19 ஆகஸ்ட் 2017

குண்டாறுஅது ஒரு கரடு முரடான மலைப் பாதை.

     பத்து முதல் அதிக பட்டசமாய் 15 அடி அகலமே உள்ள மலைப் பாதை.

     வளைந்து, வளைந்து மெல் நோக்கிச் செல்லும் பாதை.

     வழியெங்கும் சிறியதும், பெரியதுமான கற்கள், பாறைகள்.

     நடந்து செல்வது என்பதே சற்று கடினமான செயல்தான்.

12 ஆகஸ்ட் 2017

கீழடி
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள, பெரியார் பீட பூமியில் உருவாகி, மெல்லக் கீழிறங்கி, வடகிழக்காய் பாய்ந்து, வடக்கே பழநிக் குன்றுகளாளும், தெற்கே வருசநாடு குன்றுகளாளும், அரண் போல் காக்கப்படும், கம்பம் பள்ளத்தாக்கை அடைகிறது.

     பின் தென் கிழக்காய் திரும்பி, திண்டுக்கல், மதுரை மாநகர், சிவகங்கை வழியாக, இராமநாதபுரம் மாவட்டத்துள் நுழைந்து, வங்காள விரிகுடாவின், பாக் நீரிணைப்பில் கலந்து, தன் பயணத்தை நிறைவு செய்கிறது, இந்தப் பெரு நதி.

06 ஆகஸ்ட் 2017

பண்பெனப்படுவது     
      ஆண்டு 2008.

      செப்டம்பர் மாதம்.

      அகமதாபாத்

      இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்

      I.I.M
 
     எம்.பி.ஏ., மாணவர்களுக்குப் பாடம் நடத்த, ஒரு புதுப் பேராசிரியர், வருகைப் பேராசிரியர் (Visiting Professor), பெரும் பதவி வகித்தவர், பணிக் காலம் முடிவடைந்த நிலையில், கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் நடத்த, வர இருக்கிறார் என்ற செய்தி அறிந்து வளாகமே பரபரப்பில் மூழ்கியது.

31 ஜூலை 2017

விட மாட்டேன்
     ஆண்டு 1974.

     சூலை மாதம்.19 ஆம் நாள்.

    பென்டோன்வில்லி சிறைச்சாலை, இலண்டன்.

    சூரியன் உதித்த நொடியில் இருந்தே, சிறைச்சாலையில் பரபரப்பு.

    24 வருடங்களுக்கு முந்தையப் பதிவேடுகள், அலசி ஆராயப் பட்டன.

    பதிவேடுகளின் அடிப்படையில் இடம் உறுதி செய்யப் பட்டது.

    இடமா, என்ன இடம்?

    புதைக்கப் பட்ட இடம்?

24 ஜூலை 2017

நல்லதொரு குடும்பம்கரந்தை மண்
கந்தக மண்
தமிழுணர்வு வெப்பமாகத்
தகிக்கின்ற மண்
என்று முழங்குவார் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள்.

      தமிழவேள் உமாமகேசுவரனார் தமிழ் வேள்வி நடத்திய, புண்ணிய பூமியில் இருந்து, தமிழ்த் தலமாம் கரந்தையில் இருந்து, புத்தம் புது வித்தாய், மெல்ல வேர் விட்டு, முளைத்து, தழைத்து, கிளைத்து மேலெழும்பி இருக்கிறார், நண்பர் கே.எஸ்.வேலு.

15 ஜூலை 2017

நாகையில் ஒரு உலக அதிசயம்
     ஆண்டு 2004.

     இந்தோனேசியா

     சுமத்ரா தீவுகள்

     டிசம்பர் மாதம் 26 ஆம் நாள்.

     ஞாயிற்றுக் கிழமை, காலை மணி 6.29

     ஒரு நிமிடத்திற்கு முன்பு வரை, அமைதியாய் காட்சியளித்த, கடலுக்கு அடியில், திடீரென்று ஒரு கொந்தளிப்பு.

08 ஜூலை 2017

எழுத்தை சுவாசித்தவர்


  
     ஆண்டு 1954.

     சென்னை, அரசு பொது மருத்துவமனை.

     படுத்தப் படுக்கையாய் கிடக்கிறார் அவர்.

     இனி மீண்டு எழுந்து வருவது கடினம் என மருத்துவர்களுக்குப் புரிந்து விட்டது.

30 ஜூன் 2017

கதிரேசன்       ஆண்டு 1982.

       ஹைதராபாத்.

