31 மே 2017

வருக வேலு



கரந்தை மண்
கந்தக மண்
தமிழுணர்வு வெப்பமாகத்
தகிக்கின்ற மண்.

கரந்தைத் தமிழ்ச் சங்க
மண்ணில்
ஒரு சிட்டிகை
உப்புக்குப் பதிலாக
உணவில் சேர்த்துக் கொண்டால்
சொரணை செத்தவர்களும்
பிழைத்துக் கொள்ளலாம்

27 மே 2017

சித்தப்பா மறைந்தார்


சிறு வயதில், என் விரல் பற்றி அழைத்துச் சென்று, இவ்வுலகை எனக்கு அறிமுகப்படுத்திய என் சித்தப்பா, இயற்கையோடு இணைந்து விட்டார்.

      என்னுடன் அதிகம் பேசிய, என் ஒரே உறவு.

      நான் அதிகமாய் பேசிய, என் ஒரே உறவு

22 மே 2017

சோலச்சி



     மகாகவி பாரதியின் வாழ்வு பற்றியும், பாரதியின் எழுச்சி மிகு கவிதைகள் பற்றியும், பள்ளியின் தலைமையாசிரியர் திரு இக்னேசியஸ், உள்ளத்து உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்யும் வகையில், பாடம் நடத்தியதை, மனதில் அசை போட்டவாறே, வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான், அந்த ஐந்தாம் வகுப்பு மாணவன்.

     வீட்டிற்குள் நுழைந்தான்.

      வீட்டுச் சுவற்றில், அடுப்பின் கரித் துண்டினால், அண்ணன் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான்.

அன்பே ஆருயிரே
அழகின் வடிவே
அன்னக் கிளியே
அம்மா நீ எங்கே ……

16 மே 2017

விபுலாநந்தர்





     திருக்கொள்ளம் புதூர்

     தஞ்சாவூர், திருவாரூர் சாலையில், கொரடாசேரியில் இருந்து இடதுபுறம் திரும்பி, கும்பகோணம் சாலையில் பயணித்தால், சிறிது தொலைவிலேயே, குடவாசல் என்னும் சிற்றூர், நம்மை எதிர் கொண்டு வரவேற்கும்.

      குடவாசலைத் தாண்டி, ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில், இடது புறம் திரும்பிய, சில நிமிடங்களில், கம்பீரமாய் தலை நிமிர்ந்து நிற்கிறது ஒரு திருக்கோயில்.

      திருக்கொள்ளம்புதூர் திருக்கோயில்.

      நற்சாந்துப்பட்டி, கோனூர் சமீன்தார் திரு பெ.ராம.ராமன் அவர்களால், பெரும் பொருட் செலவில், முழுவதுமாய், திருப்பணிச் செய்யப் பெற்று, புது உருவமும், புதுப் பொலியும் பெற்ற திருக்கோயில்.

11 மே 2017

பட்ட மிளகாய்



சிறு குழந்தையாய் இருக்கும் பொழுதே, நானும் வருவேன், என அழுது அடம் பிடித்து, அக்காளின் கரம் பற்றிப் பள்ளிக்குச் சென்றவர் இவர்.

     ஆனால், பன்னிரெண்டாம் வகுப்போடு, இவருக்கும், படிப்புக்குமான பந்தம் முடிந்து போனது.

     காரணம் சூழல்.

     குடும்பச் சூழல்.

     படித்தது போதும், வேலைக்குப் போ, என வறுமை இவரை விரட்டியது, பள்ளியை விட்டுத் துரத்தியது.