28 டிசம்பர் 2020

தமிழவள் இருக்கை

 


     ஆண்டு 1944.

     மார்ச் மாதம் 28 ஆம் நாள்.

     தஞ்சாவூர்.

     இராஜகோபாலசாமி கோயில் தெரு.

     2659 என்ற எண்ணுள்ள மாடி வீடு.

     வீட்டுத் திண்ணையில், மறுநாள் நடக்க இருக்கும் தேர்விற்கான நுழைவுச் சீட்டில், தங்கள் கல்லூரி முதல்வரிடம் கையொப்பம் பெறுவதற்காக வந்த, மாணவர்கள் சிலர் காத்திருக்கின்றனர்.

     மாடியில் உள்ள தாழ்வாரத்தில், கிழக்கு நோக்கி இருந்த நாற்காலியில், மிகுந்த களைப்புடன் அமர்ந்திருக்கிறார் முதல்வர்.

   

22 டிசம்பர் 2020

உதிரம் உறைந்த பூமி

 


     கி.பி.,ஒன்பதாம் நூற்றாண்டு.

     காவிரிக்கும் மேற்கே தொடங்கி, திருவேங்கடத்தையும் தாண்டியப் பெருநிலப் பரப்பில் பல்லவப் பேரரசும், காவிரிக்கு தெற்கே தொடங்கி, குமரியின் அடிமுனை வரையிலானப் பெரும் பரப்பை பாண்டியரும் ஆண்டு கொண்டிருந்த காலம்.

     முத்தரையரிடம் போரிட்டு கைப்பற்றிய சிறு பகுதிகளை மட்டுமே, பல்லவர்களின் துணையோடு, சோழர்கள், குறு நில மன்னராய் ஆண்டு கொண்டிருந்த காலம்.

     எப்படியும் பல்லவர்களை அழித்தே தீருவது என்ற எண்ணத்தில் இருந்த, இரண்டாம் வரகுண பாண்டியன், சற்றேறக்குறைய ஒன்றரை இலட்சம் படை வீரர்களோடு புறப்பாட்டான்.

   

16 டிசம்பர் 2020

உண்பது நாழி உடுப்பவை இரண்டு

உண்பது நாழி உடுப்பவை இரண்டே

பிறவும் எல்லாம் ஓரோக் கும்மே

செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே

     இந்த உலகு முழுவதையும் ஆளுகின்ற மன்னனாக இருந்தாலும், கல்வி அறிவில்லாத மூடராக இருந்தாலும், உண்ணப்படும் பொருள் நாழி அளவே ஆகும். உடுத்தும் உடையும், மேலே ஒன்றும், இடையிலே ஒன்றுமாய் இரண்டே ஆகும்.

06 டிசம்பர் 2020

தஞ்சையார்



நம்பினா நம்புங்க

நம்பாட்டி போங்க

எனப் பாட்டின் பல்லவியைப் பாடலாசிரியர் கூற, இயக்குநர் பதறிப் போனார்.

     வாத்தியாரய்யா, பாட்டை கேட்டுட்டு, படத்தை யாரும் வாங்காமல் போய்விட்டால் என்ன செய்வது? வேற ஒரு பாட்டு, ஜாலியாய் வர்ற மாதிரி எழுதிக் கொடுங்க என்றார்.

  

30 நவம்பர் 2020

பண்டிதமணி நேருவும் பழந்தமிழும்

 


இலக்கியமும் இலக்கணமும்

   கல்வெட்டாய் செப்பேடாய்

   இருந்தினிக்கும்,

வலக்கண்ணாய் இடக்கண்ணாய்

   வாங்குவளி நுரையீரல்

   வகைபடல் போல்,

துலக்கமுறும் எந்நாளும்

   துல்லியமாய் மிகத் தெளிவாய்த்

   துய்த்தவற்றைச்

சொலத் தெரிந்த மிகச்சிறந்த

   காவிரிபோல் தலைச்சுரப்பு

   சொரியும் குன்றம்.

