இதோ இந்தச் சுரங்க விஹாரத்தின்
சுவர்களிலே கூட, வர்ணச் சித்திரங்களைக் காண்கிறோம். உமக்குக் கட்டாம் இந்த ரகசியம்
தெரிந்துதான் இருக்க வேணடும்.
அதை உடனே சொன்னீரானால், உம்மை
உயிரோடு விடுகிறேன், இல்லாவிட்டால், உமது இஷ்ட தெய்வத்தை, உம்மைப் போன்ற கிராதகனுக்குத்,
தெய்வம் என்று ஒன்று இருந்தால், அந்தத் தெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளும்.