       மூத்த விஞ்ஞானி அவர்.

      அரசால் ஒதுக்கப்பட்ட விடுதியில் தங்கியபடியே பணியாற்றி வந்தார்.

      தினமும் காலையில் விடுதியில் இருந்து புறப்பட்டு, பணி நடைபெறும் தளத்திற்குச் செல்வார்.

24 ஜூன் 2017

தலை நிமிர்ந்த தமிழ்

சுவாமி விபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்
முன்னோட்டம்


தலை நிமிர்ந்த தமிழ்


     ஆண்டு 1872.

     ஆதீனத்தின் உணவுக் கூடம்.

     பிற்பகல் மணி 1.00

     பணியாளர்கள் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

     இன்னும் சிறிது நேரத்தில் ஆதீனம் வந்து விடுவார்.

17 ஜூன் 2017

அறிவுத் திருக்கோயில்
தன் பெண்டு தன் பிள்ளை
சோறு வீடு சம்பாத்யம்
இவையுண்டு தானுண்டு
என வாழும் மனிதர்களுக்கு இடையில், இவர் ஒரு வித்தியாசமான மனிதர்.

     சுய நலன் ஒன்றினையே பெரிதாய் போற்றும் மனிதர்கள் பெரிதும் வாழும் இவ்வுலகில், பொது நலன் போற்றும் புண்ணியர்.

09 ஜூன் 2017

கலிலுல்லா
     டவுன் சிண்ட்ரோம்

     Down Syndrome

     தாயின் கருவறையில் கருவாய் உருவாகி, மெல்ல மெல்ல உருவம் ஏதுமற்ற பிண்டமாய் உருமாறி, பின் மெல்ல வளர்ந்து, கை கால்கள் முளைத்து, இதயம் துடித்து, பனிக் குடம் உடைத்து வெளி வந்தவர்கள்தான் நாம் அனைவரும்.

      அணுக்கள் இணைந்து கருவாய் உருமாறும் பொழுது, ஏற்படும் சிறு சிறு மரபணுக் குறைபாடுகள், உடலில் மட்டுமல்ல, மூளையினையும் தாக்கி, பெருந் துயரங்களைச் சுமந்த பிள்ளைகளை உலகிற்கு வழங்கி விடுகின்றன.

04 ஜூன் 2017

காதலின் பொன் வீதியில் …..


     அந்தக் கடிதம், கசங்கலாய்ச் சற்று எண்ணையேறி இருந்தது. மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டிருக்க வேண்டும்.

என் சாமிக்கு பிலோமினா எழுதியது,

     நிறைவா ரெண்டு வருஷம் மனுஷியா, உங்க காலைக் கட்டிக்கிட்டு வாழ்ந்துட்டேன். அந்த நினைப்பா, நீங்க கட்டுன தாலிய மட்டும் என்னோட எடுத்து போறேன். என்னை தயவு செய்து தேடாதீங்க. மீண்டும் தப்பு தண்டாவுக்கு போக மாட்டேன். கடவுள் இருந்தால் உங்களை மாதிரிதான் இருப்பார். காலம் பூராவும் உங்களை நினைச்சுக்கிட்டேதான் இருப்பேன்…. சாவுற வரைக்கும்.

31 மே 2017

வருக வேலுகரந்தை மண்
கந்தக மண்
தமிழுணர்வு வெப்பமாகத்
தகிக்கின்ற மண்.

கரந்தைத் தமிழ்ச் சங்க
மண்ணில்
ஒரு சிட்டிகை
உப்புக்குப் பதிலாக
உணவில் சேர்த்துக் கொண்டால்
சொரணை செத்தவர்களும்
பிழைத்துக் கொள்ளலாம்

27 மே 2017

சித்தப்பா மறைந்தார்


சிறு வயதில், என் விரல் பற்றி அழைத்துச் சென்று, இவ்வுலகை எனக்கு அறிமுகப்படுத்திய என் சித்தப்பா, இயற்கையோடு இணைந்து விட்டார்.

      என்னுடன் அதிகம் பேசிய, என் ஒரே உறவு.

      நான் அதிகமாய் பேசிய, என் ஒரே உறவு

22 மே 2017

சோலச்சி     மகாகவி பாரதியின் வாழ்வு பற்றியும், பாரதியின் எழுச்சி மிகு கவிதைகள் பற்றியும், பள்ளியின் தலைமையாசிரியர் திரு இக்னேசியஸ், உள்ளத்து உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்யும் வகையில், பாடம் நடத்தியதை, மனதில் அசை போட்டவாறே, வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான், அந்த ஐந்தாம் வகுப்பு மாணவன்.

