29 நவம்பர் 2016

வீர வணக்கம்

நீதிபதி அவர்களே, தனக்குச் சாதகமான பாதையை நோக்கிப் பயணிப்பவன் ஒரு உண்மையான மனிதனல்ல. கடமை எத்திசையில் இருந்து அழைக்கிறதோ, அத்திசையில் பயணிப்பவனே உண்மையான மனிதன். அவனது இன்றைய கனவு, நாளைய சட்டமாகும்.

     ஏனென்றால் அவன்தான் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தவன். பல நூற்றாண்டுகளாக வரலாற்றின் பழைய பக்கங்களில் உள்ள, இரத்தம் தோய்ந்த போராட்ட நாட்களையும், பெரு நெருப்பில் அழிந்த சமூகங்களையும், அறிந்தவனால் மட்டுமே, மனித குலத்தின் எதிர்கால வாழ்வை சிந்திக்க முடியும்.     என் நாட்டு மக்கள், பலரும் பசியோடுதான் படுக்கப் போகிறார்கள். மருத்துவ வசதிகள் ஏதுமின்றிக் குழந்தைகள் கல்லறைகளை நாடுகிறார்கள். முப்பது சதவீத மக்களுக்குத், தங்கள் பெயரைக் கூட எழுதத் தெரியவில்லை. அதைவிடக் கொடுமை, தொண்ணூற்று ஒன்பது சதவீத மக்களுக்கு நாட்டின் வரலாறே தெரியவில்லை.

     நீதிபதி அவர்களே, நீங்கள் எனக்குக் கொடுக்க இருக்கின்ற தண்டனை கடுமையானதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். சிறையைக் கண்டோ அல்லது எனது எழுபது சகோதரர்களின் உயிரைக் குடித்த, இந்த கொடுக்கோல் ஆட்சியைக் கண்டோ, அஞ்சுபவனல்ல நான்.

நீங்கள் என்னை சிறையில் அடைக்கலாம்.
ஆனால்
வரலாறு என்னை விடுவிக்கும்.

அச்சம் சிறிதும் இன்றி, நெஞ்சம் நிமிர்த்தி, நிதிமன்றத்தில் உரத்தக் குரல் எழுப்பிய இவ்வீரர், தன் நாட்டின் வளங்களை எல்லாம் கொள்ளை அடித்துக் கொண்டிருந்த, அரசை அகற்றியவுடன், முதல் பணியாய், தன் தலையாயப் பணியாய் செய்தது என்ன தெரியுமா?

ஓர் இயக்கத்தைத் தோற்றுவித்ததுதான்.

எழுத்தறிவு இயக்கம்.

தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளுங்கள்
தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள்
துதான் எழுத்தறிவு இயக்கத்தின் தாரக மந்திரம்.

     சுரங்கத் தொழிலாளர்கள் பணி முடிந்ததும், மாலையில் நேராக வகுப்பறைகளுக்குப் படையெடுத்தனர். கடப்பாறையை வாசலுக்கு வெளியே வைத்துவிட்டு, எழுதுகோல் ஏந்தி எழுதக் கற்றுக் கொண்டார்கள். மரம் அறுப்பவர்கள் கத்தியை மூலையில் வைத்துவிட்டு, புத்தகத்தை மடியில் வைத்துக் கொண்டார்கள்.

     பிள்ளைகள் பெற்றோர்களுக்குப் பாடம் நடத்தினார்கள். பற்களைத் தொலைத்த மூதாட்டிகளும் படிக்கத் தொடங்கினார்கள்.

     ஒரே ஆண்டு நண்பர்களே, சொன்னால் நம்பமாட்டீர்கள், ஒரே ஆண்டில், எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் சதவீதம் 98.2 ஆக உயர்ந்தது. மாணவர்களிடமாகட்டும், படிக்கச் சென்ற முதியவர்களிடமாகட்டும், கட்டணமாக ஒரு பைசாவைக் கூட அரசாங்கம் வசூலிக்கவில்லை. அனைவருக்கும் இலவசக் கல்வி.

இந்நாட்டின் அடித்தளம் பள்ளிக் கூடங்களில் இருக்கிறது

இந்த நாட்டின், இன்றைய முன்னேற்றத்தின் ரகசியமும் இதுதான்

ஒன்றல்ல இரண்டல்ல
முழுதாய் 47 ஆண்டுகள்
நாட்டை வழிநடத்தியவர்

உலகின் முன்னனி நாடுகளுள்
ஒன்றாய் தன் நாட்டை உயர்த்தியவர்.

ஒன்றல்ல, இரண்டல்ல
638 முறை
கொலை முயற்சி தாக்குதல்களை
வெற்றிகரமாய் முறியடித்தவர்.

தன் 90 வது வயதில்
இயற்கையின் கரங்களில் தன்னை ஒப்படைத்திருக்கிறார்.ஃபிடல் காஸ்ட்ரோ

நிம்மதியாக உறங்கட்டும்

வீர வணக்கம் செலுத்துவோம்
34 கருத்துகள்:

 1. உண்மை. ஆனால் அவருக்கும் கடுமையான எதிர்ப்பு அவருடைய நாட்டு மக்களிடையே எழுந்தது. எப்போதுமே ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெற முடியும். வரலாறு இத்தகையவர்களைதான் நினைவில் வைத்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 2. அன்புள்ள ஜெயக்குமார்..

  மிக அருமையான உண்மையான உணர்வின் பதிவு. என் வீர வணக்கங்கள் சிம்ம சொப்பனத்திற்கு.

  பதிலளிநீக்கு
 3. அருமையான பகிர்வு. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 4. உலக புரட்சி தலைவனுக்கு செவ்வணக்கம் :)

  பதிலளிநீக்கு
 5. http://marubadiyumpookkum.blogspot.in/2016/11/blog-post_28.html

  பதிலளிநீக்கு
 6. தங்கள் பதிவை படித்த போது தமிழ்நாட்டிலும் அறிவொளி இயக்கம் நடந்ததே...நிணைவுக்கு வந்தது..

  பதிலளிநீக்கு
 7. தங்கள் பதிவை படித்த போது தமிழ்நாட்டிலும் அறிவொளி இயக்கம் நடந்ததே...நிணைவுக்கு வந்தது..

  பதிலளிநீக்கு
 8. அருமையாக எழுதி வீர வணக்கம் செலுத்தியிருகிறீகள்! தன் நாட்டை 47 ஆண்டுகள் சிறப்பாக வழிநடத்தியவருக்கு நானும் இங்கே வீரவணக்கம் செய்து கொள்கிறேன்!

  பதிலளிநீக்கு
 9. அற்புதமான பதிவு.
  வாழ்வில் முன்னுதாரணம் தேடுபவர்கள் புதிய பாதை போடமுடியாது.
  முடிவுகளைப்ப பற்றிக் கவலைப்படாமல் கடமை யாற்றுபவன் சரித்திரம் படைக்கிறான்.
  அதிகாரத்தேரின் அச்சாணியைப் பிடுங்கியவரின் பதிவுகள் சிறப்பாக இருக்கிறது.வரலாறு அவரை வணங்கும்.

  பதிலளிநீக்கு
 10. >>> கியூபாவின் அடித்தளம் பள்ளிக் கூடங்களில் இருக்கிறது..
  இந்த நாட்டின், இன்றைய முன்னேற்றத்தின் ரகசியமும் இதுதான்..<<<

  ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் புகழ் என்றும் வாழும்..

  பதிலளிநீக்கு
 11. நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மாபெரும் போராளி, மிகப் பெரும் தலைவன். அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்ததே பெருமைதான். அந்த மாவீரருக்கு வீர வணக்கங்கள்.!
  த ம 6

  பதிலளிநீக்கு
 12. சுருக்கமாக எனினும்
  சொல்லவேண்டியவைகளையெல்லாம்
  மிக அருமையாகச் சொன்னவிதம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. அருமையான பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. அவர் காலத்தில் நாம் வாழும் வாய்ப்பு கிடைத்ததே பெருமை. எனது ஆதர்ச தலைவர்களில் இவர் முக்கியமானவர். வரலாறு படைத்தவர், வரலாறானவர். கடின உழைபபிற்குப் பின் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.

  பதிலளிநீக்கு
 15. வீரவணக்கத்தில் பங்கு கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 16. He was a dictator and never allowed dissent. So in land of blinds one eyed man is a king.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் கரந்தை ஜெயகுமார் ஒன்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் கிடையாது. இங்கேயும் உங்கள் வக்கிர சிந்தனையை காண்பிக்க வந்து விட்டீர்களா?

   நீக்கு
 17. வரலாற்று நாயகனைப் பற்றிய அருமையான பதிவு. அருமைத் தலைவனுக்கு வீர வணக்கம்

  பதிலளிநீக்கு
 18. உன்னத தலைவனை நாடு இழந்து விட்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 19. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  வரலாற்று நாயகன் என்று சொல்வதா? மக்கள் நாயகன் என்று சொல்வதா? உலகத் தலைவர்களுக்கே வழிகாட்டும் நாயகன் என்று சொல்வதா? மக்களை இந்த அளவிற்கு நேசித்து 49 ஆண்டுகள் ஆட்சி செய்து மக்களின் பேரன்பினை உண்மையிலேயே பெற்ற ஈடு இணையற்ற மாமனிதன் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் புகழ் இவ்வுலகு உள்ளவரை நிலைத்திருக்கும். பொது மக்களுக்கு மிகவும் அவசியமான இரண்டு விசயங்களில் (கல்வி மற்றும் மருத்துவம்)இலவசமாகவும் தரமானதாகவும் கவனத்தை செலுத்தி சாதித்து காட்டி விட்டார்.அனைத்து நாடுகளுக்கும் அவருடைய ஆட்சி மிக சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

  பதிலளிநீக்கு
 20. when not worthy persons live long a noteworthy person passed away! You have a rich tribute to the departed soul.

  பதிலளிநீக்கு
 21. அற்புதமான பதிவு.வீரவணக்கங்கள் வரலாற்று நாயகனுக்கு.நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வீரவணக்கங்கள்.
  புரட்சியாளர்களின் ஆதர்ச நாயகன் காஸ்ட்ரோ.

  பதிலளிநீக்கு
 23. வீரவணக்கங்கள்.
  புரட்சியாளர்களின் ஆதர்ச நாயகன் காஸ்ட்ரோ.

  பதிலளிநீக்கு
 24. நல்லதொரு பகிர்வு!!! வீரவணக்கங்கள்! காஸ்ட்ரோ வைப் போல் நம்மூர் ஆட்சியாளர்கள் நினைத்திட வேண்டும் ஒரு நாட்டிற்கு முதற்கண் கல்வி என்பதை!

  பதிலளிநீக்கு
 25. மிக அருமை.
  நல்ல பகிர்வு!
  தமிழ் மணம் 7
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 26. வணக்கம்,
  என் பெயர் மரியன் சேவிக்,
   இங்கே ஒரு கடனைத் தேடிக்கொண்டவர்களுக்கு இந்த நடுத்தரத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன்.
   நான் சுமார் 300 மில்லியன் ரூபா கடனை கடனாக பெற்றுக்கொண்டேன். கடனைப் பெறாமல் 20 மில்லியன் ரூபாய் இழந்தது.
  நான் இரண்டு வெவ்வேறு பெண்கள் இரண்டு முறை திருப்பி
  ஐக்கிய நாடுகள், இன்னும் என் கடன் பெறவில்லை, நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன், என் வணிக செயல்முறை அழிக்கப்பட்டது.
  ஜனவரி 2017 ஜனவரியில், கடவுளுக்கு மகிமை உண்டாகட்டும், ஒரு கடன் வாங்குபவர், திருமதி இவானா லுக்காவுக்கு என்னை அறிமுகப்படுத்திய ஒரு நண்பரை நான் சந்தித்தேன், அவள் கடன் நிறுவனத்தில் கடன் வாங்க எனக்கு உதவியது. எனது அடையாள அட்டையின் நகல் மற்றும் எனது கணக்கு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டபின் எனது கடனை ஏற்றுக் கொண்டேன், அது நம்பமுடியாததாக இருந்தது, மற்றவர்களுடைய அதே பணத்தை நான் எடுத்துக் கொண்டேன் என்று நினைத்தேன், நான் மீண்டும் அவற்றைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்குள் கடன், "ஆம்" என் வங்கியில் இருந்து ஒரு விழிப்புணர்வு என் கணக்கில் ஒரு வைப்பு இருந்தது என்று நான் எடுத்துக் கொண்டேன்.
   .
   பல கடத்தல்காரர்கள் அங்கு இருப்பதாக ஆலோசனை செய்ய இந்த வாய்ப்பை நான் பயன்படுத்த விரும்புகிறேன், எனவே நீங்கள் ஒரு கடனைத் தேவைப்பட்டால், கடனாக கடன் வாங்க விரும்பினால், திருமதி இவானா லுக்கா மூலம் பதிவு செய்யலாம் மற்றும் நீங்கள் மின்னஞ்சல் மூலம் அவளை தொடர்பு கொள்ளலாம்: (ivanaluka04@gmail.com ). என் மின்னஞ்சல் மூலம் என்னை தொடர்பு கொள்ளலாம்: (mariansavic271@gmail.com)
  உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால். அதன்
   உண்மையான, நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து வழிமுறைகளையும் விண்ணப்ப செயல்முறைகளையும் பின்பற்றவும்.
  தாய் ஒரு தகுதியுடைய கடன், நான் தேவைப்பட்டபோது எனக்கு உதவினார், அதனால்தான் நான் அவளது நல்ல செயல்களைப் பற்றி சாட்சி கூறுகிறேன்
  நன்றி.

  பதிலளிநீக்கு
 27. வணக்கம்,

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு