28 பிப்ரவரி 2016

செஞ்சோற்றுக் கடன்




பெற்ற அன்னையை அன்னாய் என்றுவாய்
பெருக அழைக்கவும் நேரமே யில்லை
உற்றார் உறவினர்க்காக உழைக்க
ஒருநாள் ஒருநொடி இருந்ததே இல்லை

கற்றவர் தமிழர் என்னுமோர் உயர்நிலை
காண வேண்டி இல்லந் துறந்து
முற்றுங் காலத்தைத் தமிழ்த் தொண்டாக்கினோன்
வாழ்க தமிழ் முனிவன் திருப்பெயர்.

     பெற்ற அன்னையை, அம்மா என மனம் மகிழ அழைத்து மகிழவும், உற்றார் உறவினர்க்காக உழைத்திட, ஒரு நாளைக் கூட ஒதுக்கிடாமல், ஒரு நாளின் ஒரு மணி நேரத்தைக் கூட ஒதுக்கிடாமல், ஒரு மணியின் ஒரு நிமிடத்தைக் கூட ஒதுக்கிடாமல், தமிழ் தமிழ் தமிழ் என நெஞ்சம் துடிக்கத் துடிக்க, அயராது பாடுபட்டிருக்கிறார் ஒரு மனிதர், ஒரு மாமனிதர் என்பதை நினைக்கும் பொழுதே நெஞ்சம் நெகிழ்கிறதல்லவா, விழிகள் வியப்பால் விரிகின்றன அல்லவா.

22 பிப்ரவரி 2016

ராபிஸ்



இது ஒரு வைரஸ். இந்த வைரஸ் நரம்பு மண்டலத்தின் வழியே, மெல்ல மெல்ல, மேல் ஏறி, நெஞ்சுப் பகுதியின் வழியாக, கழுத்தைக் கடந்து, மூளையை நோக்கிப் படையெடுக்கும்.

    மூளையைத் தொட்டு விடுமேயானால், இந்த வைரஸ்ஸின் வேகமும், உற்சாகமும் இரட்டிப்பாகி, வெகுவேகமாய் பல்கிப் பெருகும். மூளை மெல்ல மெல்ல வீங்கத் தொடங்கும்.

     உடலின் தசைகள் வலுவிலக்கும். தண்டுவடம் மெல்ல மெல்லக் கூனிக் குறுகும். நிற்க இயலாத நிலையில், உடல் தரையில் தவழத் தொடங்கும்.

15 பிப்ரவரி 2016

கரைவெட்டி



கடந்த 7.2.2016 ஞாயிற்றுக் கிழமை, உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், உடன் பணியாற்றும் சக ஆசிரியரும், உறவினருமான திரு மு.பத்மநாபன் அவர்களின், மகளின் திருமணம் அரியலூரில் நடைபெற்றது.

    உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியரும் நண்பருமான திரு வெ.சரவணன் அவர்களும், நண்பர்கள் திரு க.பால்ராஜ், திரு பா.இராசேந்திரன், திரு எஸ். சேகர், திரு பா.கண்ணன், திரு ஆர்.அறிவழகன், நான் மற்றும் எனது மனைவி என எட்டு பேர் வாடகை மகிழ்வுந்தில் அரியலூர் சென்றோம். திருமண நிகழ்வில் பங்குபெற்றோம்.

   தஞ்சை திரும்பும் வழியில் கீழப்பழுவூர் வந்தடைந்தோம். கீழப்பழுவூர், திருமானூர் சாலையில், வலது புறம் திரும்பிப் பயணிக்கும் சாலையில், ஓர் பெயர்ப் பலகை.

08 பிப்ரவரி 2016

வலைக்காடு

  



 திரைப்படம் தொடங்கி பத்து நிமிடங்கள் கூட கடந்திருக்காது.

     உங்கள் திரையரங்கில் ஒரு வெடிகுண்டு வைத்திருக்கிறோம். முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

       தொலைபேசி இணைப்பு துண்டிக்கப் பட்டது.

      இதோ இப்படீங்கறதுக்குள்ளாக மொத்த அரங்கமும் காலியாகிறது. தீயணைப்புத் துறையினர் வந்து சேர்வதற்குக் காலதாமதமாகும் சூழல்.

      உள்ளே புகுந்து தேடலாம் என்று யோசனை வருகிறது. ஆனால் அதைச் செய்யும் தைரியம் மட்டும் யாருக்கும் இல்லை.

     டேய் டைசன், இங்கே வா, உள்ளப் போயி எங்கயாச்சும் குண்டு இருக்கான்னு பாரு.

01 பிப்ரவரி 2016

கல்லூரிப் பேராசான்




     ஆண்டு 1981. ஜுன் மாத இறுதி. தஞ்சாவூர், மன்னர் சரபோசி அரசினர் கல்லூரி. அக்கல்வி ஆண்டின் முதல் நாள்.

     இளங்கலை கணித வகுப்பு

     தஞ்சாவூர், கரந்தை, உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற நான், இதோ, இளங்கலை கணித வகுப்பில், கடைசி வரிசையில்.