     வீட்டிற்குள் நுழைந்தான்.

      வீட்டுச் சுவற்றில், அடுப்பின் கரித் துண்டினால், அண்ணன் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான்.

அன்பே ஆருயிரே
அழகின் வடிவே
அன்னக் கிளியே
அம்மா நீ எங்கே ……

16 மே 2017

விபுலாநந்தர்

     திருக்கொள்ளம் புதூர்

     தஞ்சாவூர், திருவாரூர் சாலையில், கொரடாசேரியில் இருந்து இடதுபுறம் திரும்பி, கும்பகோணம் சாலையில் பயணித்தால், சிறிது தொலைவிலேயே, குடவாசல் என்னும் சிற்றூர், நம்மை எதிர் கொண்டு வரவேற்கும்.

      குடவாசலைத் தாண்டி, ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில், இடது புறம் திரும்பிய, சில நிமிடங்களில், கம்பீரமாய் தலை நிமிர்ந்து நிற்கிறது ஒரு திருக்கோயில்.

      திருக்கொள்ளம்புதூர் திருக்கோயில்.

      நற்சாந்துப்பட்டி, கோனூர் சமீன்தார் திரு பெ.ராம.ராமன் அவர்களால், பெரும் பொருட் செலவில், முழுவதுமாய், திருப்பணிச் செய்யப் பெற்று, புது உருவமும், புதுப் பொலியும் பெற்ற திருக்கோயில்.

11 மே 2017

பட்ட மிளகாய்சிறு குழந்தையாய் இருக்கும் பொழுதே, நானும் வருவேன், என அழுது அடம் பிடித்து, அக்காளின் கரம் பற்றிப் பள்ளிக்குச் சென்றவர் இவர்.

     ஆனால், பன்னிரெண்டாம் வகுப்போடு, இவருக்கும், படிப்புக்குமான பந்தம் முடிந்து போனது.

     காரணம் சூழல்.

     குடும்பச் சூழல்.

     படித்தது போதும், வேலைக்குப் போ, என வறுமை இவரை விரட்டியது, பள்ளியை விட்டுத் துரத்தியது.

04 மே 2017

தேடப்படுபவர்
நாளும் பொழுதும்
தமிழ்தான் தமிழரின்
முகவரியென்று உரைப்பவர்.


உறவுக்கும் நட்புக்கும்
உப்பாகக் கரைபவர்.

நிலவாகச் சிரித்தாலும்
நித்திலமாய் ஜொலித்தாலும்
சந்தணமாய் கமழ்ந்தாலும் – கைகுலுக்கித்
தென்றலாய் தவழ்ந்தாலும்
முதுகு சொரிவதை
முகமன் கூறுவதை தவிர்ப்பவர்.

முன்னுக்குப் பின்
முரணாக நடப்போரை வெறுப்பவர்.

அதிகாரத்தால் அந்தஸ்தால்
அவலம் நிகழ்ந்தால் துடிப்பவர்.

அவ்வப்பொழுது
பாட்டெழுதி பட்டாசாய் வெடிப்பவர்.


27 ஏப்ரல் 2017

மேதையின் வகுப்பறையில்     ஆண்டு 1904.

     காவிரி ஆற்றின் வட கரையில் அமைந்திருக்கும் எழில் மிகு கல்லூரி.

     கரை புரண்டு ஓடும் காவிரி

     கல்லூரிக்குச் செல்வதற்கு ஒரே வழி தோணி.

     தோணியில் மிதந்து பயணித்தால்தான், கல்லூரி மண்ணில் கால் பதிக்கலாம்.

      காவிரியில் தண்ணீர் இல்லாத காலம் எனில், சுட்டுப் பொசுக்கும் மணலில், கால்கள் நோக நோக நடந்தாக வேண்டும்.

      மொத்தத்தில் தண்ணீர் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கல்லூரியை அணுகவே, பெரு முயற்சி செய்தாக வேண்டும்.

23 ஏப்ரல் 2017

மீண்டும் வந்தியத்தேவன்
     ஆண்டு 1950.

     கும்பகோணம்.

      தங்கம்.

     அந்தச் சிறுவனின் பெயர் தங்கம்.

     முழுப் பெயர் தங்கமுத்து.

     ஆனால் அனைவரும் தங்கம், தங்கம் என்றே அந்தச் சிறுவனை அழைத்தனர்.