     குடகுமலையில் தோன்றி, தங்கு தடையின்றிப் பயணிக்கும் காவிரிபோல், தான் துய்த்தவற்றை, தான் கற்றவற்றை, தான் அறிந்தவற்றைத், தெளிவாய், மிகத் தெளிவாய், துல்லியமாய் வார்த்தைகளில் வடிக்கத் தெரிந்தவர் இவர், எனப் பெருமகிழ்வோடு, தன் கவி வரிகளால், பாராட்டுவார் பாவேந்தர் பாரதிதாசன்.

   

24 நவம்பர் 2020

அபிராமி, அபிராமி

     நட்ட நடு ராத்திரி, முழிப்பு வந்துடுச்சா, மாடு வேற கத்துது, சரி, மாட்டுக்குப் பசிபோல, வைக்கோல் போடலாம்னுட்டு வெளியே வந்தேன்.

     வைக்கோல் போட்டுட்டு பார்க்கிறேன்.

      உங்க வீட்டு வாசல்ல, வெள்ளையா ஓர் உருவம், கால் இருக்கான்னு பார்க்கிறேன், இல்லை.

    

17 நவம்பர் 2020

தோரோ

 


     முடியாது.

     தீர்மானமாய் சொன்னார்.

     என்னால் வரி கொடுக்க முடியாது.

     தர மாட்டேன்.

     அரசு விதிக்கின்ற வரியைத் தரமுடியாது எனத் துணிந்து சொன்னார்.

   

11 நவம்பர் 2020

நேர்படப் பேசு



     பெண்ணே நீ யார்?

     உன் கணவன் யார்?

     இந்தச் சிறுவன் யார்?

     இவனுக்கும் உனக்கும் என்ன தொடர்பு?

     இவன் பெயர் என்ன?

     இவன் தந்தை யார்?

     எதற்காக என்னைப் பார்க்க வந்தாய்?

  

31 அக்டோபர் 2020

ரிச்சர்ட் டாங்கி


     ஆண்டு 2019, ஜுலை மாதம்

     கென்யா.

     கிழக்கு ஆப்பிரிக்க நாடு.

     கென்ய நாட்டில் இருந்து, ஒரு குழு, இந்தியாவிற்கு வந்தது.

    

21 அக்டோபர் 2020

தமிழே, அமுதே

     கடந்த 2007 ஆம் ஆண்டு, நண்பர் சதாசிவம் அவர்களின் அழைப்பினை ஏற்று, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், எம்.ஃ.பில்., ஆய்வுப் படிப்பில் சேர்ந்தது, என் வாழ்வில், ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

14 அக்டோபர் 2020

காந்திய வேர்கள்



     ஆண்டு 1937.

     அக்டோபர் இரண்டு.

     மகாத்மா காந்தியின் பிறந்த நாள்.

     நியூயார்க்கில் இருந்து டர்பன் நோக்கி, கப்பலில் பயணித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு, திடீரென்று ஓர் எண்ணம் மனதில் மின்னலாய் வெட்டியது.

     காந்தியைப் பற்றி, ஒரு படம் எடுத்தால் என்ன?

     எண்ணத்தை வாய்விட்டு, வார்த்தையாய் வெளியில் சொன்னபோது, சுற்றிலும் இருந்தவர்கள் சிரித்தார்கள்.

     உன்னால் முடியுமா? என ஏளனப் பார்வை பார்த்தார்கள்.

   

04 அக்டோபர் 2020

தருமி

 


     ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் 37 ஆண்டுகள், பேசுவதையே தன் வாழ்வின் பணியாய் கொண்டு வாழ்வை நகர்த்தியவர்.

     பேராசிரியர்.

     கல்லூரிப் பேராசிரியர்.

     பணி ஓய்விற்குப் பிறகு, இவரது வாய் பேசு, பேசு என்று இவரை நச்சரிக்கத் தொடங்கியது.

     பேசியே பழக்கப்பட்டவர் அல்லவா.

     பேசாமல் இருக்க முடியவில்லை.

  

27 செப்டம்பர் 2020

மகாகவி வாழ்க, வாழ்கவே

இவர்

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்

முன்னாள் மாணவர்.

கரந்தைப் புலவர் கல்லூரியின்

முன்னாள் மாணவர்

கரந்தையை

தன் வாழ்வில்

என்றென்றும் மறவாதவர்.

19 செப்டம்பர் 2020

எனது நூலகம்

 


     திருவையாறு.

     சின்னஞ்சிறு வயதில், திருவையாறுதான் எனக்குக் கோடைக்கால கொடைக் கானலாய் இருந்தது.

    காரணம், என் சித்தப்பா.

     நல்லாசிரியர் திரு சி.திருவேங்கடனார்.

     மாலை வேளையில், என் சிறு விரல் பற்றி அழைத்துச் சென்று, காவிரி ஆற்று மணலையும், திருவையாற்று அரசு நூலகத்தையும், எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர், என் சித்தப்பா.

     காவிரி ஆற்று மணலில் ஓடி விளையாடிய நினைவுகள் என்னுள் பசுமையாய் பதிந்து கிடக்கின்றன.

   

14 செப்டம்பர் 2020

உலகெலாம்

  


     தாய், தந்தை.

     மகள், மகன்.

     அளவான குடும்பம்.

     மகிழ்ந்து நகர்ந்த வாழ்வில், தந்தை இறக்கிறார்.

     தாய் உடன் கட்டை ஏறுகிறாள்.

     மகளுக்கு நிச்சயிக்கப் பட்டிருந்த மணவாளனோ, போரில் மடிகிறான்.

    

06 செப்டம்பர் 2020

நின்ற சொல்லர்



   

 இன்று இவ்வுலகில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை ஒரு நூறு, இரு நூறு அல்ல, ஓராயிரம், ஈராயிரம் அல்ல.

     முழுதாய் 7,117 மொழிகள் இருக்கினறன.

    இம்மொழிகளுள், குறிப்பாகச் சொல்லப்படுகின்ற, ஏழு பழம் மொழிகளிலே, செம்மொழிகளிலே, தமிழ் தனித்து நிற்கின்ற ஒரு மொழி.

     அன்று எப்படி இருந்ததோ, அதே சீரிளமையுடன் இன்றும் இருக்கிறது.

  

31 ஆகஸ்ட் 2020

ரானடே

 



     ஆண்டு 1968.

     தமிழ் நாட்டின் உயர் பதவியில் இருந்தவரை, அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகம் அழைத்தது.

     அவரும் புறப்பட்டார்.

     அமெரிக்கா செல்லும் வழியில் வாடிகனில் இறங்கினார்.

    

23 ஆகஸ்ட் 2020

மிகினும் குறையினும்

 


       பூமி.

     இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற ஒரே இடம், இந்த பூமி மட்டும்தான்.

     காடுகள், மலைகள், நதிகள் இவைகளெல்லாம் பூமியின் அங்கங்கள், உறுப்புகள்.

     நாம், பிறப்பு முதல் இறப்பு வரை, இயற்கையைச் சார்ந்துதான் வாழ்கிறோம்.

    

15 ஆகஸ்ட் 2020

இரண்டு நான்கானது


 நாளும் உடற்பயிற்சி நன்று, தமிழ்மொழியில்

நாலும் இரண்டும் நனிநன்று, நம்மதுரை

பொற்றா மரைக்குளம் நன்று, பொறுப்புடன்

நற்றமிழ் கற்றிடல் நன்று

     இவர் தனது கவிநூலை இப்படித்தான் தொடங்குகிறார். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பார்கள்.

     இவரோ, இரண்டை, நான்காக்கி ஒரு நூல் ஆக்கியிருக்கிறார்.

    

10 ஆகஸ்ட் 2020

நகமுரா


     திருதவத்துறை.

     இன்றைய லால்குடி.

     சுதந்திரப் போராட்டத்திற்காக நிதி திரட்ட வருகிறார் ஒருவர்.

     மக்கள் தங்களால் இயன்ற பொருளைத் தருகின்றனர்.

     அவரை நோக்கி ஓர் உருவம் வருகிறது.

