25 ஜூன் 2015

ஜோதிராவ் புலே


ஓ, இறைவனே. உன்னுடைய உண்மையான மதத்தை எங்களுக்குக் கற்றுக் கொடு. அதன்படியே வாழ, நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஒருவர்தான் உயர்ந்தவர் மற்றவர்கள் ஒன்றுமில்லாதவர்கள் என்பதாக இருக்கும் மதத்தை, இந்த பூமியை விட்டே அகற்றிவிடு. அப்படியொரு மதத்தைப் பெருமையாகக் கருதும் போக்கையும் அகற்றிவிடு.

18 ஜூன் 2015

தஞ்சைக்கு வந்த புதுக்கோட்டை


வாசிக்காத நாட்கள் எல்லாம்
சுவாசிக்காத நாட்கள்
என்பர் நம் முன்னோர். புத்தகங்களை வாசிப்பது ஒரு சுகானுபவம்தான். புத்தகங்களுக்கு நடுவில் அமர்ந்திருப்பது கூட, மனதில் ஓர் அமைதியை ஏற்படுத்தத்தான் செய்கிறது.

     நெஞ்சை அள்ளும் தஞ்சைக்குப் பெருமைகள் பல இருப்பினும், புதிதாய் ஓர் சிறப்பு சேர்ந்திருக்கிறது.

புத்தகத் திருவிழா

     கடந்த ஆறு ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும், பத்து நாட்களுக்கு, ரோட்டரி கிளப் ஆஃப் தஞ்சாவூர் கிங்ஸ்-ன் பெரு முயற்சியால் நடைபெறும் புத்தகத் திருவிழா, தஞ்சைக்கு ஒரு புதுப் பொலிவை வழங்கி வருகிறது.

11 ஜூன் 2015

அண்ணாமலைப் பல்லைக் கழகத்தின் கின்னஸ் சாதனை


கருமைஉரு, வெண்மைப் பல், நரைத்ததலை குறைமீசை
கறையற்ற செம்மைமனம், புன்சிரிப்பு எளிமை நிலை
பிறைகருத்த பெருநெற்றி அதில் மணக்கும் நறுஞ்சாந்தம்
மறைவல்ல ஒளிமுகத்திற் கொப்புமையும் இலையன்றோ
-           சி.அரசப்பன்

     ஆண்டு 1948. தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கம். சிங்கம் போல் கம்பீர நடை நடந்து, செம்மாந்தக் குரலில், சங்க இலக்கிய, இலக்கணங்களை, நகைச்சுவை என்னும் நறுந்தேன் கலந்து, மாணவர்கள் மயங்கும் வகையில், எடுத்தியம்பும் ஆற்றல் பெற்ற, அப்பேராசிரியரின் கால்களில் ஓர் தளர்ச்சி.

     மருத்துவம் பார்த்தும் பலனில்லை. நாளாக, நாளாக நிற்கக் கூட இயலாத நிலை.

07 ஜூன் 2015

எனது முதல் மின் நூல்

   

 நண்பர்களே, வலைப் பூவில் நுழைந்து, மலர்ந்து மனம் வீசும் நல் உள்ளங்களை உடைய, தங்களின் அறிமுகத்தைப் பெற்று, ஆண்டுகள் மூன்று கடந்து விட்டன.

கணிதமேதை சீனிவாச இராமானுஜன்

     வலைப் பூவில், எனக்குப் புதுப் புது உறவுகளையும், எனக்கென்று ஓர் முகவரியினையும் பெற்றுத் தந்தத் தொடர்.

03 ஜூன் 2015

ஞானாலயா


மனிதரெலாம் அன்புநெறி காண்ப தற்கும்
     மனோபாவம் வானைப்போல் விரிவ டைந்து
தனிமனித தத்துவமாம் இருளைப் போக்கிச்
     சகமக்கள் ஒன்றென்ப துணர்வ தற்கும்
இனிதினிதாய் எழுந்தஉயர் எண்ண மெல்லாம்
     இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை
புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
     புத்தகசா லைவேண்டும் நாட்டில் யாண்டும்.
-          பாவேந்தர் பாரதிதாசன்

    எதையும் படிக்காம சொல்லக் கூடாது. யாரோ ஒரு தலைவர் சொன்னாரு, ஏதோ ஒரு பத்திரிக்கையிலே படிச்சேன்னு சொல்லாதே. மூல நூல்களைப் படி.

     தந்தை என்றால் இவரல்லவோ தந்தை. அறிவுரை என்றால் இதுவல்லவோ அறிவுரை.

     அறிவுரை வழங்கியதோடு விட்டுவிடாமல், ஒரு கள்ளிப் பெட்டியில் இருந்த, தன் பழைய புத்தகங்களில் இருந்து, நூறு புத்தகங்களை அந்தத் தந்தை, தனது 19 வயது மகனிடம் கொடுத்தார்.

இவற்றையெல்லாம் நீ, பாதுகாத்துப் படி.

     மகனின் மனம் மகிழ்ச்சியால் விம்முகிறது. நூறு புத்தகங்களையும், ஒவ்வொன்றாய் தொட்டுப் பார்க்கிறார்.

     நூறு கோடி ரூபாய் சொத்துக்களைப் பெற்றதைப் போன்ற ஓர் உணர்வு, ஒவ்வொரு நூலாய் படிக்கிறார்.