      பெயர்தான் தங்கம்.

      ஒரு குண்டுமணி தங்கம் கூட வீட்டில் இல்லை.

       தந்தையும் இல்லை.

       அன்பும், ஏழ்மையும் போட்டிப் போட்டு நிரம்பி வழியும் வீடு.

18 ஏப்ரல் 2017

வன நாயகன்
நான் சுதாவுக்காகப் பேசி, ஃபிரியா ரிட்டன் டிக்கெட்டும், ஒரு மாதச் சம்பளமும் தரச் சொல்லியிருக்கேன். ஊருக்குப் போற வரைக்கும், கெஸ்ட் ஹவுஸ்ல்லயே தங்கிக்கட்டும் பிரச்சினையில்ல.

     அவங்களுக்கு வேற பிரஷர்.

     நான் பேசாட்டி, அதுவும் குடுத்துருக்க மாட்டானுங்க.

14 ஏப்ரல் 2017

யாவருக்கும் மருத்துவக் கல்வி


     காளாஸ்திரி.

       பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப் பகுதி.

     புதிதாய் ஒரு குடும்பம், ஒரு பணக்காரக் குடும்பம், அக்கால வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், ஒரு ஜமீன் குடும்பம், காளாஸ்திரியில், ஒரு பெரும் மாளிகையினையே விலைக்கு வாங்கிக், குடியேறியது.

     ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தின், பானகல்லு என்னும் கிராமத்தில் இருந்த, இந்த ஜமீன் குடும்பம், காளாஸ்திரியைத், தன் புது இருப்பிடமாக்கிக் கொண்டது.

07 ஏப்ரல் 2017

அலோக் சாகர்


     
   
      ஆண்டு 2016.
      மே மாதம்.

     மத்தியப் பிரதேசம்.

     கோரதாங்கரி மாவட்டம்.

     கோசமு கிராமம்.

     கோசமு கிராமம் மட்டுமல்ல, கோரதாங்கரி மாவட்டமே பரபரப்பின் பிடியில் இருந்தது.

01 ஏப்ரல் 2017

வேண்டாம் விருது      ஆண்டு 1954.

      இயற்பியல் துறைப் பேராசிரியர் அவர்.

      பேராசிரியர் என்றால், சாதாரணப் பேராசிரியரல்ல.

      நோபல் பரிசு பெற்றப் பேராசிரியர்.

      1930 லேயே நோபல் பரிசு பெற்றப் பேராசிரியர்.

      தனது இருக்கையில் அமர்ந்து, அன்று தனக்கு வந்தக் கடிதங்களை எல்லாம், ஒவ்வொன்றாகப் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கிறார்.

      நடுவண் அரசிடமிருந்து ஒரு கடிதம்.

      அரசிடமிருந்து தனக்குக் கடிதமா?

      யோசித்தவாரே, கடிதத்தை மெல்லப் பிரிக்கிறார்.

28 மார்ச் 2017

குறள் கொடுத்தவர்


  

   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன் தோன்றி, இன்றும் பொய்யா மொழி என்றும், தமிழ் மறை என்றும், உலகப் பொது மறை என்றும் பலப்பலவாகப் போற்றப்படும் நூல் திருக்குறள்.

   பைபிளுக்கு அடுத்தபடியாக, அதிக எண்ணிக்கையிலான உலக மொழிகளில், மொழி மாற்றம் செய்யப்பெற்ற பெருமைமிகு நூலும் திருக்குறளே.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தக.

     கற்க வேண்டிய நூல்களை, கசடின்றி, முழுமையாய் கற்று, அதன் வழி நட என நமக்கு நல் வழிகாட்டும் திருக்குறளை, பள்ளி மாணவ, மாணவியர் உள்ளத்தில் பசுமரத்ததாணி போல் பதிய வைக்க வேண்டுமல்லவா?

18 மார்ச் 2017

குதிர்
     இலை, தழைகளை மட்டுமே உடையாய் உடுத்தி, கிடைத்த காய் கனிகளையும், வேட்டையாடிய விலங்குகளையும் உணவாய் உட்கொண்டு, நாடோடிகளாய் காலம் கழித்த, நம் முன்னோர், மெல்ல மெல்ல ஆற்றங்கரைகளில் குடியேறத் தொடங்கியபோது, முதன் முதலாய் உழவுத் தொழிலில் இறங்கினர்.