02 ஆகஸ்ட் 2020

சொற்களே பூக்களாய்


 

     கணவன் பொருள் தேட, வெளியூர் கிளம்புகிறான்

     மனைவியோ, விடை தர மறுக்கிறாள்

     உள்ளே குமைகிறாள்.

27 ஜூலை 2020

பொழுதளந்தவர்கள்




     கி.பி. 1510 ஆம் ஆண்டு.

     பீட்டர் ஹென்கின்.

     ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பூட்டு செய்யும் தொழிலாளிக்கு திடீரென்று ஓர் எண்ணம் மின்னலாய் வெட்டியது.

     எண்ணத்திற்கு உருவம் கொடுத்தார்.

19 ஜூலை 2020

காட்டி மோகம்




மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம், செம் பொன் கை வளை
பரியகம், வால் வளை, பவழப் பல் வளை
அரி மயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து

இந்நான்கு வரிகள் பாடலின் தொடக்கம்தான். சூடகம், செம்பொன் வளையல்கள், நவமணி வளையல்கள், சங்கு வளையல்கள், பவழ வளையல்கள், வீரச் சங்கிலி, தொடர் சங்கிலி, இந்திர நீலத்துடன் இடையிடையே வயிரங்கள் பதித்துக் கட்டபெற்ற தோடுகள் என, கோவலனின் வரவிற்காகக் காத்திருந்த மாதவி தன்னை அலங்கரித்துக் கொள்ளப் பயன்படுத்திய தங்க, வைர நகைகளின் பட்டியல், இப்பாடலின் வழி, நீண்டு கொண்டே போகிறது.

07 ஜூலை 2020

கருணாமிர்தம்



     அஷ்டாவதானி, தசாவதானி என்பார்கள்.

     அதாவது, ஒரே நேரத்தில் எட்டு செயல்களைச் செய்யக் கூடியவர் அஷ்டாவதானி, பத்து செயல்களைச் செய்யக் கூடியவர் தசாவதானி .

     சிலரால் மட்டுமே, ஒரே நேரத்தில், தன்னைச் சுற்றி நிகழும் பல நிகழ்வுகளை, கவனத்தில் வைத்திருக்க முடியும். அவற்றைத் திருப்பிச் சொல்லவும் முடியும்.

01 ஜூலை 2020

பெரிதினும் பெரிது நீர்த் தூம்பு



நண்பர்களே, வணக்கம்.

     வலைச் சித்தர் காட்டிய வழியில் பயணித்ததன் விளைவாய், மேலும் எனது இரண்டு நூல்கள், அமேசான் தளத்தில் இணைந்திருக்கின்றன.

28 ஜூன் 2020

பள்ளிக்காக, ஆறாவது முதலாளி




நண்பர்களே, வணக்கம்.

     கொரோனா கால ஊரடங்கில், வீட்டிற்குள் முடங்கித் தவித்த எனக்கு, நேரத்தைக் கடத்துவதற்கானப் புது வழியினைக் காட்டியவர் வலைச் சித்தர் ஐயா அவர்கள்.

21 ஜூன் 2020

வலைச் சித்தருக்கு ஜெ




     நண்பர்களே, வணக்கம்.

     2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் நாள்.

     நான் வலை உலகினுள் நுழைந்த நாள்.

15 ஜூன் 2020

கொங்கு




கழுவா மணிக்கலசக் காஞ்சிசூழ் நாட்டில்
புழுவாய் பிறந்தாலும் போதாம், வழுவாமல்
சந்திரராய் சூரியராய் தானவராய் வானவராய்
இந்திரராய் வீற்றிருக்கலாம்.

     குறிஞ்சியும், முல்லையும், கொஞ்சம் மருதமும் சூழ்ந்த இந்நாட்டில் புழுவாய் பிறந்தாலும் பெருமையே.

06 ஜூன் 2020

ஹோ


நம் மலைகள் எப்பொழுதும் நம்முடையவை

நம் ஆறுகள் எப்பொழுதும் நம்முடையவை

நம் மக்கள் எப்பொழுதும் நம்முடன் இருப்பார்கள்

அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை முறியடிப்போம்

நம் நாட்டை மீண்டும் அமைப்போம்

இன்னும் பத்து மடங்கு அழகுடன்.

02 ஜூன் 2020

பனி வீடு




     ஆண்டு 1833.

     போஸ்டன்.

     அமெரிக்கா.

     ஃபிரட்ரிக் டூடர்.

     வயது 23.

     தொழிலில் நட்டம் ஏற்பட்டுக் கடனாளியானார்.

     கடன்காரர்கள் வழக்குத் தொடுக்க, சில நாட்கள் சிறைக் கம்பிகளை எண்ணினார்.

25 மே 2020

சாதனையாளரை வாழ்த்துவோம்




     2014 ஆம் ஆண்டு மே திங்களில், கவிஞர் முத்துநிலவன் அவர்களால், கணினி தமிழ்ச் சங்கம் சார்பில், புதுக்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பெற்று நடத்தப்பெற்ற, இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறையில், மாணவராய், பங்கேற்பாளராய் கலந்து கொண்டவர் இவர்.

     இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், 2016 ஆம் ஆண்டிலும், அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டிலும், அதே கணினி தமிழ்ச் சங்கம் நடத்திய, அதே பயிற்சிப் பட்டறையில், ஆசிரியராய் பாடம் நடத்தியவர் இவர்.

19 மே 2020

அக்காள் மடம், தங்கச்சி மடம்



     பதினாறாம் நூற்றாண்டு.

     இராமேசுவரம்.

     நான்கு பேர் அந்தப் பல்லக்கினைச் சுமந்தபடி சென்று கொண்டிருக்கிறார்கள்.

     பல்லக்கிற்கு முன்னும் பின்னும் சில வீரர்கள் காவலுக்குச் செல்கிறார்கள்.

    பல்லக்கில் சிவகாமி நாச்சியார்.

13 மே 2020

கண்ணீர்த் தமிழ்




     பயணம்.

     மனித வாழ்க்கையே ஒரு பயணம்தான்.

     நாகரிகம் என்பதே நதிக்கரைகளைத் நோக்கியப் பயணத்தில்தான் தொடங்கியது.

     நிலத்தில பயணிப்பதற்கும், கடலில் பயணிப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு.

04 மே 2020

செந்தமிழ் அரிமா





கெடல் எங்கே தமிழின் நலம்? – அங்கெல்லாம்
தலையிட்டுக் கிளர்ச்சி செய்க

என்னும் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளுக்குத், தன் வாழ் நாள் முழுவதும் உயிர் கொடுத்தவர் இவர்.

     தமிழுக்குத் தீங்கு எனில், நரம்பெல்லாம் இரும்பாகி, நனவெல்லாம் உணர்வாகக் கிளர்ந்தெழுந்து உரிமைப் போர்க்களம் புகுந்தவர் இவர்.

28 ஏப்ரல் 2020

குறளைச் சாறு பிழிந்தவர்




     மதுரை.

     பதினேழாம் நூற்றாண்டு.

     தமிழ்ப் பேரரசர்களான சோழர்களும், பாண்டியர்களும் மறைந்துவிட்ட காலம்.

     மாலிக்காபூர் படை எடுப்பிற்குப் பின் சின்னா பின்னமான மதுரையில், விஜய நகரப் பேரரசின் தெலுங்கு வழி வந்த நாயக்கர் ஆட்சி தொடங்குகிறது.

21 ஏப்ரல் 2020

ரேகை




     ரேகை.

     சில நேரங்களில், அலுவல் காரணமாக, கையெழுத்துப் போடுங்கள் என்று சொல்லும் பொழுது, சிலர் வெட்கித் தலைகுணிந்து, எனக்கு எழுதப் படிக்கத்  தெரியாதுங்க என்று கூறி, இடது கை கட்டை விரலை நீட்டுவதைப் பார்த்திருப்போம்.

     ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.

     மெத்தப் படித்தவர்களைக் கூட ரேகைதான் வைக்கச் சொல்லுகிறோம்.

14 ஏப்ரல் 2020

அறம்




     அறம்

     அறம் என்னும் சொல் கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து பிறந்ததாகச் சொல்லுவார்கள்.

     அறம் என்றால் என்ன?