07 ஜூன் 2015

எனது முதல் மின் நூல்

   

 நண்பர்களே, வலைப் பூவில் நுழைந்து, மலர்ந்து மனம் வீசும் நல் உள்ளங்களை உடைய, தங்களின் அறிமுகத்தைப் பெற்று, ஆண்டுகள் மூன்று கடந்து விட்டன.

கணிதமேதை சீனிவாச இராமானுஜன்

     வலைப் பூவில், எனக்குப் புதுப் புது உறவுகளையும், எனக்கென்று ஓர் முகவரியினையும் பெற்றுத் தந்தத் தொடர்.


முனைவர் சா.கிருட்டினமூர்த்தி,
முன்னாள் தலைவர், அறிவியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,
தமிழ்ப் பல்கலைக் கழகம்,தஞ்சாவூர்

திரு துரை. செல்வராசு
தஞ்சையம்பதி

திரு வெ.சரவணன்,
தலைமையாசிரியர், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி
,
திரு ஆ.சதாசிவம்,
உதவித் தலைமையாசிரியர்,
உமாமகேசுவர மேனிலைப் பள்ளி,தஞ்சாவூர்

திரு எஸ்.கோவிந்தராஜ்,
ஓவிய ஆசிரியர், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி

முனைவர் ப.ஜம்புலிங்கம்,
கண்காணிப்பாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம்
சோழ நாட்டில் பௌத்தம்


திருமதி உஷா அன்பரசு
உஷா அன்பரசு, வேலூர்


திருமிகு தி, தமிழ் இளங்கோ
எனது எண்ணங்கள்

திரு ரத்னவேல் நடராஜன்
ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து ரத்னவேல்நடராஜன்


திருமிகு டி.என்.முரளிதரன்,
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், சென்னை
மூங்கில் காற்று


நமது நம்பிக்கை
இதழின் ஆசிரியர்
கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா

கணிதமேதை தொடருக்கு பேருதவி புரிந்த,
தன்னலமற்ற,
இந் நல் உள்ளங்களை நினைத்துப் பார்க்கின்றேன்.

நன்றி சொல்ல வார்த்தைகள் மட்டும் போதாது என்பதையும் உணர்கின்றேன்.


நண்பர்களே,
கணிதமேதை சீனிவாச இராமானுஜன்
தொடர்
இப்பொழுது மின்னூலாய் வெளி வந்துள்ளது
என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.


சீனிவாச இராமானுஜன்
தொடரை
மின்னூலாய் கொண்டு வந்திருப்பவர்
ஒரு சீனிவாசன்
வியப்பதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு.

     இலட்சக் கணக்கான ஆங்கில நூல்கள், இணையத்தில் கொட்டப் பெற்று, மலை மலையாய் குவிந்து கிடக்கும், இக்காலத்தில், தமிழ் நூல்கள் மடு அளவிற்குக் கூட இணையத்தில் இல்லாதது வேதனையே.

     இவ்வேதனையை, சாதனையாய் மாற்ற, களம் இறங்கி இருக்கும் அமைப்புதான்,

       சென்னை, மும்பை, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு மூலைகளிலும் வாழும் தமிழன்பர்கள் 15 பேர் ஒருங்கிணைந்து உருவாக்கியிருக்கும் அமைப்புதான்,

இவர்களுள் முதன்மையானவர்
திரு டி.சீனிவாசன்

     நண்பர்களே, வலைப் பூவில் வலம் வரும், உங்களது எழுத்துக்களை, மின்னூலாய் மாற்றி, உலகை வலம் வரச் செய்ய, இவர் காத்துக் கொண்டிருக்கிறார்.

    நாமும் நமது எழுத்துக்களை மின்னூலாய் மாற்றலாமே?

கணிதமேதை சீனிவாச இராமானுஜன்
மின்னூலை
வெளியிட்டிருக்கும்
நண்பர் திரு டி.சீனிவாசன் அவர்களுக்கும்
அவர்தம் குழுவினருக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதில் பெருமைப் படுகிறேன்.

கணிதமேதை சீனிவாச இராமானுஜன்
நூலினை
தரவிறக்கம் செய்ய

நன்றி நண்பர்களே,
தரவிறக்கம் செய்து,

மாபெரும் கணிதமேதைக்கு
தங்கள் இதயத்திலும், இணையத்திலும்
ஓர் இடம் கொடுத்தமைக்கு
மீண்டும் நன்றி நண்பர்களே.


