06 ஜூன் 2016

அசல் மனிதர்



சட்டசபை உறுப்பினர்கள் சொல்கிற சிபாரிசுகளைப் புறக்கணித்து விடுங்கள். மக்கள் குறைகளைக் கேட்டு, அந்தக் குறைகளை நிவர்த்திக்க வேண்டும். மனசாட்சிக்கு எது சரியோ அதை மட்டும் செய்யுங்கள். தூய்மையான நிர்வாகத்துக்கு நீங்கள்தான் பொறுப்பாவீர்கள்.

எம்.எல்ஏ., தலையிட்டார், மந்திரி சொன்னார், அதற்காகத்தான் இப்படி உத்தரவு பிறப்பித்தேன் என்று சொல்லக் கூடாது.


     சுற்றறிக்கை

     இப்படி ஒரு சுற்றறிக்கை மாநிலம் முழுவதும் பறந்தது.

    சுற்றறிக்கையைப் பெற்றவர்கள் அனைவரும் ஒரு கணம் தம்மையே மறந்துதான் போனார்கள்.

     இப்படி ஒரு சுற்றறிக்கை இந்திய வரலாற்றிலேயே, இதுவரை வந்தது இல்லையே என வியந்துதான் போனார்கள்.

     இந்த சுற்றறிக்கையினைப் பெற்றவர்கள் யார், யார் தெரியுமா?

மாவட்ட ஆட்சியர்கள்,
மாவட்ட காவல்துறை அலுவலர்கள்
தலைமைச் செயலக அலுவலர்கள்

     எனன? என்ன? இவர்களுக்கா?

     நம்ம முடியவில்லை அல்லவா?

     இவர்களுக்கு யாரால் இது போன்ற சுற்றறிக்கையை அனுப்ப இயலும்.

    ஒரு மாநில முதல்வர் அனுப்பினார்

    என்னது, மாநில முதல்வரா?

    ஆம்,

    எந்த மாநிலத்தின் முதல்வர்? கேள்வி எழுகிறதல்லவா?

    நம் தமிழகத்தின் முதல்வர்

    என்ன, என்ன? நம் தமிழகத்தின் முதல்வரா?

    ஆம். தமிழகத்தின் முதல்வரேதான்.

     பிறகு என்ன நடந்தது தெரியுமா?

    சட்ட மன்ற உறுப்பினர்கள் எல்லாம் கொதித்து எழுந்தார்கள்.

இது எங்களுக்குப் பெரும் தலை குனிவு
இது எங்களின் தன்மானத்திற்கு இழுக்கு
அறிக்கையினைத் திருப்பப் பெறுக

முதலில் வேண்டுகோள் வைத்தனர்

முதல்வரோ அசைந்து கொடுக்கவில்லை.

பின் கட்டாயப் படுத்தினர்

சுற்றறிக்கையினைத் திரும்பப் பெற மாட்டேன்.
வேண்டுமானால் நீங்கள், வேறு ஒரு தலைவரை
தமிழக முதல்வராக
தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

உறுதியாகக் கூறி விட்டார்.

விடுவார்களா சட்டமன்ற உறுப்பினர்கள்.

1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் நாள்
முதலமைச்சர்
பதவி விலகினார்.

இப்பேர்ப்பட்ட நேர்மையான மனிதர்,
நேர்மையான மாமனிதர் யார் தெரியுமா?

இம்மாகாணம் எத்தனையோ தலைவர்களையும், முதலமைச்சர்களையும் கண்டுவிட்டது. எத்தனையோ பேர் மந்திரி பதவிகளை விட்டு நீங்கியிருக்கின்றனர், நீக்கப் பட்டிருக்கின்றனர்.

ஆனாலும் இவரது பதவியிழப்பினால், திராவிடப் பொது மக்கள் கவலைப் படுகிற அளவுக்கு, இதுகாறும் வேறு எந்த மந்திரிக்காகவும் மக்கள் கவலைப் பட்டதேயில்லை.