     தானியங்களும், நெற்கதிர்களும் வளர்ந்து முற்றிய நிலையில், அறுவடை செய்து பார்த்தபோது, தங்களது தேவைக்கும் அதிகமாய், மிக மிக அதிகமாய், உணவுப் பொருட்கள் ஏராளமாய், மலை, மலையாய் குவிந்து கிடந்த காட்சியைக் கண்டு மலைத்துத்தான் போனார்கள்.

11 மார்ச் 2017

தமனா
     அன்பும் கருணையும், பெரும் மலைகளையே புரட்டிப்போட வல்லவை. குறுக்கே நிற்கும் தடைக் கற்களை உடைத்துத் தவிடுபொடி ஆக்குங்கள். அங்கு ஓர் அழகான பூங்காவை அமையுங்கள். அங்கு அனைத்து வண்ணங்களிலும் பூக்கள் பூத்துக் குலுங்கட்டும்.

    

         சியாமா சோனா.

     ராஜஸ்தான் மாநிலத்தில், மிகவும் செல்வச் செழிப்பானக் குடும்பத்தில் பிறந்தவர். 

      நன்கு படித்தவர்.

     புதுதில்லியில், ஒரு பள்ளியில் ஆசிரியர்.

     ஏராளமானக் கனவுகளோடும், எதிர்கால இலட்சியங்களோடும், ஒரு இராணுவ அதிகாரியைக் கரம் பற்றினார்.

     வாழ்வும் இனிமையாகவே நகர்ந்தது.

     சியாமா கருவுற்றார்.

     குழந்தை வயிற்றில் வளர வளர, சியாமாவின் ஆசைகளும் வளர்ந்து கொண்டே சென்றன.

05 மார்ச் 2017

உத்தமதானபுரம்   சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், தஞ்சை சமஸ்தானத்தை ஆண்ட அரசருக்கு ஒரு ஆசை.

    முடிந்த அளவிற்கு நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை.

     பரிவாரங்களுடன் புறப்பட்டார்.

     இயற்கைக் காட்சிகளைக் கண்ணாரக் கண்டு ரசித்தார்.

     புனிதத் தலங்களை எல்லாம் தரிசித்தார்.

     மனதில் மகிழ்வுடனும், தெய்வங்களை வழிபட்ட மன  நிறைவுடனும், தஞ்சைக்குத் திரும்பும் வழியில், சிறிது ஓய்வெடுக்க, ஓரிடத்தில் கூடாரம் அமைத்துத் தங்கினார்.

     மரங்கள் அடர்ந்த சூழல். குளிர் தென்றல் காற்று வீசும் காலம்.

28 பிப்ரவரி 2017

வித்தகர்கள்     வலை.

    வலையில் சிக்கியவர்கள் இருப்பார்கள்.

    ஆனால் வலையால் மீட்கப் பட்டவன் நான்.

    சில வருடங்களுக்கு முன், திடீரென, பணி ஓய்வு பெற்றுவிட்டதைப் போன்ற ஒரு உணர்வு.

    என்ன செய்வது என்று புரியாத நிலை.

26 பிப்ரவரி 2017

விடுமுறையில் படித்தவர்


 பொருள்.

     பொருளாதாரம்

     ஒரு வீடு வளமிக்கதாக விளங்க, பொருளாதாரம் மிக முக்கியமான ஒன்று.

    அன்பும் பண்பும் வழிந்தோடும் குடும்பமே ஆயினும், பொருளில்லை என்றால் வாழ்வானது வேதனையைத்தான் வாரி வாரி வழங்கும்.

     இன்றைய பெரும்பாலான குற்றங்களுக்கு, சட்ட மீறல்களுக்கு அடி நாதமாய் விளங்குவது இந்தப் பொருளின்மைதானே.

     45 வயது நிரம்பிய இம்மனிதருக்கும் இதே பிரச்சினைதான்.

19 பிப்ரவரி 2017

தங்கக் கவிஞர்
அப்பாவை நினைத்தபடி
வாசல் படியில்
அமர்ந்திருந்தேன்
என்
பிள்ளைகளின் வருகைக்காக.

இப்படித்தான், இக்கவிஞர் தன் கவிதையை நிறைவு செய்கிறார்.

     இதிலென்ன இருக்கிறது, நாம் அனைவருமே, நம் பிள்ளைகளின் வருகைக்காக, அது பள்ளியோ, கல்லூரியோ, அல்லது அலுவலகமோ, தினசரி காத்துக் கிடப்பவர்கள்தானே என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா.