ராஜகோபாலன்
அந்த இளைஞரின் பெயர் ராஜகோபாலன்
கவிதைகளின் மீது அளவிலா ஆர்வம்
பாரதிதாசன் பாடல்களின் மீதோ, தீராத காதல்
பாரதிதாசனின் பாடல்களைப் படிக்கப் படிக்க, அந்த
இளைஞனின் உள்ளத்தில் ஒர் ஆசை, அவரையும் அறியாமல் குடியேறியது
பாரதிதாசனைப் பார்க்க வேண்டும்
பாரதிதாசனுக்குப் பணிவிடைகள் செய்து, காலத்தைக்
கழிக்க வேண்டும்
நாள் ஆக, ஆக இந்த ஆசை. இந்த எண்ணம் வலுவாகிக்
கொண்டே போனது.
பாரதிதாசனைப் பார்க்க வேண்டுமானால், புதுச்சேரிக்குச்
சென்றாக வேண்டும்.
ஆனால் கையிலோ காசுக்கு வழியில்லை
ஏதேனும் வேலை கிடைக்குமா என விசாரித்துப் பார்த்தார்
ஒரு வீட்டிற்குச் சுண்ணாம்பு அடிக்கும் வேலை
கிடைத்தது
தயங்காமல் சுண்ணாம்பு அடித்தார்
கூலியைப் பெற்றார்
புதுச்சேரிக்குப் பேருந்தைப் பிடித்தார்
பாரதிதாசனை நேரில் கண்டு பரவசப்பட்டார்.
தங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொண்டு,
உங்களோடு இருந்து விடுகிறேனே
இளைஞனைப் பற்றி விசாரித்த பாரதிதாசன், மென்மையாக
மறுத்தார்.
அப்பா, அம்மாவுக்குச் சொல்லாமல், அவர்களைத் தவிக்க
விட்டுவிட்டு, நீ வந்தது தப்பு.
வேணும்னா அவங்க அனுமதியோடு வா
பாவேந்தரின், பண்பில், அன்பான வார்த்தைகளில்,
நெகிழ்ந்துபோன, அந்த இளைஞன், பாரதிதாசனுக்குத் தாசனாகவே மாறிப்போனார்.
தனது பெயரையும் மாற்றிக் கொண்டார்.
கனக. சுப்பு ரத்தினம்
சுப்பு ரத்தினம்
சுப்பு ரத்தின தாசன்
சுப்பு ரத்தின
தாசன்
சுரதா
இவர்தான் சுரதா