மந்திரிப் பதவி என்பது நிரந்தரமல்ல. இருப்பினும், இவர் பதவியிழப்பால் மட்டும், ஏதோ ஒரு பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக திராவிடர்கள் தங்களை அறியாமலே உணர்கிறார்களே,

காரணம் என்ன தெரியுமா?

அவர் தன்மானமே உருவானர்

அசல் மனிதர்

ஆதலால் கிராமம் நோக்கிப் போகிறார்

போய் வாருங்கள்

நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்

நேர்மையற்ற உலகம் இது.

நாணயத்திற்கு இந்த உலகில் இடமில்லை, அதுவும் இந்த நாட்டில், சிறிது கூட இடமேயில்லை.

உங்களை பலி கொடுத்த தமிழன், திராவிடன்
இன்று கடுகளவாவது அதிக அறிவு பெற்றிருப்பான்.
இது உறுதி

போய் வாருங்கள்

போர்க்களத்தில் முதுகுப் புறமாய் குத்தப்பட்ட வீரர் தாங்கள்,
காயம் மார்பில் அல்ல

பரவாயில்லை

இதுதான் உலகம்

நன்றி கெட்ட உலகம்

போய் வாருங்கள்

     நண்பர்களே, படிக்கப் படிக்க மேனி சிலிர்க்கிறதல்லவா?

    

முதல்வர் பதவியில் இருந்து, இம் மாமனிதர், பதவி விலகிய, 6.4.1949 இல், வெளி வந்த, விடுதலை நாளிதழின் தலையங்கம்தான் இது.

நாம் இழந்த இப்பேர்ப்பட்ட முதல்வர்
யார் தெரியுமா?



ஓ. பி. ஆர்.,

ஓமந்தூரார்

ஓமந்தூரார், பெரிய வளைவு ராமசாமி ரெட்டியார்.




34 கருத்துகள்:

  1. நம் இழப்பு மிகப் பெரியது.. காலங்காலமாய் தவறான மனிதர்களையே கொண்டாடுகிறோம்

    பதிலளிநீக்கு
  2. நம் இழப்பு மிகப் பெரியது.. காலங்காலமாய் தவறான மனிதர்களையே கொண்டாடுகிறோம்

    பதிலளிநீக்கு
  3. அறியவேண்டிய தகவல்இவர்களைப் பற்றி பல செய்திகள் அறியப்படாமல் உள்ளது. இவர்களை சரித்திரத்தில் புறக்கணிக்கப் பட்டது ஏனோ தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  4. The younger generation won't believe such a noble person lived on this land

    பதிலளிநீக்கு
  5. The younger generation won't believe such a noble person lived on this land

    பதிலளிநீக்கு
  6. இப்படிபட்டவர் இந்த காலத்தில் தேர்தலில் நின்று இருந்தால் டெபாஸிட் கூட வாங்கி இருக்க மாட்டார் என்பதுதான் உண்மை. இவரை பற்றிய செய்திகள் ம்றைக்கப்பட்டுவிட்டனவா இதுவரை நான் அறியாத செய்தி பகிர்விற்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவரைப் பற்றி நம் நண்பர் நம்பள்கி பதிவு எழுதியிருந்தால் அப்போதுதான் தெரிந்து கொண்டோம் பல தகவல்கள்.

      நீக்கு
  7. இந்த செய்தி நானும் அறிவேன்.

    ஒமாந்துரார் அவர்கள் வாழ்ந்து காட்டிய விதத்தை
    அவர் சரித்திரத்தை, பல்வேறு நிகழ்வுகளையும்
    நீங்கள் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

    தக்கார் தகவிலர் என்பது அவரவர்
    எச்சத்தாற் காணப்படும்

    அவர்கள் விட்டு விட்டுப்போன போற்றத்தக்க வாழ்வினில்
    ஒரு சிறு துளியாவது இன்றைய அரசியல் வாதிகளிடம் (எல்லாக் கட்சியையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்) இல்லை. இருக்கவும் போவதில்லை.

    இது நமது தலை எழுத்து.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  8. இப்பாவத்தின் செயலை நாம் இப்போது அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம் நல்லதொரு மனிதரைப்பற்றி செய்தி தந்தமைக்கு நன்றி நண்பரே
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  9. அருமையான மனிதர் பற்றி நல்லதொரு பதிவு.

    பதிலளிநீக்கு
  10. இந்த அற்புதமான பதிவு சமீபத்திய தேர்தலுக்கு முன் வந்திருக்கலாம்.
    ஆனாலும் வாழ்த்துகள் நண்பர் ஜெயக்குமார் அவர்களே.
    நமது நாட்டின் வரலாறு பல விதங்களிலும் மறைக்கப்பட்டும் திருத்தப்பட்டும் ,திருடப்பட்டும் இன்றைய இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
    பணம்தான் வாழ்க்கையின் முதல் தேவை என்று பாடம் புகட்டப்பட்ட மக்களுக்கு மனம் தான் அதாவது நல்ல சிந்தனை தான் முதல் தேவை என்று எப்படி சொல்வது.
    " நரகலை"சாப்பிடாதே என்ற ஈ.வே.ரா விடம் "வேறு எதை சாப்பிடுவது"என்று கேட்ட மக்கள் தானே.
    நல்ல பதிவு நண்பரே.

    பதிலளிநீக்கு
  11. நல்ல பகிர்வு. இந்தச் செய்தியைக் கேள்விப் பட்டிருந்தாலும் இவ்வளவு விரிவாகத் தெரியாது. இப்படிப் பட்ட மனிதர்களும் இருந்திருக்கிறார்கள் என்பது கொஞ்சம் ஆறுதலாகவும் உள்ளது.

    பதிலளிநீக்கு
  12. சென்னையில் ,ஓமந்தூரார் தோட்டம் இன்றும்கூட உள்ளதே !நல்ல மனிதரின் புகழ் நீடுழி வாழும் !

    பதிலளிநீக்கு
  13. அறியாத செய்தி தகவலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  14. நல் உள்ளங்கள் இருக்கிற வரை நாடு செழிக்கும்/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய நிலை தலைகீழ் என்பது கண்கூடு,

      நீக்கு
  15. மா மனிதர்கள் இருந்த நாடு. இப்போதும் இருக்கிறார்கள் பல மாமனிதர்கள். ஆனால், மக்களுக்குத்தான் தெரியவில்லை யாரை உயர்த்திப்பிடிக்க வேண்டும், யாரைப் புறக்கணிக்க வேண்டும் என்று. வெறும் கல்வி அறிவின்மை என்ற சொல்லில் இதை அடக்கமுடியாது. நல்லவர்களை எள்ளி நகையாடுவதில் படித்தவர்களுக்குத்தான் பெரிய பங்கு உள்ளது. மக்களைப் பொறுத்தே தலைவர்கள் வருகிறார்கள் என்பது மேலே உள்ள இடுகையைப் படித்தாலே தெரிந்துகொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  16. மிகப் பெரிய இழப்பு. இப்படி உள்ள தலைவர்களை விரைவில் ஓரம் கட்டி விடுகிறார்கள்.....

    பதிலளிநீக்கு
  17. ஒமந்துரார் பற்றி ஏராளமான தகவல்களை கேட்டுக்கொண்டே இருக்கிறேன். பலருக்கும் இப்படி ஒரு முதல்வர் இருந்ததே தெரியவில்லை என்பதுதான் வேதனை.
    அறிந்துகொள்ள வேண்டிய தகவல் பதிவுக்கு நன்றி நண்பரே!
    த ம 6

    பதிலளிநீக்கு
  18. அருமையான முதல்வர். நமக்குக் கொடுத்துவைத்தது அவ்வளவுதான். நன்றி சகோ பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  19. இப்படி அரசியல் வாதிகள் இருந்து விட்டால் நாடும் மக்களும் நன்றாக வந்து விடுவார்களே...

    அரிய அருமையான தகவலுகுக்கு நன்றி........உடுவை

    பதிலளிநீக்கு
  20. நாம் அறிய மறந்தவர்களை நீங்கள் அடையாளம் காட்டி மென்மேலும் செய்திகளைக் கூறி அவர்களுக்கு பெருமை சேர்ப்பதோடு எங்களுக்கு தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பும் தருகின்றீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  21. இப்படிப்பட்ட தலைவர்கள் இன்றி
    தமிழகம் வாடுதிங்கே - பாரும்
    தமிழக மக்கள் உள்ளத்தில்
    மாற்றம் வந்தால் தானே
    இப்படிப்பட்ட தலைவர்களை ஈன்றெடுக்கலாம்!

    தங்கள் பதிவுகளாலே வெளிப்படும்
    வழிகாட்டல்கள் எல்லாமே
    மக்கள் சிந்தனைக்கு எட்டவேணும்!

    தொடர்ந்தும்
    தங்கள் பதிவுகளின் வாசகனாக...

    பதிலளிநீக்கு
  22. எப்பேர்ப்பட்ட மாமனிதர்!

    பதிலளிநீக்கு
  23. அறியாத செய்தி. ஆசிரியர் கரந்தையாருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. உன்னதமான தலைவர்.
    அவரைப்பற்றி அறிய தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. ஓமந்தூரார் போன்ற தலைவர்கள் இப்போது இல்லையே என்று ஏங்கத் தோன்றுகிறது! அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  26. நல்லவர்கள் ஆட்சியினை நம்ம தமிழர்கள் என்றும் விரும்புவது இல்லையே ஊழல் செய்யணும் ஓகோ என்று வாழணும் என்றால் ஆட்சிப் பொறுப்பில் அயோக்கியன்தான் இருக்கணும் அதுவே நம்மவர் ஆசையும் !

    மிகநல்லவர் ஒருவரை நினைவு படுத்தியமைக்கு நன்றி கரந்தை மைந்தரே வாழ்க வளத்துடன்
    தம +1

    பதிலளிநீக்கு
  27. அருமையான விஷயங்களை அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  28. அறியாத செய்தி தகவலுக்கு நன்றி
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  29. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    மாமனிதர் ஓமாந்தூரார் போன்றோரை நாம் எந்த வெகுசன பத்திரிக்கையிலோ ஊடகங்களிலோ வெளிப்படுத்துவதில்லை. எனவே இவரைப் போன்று வாழ வேண்டும் என்று எண்ணுவோர் மிகச் சிலரே. ஆனால் மோசமான வழியில் செல்வம் திரட்டி மிக மோசமாக வாழ்க்கை நடத்தும் கொடியோரை அனைத்து ஊடகங்களும் வெளிப்படுத்துவதால் அவர்கள் வழி செல்வோர் அதிகரித்து வருகின்றனர். கல்வியறிவு என்பது மனித மனத்தினை பக்குவம் செய்யக்கூடியதாக அமைந்து அவன் சமூகத்திற்கு சேவை செய்பவனாக மாற்ற வேண்டும். ஆனால் நடப்பது என்ன என்பதை நாம் அறிவோம். சுயநலமிக்கவர்களாகவும் தப்பினை துணிந்து செய்பவர்களாகவும் இருப்பவர்களில் பெரும்பாலானோர் கற்றவர்கள்தான் என்பதை அறியும் போது வேதனைதான் மிஞ்சுகிறது. நல்லோரை அனைவரும் அடிக்கடி நினைவூட்டி நாம் கொண்டாடுவோம் என்று சபதம் ஏற்போம்.

    பதிலளிநீக்கு
  30. நண்பரே இவரைப் பற்றி நண்பர் நம்பள்கி அவரது தளத்தில் பல மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். அப்போதுதான் நாங்களும் இவரைப் பற்றித் தெரிந்து கொண்டோம் இப்போது மீண்டும் உங்கள் பதிவிலிருந்து அறிகின்றோம். மாமனிதர் ஆனால் பலருக்கும் இவரைப் பற்றித் தெரியவில்லை என்பது மிகவும் வேதனை. மிக்க நன்றி நண்பரே இவரைப் பற்றிப் பதிந்ததற்கு.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு