03 பிப்ரவரி 2015

16 வயது தலைமையாசிரியர்


ஆண்டு 2002 இல் ஓர் நாள். மேற்கு வங்கத்தின் பெர்காம்பூரில் உள்ள, ராஜ் கோவிந்தா சுந்தரி வித்யாபீத் அரசுப் பள்ளி. பிற்பகல் 2.00 மணி. பள்ளியின் அன்றைய அலுவல் முடிவடைந்து விட்டதை தெரிவிக்கும் வகையில் மணி ஓசை ஒலிக்கின்றது. அரை நாள் மட்டுமே செயல் படும் பள்ளி அது.

     மாணவ, மாணவியர் உற்சாகமாக பள்ளியை விட்டு, தங்கள் வீடுகளை நோக்கி, கூட்டம் கூட்டமாக சிரித்துப் பேசிக் கொண்டே நடக்கத் தொடங்கினர்.

      ஒரு மாணவன் மட்டும், புத்தகப் பையினை தோளில் சுமந்தபடி, அவ்வூரையும் தாண்டி நடந்து சென்று கொண்டிருந்தான். ஒன்பது வயதே நிரம்பிய மாணவன் அவன்.


      பேச்சுத் துணைக்குக் கூட, யாருமில்லாமல், வயல் வெளிகளையும், காடு மேடுகளையும் கடந்து நடந்து கொண்டிருக்கிறான்.

      அம்மாணவன் தன் வீட்டினை அடைய, ஐந்து கிலோ மீட்டர் தொலைவினையும் தாண்டி, நடந்தாக வேண்டும். எப்படியும் அச்சிறுவன் தன் வீட்டினை அடையும் போது மணி நான்கு ஆகிவிடும்.

      கடந்த நான்கு வருடங்களாக இதே போல்தான் தனியொரு ஆளாக, நடந்தே வருகிறான், நடந்தே போகிறான். காலையில் இரண்டு மணி நேரம், பிற்பகலில் இரண்டு மணி நேரம் நடந்து கொண்டே இருக்கிறான்.

      முர்ஷிதாப்த். இம்மாணவன் வசிக்கும் கிராமத்தின் பெயர். எதற்காக இம்மாணவன், தன் கிராமத்தை விட்டுவிட்டு, தொலைவில் உள்ள வேறொரு கிராமத்திற்குக் கால் தேய தேய நடந்து வந்து படிக்க வேண்டும் என்று தோன்றலாம். அதற்குக் காரணம் இருக்கிறது. இவனது கிராமத்தில் பள்ளிக் கூடம் என்பதே கிடையாது.

       நண்பர்களே, உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். முர்ஷிதாபாத் கிராமத்தில், பள்ளி மட்டுமல்ல, எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கூட யாரும் கிடையாது.

       முர்ஷிதாபாத் கிராமத்தின் பழ வியாபாரி நஷ்ருதீன். இக்கிராமத்தில், யாருக்குமே வராத ஓர் ஆசை, இவரது உள்ளத்தில் மட்டும், எப்படியோ வந்து எட்டிப் பார்த்தது. நாம்தான் படிக்கவில்லை, நமது மகனாவது படிக்கட்டுமே.

       எனவே, தனது மகனை ஐந்து கிலோ மீட்டருக்கும் மேல் தொலைவில் உள்ள, பெர்காம்பூர் அரசுப் பள்ளியில் சேர்த்தார்.

      முர்ஷிதாபாத்தில் இருந்து, பள்ளிக்குச் செல்லும் ஒரே மாணவன் பாபர் அலி மட்டும்தான்.

      வெயில் உச்சந் தலையில் சுளீரென்று இறங்க, இதோ பாபர் அலி, தன் வீடு நோக்கி நடந்து கொண்டிருக்கிறான்.

      கடும் வெயிலில் இருந்து தப்பிக்க, ஒரு மரத்தடி நிழலில் சிறிது நேரம், இளைப்பாறிய, ஒன்பது வயதுச் சிறுவன், பாபர் அலியின் உள்ளத்தில், திடீரென்று ஓர் எண்ணம், அக்கடும் வெயிலிலும், மின்னலாய் தோன்றியது.