89 கருத்துகள்:

 1. கரந்தை ஜெயக்குமார் சாதனை ஜெயக்குமார் என்பதை நிரூபிக்க இதுவும் ஒரு அருமையான சான்றே. தங்களின் உழைப்பும், திறமையும், நண்பர்களிடம் பழகும் பாணியும், எழுத்தின்மீதான ஈடுபாடும், சிறிதுசிறிதாக தாங்கள் பெருக்கிக்கொண்டுவரும் தொழில்நுட்ப அறிவும் தாங்கள் தமிழகத்தில் ஒரு மிகச்சிறந்த சாதனையாளராக உருவாக உதவுகிறது என்பதை நான் நன்கறிவேன். உங்களுடைய முயற்சிகளுக்கும், எழுத்துப்பணிக்கும் என்றும், எந்நிலையிலும் துணை நிற்பேன். வரலாற்றை வரலாற்றில் பதிந்த தங்களின் சீரிய பணிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் உதவியியும் ஆலோசனைகளும் என்றும் வேண்டும் ஐயா
   நன்றி

   நீக்கு
 2. மிக்க மகிழ்ச்சி.ஐயா. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. அன்பின் ஜெயக்குமாருக்கு வணக்கம். நான் என் “நினைவில் நீ” என்னும் நாவலைத் தொடராக வெளியிட்டு இருந்தேன். புத்தக வடிவில் கொண்டு வரவில்லை. இதை மின் நூலாக்க வழி நடத்துவீர்களா.?நன்றியுடனும் வாழ்த்துக்களுடனும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் எழுத்துக்களை மின்னூலாக்க
   நண்பர் திரு டி.சீனிவாசன் அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார் ஐயா
   தாங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,
   நினைவில் நீ என்னும் தொடர்
   எந்த ஆண்டு, எந்த மாதம், எந்த தேதியில் இருந்து
   எந்த ஆண்டு எந்த மாதம், எந்த தேதிவரை வெளிவந்துள்ளது என்பதை தெரிவித்து, திரு சீனிவாசன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள், அவர் மின்னூல் உருவாக்கி வழங்குவார்
   திரு டி.சீனிவாசன்
   tshrinivasan@gmail.com

   நீக்கு
 4. அன்புள்ள ஜெயக்குமார்..

  வணக்கம். இன்னும் பலஉயரங்களைத் தொடுவீர்கள. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே!

  பதிலளிநீக்கு
 6. மாபெரும் கணிதமேதையின் பெருமைகளைத் தாங்கள் தொகுக்கும் போது - இந்த எளியேன் செய்த சிறு உதவியினையும் நினைவில் கொண்டிருப்பது தங்கள் பெருந்தன்மை!..

  என்றும் மறக்க இயலாத மாமனிதருக்குச் சிறப்பு செய்த தங்களின் பணி போற்றத்தகுந்தது..

  மேலும் பல சாதனைகளைச் சிறப்புடன் செய்து - வாழ்க பல்லாண்டு!..

  பதிலளிநீக்கு
 7. மனமாரப் பாராட்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 8. மிகவும் மகிழ்ச்சி ஐயா... மேலும் பல பகிர்வுகள் மின் நூலாக வர வேண்டும்... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 9. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்துகள். சாதனையாளரான ராமாநுஜர் குறித்த உங்கள் மின்னூலைத் தொடர்ந்து மேலும் பல சாதனைகளைச் செய்யவும் வாழ்த்துகள். என்னுடைய சில நூல்களும் அதில் இடம் பெற்றிருக்கின்றன. "ஓம் நமசிவாயா" (திருக்கயிலை யாத்திரை), உபநயனம், ஶ்ரீராமனின் பாதையில், கதை கதையாம் காரணமாம், ராமாயணம் , யோகாசனம் போன்ற என்னுடைய மின்னூல்களும் அங்கே கிடைக்கும். இயன்றபோது தரவிறக்கிப் படித்துப் பார்க்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோதரியாரே
   தங்களுடைய நூல்களை அவசியம் தரவிறக்கம் செய்து படிக்கின்றேன்
   நன்றி சகோதரியாரே

   நீக்கு
 11. பாராட்டப்பட வேண்டிய மிக நல்ல முயற்சி. இதற்கு ஓர் குழுவாக செயல்பட்டு உதவியுள்ள அனைத்து நல் இதயங்களுக்கும் என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். தகவலுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 12. //வியப்பதைத் தரவி வேறு வழியில்லை எனக்கு.//

