அடிக்கடி
செயின்
கழன்றுவிடும்.
பெடலுடைந்த
சைக்கிளில்
என்னைப்
பள்ளியில் இறக்கிவிட்டு
தேநீர்
கடைக்கு வேலைக்குப் போவார்
என்
அண்ணன்.
செயின்
கழன்றுவிடும்.
பெடலுடைந்த
சைக்கிளில்
என்னைப்
பள்ளியில் இறக்கிவிட்டு
தேநீர்
கடைக்கு வேலைக்குப் போவார்
என்
அண்ணன்.
பல தடைகளைக் கடந்து, திருமணமான மகிழ்ச்சியில்,
புகுந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கிறார்,
அந்த மருமகள்.
அடுத்த நொடி, மாமியார் மயங்கி விழுகிறார்.
சகுனமே சரியில்லை.
ஜாதகத்துல தோஷம்
ஆளுக்கு ஆள், மனம் போன போக்கில், குற்றச்சாட்டுகளை
அடுக்கிக் கொண்டே போக, யாரோ ஒருவர், தண்ணீர் கொண்டு வந்து தெளிக்க, மாமியார், கண் விழிக்கிறார்.
நாலும் இரண்டும் நனிநன்று,
நம்மதுரை
பொற்றா மரைக்குளம்
நன்று, பொறுப்புடன்
நற்றமிழ் கற்றிடல் நன்று
இவர் தனது கவிநூலை இப்படித்தான் தொடங்குகிறார். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பார்கள்.
இவரோ, இரண்டை, நான்காக்கி ஒரு நூல் ஆக்கியிருக்கிறார்.