28 டிசம்பர் 2015

விக்ரமம்



     நண்பர்களே, கடந்த 4.1.2015 ஞாயிற்றுக் கிழமை காலை 7.00 மணியளவில், என் அலைபேசி அழைத்தது. மறுமுனையில் சோழ நாட்டில் பௌத்தம் முனைவர் பா.ஜம்புலிங்கம்.

     இருபதாண்டுகால நண்பர். உழைப்பின் உறைவிடம். தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தட்டச்சராய் நுழைந்து, பணியோடு கல்வியிலும் உயர்ந்து, முனைவர் பட்டம் பெற்று, இன்று கண்காணிப்பாளராய் பணியாற்றி வருபவர்.

24 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 7





ஐயிரண்டு திங்களா அங்கம்எலாம் நொந்துபெற்றுப்
பையல்என்ற போதேபரிந்துஎடுத்துச் – செய்யஇரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
                         பட்டினத்தார்

வாரணாசி,
4.4.1970
அண்ணன் அவர்களுக்கு,

        விடுமுறையில் ஊருக்கு வந்துவிட்டு, எதுவுமே பேசாமல் இருக்கிறாயே என்று எல்லோரும் கேட்டீர்கள். என்ன பேசுவது என்று தோன்றாததால்தான் மௌனம் சாதித்தேன்.

      ஆனாலும் நானும் மனிதன்தானே, மனதில் கொந்தளித்துக் கொண்டிருக்கும், உணர்ச்சிக் குமுறல்களை முறையாக வெளிப் படுத்தாவிட்டால், ஒரு பூகம்பம் போல் வெடித்துச் சிதறிப் போய் விடுவேனோ என்று பயப்படுகிறேன்.

19 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 6





பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்
                                       பட்டினத்தார்

       அறையின் கதவு மெதுவாய், மிக மெதுவாய் திறக்கப்படும் ஓசை மெல்ல மெல்ல காதுகளை வந்தடைய, மெதுவாய் கண்களைத் திறந்தார்.

எதிரில் அம்மா.

       மெதுவாக, மிக மெதுவாக அடிமேல் அடி வைத்து, கட்டிலை நெருங்குகிறார்.

ஆச்சரியமாக இருக்கிறதே, எப்படியம்மா இங்கு வந்தாய்?

15 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 5




பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்சமடைந்தபின் கை விடலாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
அஞ்சலென்றருள் செயுங் கடமையிலாயோ?
                                        பாரதி

    கேப்டன் கணேசன் அவர்களின் தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த மேஜர் ஒருவருக்கு, திண்டுக்கல்லில் திருமணம் நடைபெற இருந்தது. எனவே அவர் விடுமுறையில் சென்று விட்டார்.

     இந்நிலையில்தான் கேப்டன் கணேசன் அவர்களுக்கு, சன்னா நல்லூரில் இருந்து தந்தி வந்தது.

அம்மா கவலைக்கிடம்.

11 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 4




குருதியின் நதி வெளிபரக்கவே
    குடை இனம் நுரை என மிதக்கவே
கரி துணி படும் உடல் அடுக்கியே
   கரை எனஇரு புடை கிடக்கவே
                           கலிங்கத்துப் பரணி

இந்திய எல்லைப் புறங்கள்,
5 செப்டம்பர் 1965

அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு,

    பதான்கோட் இராணுவ மருத்துவ மனையில் இருந்துதான், இக்கடிதத்தை எழுதுகிறேன். போரின் தீவிரத்தால் மருத்துவ மனையே அதிர்ந்து கொண்டிருக்கிறது.

    இந்திய விமானப் படையின் விமானத் தளம், மருத்துவ மனைக்கு அருகில்தான் உள்ளது. இதனால் இந்திய வான் படை விமானங்களைத் தாக்கவரும், பாகிஸ்தானிய விமானங்களின் குண்டு ஓரிரு முறை மருத்துவ மனைக்குள்ளேயே விழுந்து வெடித்தது.

08 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 3




சிற்றில் நாற்றூன் பற்றி, நின் மகன்
     யாண்டுள னோ?என வினவுதி என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன், ஓரும்
     புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
     தோன்றுவன் மாதோ, போர்களத்தானே
                                புறநானூறு 86

       1965 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள், இந்திய வரலாற்றில் முக்கியமான நாள்.

       1962 ஆம் ஆண்டு சீனாவின் ஆக்கிரமிப்பால் படு தோல்வி அடைந்த இந்திய இராணுவம், தன்னிலை உணர்ந்து தன்னைப் பலப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது.

     ஏராளமான படைப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. அதிகாரிகளும், அதிகாரிகள் அல்லாதவர்களும், பெருமளவில் இராணுவத்தில் சேர்க்கப் பட்டனர்.

     இம்மாற்றங்களை அறியாத பாகிஸ்தான், 1965 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் குஜராத், கட்ச் பகுதியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

04 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 2



 
தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதிவகையும்
யாம் ஆர் எமது பாசம் ஆர் என்ன மாயம்
இவைபோக்க கோமான் பண்டைத் தொண்டரோடும்
அவன் தன் குறிப்பே துணைக்கொண்டு போம் ஆறு அமைமின்
பொய் நீக்கிப் புயங்கன் ஆள் வான் பொன் அடிக்கே
                                          திருவாசகம்

    மகராஷ்டிரா மாநிலம் பூனேயில் ஆரம்ப காலப் பயிற்சி.

    இரண்டு மாதப் பயிற்சியிலேயே, கார்ப்பொரல் என்னும் அணித் தலைவர் தகுதி திரு கணேசன் அவர்களை நாடி வந்தது.

    இரண்டு வருடப் பயிற்சியானது, நாட்டின் அவசரத் தேவையினைக் கருதி ஆறு மாதங்களாகக் குறைக்கப் பட்டது.