டும்..
  அடுத்த பதிவுக்காகக் காத்திருக்கின்றேன்..

  பதிலளிநீக்கு
 15. தன்னம்பிக்கைத் தொடருக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. தன்னம்பிக்கை மனிதரை வாழ்க்கை சம்பவங்களை அறிந்து கொள்ள உடன் பயணிக்கிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 17. தன்னம்பிக்கைத் தொடர் தொடர வாழ்த்துக்கள் .
  எந்த வயதிலும் ஒரு உந்து சக்தி வேண்டித்தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 18. பெயரைப் பார்த்ததும் புரிந்துகொண்டேன். இவரை முன்னர் சில பதிவுகளில் சிறப்பாக அறிமுகப்படுத்தியிருந்தீர்கள். தன்னம்பிக்கைக்குப் பெயர் பெற்ற நண்பரைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி. தொடர்கிறோம், உங்களுடன்.

  பதிலளிநீக்கு
 19. தன்னம்பிக்கை தரும் தொடர்..... இவர் பற்றி உங்கள் பதிவில் படித்திருக்கிறேன். அவர் அனுபவங்கள் பற்றி தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 20. முதலில் தங்கள் தளத்தில் இவர்பற்றிபடித்த நினைவுண்டு.ஊக்கம் தரும் வெற்றிவேல் முருகன் கதை தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 21. தொடருங்கள். தொடருகிறோம்.

  பதிலளிநீக்கு
 22. தங்கள் வலைத்தளத்தில் அறிமுகமானவர்களில் என்னால் மறக்க முடியாதவர் வெற்றிவேல் முருகன். கண்ணிழந்த மனிதர் முன்னே அவர் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். அவரைப் பற்றிய உங்களது தொடர் பதிவுகளைத் தொடர்ந்து படித்திட ஆர்வமாக இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 23. ஆவலுடன் தொடர்கிறேன்
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 24. வித்தகர்கள்" என்ற தங்களது நூலில் இவருடன் இடம்பிடித்த மகிழ்ச்சி எனக்கும் உண்டு.தொடர்ந்து எழுதுங்கள்.
  படிப்பவர்களுக்கு உடல் வளம்.மனவளம் மற்றும் மனோதத்துவ வளம் பெற உதவும்.

  பதிலளிநீக்கு
 25. ஆவலோடு!!!!!!!!காத்திருக்கிறேன்! கரந்தை!

  பதிலளிநீக்கு
 26. வருங்கால வழித்தோன்றல்களுக்கான
  வழிகாட்டியின் வரலாற்றைப் பகிர முனைந்த
  தங்களின் செயலுக்குப் பாராட்டுகள்!
  தொடருங்கள் தொடருகிறோம்

  கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
  http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

  பதிலளிநீக்கு
 27. அற்புதம் வெற்றிவேல் முருகனின் சாதனைகளை அறிய ஆவல்

  பதிலளிநீக்கு
 28. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  திரு.வெற்றிவேல் முருகன் அவர்களின் முன் கதையை படித்தவுடன் நாம் இருவரும் அவரை இரும்புதலை கிராமத்தில் சந்தித்த நினைவு மின்னலாக தோன்றியது. அவ்ருடைய தன்னம்பிக்கையை நினைத்தவுடன் என் மனச்சோர்வு அகன்றது.

  பதிலளிநீக்கு
 29. உங்களுடைய பணி தொடர வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 30. வாழ்த்துக்கள்... அவர் வாழ்வில் சிறப்படைய வாழ்த்துக்கள்.
  உங்கள் பணி சிறக்கட்டும் ஐயா...

  பதிலளிநீக்கு
 31. திரு வெற்றி வேல் முருகன் அவர்கள் வாழ்வு சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள்,அவரை வெளி உலகிற்கு அறிமுகம் செய்த உங்களது பணி மிகவும் சிறப்பானது.

  பதிலளிநீக்கு
 32. கரந்தையாருக்கு ,

  பிறந்த வருடம் 1976 என்றதுமே அது நீங்கள் இல்லை என உறுதி செய்துகொண்டேன்.

  அருமையான தொடராக அமையப்போகும் இந்த வரலாற்று நாயகனின் அனுபவங்களை உங்களின் கைவண்ணத்தில் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

  உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  கோ

  பதிலளிநீக்கு
 33. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்...
  போற்றுதலுக்கு உரிய மனிதருக்கும் தங்களின் எழுத்து ஒரு மகுடம்...
  தொடர்கிறேன் ஐயா...

  பதிலளிநீக்கு
 34. வெற்றிவேல் முருகனின் வாழ்க்கை பயனம் இந்த இளைய தலைமுறைக்கு கிடைத்த ஒரு ஆல விதை. தொடருங்கள்.நன்றி.

  பதிலளிநீக்கு
 35. வணக்கம்
  ஐயா

  தொடருகிறேன் ஐயா.. படிக்க படிக்க படிக்கத்தான் சொல்லுது...


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 36. arumai vaalthukal ayaa. athega /patacha/ sumai uadaya palgaligalagam. . . intha vari paarkavum.

  பதிலளிநீக்கு
 37. நலமா அய்யா ?

  ஒரு இடைவெளிக்கு பிறகு வருகிறேன்...

  சாதனை மனிதர்களை சிறப்பிக்கும் உங்கள் எழுத்தில் வெற்றிவேல் முருகன் அவர்களின் கதை !

  முதல் பாகத்தை மட்டுமே படித்தேன்...மனம் சாதிக்க தீர்மானித்துவிட்டால் உடலின் குறைகள் கூட மறந்துவிடும் என்பதற்கு சான்றான தொடர்...

  தொடருவோம்

  நன்றி
  சாமானியன்

  எனது பயணப்பதிவின் இரண்டாம் பாகம்... தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

  http://saamaaniyan.blogspot.fr/2016/05/2.html

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு