19 ஏப்ரல் 2024

வணங்குகிறேன் தாயே

 


     இந்நாள்.

     ஏப்ரல் திங்கள் 19 ஆம் நாள்.

     என் நெஞ்சில் நிரந்தரமாய் நிலைத்துவிட்ட கருப்பு நாள்.

     நீக்க இயலாத, எவ்வளவுதான் முயன்றாலும், மறக்க இயலாத, வடுவாய் பதிந்துவிட்ட நாள்.

     என் தாய், தன் இறுதி மூச்சை சுவாசித்த நாள்.

     எங்களையெல்லாம் விட்டுவிட்டு, மீளாத் துயிலில் மூழ்கிய நாள்.

  என் தாயின் மறைவைத் தொடர்ந்து நிகழந்த நிகழ்வுகள், ஒரு பெரும் தழும்யை, என் இதயத்துள் புதைத்த நாள்.

     காலம் அதன் போக்கில், நகர்ந்து கொண்டே இருக்கிறது.

     துயரத்தை, நீங்கா நினைவு என்னும் ஆணியில் அடித்து, உள்ளத்தின் உள் சுவற்றில், பதியவைத்துப் பறந்து கொண்டே இருக்கிறது.

     மகிழ்வின் உச்சியில் இருக்கும்பொழுது கூட, திடீரெனச் சுழன்று எழும் ஒரு சூறாவளி, தாங்க இயலாத சோகத்தைப் பெரும் வேதனையினை இதயத்தின், அடி ஆழத்தில் கொட்டி, கண்ணாமூச்சு விளையாடுகிறது.

     அறுபது ஆண்டுகளைத் தொட்டபிறகும், வாழ்வியலை, மனித குணத்தைப் புரிந்து கொள்வதில், தொடக்கக் கல்வியைக் கூடத் தாண்டாமல் நிற்கிறேன் என்பது புரிகிறது.

     கற்றுத் தருவதுதானே வாழ்க்கை.

     அறுபது வயதில் கற்கத் தொடங்கி இருக்கிறேன்.

     என் தாய்க்கு என் அன்பு வணக்கங்கள்.