  தரவி = தவிர

  என மாற்றினால் படிக்க நன்றாக இருக்கக்கூடுமோ ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தவிர என்ற வார்த்தையினைத்தான் தவறாக தட்டச்சு செய்து விட்டேன் ஐயா
   சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஐயா
   திருத்தி விட்டேன்

   நீக்கு
 13. மின்நூல்கள் பெருக வாழ்த்துகிறேன். உங்கள் வழியில் சீக்கிரம் சேர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா
   மின்னூல் உலகிற்குத் தங்களை அன்போடு வரவேற்கின்றேன் ஐயா

   நீக்கு
 14. எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! இன்னும் பல நூலகள் தாங்கள் வெளிக் கொண்டுவர வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 15. Excellent.Technological development and hard works makes yester years impossible into possible now.Tamil language is second to none and great writings are there in this languge too.Remember G.U.Pope learnt tamil just to enjoy reading of Thivuvachaham and later ofcourse he translated that into english.Mr.jayakumar,you are at full liberty to transfer all my writings into e reading and please discuss with Mr.Srinivasan about cost aspect and let me know.cograts.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா
   மின்னூலாக மாற்றுவதற்கு செலவு எதுவும் கிடையாது ஐயா
   கணினியில் தட்டச்சு செய்து வழங்க வேண்டும்
   திரு சீனிவாசன்அவர்களுடன் அவசியம் பேசுகிறேன் ஐயா

   நீக்கு
 16. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் நண்பரே மென்மேலும் இதுபோன்ற பணிகள் மலர வாழ்த்துகள்
  தமிழ் மணம் 9

  பதிலளிநீக்கு
 17. மின்நூலுக்கு வாழ்த்துக்கள்
  பல நம்பிக்கைகளை எனக்குள் தந்த பதிவு..

  பதிலளிநீக்கு
 18. தங்கள் வலைத்தளத்தில் ”கணிதமேதை சீனிவாச இராமானுஜன்” – தொடராக வந்தபோது வாசித்துள்ளேன். அப்புறம் இந்த நூலை, சென்ற ஆண்டு மதுரையில் நடந்த வலைப் பதிவர்கள் மாநாட்டில் வாங்கிய இந்த நூல் இப்போது எனது வீட்டு நூலகத்தில் உள்ளது.


  உலகெலாம் உணர்ந்து ஓதும் வண்ணம் இந்த மின்நூலை வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்! எங்களது கம்ப்யூட்டரில் உள்ள e-library –க்காக வேண்டி இந்தநூலை தரவிறக்கம் (DOWNLOAD) செய்து கொண்டேன்; நன்றி!
  த.ம.10

  பதிலளிநீக்கு
 19. வாழ்த்துக்கள் நண்பரே!
  தங்களின் முதல் மின்னூல் பற்றி இங்கு பதிவிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. கணிதமேதை ராமனுஜன் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். தங்களின் நூல் மூலம் இன்னும் அதிகமாக தெரிந்துக் கொள்வேன். பதிவுக்கு நன்றி!
  த ம 12

  பதிலளிநீக்கு
 20. தமிழ் கூறும் நல்லுலகில் உங்களின் ,கணிதமேதை ராமனுஜன் பற்றிய மின்னூல் நிலைபெற்று பலருக்கும் ஊக்கம் தரும் என்பதில் ஐயமே இல்லை!வாழ்த்துகள் :)

  பதிலளிநீக்கு
 21. வாழ்த்துகள்.தொடரட்டும் இது போன்ற முயற்சிகள்.

  பதிலளிநீக்கு
 22. வாழ்த்துக்கள் சார்/ஏற்கனவே வெளி வந்த புத்தகத்தை மின் நூலாக மாற்றலாமா,,,?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புத்தகத்தை மின்நூலாக மாற்றலாம் நண்பரே
   திரு சீனிவாசன் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்
   நன்றி நண்பரே

   நீக்கு
 23. அய்யா,

  இந்த அரிய நூலை " கிரியேட்டிவ் காமன்ஸ் " வழியே " இணைய நூலாய் வெளியிட்டது உங்களின் மாபெரும் சமூக நோக்கினை உணர்த்துகிறது.

  பெருமைபடுகிறேன் அய்யா...

  தரவிறக்கம் செய்துவிட்டேன். படித்துவிட்டு நிச்சயமாய் கருத்திடுவேன்.

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொறுமை பற்றிய தங்களின் பதிவு உண்மையிலேயே புதையல்தான் நண்பரே
   நன்றி

   நீக்கு
 24. மிக்க மகிழ்ச்சி !வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேலும் பல நூல்கள் வரவேண்டும் எனவும் வாழ்த்துகிறேன் ...!

  பதிலளிநீக்கு
 25. மிக்க மகிழ்ச்சி ஐயா! வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 26. அன்பு வலைப்பூ நண்பரே!
  நல்வணக்கம்!
  இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
  தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

  முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்

  அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
  "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
  உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
  ஆம்!

  கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.

  ( http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form )

  சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.

  தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.

  மற்றும்!

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  TM 16

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வலைப் பூ ஓராண்டினை நிறைவு செய்திருப்பது அறிந்து மகிழ்ந்தேன் நண்பரே
   தொடரட்டும் தங்களின் எழுத்துப் பணி
   சாதனைகள் பலவற்றைப் படைக்கட்டும் தங்களின் வலைப் பூ
   வாழ்த்துக்கள் நண்பரே
   வாழ்த்துக்கள்

   நீக்கு
 27. வாழ்த்துகள் நல்ல முயற்சி . மின்னூலில் ஜோதிஜி அவர்கள் முன்னோடி எந்த ஒரு தகவலையும் தமிழில் தேடினால், ஆங்கிலத் தேடலில் கிடைப்பது போல நிறைய தகவல்கள் கிடைப்பதற்கு இது போன்ற முயற்சிகள் அவசியம் தேவை. தொடரட்டும்.நானும் முயற்சிக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா
   தங்களின் எழுத்துக்களையும் மின்னூலாக்குங்கள்
   வாசிக்கக் காத்திருக்கிறோம்

   நீக்கு
 28. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  மாற்றம் என்பதே மாறாதது என்பது பொதுவழக்கு. அதனை சரியாக பின்பற்றி நடந்தும், உலகில் ஏற்படக் கூடிய தொழில்நுட்ப முன்னேற்றங்களை அவ்வப்பொழுது தன்னுடைய படைப்புகளில் பயன்படுத்தக்கூடியவர் திரையுலகில் பத்மஸ்ரீ கமல்ஹாசன் என்று குறிப்பிடுவார்கள். இணைய உலகின் கமல் நீங்கள்தான் என்று நான் உரத்தக் கூறுகிறேன். மேலும் மேலும் தாங்கள் சாதனை படைத்து நம் தாய் மொழிக்கும் படைப்புலகிற்கும் சேவை செய்ய வாழ்த்துகிறேன். அதற்கு பின் அணிலாக உதவவும் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 29. வாழ்த்துக்கள் நண்பரே .
  படித்துவிட்டு கருத்து சொல்கிறேன் .மேலும் நீங்கள் நிறைய நூல்கள்
  வெளியிடவேண்டும் என் வாழ்த்துகிறேன் .

  பதிலளிநீக்கு
 30. வாழ்த்துக்கள் ஐயா,,,, படிக்க தொடங்கி விட்டேன்

  பதிலளிநீக்கு
 31. வணக்கம் அண்ணா.
  பிரமாதமான விசயம், மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா. தரவிறக்கம் செய்து படிக்கிறேன். மேலும் பல வெற்றிகள் காண மனம் நிறைந்த வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 32. மனமார்ந்த வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 33. மின் நூல் நன் நூலாக மாறி எல்லோருக்கும் முன்(னோடி) நூலாக பரிணமாம் பெற வாழ்த்துகள்
  உங்களது முயற்சிகள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள் அய்யா!.

  பதிலளிநீக்கு
 34. மின்நூலுக்கு வாழ்த்துக்கள்!!
  எழுத்துக்கள MONEYயாக்காது மின்னாக்கியது
  சந்தோஷம்.

  பதிலளிநீக்கு
 35. வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 36. வாழ்த்துக்கள் சகோ, தாங்கள் இன்னமும் மண்ணின் மைந்தர்களைத் தோண்டுங்கள் நாங்கள் தொடர்கிறோம், அதன் முலம் இன்னும் பல நூல்களைத் தாருங்கள்.நன்றி.மின்நூலுக்கும்.

  பதிலளிநீக்கு
 37. தாமத வருகைக்கு மன்னிக்கவும் சகோ.
  தாங்கள் இன்னமும் உச்சம் தொட வாழ்த்துக்கள். உதவிய அன்புள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாமதமானால் என்ன சகோதரியாரே
   வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

   நீக்கு
 38. மிக்க மகிழ்ச்சி.ஐயா. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 39. எழுத்தாளார்களுக்கு பயனுள்ள தகவல்..இனி அவர்கள் நூல்கள் மின்னூலக உலகம் முழுவதும் பரவட்டும்,,...உடுவை

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு