எந்தை எம்மை விட்டுப் பிரிந்து,
ஓராண்டு ஓடிவிட்டது.
ஓராண்டு முடிவதற்குள், ஒரு நினைவு மலர் வெளியிட
வேண்டும் என்ற ஆவல் எனக்கும், என் மனைவிக்கும்.
எந்தையின் நட்பு எல்லை பெரியது.
தான் பணியாற்றிய, புள்ளியியல் துறைக்கு வெளியிலும்,
பரந்து பட்ட பழக்கம் உடையவர்.
எந்தையின் அலைபேசியிலும், தொலைபேசிக் குறிப்பேட்டிலும்
பதிவாகி இருந்த, நட்புகளைத் தொடர்பு கொண்டேன்.
நினைவலைகள் கட்டுரைகளாய், கவிதைகளாய், நேரிலும்,
அஞ்சல் வழியிலும், வாட்ஸ்அப் வாயிலாகவும் வந்து சேர்ந்தன.
உமாமகேசுவர மேனிலைப் பள்ளி ஓவிய ஆசிரியரும், நண்பருமான
திரு சு.கோவிந்தராஜன் அவர்கள்,
நூலுக்கான முகப்பு அட்டையினை,
காண்போர் மகிழும் வகையில், வடிவமைத்துக் கொடுத்தார்.
அப்பா
திரு சி.கிருட்டிணமூர்த்தி
நினைவு மலர்
வெளியீட்டு விழா
வெளியீட்டு விழா
என் இல்லத்தில்
நடைபெற்றது.
சிங்கப்பூர் மேனாள் விரிவுரையாளர்
கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்கள்
விழாவிற்கு முன்னிலை வகித்தார்.
கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளர்
செம்மொழி வேளிர்
திரு ச.இராமநாதன் அவர்கள்
தன் உடல்நிலையினையும் பொருட்படுத்தாது
வருகை தந்து,
நூலினை வெளியிட,
சிங்கப்பூர் தமிழ்த் துறை விரிவுரையாளர்
திரு மாரிமுத்து அவர்கள்
முதற்படியினைப் பெற்றுச் சிறப்பித்தார்.
சிங்கப்பூர் தமிழ்த் துறை விரிவுரையாளர்
திரு கோட்டி திருமுருகானந்தம் அவர்கள்
நூலின் இரண்டாம் படியினைப் பெற்றுச் சிறப்பித்தார்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர்
திரு இரா.சுந்தரவதனம் அவர்கள்,
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்
முனைவர் கோ.சண்முகம் அவர்கள்,
நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான
திரு வெ.சரவணன் ஆகியோர்
சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
உறவுகள், நட்புகள் என
சுமார் நூற்று ஐம்பது பேர்
அப்பா
நூல் வெளியீட்டு விழாவில்
கலந்து கொண்டு
எந்தைக்குப் பெருமை சேர்த்தனர்.