      நமது கிராமத்தில் இருந்து, நான் ஒருவன் மட்டும் படித்தால் போதுமா? என் வயதை ஒத்த, என் கிராமத்து நணபர்கள், ஏடெடுத்து எழுதுவது எப்போது? நூலெடுத்துப் படிப்பது எப்போது?

      எனது நண்பர்கள் எல்லாம், காடுகளில் சுள்ளி பொறுக்கும் வேலையையும், ஆடு மாடுகளை மேய்க்கும் வேலையையும் அல்லவா செய்து வருகிறார்கள்.

     வயலிலும், காடுகளிலும் வேலை செய்தால்தானே, இவர்களுக்கு ஒரு வேளை உணவாவது கிடைக்கும். என்ன செய்வது?

      மர நிழலில் இருந்து, வெயிலில் காலடிகளை எடுத்து வைத்து, வீடு நோக்கி நடக்க நடக்க, அந்தச் சின்னஞ் சிறுவனின் உள்ளத்தில், ஓர் உயர்ந்த எண்ணம், ஓர் உன்னதச் செயல் திட்டம், மெதுவாக, மிக மெதுவாக, கருப் பெற்று, உரு பெற்றுக் கொண்டேயிருந்தது.

         பாபர் அலி தன் கிராமத்திற்குச் சென்றதும், தன் வீட்டிற்குக் கூடச் செல்லாமல், ஓர் பாறையின் மீது ஏறி நின்று கொண்டு, வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும், சிறுவர் சிறுமியரை அழைத்தான்.

     நண்பர்களே, வாருங்கள். பள்ளி செல்ல இயலவில்லையே, படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இனியும் வேண்டாம். வாருங்கள், எழுதவும், படிக்கவும் நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். வாருங்கள், நண்பர்களே வாருங்கள்.

     பாபர் அலியின் அழைப்பினை ஏற்று ஓரிரு சிறுவர்கள் படிக்க முன் வந்தனர். அவர்களை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

    


வீட்டின் பின் புறம் உள்ள, கொல்லைப் புறத்தில் அவர்களை அமர வைத்து, அன்றைய தினம், பாபர் அலிக்கு அவனது ஆசிரியர், கற்றுக் கொடுத்த பாடத்தை, கதை போலவே, சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுத்தான். தினமும் மாலையில் ஒவ்வொரு பாடமாக, ஒவ்வொரு கதையாக சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்தான்.

      தினமும் காலை முதல் பிற்பகல் வரை, மாணவனாய் கல்வி பயிலும், பாபர் அலி, மாலை நேரங்களில், ஆசிரியராய் மாறி பாடம் நடத்தினான். எழுத்துக்களை, எண்களை மெல்ல மெல்ல, எழுதக் கற்றுக் கொடுத்தான். எழுத்துக் கூட்டிக் கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தான்.

      தொடக்கத்தில் பாபர் அலியின் அழைப்பினை ஏற்று, படிக்க வந்த சிறுவர்கள், தினமும் தொடர்ந்து, பாடம் படிக்க வருகை தரத் தொடங்கினார்கள். வகுப்புகள் நடைபெற, நடைபெற, மாணவர்களின் எண்ணிக்கையும் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே சென்றது.

      பத்து இருபது என்றிருந்த எண்ணிக்கை, நூறு, இருநூறாய் உயர்ந்தது. சிறுவர்கள் மட்டுமல்ல, தாத்தாக்களும், பாட்டிகளும் கூட, மாலை வேளைகளில், இப்பேரனின் வகுப்பிற்கு வரத் தொடங்கினர்.

      பள்ளி சென்று படிக்க இயலாதா, பக்கத்துக் கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்களும், சிறுமியர்களும், மாலை நேர வகுப்பிற்கு வரத் தொடங்கினர்.

       கூட்டம் அதிகரிக்க, அதிகரிக்க பாபர் அலியால், தனியொருவனாய், சமாளிக்க இயலவில்லை. தன் வகுப்புத் தோழர்களை உதவிக்கு அழைத்தான்.

       வகுப்புத் தோழர்கள் பத்து பேர் உதவ முன் வந்தனர். பத்து பேருக்கும் மாணவர்களை பகிர்ந்து கொடுத்தான் ஒரு வகுப்பு, பத்து வகுப்பாய், ஆல் போல கிளை விட்டுப் பரவிப் படர்ந்தது.

      ஒரு பள்ளியே, பாபர் அலியின் வீட்டுக் கொல்லைப் புறத்தில் நடை பெறத் தொடங்கியது.
          
  பாபர் அலியின் மாலை நேரப் பள்ளிக்கு விடுமுறை என்பதே கிடையாது. மழை பெய்தால் மட்டும் விடுமுறை. திறந்த வெளிப் பள்ளி அல்லவா.

         நண்பர்களே, இப் பள்ளியில் இன்று ஆயிரம் பேர் கல்வி பயின்று வருகிறார்கள். இன்றும் பள்ளி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

       2009 ஆம் ஆண்டில், இந்தியாவின், ஆங்கிலத் தொலைக் காட்சி நிறுவனமான
CNN – IBN  நிறுவனம்,
பாபர் அலிக்கு,
உண்மை நாயகன் விருது
( Real Hero Award)
வழங்கிச் சிறப்பித்தது.


அதே ஆண்டில்,
BBC வானொலி நிறுவனமானது,
உலகின் இளைய தலைமையாசிரியர்
(Youngest Head Master In the World)
என்னும் விருதினை வழங்கிச் சிறப்பித்தது.

      உலகின் இளைய தலைமையாசிரியர் விருதினைப் பெற்ற போது, பாபர் அலியின் வயது 16.

      பாபர் அலி இன்றும் மாணவராய் படித்துக் கொண்டிருக்கிறார். தலைமையாசிரியராய் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

       பாபர் அலியின் தன்னலமற்ற சேவை போற்றுதலுக்கு உரியது.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
என்பார் திருவள்ளுவர். அழிவில்லாத செல்வமாகிய கல்விச் செல்வத்தை, அனைவருக்கும் வாரி, வாரி வழங்கிக் கொண்டிருக்கும்
பாபர் அலியை
போற்றுவோம்.

வாழ்க          வாழ்க
என்று
வாழ்த்துவோம்78 கருத்துகள்:

 1. மிக்க நன்றி. ஆச்சரியப்படுத்திய தகவல்கள். அவரை வணங்கத் தோன்றுகின்றது. என் பார்வையில் இவர் தான் உண்மையான கடவுள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் கூறுவது சரிதான் ஐயா
   எழுத்தறிவித்தவன் இறைவன் அல்லவா
   நன்றி ஐயா

   நீக்கு
 2. இம்மாதிரி பாபர் அலிக்கள் நாடெங்கும் வரவேண்டும். அனைவருக்கும் கலி அறிவு போய்ச்சேரவேண்டும். பகிர்வுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 3. மேலே ‘கல்வி அறிவு’ என்று இருந்திருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. பாபர் அலியின் சேவையினைக் கண்டு கல்வி வியாபாரிகள் தலைக் குனிய வேண்டும் !
  த ம 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்வி வியாபாரிகள் தலை குனியத்தான் வேண்டும்
   நன்றி நண்பரே

   நீக்கு
 5. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  உலகின் இளைய தலைமையாசிரியர் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் செல்வன் பாபர் அலிக்கு என்னுடைய குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியாவில் எவ்வளவு ஊழல்களும் ஏமாற்று வேலைகளும் நித்தமும் நடந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கையோடு இந்தியர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு இவரைப் போன்ற நல் உள்ளங்களே காரணம். இந்த மாணவனின் மனதில் உயர்ந்த சிந்தனை ஏற்பட்ட வயது ஒன்பது என்பதை நினைத்து பார்க்கும் பொழுது அவருடைய பாரம்பரியம் மிகவும் நன்றாக இருக்கும் என்றால் மிகையாகாது. நம் நாட்டின் ஒவ்வொரு இளைஞனும் அறிந்திருக்க வேண்டிய இளைஞன் பாபர் அலி. அவருக்கு வாழ்த்துக்கள். பதிவிட்ட தங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாபர் அலி போற்றுதலுக்கு உரியவர்தான் நண்பரே
   நன்றி

   நீக்கு
 6. மிக மிக அருமை.உண்மையான நாயகனுக்கு ஒரு கோடி வணக்கங்கள்.பகிர்விற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 7. உண்மையான ஹீரோ இவர்தான். மாணவனின் செயல் போற்றத் தக்கது என்பதில் ஐயமில்லை.மாணவனின் சேவை மகிழ்ச்சி அதே வேளையில் இன்னொரு கேள்வி எழுகிறது
  இவ்வளவு பேர் படிக்கிறார்கள் பள்ளிக்கு செல்லாமல் இருக்கிறர்கள் . என்பது அரசுக்கு அவமானம் அல்லவா. அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது அந்த ஊரில் பள்ளி தொடங்கப் பட வேண்டாமா?
  30 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு வங்க கம்யூனிச ஆட்சியின் சாதனை இதுதானா? அறிவு ஜீவிகளுக்கு பெயர் போன மேற்கு வங்கத்திலா இந்த நிலை . சமூக நல அமைப்புகள் இதற்காக போராட வேண்டாமா?
  தமிழ் நாட்டில் கிட்டதட்ட பள்ளி இல்லாத ஊர்களே இல்லையே. மாணவர்கள்தான் இல்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் கூறுவது உண்மைதான் ஐயா

   ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வரை
   அவ்வூரில் பள்ளி தொடங்கப்பட்டதாக தெரியவில்லை
   ஒரு வேளை இம்மாணவர் விருது பெற்ற பிறகு அரசு அதனை அறிந்த பிறகு பள்ளி தொடங்கியிருந்தாலும் தொடங்கியிருக்கலாம்
   நன்றி ஐயா

   நீக்கு
 8. சாதனை இளைஞன் பாபர் அலி பற்றிய தகவல்களை தேடிப் பிடித்து, வலைத்தளத்தில் எல்லோரும் அறியச செய்த ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.
  த.ம.6

  பதிலளிநீக்கு
 9. பாபர் அலி மென்மேலும் வளர்ந்தோங்க இறைவனை பிராத்திக்கிறேன் நண்பரே.... வாழ்க பல்லாண்டு
  தமிழ் மணம் 8

  பதிலளிநீக்கு
 10. பாபர் அலியின் தன்னலமற்ற சேவை பாராட்டத்தக்கது.
  வாழ்க.. வாழ்க!.. - என்று வாழ்த்துவோம்!..

  பதிலளிநீக்கு
 11. மிகவும் அருமையான பயன் நிறைந்த பதிவு ....பின் தங்கிய கிராமம் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாபர் அலியாவது முன்வந்தால் ....உலகம் உயர்வடையும் ..........உடுவை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஐயா
   கிராமத்திற்கு ஒரு பாபர் அலி
   நாடு விரைந்து முன்னேறும்
   நன்றி ஐயா

   நீக்கு
 12. அரிமை அருமை! பாபர் அலி வாழ்க! உண்மையான ஹீரோ! பள்ளிகள் இல்லாத கிராமங்கள் எத்தனை இருக்கின்றன....கல்விக் கண்ணைத் திறக்காத ஒரு அரசாங்கம் அரசாங்கமா? வெட்கக்கேடு! நம் தமிழ் நாடு எத்தனையோ மேல். பள்ளிகள் பல இருந்தும் மாணவர்கல் இல்லை, ஆசிரியர்களும் இல்லைதான்...அருமையான பதிவு நண்பரே! பாபர் அலிக்கு ராயல் சல்யூட்! கோடானு கோடி வணக்கங்கள்!

  நம் சிறார்கல் பள்ளியில் சேர முடியாமல் தவிப்பது பற்றிய ஒரு அருமையான குறும்படம் பதிவர் நண்பர் காவிரிமைந்தன் தனது தளத்தில் கொடுத்திருந்தார் அதன் சுட்டி இதோ. முடிந்தால் பாருங்கள் நண்பரே! மிக அருமை...

  https://www.youtube.com/watch?v=7vLDau5QwCI#t=118

  நன்றி நண்பரெ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு ஊரில் பள்ளி இல்லாமல் இருப்பதே,அந்த அரசிற்க வெட்கக் கேடுதான் நண்பரே
   இணைப்பில் உள்ள காணொளியினை கண்டு மகிழ்ந்தேன் நண்பரே
   இது போல் எத்துனை சிறுவர்கள், ஆசையிருந்தும் பள்ளி செல்ல வழியின்றி வாடுகிறார்கள் என்பதை எண்ணும் போது வருத்தம்தான் மேலிடுகிறது
   நன்றி நண்பரே

   நீக்கு
 13. பாபர் அலியின் முயற்சி பல்லாற்றானும் பாராட்டத்தக்கது. இளம் வயதில் மிகவும் துடிப்பாகக் களத்தில் இறங்கி, தன்னை மட்டும்ன்றி தன் ஊரையும் மேம்படுத்த முயற்சி எடுத்துக்கொண்டதோடு அவர்கள் அனைவரையும் ஆர்வமாக செயல்பட வைத்த விதம் பாராட்டத்தக்கது. இன்றைய சமுதாயத்திற்கு பல பாபர்அலிகள் தேவை. நல்ல உழைப்பாழனை, சிந்தனையாளனை அறிமுப்படுத்தியமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. நல்லதொரு தகவலை பகிர்ந்துள்ளீர்கள் அய்யா, வாழ்த்துகள். வட மாநிலங்கள் இன்னும் அறியாமை என்னும் இருள் இன்றும் படர்ந்திருப்பது அரசின் இயலாமையே காட்டுகிறது. 80களில் நமக்கு வந்த அறிவொளி இயக்கம் போன்று ஒன்று அங்கும் செயல்பாட்டால் மட்டுமே, அவ்விருளை அகற்ற முடியும். அலி மனிதரில் புனிதர். அவரது சேவை தொடர வாழ்த்துவோம்!.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாபர் அலி உண்மையிலேயே புனிதர்தான் ஐயா
   வருகைக்கு நன்றி

   நீக்கு
 15. அற்புதமான பதிவு ஐயா. அரிய செய்திகளை, மாமனிதர்களை தேடிக்கண்டுபிடித்து, அனைவரும் அறியச்செய்யும் உங்கள் பணி, மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது ஐயா.

  பதிலளிநீக்கு
 16. பலருக்கும் கடவுள் என்று சொல்வதை விட, இவர் தான் உண்மையான மனிதர்...

  பாபர் அலி அவர்கள் மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 17. பாபர் அலிக்கு என்ன வாழ்த்துக்கள் மேலும் சிறந்து விளங்கட்டும்.
  நல்லதோர் பதிவுக்கு நன்றி சகோ !

  பதிலளிநீக்கு
 18. மிகவும் அருமையான நல்லதொரு தகவலை பகிர்ந்துள்ளீர்கள் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. சகோ ,
  அந்த ஊர் எங்க இருக்கு? நம் நாட்டில் தானா? அங்கும் அரசு ஆட்சி உண்டா? தேர்தல்கள் உண்டா? ஓருவர் கூடவா தேர்தல் வாக்குறுதி கொடுக்கல? ஓ,,,,,,,,,,,,, வாக்கு,,,,,,,,,,,, எத்துனை அரிய செயல் வணங்கப்பட வேண்டியவர். நன்றி சகோ புதிய தகவல் தந்தமைக்கு.
  பதிலளிநீக்கு
 20. ஒரு புறத்தில் பாபர் அலி கிராம ஏழை மக்களுக்கு கல்வி புகற்றுகின்றார். மறு புறத்தில் இன்னும் இந்தியாவில் பாபர் அலிக்காக் காத்திருக்கும் கிராமங்கள் எத்தனையோ......?

  முன்பே கூறினது போல் இந்தியாவின் மறுபுறம்......???

  என் செய்ய நினைத்தாய் விதியே என் இந்திய மக்களை? என்று கேட்க தோன்றுவது நியாயம்தானே!
  - மும்பை சரவணன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாபர் அலி போன்றோருக்காக காத்திருக்கும் கிராமங்கள் அதிகமாகத்தான் இருக்கும்
   நன்றி நண்பரே

   நீக்கு
 21. இவர்களை எங்கோ இருக்கும் CNN-IBN, BBC, media க்கள் வெளி உலகுக்கு காட்டுகிறார்கள். உங்களைப் போன்றோர் இவர்களை தம் ஊருக்கு அழைத்து கௌரவித்து போற்ற வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாய்ப்பு கிடைக்கும் போது
   பாபர் அலியை அழைத்து போற்றுவோம் நண்பரே

   நீக்கு
 22. உண்மையான நாயகனுக்கு வாழ்த்துகள். தொடர்ந்து தன் பணியில் சிறப்பாகச் செயலாற்றவும் பிரார்த்தனைகள். நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 23. பாராட்டுதல்களுக்குரிய மாணவர் / தலைமை ஆசிரியர். எங்கள் பாஸிட்டிவ் செய்திகள் பகுதிக்கு இந்தச் செய்தியை உங்கள் அனுமதியுடன் எடுத்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 24. ஒரு அருமையான மனிதரை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். பாபர் அலி பலருக்கும் வழிகாட்டி. ஒவ்வொரு மாணவரும் தங்கள் வீட்டில் இதுபோல ஒரு பள்ளிக்கூடம் துவங்கினால் நம் நாட்டில் படிக்காதவர்களே இருக்க மாட்டார்களே. ஒவ்வொரு பள்ளியிலும் இந்தப் பதிவை நகல் எடுத்து எல்லா மாணவர்களுக்கும் கொடுக்க வேண்டும். பல மாணவர்களுக்கும் இது ஒரு உந்துதலாக இருக்கும். இந்தப் பதிவைப்படிக்கும் பள்ளி ஆசிரியர்கள் இதைச் செய்ய முன்வரலாமே. எனது வேண்டுகோள் இது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வேண்டுகோளுக்கு மிக்க நன்றி சகோதரியாரே
   மாணவர்கள் அனைவரும் பாபர் அலியைப் பற்றி அறிந்தாலே, அச் செய்திலேய அவர்களுக்கு மிகப் பெரிய உந்துதலாக நிச்சயம் அமையும்
   நன்றி சகோதரியாரே

   நீக்கு
 25. இந்த மாதிரி இளைஞர்களால் மட்டுமே எதிர்கால இந்தியா மீதும் இளைய தலைமுறை மீதும் நம்பிக்கை ஏற்படுகிறது! பாபர் அலி மாதிரி தன்னலம் கருதாத, பொறுப்பும் எழுச்சியும் மிக்க‌ இளைஞர்கள் பல்லாயிரம் பேர் உருவாக வேண்டும்! நெகிழ வைக்கும் உண்மைக் கதையை இங்கு தெரிவித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமது நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்கக் கூடிய வல்லமை படைத்தவர்கள் பாபர் அலி போன்ற இளைஞர்கள்தானே
   நன்றி சகோதரியாரே

   நீக்கு
 26. மிகச் சிறந்த பணி...
  இந்த மாதிரி இளைஞர்களால் இந்தியா இன்னும் ஒளிரும்...
  அவரை வாழ்த்துவோம்.

  பதிலளிநீக்கு
 27. நெகிழ்வாகவும் நிறைவாகவும் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 28. ஜாதி, மத அரசியல், ஊழல் என எங்கு திரும்பினாலும் அவநம்பிக்கையே மிஞ்சும் தேசத்தின் விடிவெள்ளிகள் இவரை போன்ற இளைஞர்கள்.

  எத்தனை அவலச் செய்திகளை கேட்டாலும் இது போன்ற சாதனையாளர்களை பற்றி படிக்கும்போது நாளை விடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம் தேசத்தின் விடிவெள்ளியே
   பாபர் அலி போன்ற இளைஞர்கள்தான்
   நன்றி நண்பரே

   நீக்கு
 29. இவர் ஆசிரியாரா!
  ஆ!
  இவரா சிறியர்?
  வணங்கிட வேண்டிய இவர் செயலால்
  சிறியவராயினும் இவரை
  பேராசிரியராகவே வழிபடுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போற்றுதலுக்கு உரியவர்தான் பாபர் அலி
   நன்றி நண்பரே

   நீக்கு
 30. தெரியாத ஒரு சிறப்புத்தகவலை பகிர்வாக்கியமைக்கு நன்றிகள் அண்ணா. இப்படியான தன்னம்பிக்கை உள்ள இளைஞர்கள் இருந்தால் படிப்பறிவில்லா சமூகம் இல்லாதொழிந்துவிடும். வாழ்த்துக்கள் பாபர் அலிக்கு.

  பதிலளிநீக்கு
 31. பெயரில்லா05 பிப்ரவரி, 2015

  வியக்கும் சாத்தியமான சாதனை .
  தகவலிற்கு நன்றி
  பாராட்டுகள்
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 32. உண்மையான கல்வித் தெய்வம்.

  வாழ்க ...மேலும் வளர்க

  பதிலளிநீக்கு
 33. அருமையான தகவல்.பாபர் அலி போல் எல்லா குழந்தைகளும் இருந்து விட்டால் எதிர்காலம் சிறக்கும்.

  பதிலளிநீக்கு
 34. அன்பின் ஜெயக் குமார்,

  நல்ல பதிவு . நல்ல கருத்து. நல்ல சிந்தனை.

  பள்ளியே இல்லாத ஊரில் - படிப்பறிவே இல்லாத சூழலில் - தான் படிப்பது போல் - தான் எழுதுவது போல் - மற்றவரும் படிக்க வேண்டும் - எழுத
  வேண்டும் என்று தோன்றிய எண்ணம் இருக்கின்றதே ! அதனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வயதோ 16 ! . அனுபவமோ இனிமேல் பெற வெண்டிய காலம் - அப்படிப்பட்ட சூழலில் 50 / 100 பிள்ளைகளுக்கு தன் வீட்டுக் கொல்லைப் புறத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கத் தூண்டிய துணிவு அவரை ரியல் ஹீரோ ஆக்கியது. எண்ணங்கள் சொல்லாவதும் செயலாவதும் மனத் துணிவு உள்ளவர்களால் தான் முடியும். அந்த வகையில் பாபர் அலி பாராட்டப் பட வேண்டியவரே !

  அவரது எண்ணங்கள் செயலாக எண்ணங்கள் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்.

  இப்பதிவினை இட்ட தங்கள் எண்ணம் மிகவும் உயர்வானதே !

  பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்

  செல்வி ஷங்கர் - சீனா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றது ஐயா
   நன்றி

   நீக்கு
 35. பாபர் அலியின் தன்னலமற்ற சேவைக்கு தலை வணங்குகிறேன். பாராட்டுகள். அவர் நலமோடு வாழட்டும். பகிர்வுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 36. இம் மாமனிதரை வணங்குகிறேன்.......

  த.ம. +1

  பதிலளிநீக்கு
 37. அழிவில்லாத செல்வமாகிய கல்விச் செல்வத்தை, அனைவருக்கும் வாரி, வாரி வழங்கிக் கொண்டிருக்கும்
  பாபர் அலியை
  போற்றுவோம்.//

  போற்றி வணங்க வேண்டும் இந்த சிறுவனை.
  தன்னலம் அற்ற தொண்டு. வாழ்க வளர்க.
  பகிர்வுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 38. உங்களின் இந்தப் பதிவு இன்றைய வலைச்சரத்தை அலங்கரிக்கிறது. நேரம் கிடைக்கும்போது வருகை தந்தால் மகிழ்வேன்,
  நன்றி!

  பதிலளிநீக்கு
 39. நம் இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரமான பாபர் அலியை
  போற்றுவோம். இந்தப்பதிவினைப்படிக்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  இதுபோன்ற மிக அருமையான தகவல்களைத் திரட்டி, அவற்றில் சுவாரஸ்யம் கூட்டி வெளியிட்டுவரும் தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், ஐயா.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு