திருப்புறம்பியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்புறம்பியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 டிசம்பர் 2020

உதிரம் உறைந்த பூமி

 


     கி.பி.,ஒன்பதாம் நூற்றாண்டு.

     காவிரிக்கும் மேற்கே தொடங்கி, திருவேங்கடத்தையும் தாண்டியப் பெருநிலப் பரப்பில் பல்லவப் பேரரசும், காவிரிக்கு தெற்கே தொடங்கி, குமரியின் அடிமுனை வரையிலானப் பெரும் பரப்பை பாண்டியரும் ஆண்டு கொண்டிருந்த காலம்.

     முத்தரையரிடம் போரிட்டு கைப்பற்றிய சிறு பகுதிகளை மட்டுமே, பல்லவர்களின் துணையோடு, சோழர்கள், குறு நில மன்னராய் ஆண்டு கொண்டிருந்த காலம்.

     எப்படியும் பல்லவர்களை அழித்தே தீருவது என்ற எண்ணத்தில் இருந்த, இரண்டாம் வரகுண பாண்டியன், சற்றேறக்குறைய ஒன்றரை இலட்சம் படை வீரர்களோடு புறப்பாட்டான்.