05 ஜூலை 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 2



அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
என்று பாடுவார் ஔவையார். அந்த அரிதினும் அரிதான மானிடப் பிறவியில், பிறவிக் குறைபாடுடன் பிறந்தவன் நான்.

     விழியிருந்தும் பயனில்லாக் குழந்தையாய் பிறந்தேன். பெற்றோர் இருவரும், என் விழிகளாய் இருந்து என்னைக் காத்தனர்.

     தமிழ் வழியில் படித்தேன். பார்வை அற்றோருக்கானப் பள்ளியில் படித்தேன். வளர்ந்தேன், தன்னம்பிக்கையோடு வளர்ந்தேன்.

    விழி இல்லா விட்டால் என்ன, வழி இல்லாமலா போய்விடும்.


          ஐ.ஏ.எஸ்., ஆசை, மோகம் தகர்ந்தபோது, யோசித்தேன், இனி என்ன செய்யலாம்.

    ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறையில், எம்.ஃ.பில்., ஆய்வுப் படிப்பில் சேர்ந்தேன்.

      ஆறே மாதத்தில் JRF  (junior Research Fellowship)  தேர்வில் வெற்றி பெற்றேன்.

       அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். இனி மூன்று வருடங்களுக்குக் கவலை இல்லை. கல்வி உதவித் தொகை தொடர்ந்து வரும்.

         தொடர்ந்தும் வந்தது.

            பெற்றோரின் உதவியின்றி, என் செலவினங்களை நானே பார்த்துக் கொண்டேன் .இதுமட்டுமல்ல, எனக்குத் தேவையான தொலைபேசி, கணினி மற்றும் இணைய வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டேன்.

       மூன்று வருடங்கள் சென்றதே தெரியவில்லை. ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டது.

       எம்.ஃ.பில்., படிப்பிற்கான ஆய்வுக் கட்டுரையினைச் சமர்ப்பித்தேன்.

       இனி அடுத்து முனைவர் பட்டத்திற்கானப் படிப்புதான்.

       
முனைவர் படிப்பில் சேர சில நுழைவுத் தேர்வுகளை எழுதியாக வேண்டும். எனவே TOFEL மற்றும் GRE தேர்வுகளை எழுதினேன். தேர்வு எழுதும் பொழுதே தெரிந்து விட்டது. வெற்றி உறுதி என்பது.

        சற்றேரக்குறைய எட்டு பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பித்தேன். விண்ணப்பச் செலவு மட்டுமே ரூ.13,000 ஐத் தாண்டிவிட்டது.

       பல மாத காத்திருப்பிற்குப் பின், ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு பல்கலைக் கழகத்தில் இருந்தும் கடிதங்கள் வரத் தொடங்கின. அனைத்தும் ஒரே மாதிரியானச் செய்திகளையேச் சுமந்து வந்தன.

முனைவர் ஆய்வுப் படிப்பிற்குத் தாங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

                                                                                                                                          தொடர்ந்து பேசுவேன்




28 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நேற்று தமிழ்மணப் பட்டை கண்ணிலேயே படவில்லை. அதனால் இன்று வந்து வாக்களித்தேன். கில்லர்ஜீ தம 2 என்று போட்டிருந்ததை பார்த்து வந்தேன்!!!

      நீக்கு
  2. அருமையாய் எழுதி வருகிறீர்கள். தொடர்ந்து படிக்கிறேன்.....

    பதிலளிநீக்கு
  3. காரணம் அறிய தொடர்ந்து வருகிறேன் நண்பரே
    த.ம. 2

    பதிலளிநீக்கு
  4. மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. தொடர்கிறோம் நண்பரே இன்னும் தெரிந்து கொள்ள

    பதிலளிநீக்கு
  6. வெற்றிவேல் முருகன் அவர்களின் வெற்றி மனிதனின் மகத்தான சக்தியை வெளிப்படுத்தும் ஒரு ஆவணம்.இது நூலாக வரும்போது லட்சக்கணக்கில் பிரின்ட் செய்து தமிழகத்தின் எல்லாப் பள்ளி,கல்லூரிகளுக்கும் இலவசமாக வழங்கப்படவேண்டும்.
    இப்பொழுது முதலே இதற்கான நிதி திரட்ட ஒரு குழுவும்,உறுப்பினர்களையும் ஏற்பாடு செய்யலாம்.
    ஜெயக்குமார்,தாங்களே முன்னிற்கலாம்

    பதிலளிநீக்கு
  7. அருமையான தொடர்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  8. மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  9. உங்களுடன் தொடர்ந்து நாங்களும் வருகிறோம்.

    பதிலளிநீக்கு
  10. பார்வை அற்றவர்களுக்காக ப்ரெயில் முறை மூலம் தானே தொடர்புகள் எல்லாம்

    பதிலளிநீக்கு
  11. அருமையான தொடர். முன்பு இவர்களை பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறீர்கள் தானே?

    பதிலளிநீக்கு
  12. மிக அருமை.தொடருங்கள் தொடர்கிறோம்.நன்றி.

    பதிலளிநீக்கு
  13. மிக அருமை.தொடருங்கள் தொடர்கிறோம்.நன்றி.

    பதிலளிநீக்கு
  14. தொடருங்கள் ஜெயக்குமார். உங்களின் எழுத்து ஆழமானது மனத்தின் ஆழம் வரை ஊடுருவுகிறது. தொடர்ந்த வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. ஆழ்மனம் பதியும் வரிகள். தொடருங்கள். வெற்றிவேலன் வெற்றிபெறட்டும்.

    பதிலளிநீக்கு
  16. ஆழமான விஷயம்
    உங்கள் அற்புதமான எழுத்தில்...
    படித்து மனம் கசிந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. விழியும் இருந்து வழியும் இருந்தவர்களை விட
    வெற்றிவேல் முருகன் சாதித்தது நிறையவே,,/
    இனி நிறைய சாதிக்கவும் பிரியப்படுகிறேன்,,,/

    பதிலளிநீக்கு
  18. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    திரு. வெற்றிவேல் முருகன் அவர்களின் விடா முயற்சியினையும் கடும் உழைப்பினையும் நினைக்கும் பொழுது நம்மையறியாமல் ஒரு ஊக்கம் பிறக்கிறது. அவரையும் அவர் தொடரையும் தொடர்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  19. விட்டுப்போன இப்பதிவை இப்போதுதான் படித்தேன். தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம்
    ஐயா

    தொடருகிறேன் ஐயா....அடுத்தது என்னவென்று எதிர்பார்க்கிறேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு