09 ஜனவரி 2015

வேலு நாச்சியார் 8


 அத்தியாயம் 8 முப்பெரும் தேவியர்
    

வேலு நாச்சியாருக்கு ஒரு நிமிடம் என்ன நடந்ததென்றே புரியவில்லை. நனைந்த உடலோடு, கையில் தீ பந்தத்தோடு, குயிலி ஓடியதைப் பார்த்தார். அடுத்த நொடி, பூமியே இரண்டாகப் பிளந்தாற் போல், இடி முழக்கம் தொடர்ந்தது.

     சிவகங்கைக் சீமையே புகை மூட்டத்தால் மூச்சுத் திணறியது.

குயிலி

பெருங்குரலெடுத்துக் கதறினார் வேலு நாச்சியார்.

என்ன காரியம் செய்து விட்டாய் குயிலி.


     குயிலியின் தன்னலமற்ற வீரமும், தியாகமும், வேலு நாச்சியாரைத் தன்னிலை மறக்கச் செய்தன.

   குயிலி, குயிலி என வாய் விட்டு கதறியபடி, ஆயுதக் கிடங்கு இருந்த இடம் நோக்கி ஓடினார்.

            துப்பாக்கிகள், வேல்கள், வாள்கள் என அனைத்து ஆயுதங்களும் கருகிக் கிடந்தன. கருகிக் கிடந்த பொருள்கள் அனைத்தில் இருந்தும் கரும் புகை வெளியேறிக் கொண்டிருந்தது. வெடிக்காத குண்டுகள், ஒன்றிரண்டு, தாமதமாக, திடீர் திடீரென வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன.

      குயிலியின் எலும்புகளைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

       இவ்வுலகின் முதல் மனித வெடிகுண்டு குயிலி.

       தனது தாய் நாட்டிற்காகத் தனது இன்னுயிரையே, தானே முன் வந்து ஈந்த, துறந்த, ஒப்பற்ற தியாகி குயிலி.

       குயிலி உடலின் ஒரு சில பாகங்களாவது  கிடைக்காதா? எனத் தேடிக் கொண்டிருந்த, வேலு நாச்சியாரை, ஒரு துப்பாக்கிக் கொண்டு உரசிச் செல்லவே, சுய நினைவு பெற்றார். குண்டு வந்த திசையை நோக்கினார்.

               ஆங்கிலேயத் தளபதி பான் ஜோர்,  காளயார் கோயிலில் சுட்டது  போலவே, இங்கும் ஒரு தூணின் மறைவில் இருந்து, வேலு நாச்சியாரை நோக்கிச் சுட்டுக் கொண்டிருந்தான்.



  வாளை உயர்த்தி, வெறிக் கூச்சலிட்ட வேலு நாச்சியார், அரண்மனையை நோக்கிப் பாய்ந்தார்.

      தூணில் மறைந்து, மறைந்து, பாய்ந்து பாய்ந்து, முன்னேறி, அனைத்து குண்டுகளையும், செயலிழக்கச் செய்தார்.

      துப்பாக்கியில் இருந்த குண்டுகள் தீர்ந்து விடவே, வேறு வழியின்றி, வாளை உருவினான் பான் ஜோர்.

      தூணின் மறைவில் இருந்து வெளிப்பட்ட, வேலு நாச்சியார் சிரித்தார். காரணம் புரியாது பான் ஜோர் விழித்தான்.

      பான் ஜோர், இந்த, இந்த ஒரு நிமிடத்திற்காகத்தான், இத்தனை ஆண்டுகளாய் காத்திருந்தேன். வா, வா, வாளை உயர்த்தி வா, வந்து போரிடு, வா.

      உன்னைப் போன்ற கோழையைக் கொல்வதற்கு, இரண்டு கரங்களிலும் ஆயுதம் ஏந்திப் போராடினால், அது இந்த ஆயுதங்களை அவமானப் படுத்துவதாகும்.
  
       வா, மறைந்திருந்து என் கணவரைக் கொன்ற கோழையே வா, வாளை உயர்த்தி வா

       வேலு நாச்சியார், வலது கையில் இருந்து வாளை, தூக்கி எறிந்து விட்டு, இடது கை வாளினை சுழற்றத் தொடங்கினார்.

       ஒரு சில நிமிடங்களிலேயே, பான் ஜோரின் வாள், அவன் கையை விட்டுப் பறந்தது. இரு கரங்களையும் உயர்த்தியவாறு, தட்டுத் தடுமாறி, நிற்க இயலாது, தரையில் மல்லாந்து விழுந்தான்.

      வேலு நாச்சியார், பான் ஜோரின் மார்பில், தன் காலை வைத்து அழுத்திக் கொண்டு, இடது கை வாளினை ஓங்கினார்.

     பான் ஜோர், நான் நினைத்தால், இப்பொழுதே, இக்கணமே, உன் குடலை உருவி, மாலையாக அணிந்து கொள்ள முடியும். உன்னைக் கொன்றால், கணவரின் மரணத்திற்காக, வேலு நாச்சியார் பழி தீர்த்துக் கொண்டார், என எதிர்கால உலகம் பேசும்.

     பான் ஜோர், எனக்கு, என்னை விட, என் கணவரை விட, என் குடும்பத்தை விட, என் நாடும், என் நாட்டு மக்களும்தான் முக்கியம். எனவே உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். போ, நாயே பிழைத்துப் போ.

     வேலு நாச்சியாரின் காலில் விழுந்தான் பான் ஜோர்,

      தாயே, இனி எக்காலத்தும், இப் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டேன்.  இது சத்தியம்.

     ஓடி மறைந்தான் பான் ஜோர்.

சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்த
வீரத்தாய் வேலு நாச்சியார் வாழ்க

சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்த
வீரத்தாய் வேலு நாச்சியார் வாழ்க

வாழ்த்து முழக்கங்கள், அரண்மனை எங்கும் எதிரொலித்தன.

வேலு நாச்சியார்,
மீண்டும்
சிவகங்கைச் சீமையின்
மகாராணியானார்.

வேலு நாச்சியாரின் வரலாறு என்பது,
உடையாளின் வரலாறு,       குயிலியின் வரலாறு.

வேலு நாச்சியாரின் வரலாறு என்பது
சாதி, மத, இன உணர்வுகளால்
சற்றும் கறை படியாத மனித நேயத்தின் வரலாறு.

வேலு நாச்சியார்
உடையாள்            குயிலி
என்னும்
முப்பெரும் தேவியரும்
இவ்வுலகு உள்ளவரை போற்றப்பட வேண்டியவர்கள்.
கோயிலில் வைத்து
வணங்கப் பட வேண்டியவர்கள்.

முப்பெருந் தேவியரையும்
போற்றுவோம்       வாழ்த்துவோம்       வணங்குவோம்.









     






        

62 கருத்துகள்:

  1. வீரம் விளைந்த வரலாறு.
    நன்றாகயிருந்தது,
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இவர்களைப்போலானவர்களின் தியாகங்களும்,வீரச்சமர்களும் நம்மை இன்று சுகமாக்கி வைத்திருக்கிறது இம்மண்ணில்/

    பதிலளிநீக்கு
  3. மன்னித்து விட்டதும் சிறப்பு...

    மீண்டும் ஒரு தொடரை தொடருங்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோ !

    நான் விரும்பிப் படித்த அருமையான இத் தொடரைத் தொடர்ந்து படிக்க
    முடியாமல் போய்விட்டது இருப்பினும் ஒன்று விடாமல் முழுவதையும்
    ரசித்துப் படிப்பேன் பின்னர் கருத்தையும் இட்டுச் செல்வேன் இப்போதைக்கு
    தமிழ் மணம் 1வாழ்த்துக்கள் சகோ .

    பதிலளிநீக்கு
  5. வீரத்தை பாராட்டலாம்

    ஆனால் விவேகமில்லாமல்
    இப்படி அற்ப வீண் பெருமைக்கு ஆட்பட்டு
    நச்சுப்பாம்புகளை கொல்லாமல் பல நயவஞ்சக துரோகிகளுக்கு இரக்கம் காட்டி உயிர் பிழைக்க விட்டமையால்தான் நம் நாடு பல் நூறு ஆண்டுகளாக அடிமைப்பட்டு அனைத்தையும் இழந்தோம்.

    இன்னும் நயவஞ்சகமாக நம்மையெல்லாம் ஏமாற்றிக் கொழுத்துக் கொண்டிருக்கிறது இங்கிருந்து விரட்டப்பட்ட கும்பல்கள்

    .நம் நாட்டு மக்கள் பழம் பெருமை பேசி நிகழ் காலத்தை கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்பதே உண்மை.

    அதற்கு அவர்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து ஆதாயம் அடைந்து கொண்டிருக்கும் நயவஞ்சக நரிகளை நம் சமுதாயம் உணர்ந்து கொள்ள இயலாதவாறு தொடர்ந்து மூளை சலவை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதரிசனமான உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழம் பெருமை பேசிப் பேசியே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றோம் ஐயா.
      நாட்டிற்காக நாமென்ன செய்தோம் என்ற உணர்வு குன்றி விட்ட காலம் ஐயா இது.
      சுய நலம் பெரூகிவிட்ட காலம்
      நன்றி ஐயா

      நீக்கு
  6. வீர வரலாறை மறுபடியும் படிக்க,
    தாங்கள் தொகுத்தளித்து வாய்ப்பு
    தந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்த
    வீரத்தாய் வேலு நாச்சியார் வாழ்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேலு நாச்சியார் போற்றுதலுக்கு உரியவர்
      நன்றி ஐயா

      நீக்கு
  8. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    வேலு நாச்சியாரின் வீரத்தை அறிந்து மெய் சிலிர்த்தது.அவர் மன்னித்து விட்டது சரி என்று பகுத்தறிவு கூறினாலும் ஏனோ மனதிற்கு குறையாகவே உள்ளது.ஏன் என்றால் மன்னித்து விடப்படும் சில மிருகங்கள் அதனை ஏதோ விவரம் இல்லாமல் செய்ததாக எண்ணி மீண்டும் பல தவறுகளை அப்பாவிகள் மீது செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. எப்படி இருப்பினும் ’மேன்மக்கள் மேன்மக்களே’ என்பதை வேலு நாச்சியார் நிரூபித்து விட்டார். மிக அற்புதமான பதிவினை பதிவிட்ட உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. வேலு நாச்சியாரின் வரலாறு என்பது -
    மாபெரும் வீரத்தின் வரலாறு!..
    மனித நேயத்தின் வரலாறு!..


    என்றன்றும் அவர்கள் புகழ் வாழ்க!..

    பதிலளிநீக்கு
  10. அருமையான ஒரு தொடராக இந்த வீரவரலாற்றை படிக்க முடிந்தது.
    மீண்டும் வேறு ஒரு வரலாற்றுத்தொடரை தொடங்குங்கள் ஜெயக்குமார் சார்.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா09 ஜனவரி, 2015

    ''...வேலு நாச்சியார்
    உடையாள் குயிலி
    என்னும்
    முப்பெரும் தேவியரும்
    இவ்வுலகு உள்ளவரை போற்றப்பட வேண்டியவர்கள்.
    கோயிலில் வைத்து
    வணங்கப் பட வேண்டியவர்கள்....'''
    Mikka nanry for this post....
    Vetha.Langathilakam.

    பதிலளிநீக்கு
  12. வேலு நாச்சியார் பான் ஜோரை மன்னித்து மனிதருள் மாணிக்கமானார் வாழ்க அவர் புகழ் ஒருபெரும் வரலாற்றை தெரிந்து கொண்டேன் நண்பரே தங்களால் எமது சிறப்பு நன்றியும்
    தமிழ் மண வாக்கும் - 5

    பதிலளிநீக்கு
  13. வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள் ஐயா...
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  14. உங்களின் பணி பாராட்டப்பட வேண்டிய மகத்தான பணி.

    பட்டாபிராமன் ஸாரை ஆமோதிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. அந்தக் காலத்தில் ஆங்கிலேயருடன் நடந்த போர்களில் வெடிகுண்டுக்கு எதிராக வாள் என்பதே ஒரு சமமில்லாத handicap போர் தானே. அன்று போரில் நாச்சியார் வென்றது ஒரு சிறப்பான செய்தி.

    பதிலளிநீக்கு
  16. வீரம் விளைவிக்கும் அருமையான தொடர்! சிறப்பாக நிறைவு பெற்றது! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்த
    வீரத்தாய் வேலு நாச்சியார்
    "பான் ஜோர்"
    எனக்கு, என்னை விட, என் கணவரை விட,
    என் குடும்பத்தை விட, என் நாடும்,
    என் நாட்டு மக்களும்தான் முக்கியம்.
    எனவே உன்னைக் கொல்லாமல் விடுகிறேன்.
    போ, நாயே பிழைத்துப் போ.
    என்று சொன்னத்து மன்னிக்கும் மனப்பான்மை
    மறவனுக்கும்/மறத்திக்கும் உண்டு என்பதை
    வரலாற்று பதிவாக்கி சென்றுள்ளார்.
    அரும்பெரும் படைப்பு! போற்றுகிறேன்! நண்பரே!
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  18. என் தாயவளின் சரித்திரம் படிக்க படிக்க தீராதது..நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  19. அருமை அருமை. ஒரு வீரகாவியம் படைத்தளித்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  20. போராட்டக்களத்திலிருந்து மீண்டதுபோல உள்ளது உங்களின் பதிவு. இப்பதிவின் மூலமாக பெரும் சாதனை செய்துள்ளீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  21. சரியான முடிவு இன்னபிற விசயங்களை முழுதும் எழுதி ஒரு நூல்வடிவில் வெளியிட்டு பின்னர் பதிவில் தருக..
    த ம ++

    பதிலளிநீக்கு
  22. எதிர் பார்த்ததற்கு மாறாக தொடரை சீக்கிரமே முடித்து விட்டாற் போலத் தெரிகிறது. வரலாற்று உண்மைகளை ஒரு குறு நாவல் போன்று மக்களிடம் சுவாரஸ்யமாக சொல்லியதற்கு நன்றி.
    த.ம.9

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் ஐயா!

    வீரகாவியம் விரிந்தது காட்சியாகத் தங்களின் எழுத்தினால்..!!
    அற்புதம் ஐயா!

    //இவ்வுலகின் முதல் மனித வெடிகுண்டு குயிலி.

    தனது தாய் நாட்டிற்காகத் தனது இன்னுயிரையே, தானே முன் வந்து ஈந்த, துறந்த, ஒப்பற்ற தியாகி குயிலி....//

    என்னை என் நாட்டிற்கு இட்டுச் சென்ற வரிகள்!..
    நிகரில்லா மகத்தான கொடை அது!..

    வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  24. //பான் ஜோர், நான் நினைத்தால், இப்பொழுதே, இக்கணமே, உன் குடலை உருவி, மாலையாக அணிந்து கொள்ள முடியும். உன்னைக் கொன்றால், கணவரின் மரணத்திற்காக, வேலு நாச்சியார் பழி தீர்த்துக் கொண்டார், என எதிர்கால உலகம் பேசும்.

    பான் ஜோர், எனக்கு, என்னை விட, என் கணவரை விட, என் குடும்பத்தை விட, என் நாடும், என் நாட்டு மக்களும்தான் முக்கியம். எனவே உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். போ, நாயே பிழைத்துப் போ.//

    வேலு நாச்சியார் வாழ்க! இவ்வையகம் தழைத்தோங்கும் வரை வாழ்க! அவர் நாமம்! அவர் வீரம் பேசப்படவேண்டும். புப்ப்ருந்தேவியரின் வீரமும் பேசப்பட வேண்டும். பேசப்படும்!!!! இத்தகைய அருமையான ஒரு வீரத்தாயைப் பற்றி / தேவியரைப் பற்றி அறியத்தந்தமைக்கு தங்களுக்கு மிக்க நன்றி! நண்பரே! வாழ்த்துக்கள்!

    அருமையான தொடர்! அருமையான அழகான எழுத்துவடிவில்!!!! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி நண்பரே
      நம் நாடு மறந்த எத்துனையோ சுதந்திரப் போராட்டத் தியாகிகளுள் வேலு நாச்சியாரும் ஒருவ்ர்
      முப்பெருந்தேவியரையும் போற்றுவோம்
      புகழ் வாழ்க வாழ்கவென்று வாழ்த்துவோம்

      நீக்கு
  25. வேலு நாச்சியாா் பற்றிய அரிய கருத்துக்களை தெரிந்துக் கொண்டோம்.
    வாழ்த்துக்கள்
    நன்றிகள் பல
    தொடரட்டும் உங்கள் தமிழ் பணி

    பதிலளிநீக்கு
  26. இத்தொடரின் மூல பல அறிய தகவல்களை அறிந்தேன் ,மிக்க நன்றி !
    த ம +1

    பதிலளிநீக்கு
  27. தாமதமான வருகைக்கு மன்னிக்கவும். ஊரில் இல்லை. குயிலி பற்றி இன்றே அறிந்தேன். அரிய தகவல்களைக் கொண்ட பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதமானால் என்ன சகோதரியாரே
      தங்களின் வருகை எனக்குப் பெரு மகிழ்வு அளிக்கின்றது
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  28. மிக அருமையான வரலாற்றுத் தொகுப்பு ...வீரக் காவியம் !!
    மீண்டும் ஒரு முறை படிக்க தூண்டுகிறது.

    தங்களின் சீரிய பணிக்கு அன்புடன் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கு நன்றி சகோதரியாரே
      தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்
      நன்றி

      நீக்கு
  29. மாபெரும் வரலாற்று உண்மையை உலகுக்கு காட்டியுள்ளீர்கள். நன்றிகள்.




    பதிலளிநீக்கு
  30. தமிழச்சி அல்லவா ? பிழைத்துக்கொண்டான்.
    நன்றிசகோ ஒவ்வொருவாரமும் எதிர்பார்ப்போடு
    இருந்தது.

    பதிலளிநீக்கு
  31. வணக்கம்
    ஐயா.

    வேலு நாச்சியாரின் செயல் குயிலியின் செயல் எல்லாம் எம்மை ஒரு கனம் சிந்திக்ககை்கிறது.. தாங்கள் எழுதிய தொடர் நன்றாக உள்ளது.... படிக்க படிக்க அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனை உணர்வுடன் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள்.
    த.ம13

    புதிதாக ஒரு தொடர் தொடருங்கள் ஐயா. காத்திருக்கேன்.... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  32. வீரமும், தீரமும், அரசியல் நுட்பமும், பலமொழிகள் அறிந்த வேலுநாச்சியாரை மீண்டும் நினைவலைகளில் கொண்டு வந்தது பெரும் மனநிறைவை தந்தது.
    வாழிய வீர மங்கை வேலுநாச்சியார்.
    இதைப் போன்ற எழுச்சி மிக்க தொடர்களை தங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்!
    தொடருக்கு மிக்க நன்றி,
    மகிழ்வுடன்,
    மும்பை சரவணன்
    (தாமதமாக கமெண்ட் போடுகிறேன் மன்னிக்கவும்.)

    பதிலளிநீக்கு
  33. இப்பதிவைப் படிக்கத் தாமதமாகிவிட்டது அண்ணா..
    வேலுநாச்சியார் வீரமங்கை! அவர் வரலாற்றைத் தொடராகத் தந்ததற்கு நன்றி..முடிந்து விட்டதே என்று இருக்கிறது.. :)
    த.ம.+1

    பதிலளிநீக்கு
  34. சரித்திரப்புகழ் வாய்ந்த வேலு நாச்சியார் அவர்களின் வீர வரலாற்றை மிக அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள் ஐயா... பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு