04 ஜனவரி 2015

வேலு நாச்சியார் 7


அத்தியாயம் 7 குயிலி




           சிவகங்கைக்கு அருகில் உள்ள, அடர்ந்த காட்டுப் பகுதியில், வேலு நாச்சியாரின் படை முகாமிட்டது.

      வீரர்களே, சிவகங்கை நகரமும், திருப்பத்தூர் கோட்டையும் மட்டுமே, நம் எதிரிகளின் வசம் உள்ளன.

      சின்ன மருது தலைமையில், சேதுபதியம்பலம், நன்னியம்பலம், வேல் முருகு ஆகியோருடன், மூவாயிரம் படை வீரர்கள், எட்டு பீரங்கிகளுட்ன் திருப்பத்தூர் கோட்டையைக் கைப்பற்றச் செல்லட்டும்.

      பெரிய மருது தலைமையில், வேங்கை உடையத் தேவர், சீமைச் சாமித் தேவர் ஆகியோருடன் மீதியுள்ள வீரர்கள், சிவகங்கைத் தெப்பக் குளத்தின் தென்கரை மாளிகையில் தங்கியிருக்கும், நவாபின் படைகளை முறியடிக்கட்டும்.

      நானே,  உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்றுச் சென்று, சிவகங்கை அரண்மனையில் இருக்கும், ஆங்கிலத் தளபதி பான் ஜோரை நேருக்கு நேர் சந்திக்கிறேன்.

     வேலு நாச்சியார் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி, தலையெல்லாம் நரைத்து, நடக்கக் கூட இயலாமல், கைத் தடியை ஊன்றியபடி, தட்டுத் தடுமாறி, வேலு நாச்சியாரின் அருகில் வந்தார்.


வேலு நாச்சியாரை ஒரு கிழவி நெருங்குவதைக் கண்டதும், இடையில் புகுந்த சின்ன மருது, பாட்டியே, யார் நீ? என்றார்.

     சின்ன மருதுவிற்குப் பதில் கூறாமல், வேலு நாச்சியாரைப் பார்த்த கிழவி,

தாயே, நாளை மறுநாள் விஜய தசமி. சிவகங்கை அரண்மனைக்குள் இருக்கும், இராஜராஜேசுவரி கோயிலை, அன்று ஒரு நாள் மட்டும், வணங்குவதற்காக, கோட்டையின் கதவுகளை, பெண்களுக்கு மட்டும், திறந்து விட இருக்கிறார்கள்.

இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, நாமெல்லாம், ஆயுதத்தை மறைத்து எடுத்துக் கொண்டு, கோயிலுக்குள் சென்று விட வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில், ஆயுதத்தை வெளியே எடுத்துத் தாக்குதலைத் தொடங்கிவிட வேண்டும் தாயே, வெற்றி நமதே.

     கிழவியின் அருகில் வந்த வேலு நாச்சியார்,

எங்களின் வெற்றிக்கு, மகத்தான வழியினைக் காட்டியிருக்கும், தாங்கள் யார் என்பதை, நான் அறிந்து கொள்ளலாமா?

    கிழவி மெதுவாக, தன் வெளுத்தத் தலை முடியை நீக்கினார். உள்ளே கரிய முடி எட்டிப் பார்த்தது. ஒப்பனைகளை ஒவ்வொன்றாக நீக்க, கிழவி குமரியானாள்.

    கண்ணெதிரிலே நின்றவர் குயிலி.

குயிலி என்று பாசத்தோடு அழைத்த, வேலு நாச்சியார், குயிலியை கட்டிப் பிடித்து உச்சி முகர்ந்தார்.

---

               விஜயதசமி அன்று. சிவகங்கை அரண்மனையின் முன் வாயில் திறக்கப் பட்டது.

           இராஜராஜேசுரி அம்மனைத் தரிசிக்கப் பெண்கள் கூட்டம் அலைமோதியது. அரண்மனையில் எங்கு பார்த்தாலும் ஆடல், பாடல்.

     பெண்களோடு பெண்களாக, உடையாள் பெண்கள் படையினரும் உள்ளே நுழைந்தனர். கூட்டத்தோடு கூட்டமாக, மாறு வேடத்தில், வேலு நாச்சியார். சிறிது இடைவெளி விட்டு, குயிலி.

     ஆண்கள் பலரும், தங்கள் மீசைகளை, மழித்து எறிந்து விட்டு, பெண் வேடமிட்டு உள்ளே நுழைந்தனர்.
     
இராஜராஜேசுவரி அம்மன் ஆலயம் 
இராஜராஜேசுவரி அம்மன் ஆலயத்தின் கருவறைக் கதவுகள் திறக்கப் பட்டன. தீப ஆராதணையில் அம்மன் ஜொலித்தார்.

       தாயே, தாயே என்று பெண்கள் இறைவியை நோக்கிக் குரல் கொடுத்து வணங்கினர்.

      வேலு நாச்சியாரின் அருகில் வந்தார் குயிலி,

திருப்பத்தூர் கோட்டையை, சின்ன மருது படையும், உம்தத் உம்ரா படையை பெரிய மருதுவும் முறியடித்து விட்டதாக செய்தி வந்துள்ளது தாயே.

     வேலு நாச்சியார் ஒரு கணம் கண்மூடி, இராஜராஜேசுவரி அம்மனை வணங்கினார். அடுத்த நொடி, மறைத்து வைத்திருந்த வாளை, வெளியே உருவி எடுத்து, தலைக்கு மேல் உயர்த்தினார்.
   

வீரர்களே, தாக்குங்கள்.....

     கோயில் மணி ஓசையினையும் மீறி, வீரர்களின், வீர முழக்கம், எட்டுத் திசைகளிலும் பரவியது.

      உடையாள் படை வெறியோடு எதிரிகளோடு மோதியது. எதிர்பார்க்காத திடீர் தாக்குதலால், எதிரிப் படைகள் ஓலமிட்டு ஓடத் தொடங்கின.

      காளையார் கோயிலில் தொடங்கிய போரை, இராஜராஜேசுவரி அம்மன் ஆலயத்தில் முடித்து விட வேண்டும் என்ற முனைப்போடு, வேலு நாச்சியார், இரண்டு கரங்களிலும் வாட்களை ஏந்தி, எதிர்பட்டவர்களின் தலைகளை எல்லாம், தரையில் உருண்டோட விட்டார்.



திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத பான் ஜோர், ஆங்கிலேயத் தளபதி பான் ஜோர், முத்துவடுக நாதரை, மறைந்திருந்து வீழ்த்திய பான் ஜோர், அரண்மனையின் மாடியில் நின்றபடி,

வீரர்களே, ஆயுதக் கிடங்கில் இருக்கும் ஆயுதங்களை, வெடி மருந்துகளை எடுத்துத் தாக்குங்கள் எனக் கட்டளையிட்டான்.

      பான் ஜோரின் உத்தரவு, குயிலியின் செவிகளிலும் விழுந்தது. நாமோ வாளும், ஈட்டியும் ஏந்திப் போராடிக் கொண்டிருக்கிறோம். வெடி குண்டுகள் நம் மீது வீசப் பட்டால், பெரும் பாதிப்பல்லவா ஏற்படும், ஏதாகினும் செய்தே தீர வேண்டும். வெள்ளையரை விரட்டியே ஆக வேண்டும், வேலு நாச்சியாருக்கு, வெற்றியைத் தந்தே ஆக வேண்டும், என்ன செய்வது என்று, ஒரு கணம் யோசித்தார்.

      ஒரே ஒரு கணம்தான்.  குயிலியின் மனதில் ஓர் எண்ணம், மின்னலாய் பளிச்சிட்டது. ஆம், இதுதான் சரியான வழி.

       வாளை தூக்கி எறிந்த குயிலி, வேகமாய் கோயிலுக்குள் ஓடினார். கோயிலின் மடப் பள்ளியில், இறைவியின், நெய்வேத்தியத்திற்காக, குடம் குடமாக வைக்கப் பட்டிருந்த, நெய்யினை எடுத்துத் தன் உடல் முழுவதும் நனைத்தார். நெய்யிலேயே குளித்தார்.

       கோயிலின் சுவற்றில் சொருகப் பட்டிருந்த, தீபந்தம் ஒன்றினைக் கையில் எடுத்துக் கொண்டு, ஆயுதக் கிடங்கை நோக்கி ஓடினார்.

வீரத்தாய் வேலு நாச்சியார் வாழ்க
வீரத்தாய் வேலு நாச்சியார் வாழ்
      

நெய்யினால் முழுவதுமாய் நனைந்திருந்த தன் உடலுக்குத், தீ பந்தத்தால், தானே தீ வைத்துக் கொண்டு, ஆயுதக் கிடங்கினுள் நுழைந்து, ஆயுதக் குவியலின் மீது பாய்ந்தார்.

வீரத்தாய் வேலு நாச்சியார் வாழ்க
வீரத்தாய் வேலு நாச்சியார் வாழ்க

அடுத்த நொடி, சிவகங்கைச் சீமையே கிடுகிடுக்கத் தொடங்கியது. வானத்தில் இருந்து இறங்கும் பெரு இடியென, குண்டுகள், குவியல் குவியலாய் வெடித்துச் சிதறத் தொடங்கின.

       குயிலி நார் நாராகப் பிய்த்து எறியப் பட்டார்
                                                                                                                                                         தொடரும்











72 கருத்துகள்:

  1. என்ன ஒரு முடிவு!! வீரமங்கை குயிலி!
    த.ம.2

    பதிலளிநீக்கு
  2. குயிலி அவர்களின் தியாகத்தை என்னவென்று சொல்வது...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குயிலியின் தியாகத்தைப் போற்ற வார்த்தைகள் இல்லை ஐயா
      நன்றி

      நீக்கு
  3. வணக்கம்
    ஐயா.

    குயிலி அவர்களின் தியாகம் மிகப்பெரியது.. படிக்கும் உள்ளங்களை ஒரு கணம் சிந்திக்க வைக்கிறது.. அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி. த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. குயில் பற்றி சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அப்பா அவருடைய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
    நமது வரலாற்றை நம் எவ்வளவு சுலபமாய் மறந்து விடுகிறோம்.
    உங்கள் பணி மகத்தானது..
    த ம +

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஐயா
    படிக்கும் போது மேனியெல்லாம் சிலிர்க்கிறது ஐயா. என்னவொரு வீரம்? வீரமங்கை குயிலின் வரலாறு எல்லாம் பேச ஆளில்லையே! தங்கள் மூலம் அறிந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி ஐயா. தொடரட்டும் நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குயிலியைப் பேச ஆளில்லாதது வேதனைதான்
      நன்றி நண்பரே

      நீக்கு
  6. குயிலியின் தற்கொலை தாக்குதல் மெய்சிலிர்க்க வைக்கிறது !
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகின் முதன் மனித வெடிகுண்டு ஒரு தமிழச்சி
      நன்றி நண்பரே

      நீக்கு
  7. காட்சிகள் கண்முன் விரிந்தது போல் இருக்கிறது ஐயா.

    பதிலளிநீக்கு
  8. அற்புதம், ஐய்யா அற்புதம். தொடருங்கள்.....

    பதிலளிநீக்கு
  9. வீரமங்கை குயிலியின் பொற்பாதங்கள் போற்றி!.. போற்றி!..

    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள ஜெயக்குமார்..

    வணக்கம். என்ன அற்புதமான தேசத்தில் நாம் பிறபெடுத்திருக்கிறோம். எவ்வளவு பெருமையாக உள்ளது. தன்னை ஈந்து தேசம் காத்த குயிலி தாயின் பிள்ளைகள் நாம். விரைவில் இதனை முடித்து நுர்லாகக் கொண்டுவாருங்கள். வாழ்த்துக்கள். நம்முடைய இளம் தலைமுறைக்குத் தேசப்பெருமையைப் புதுப்பிக்கும் உங்கள் முயற்சிக்குத் தலை வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. குயிலின் தியாகம்! மெய்சிலிர்க்கிறது.
    இப்படி எத்தனை பேரின் தியாகம், தேசபக்தியில் நாம் வாழ்கிறோம். குயிலிக்கு வீர வணக்கம்.
    வீர காவியத்தை அற்புதமாய் சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குயிலிக்கு வீர வணக்கம் செலுத்துவோம்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  12. இப்படி ஒரு வீரமங்கை பற்றி எத்தனை பேருக்கு தெரியும். மெய்சிலிர்த்தது. தங்களின் பகிர்வு உலகத்தில் நிலைத்து நிற்கும். புத்தகமாக்கி பலரும் அறியும் வண்ணம் தாருங்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  13. பல பதிவுகள் இன்னும் படிக்கவில்லை. படித்து விடுவேன் இந்த தற்கொலைப் படையினர் அந்தக் காலத்திலும் இருந்திருக்கின்றனர். முயற்சியின் காரணங்கள் வேறு பட்டாலும் இலக்கு நினைத்தைச் சாதிப்பதுதானே(ராஜிவ் காந்தியின் படுகொலை நினைவுக்கு வந்தது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா
      உலகின் முதல் மனித வெடிகுண்டே குயிலிதான் ஐயா
      நன்றி ஐயா

      நீக்கு
  14. குயிலியின் தியாகம் போற்றுதலுக்குரியது. வாழ்க அவர் நாமம்.

    பதிலளிநீக்கு
  15. வீரப் பெண்மணி குயிலியின் தியாகம் மெய் சிலிர்க்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறுதானே குயிலியின் வரலாறு
      நன்றி ஐயா

      நீக்கு
  16. உடம்பெல்லாம் சிலிர்க்கிறது.

    வாழ்க அவர் தியாகம்.

    பதிலளிநீக்கு
  17. சின்ன மருது, பெரிய மருது பற்றி சிறு வயதில் 'மானம் காத்த மருதுபாண்டியர்' என்ற புத்தகம் படித்திருக்கிறேன். அவர்களைப் பற்றியும் கொஞ்சம் எழுதுவீர்களா இந்தத் தொடரில்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தத் தொடர் அடுத்த பதிவோடு நிறைவு பெறுகிறது நண்பரே

      நீக்கு
  18. வீரம் செறிந்த காவியம்
    நெருப்பே நீ நேரில் வா! என்று அழைக்கும்
    துணிவுமிக்க வீர மங்கை குயிலியை நினைக்கும் பொழுது,
    தீயில் அவள் மாண்டாலும்,
    அண்டமும் வாழ்க! வாழ்க என்று சொல்லும்!
    குயிலியின் புகழினை எடுத்துரைத்த நண்பர் கரந்தையாருக்கு ஹாட்ஸ் ஆப்!
    புதுவைவேலு
    (நண்பரே குழலின்னிசை தங்களை வரவேற்கின்றது வலைப் பூ நோக்கி! நன்றி!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே
      இதோ தங்களின் வலைப் பூவிற்கு வருகின்றேன்

      நீக்கு
  19. வீரப் பெண் குயிலி – இதனால்தான் குயிலி என்ற பெயர் பெண்களுக்கு வைக்கப்படுகிறது என்று இன்று தெரிந்து கொண்டேன்.
    த.ம.9

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா04 ஜனவரி, 2015

    குயிலியின் செயல் மெய் சிலிர்க்க வைத்தது.
    மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  21. அருமையான நடை... அற்புதமான வரலாறு...

    பதிலளிநீக்கு
  22. தங்களின் நடை தீப்பாய்ந்த குயிலியின் உடலையும் வெடி குண்டுகளின் சிதறலையும் கண்முன் கொண்டுவந்தது.
    கூடவே தன் உடல் முழுக்க வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு, சுமார் எட்டரை மணி நேரம் ஆழ்கடலில் நீந்திச் சென்று, சக்தி வாய்ந்த இலங்கைக் கடற்படைக் கப்பலைத் தனி ஒரு பெண்ணாக தன்மேல் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து சிதறடித்து மூழ்கடித்த கரும்புலி. அங்கையற்கண்ணி அவர்களின் நினைவும்...
    இதையெல்லாம் பார்க்கப் புறநானூறும் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்திகளும் வெறும் புனைவல்ல என்று தோன்றுகிறது அய்யா!
    தங்களைத் தொடர்கிறேன்.
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புறநானூறும் வெண்பாமாலையும் மெய்யாகத்தான் இருக்கும் நண்பரே
      நன்றி

      நீக்கு
  23. உடல் சிலிர்க்கிறது நண்பரே வேறு ஒன்றும் எனக்கு எழுதத் தோன்றவில்லை.
    தமிழ் மணம் 10

    பதிலளிநீக்கு
  24. வீரமங்கையின் வீரமான முடிவு../

    பதிலளிநீக்கு
  25. நெஞ்சில் நிற்கிறது முடிவு

    பதிலளிநீக்கு
  26. தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட குயிலியின் மனத் தைரியம் பாராட்டத்தக்கது. மெய்சிலிர்க்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோதரியாரே
      குயிலியின் மன தைரியம் போற்றுதலுக்கு உரியது
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  27. இனிய தொடர்
    தொடருங்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  28. குயிலி வியக்க வைக்கின்றார்! என்னே ஒரு வீர நங்கை! அவரின் மனோதைரியத்தை என்னவென்று சொல்லுவது! ம்ம்ம்னம் சரித்திரம் எவ்வளவு புதைக்கப்பட்டிருக்கின்றது! தாங்கள் இதை வெளிக் கொணரவில்லை என்றால் இதைப் பற்றி எல்லாம் யாரும் அறிந்திருக்க முடியாது நண்பரே! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  29. பதில்கள்
    1. குயிலியை எண்ணினாலே பெருமை பொங்குகிறது நண்பரே
      நன்றி

      நீக்கு
  30. நண்பரே புதிய பதிவு எ.எ.எ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதத்திற்கு மன்னிக்கவும் நண்பரே இதோ வருகிறேன்

      நீக்கு
  31. தாமதத்திற்கு மன்னிக்கவும்

    குயிலி அவர்களின் தியாகம் எல்லாம் இன்று தங்களால் தான் தெரிந்து கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
  32. வீரமங்கை குயிலியின் செயல் செயற்கரியது ஐயா...
    வேலு நாச்சியார் தொடர் விறுவிறுப்போடும் வீரத்தோடும்...
    தமிழ்மணத்தில் வாக்கு அளித்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  33. அன்பின் ஜெயக் குமார்

    அருமையான பதிவு - வரலாறு ஆவனப் படுத்தப் பட வேண்டும் - பதிவுகளை நூலாக்குக - நூலினை வெளியிடுக.

    குயிலியின் வீரமும் நாட்டிற்காகச் செய்த தியாகமும் கற்களீல் பொறிக்கப் பட வேண்டும்.

    தங்களின் பதிவுகள் அனைவரையும் கவருகின்றன. தங்களீன் சிறந்த பணீ பாராட்டுக்குரியது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
      அவசியம் நூலாக்கி, அடுத்த பதிவர் திருவிழாவில் வெளியிடுகிறேன் ஐயா

      நீக்கு
  34. குயிலியை ஒரு அபூர்வப் பிறவியாகவே கருதவேண்டியுள்ளது. இத்தகைய குணநலன்கள் நிரம்பியவரைப் பற்றி படிக்கும்போது மனம் கனக்கின்றது.

    பதிலளிநீக்கு
  35. தாமதத்திற்கு மன்னிக்கவும். குயிலி தியாகம் எத்துனைப் பெரியது. மனம் கனக்கிறது. கனத்த மனத்துடன் வருகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குயிலியின் தியாகம் மகத்தானது
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  36. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    குயிலி அவர்களின் தியாகம் அவருடைய நாட்டு பற்றினையும் மன தைரியத்தினையும் வெளிப்படுத்துகிறது. அவரின் தியாகச் செயலுக்கு தலை வணங்குவோம்.

    பதிலளிநீக்கு
  37. உங்கள் சொல்லாட்சியால் காட்சிகள் கண்முன்னே நடப்பது போல் இருக்கின்றன ..................................................உடுவை

    பதிலளிநீக்கு
  38. மனோதைரியம் மிகுந்த குயிலியின் வரலாறு மனதை நெகிழ்வித்தது.

    பதிலளிநீக்கு
  39. மனித வெடிகுண்டுபோலதனைமாய்த்துக்கொண்ட
    வீரத்தாயின் புகழ் வாழ்கவாழ்க எனக்கத்த வேண்டும்போல்
    உள்ளதுசகோ.மெய் சிலிர்க்கிறது

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு