11 மே 2013

கரந்தை மலர் 8------. கடந்த வாரம் -----

தேவாரம், திருவாசகம், திருவருட்பாவிற்கு இணையாக, உமாமகேசுவரனாரின் உள்ளத்தை உருக்கிய பாடல், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலாகும்.
-----------------------------
         
          நீராருங்  கடலுடுத்த  நிலமடந்தைக்  கெழிலொழுகுஞ்
          சீராரும்  வதனமெனத்  திகழ்பரத  கண்டமிதிற்
          றக்கசிறு  பிறைநுதலுந்  தரித்தநறுந்  திலகமுமே
          தெக்கணமு  மதிற்சிறந்த   திரவிடநற்  றிருநாடும்
          அத்திலக  வாசனைபோ  லனைத்துலகு  மின்பமுற
          எத்திசையும்  புகழ்மணக்க  விருந்தபெருந்  தமிழணங்கே

     எனவே, கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற இரண்டாம் ஆண்டிலேயே, நீராருங் கடலுடுத்த என்னும் இப்பாடல் சங்க மேடையில் கோலேச்சத் தொடங்கியது.

     சங்க விழாக்கள் அனைத்திலும், முதல் நிகழ்வாக நிராருங் கடலுடுத்த பாடல் பாடப் பெற்றது. நீராருங் கடலுடுத்தப் பாடலை, சங்க மேடையில் அரங்கேற்றியப் பெருமைக்கு உரியவர் கூடலூர் வே. இராமசாமி வன்னியராவார்.
 
கூடலூர் இராமசாமி வன்னியர்


     1938 ஆம் ஆண்டு நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின் போது, வெளியிடப் பெற்ற கரந்தைக் கட்டுரை என்னும் பெயருடைய வெள்ளி விழா மலரில் இடம்பெற்றுள்ள முதல் கட்டுரை, நமது சங்கமும் தமிழ் வளர்ச்சியும் என்பதாகும். ,இக்கட்டுரையில் உமாமகேசுவரனார் குறிப்பிடுவதைப் பாருங்கள் சங்கத்தின் விழாக் காலங்களிலெல்லாம், கேட்போர் உள்ளம் கனிய, தமிழ்த் தெய்வ வணக்கத்தை இன்னிசையோடு, இருபத்து நான்காண்டுகளாக இடைவிடாது பாடி வந்த, உண்மைத் தமிழ்த் தொண்டர் கூடலூர் வே.இராமசாமி வன்னியரவர்களது இன்னிசையை இனி கேட்பதற்கில்லையே என்பதை எண்ணுந்தோறும் நம்மவருள்ளம் வருந்தாதிராது.

     சரி. இனி மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள் யாரென்று சிறிது காண்போமா? வாருங்கள் கேரளத்தின் திருவிதாங்கூர் துறைமுகப் பட்டினமான ஆலப்புழைக்குச் சென்று வருவோம்.

மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை

     மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள் நாஞ்சில் நாடு தந்த நற்றமிழர். 1855 முதல் 1897 வரை நாற்பத்தியிரண்டு ஆண்டு, குறை ஆயுளில் நிறை வாழ்வு வாழ்ந்தவர்.
 
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
     தனது நவீனக் கவிதை நாடகத்திற்கு மனோன்மணீயம் என்னும் அற்புதப் பெயர் சூட்டியவர். வரலாற்று ஆய்வு, நாடகம், கவிதை, ஆராய்ச்சி, உரைநடை, ஆங்கில நூலாக்கம் என பல துறைகளில் நூல்கள் பலவற்றை இயற்றிய பெருமைக்கு உரியவர்.

               அடியேன்  கடையேன்  அறியாச்  சிறியேன்
               கொடுமலையாளக்  குடியிருப்புடையேன்
               ஆயினும்  நீயே  தாயெனும்  தன்மையின்

என, மனோன்மணீயம் நாடகப் பாயிரத்தில் தழிழையேத் தனது தாயாகப் பாவித்துப் போற்றி, தான் பிறந்தது மலையாள நாடு என்பதையும் குறிப்பிடுகிறார் சுந்தரம் பிள்ளை.


                      ஊக்கம்  குன்றி  உரம்  குன்றி
                           ஓய்ந்த  தமிழர்க்  குணர்வூட்டி
                      ஆக்கம்  பெருக,  அறிவோங்க
                           ஆண்மை  வளரச்செய்து உலகியல்
                      மீக்கொள்  புகழைப்  பெற்றெழுந்த
                           வாரலோன்  நமது  சுந்தரனைப்
                      பாக்கள்  புனைந்து  மகிழ்ந்துநிதம்
                           பாடி  இனிது  போற்றுவமே

என்ற கவிமணியின் பாட்டிலிருந்தே மனோன்மணீம் சுந்தரம் பிள்ளையவர்களின் பெருமையினை நன்குணரலாம்.

     திராவிட இனத்தைச் சேர்ந்தவன் நான்  என்று உரைப்பதிலே தனி இன்பம் கண்டவர் மனோன்மணீம் சுந்தரம் பிள்ளை அவர்களாவார். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்வு, சுந்தரம் பிள்ளை அவர்களின் திராவிடப் பற்றையும், அச்சமென்பதை அறியாத தூய தமிழ் மனத்தினையும், தெளிவாக விளக்கும்.

     வீரத்துறவி  விவேகானந்தர் 1892 இல் திருவனந்தபுரம் வந்திருந்தபோது, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளைக்கு, விவேகானந்தரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. திருவனந்தபுரத்தில் ஒன்பது நாட்கள் தங்கியிருந்த விவேகானந்தருடன், சுந்தரம் பிள்ளை, மதப் பற்று, இன உணர்வு, தத்துவம் பற்றி வாதப் பிரதிவாதம் புரிந்துள்ளார். உண்மையைத் தேடும் ஞானியல்லவா சுந்தரம் பிள்ளை.


     திருவனந்தபுரத்தில் விவேகாநனந்தர் தங்கியிருந்த நாட்களில் ஒருநாள், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் விருந்தினராக அவரது இல்லத்திற்கு வருகை தந்தார்.

    விருந்திற்குப் பிறகு சுவாமி விவேகானந்தரும், சுந்தரம் பிள்ளை அவர்களும் மகிழ்வோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விவேகானந்தர், சுந்தரம் பிள்ளையைப் பார்த்து, தங்கள் கோத்திரம் என்ன? என்று கேட்டார். சுந்தரம் பிள்ளை ஒரு நிமிடம் மௌனமானார். பின் நிகழ்ந்தவற்றைத் தன் குறிப்புப் புத்தகத்தில் சுந்தரம் பிள்ளை அவர்களே எழுதியுள்ளார். வாருங்கள் அப்பக்கத்தைப் புரட்டிப் பார்ப்போம்.

    உவப்போடு என்னுடன் பேசி மகிழும் உத்தம நண்பர் விவேகானந்தர் தங்கள் கோத்திரம் என்ன என்று வினா எழுப்பினார். வேறு ஒரு தினமாகில், வினாவினைக் கேட்ட நான் வெகுண்டிருப்பேன். உறவென விருந்துக்கு வந்த அந்த உயர்ந்த நண்பரிடம் நான் மெல்லிய குரலில், எனக்கும் கோத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன் நான், என ஆத்திரமின்றிக் கோத்திரக் கேள்விக்கு விடையளித்தேன்.

பார்த்தீர்களா, இவர்தான் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. இனி சங்க நிகழ்ச்சிகளைப் பார்ப்போம் வாருங்கள்.

தமிழவள் கமழ் மொழி

     சங்க மேடையில் நீராருங் கடலுடுத்தப் பாடலைப் பாடினால் மட்டும் போதுமா? தரணியெங்கும் இப்பாட்டுப் பரவ வேண்டாமா? தமிழின் புகழ் தலை நிமிர வேண்டாமா? அதற்கு என்ன செய்வது என்று எண்ணிய உமாமகேசுவரனாரின் எண்ணம் செயலாக்கம் பெற்றதை, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு அறிக்கை (1913) வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது பாருங்கள்.
சங்கத்தின் மூன்றாம் ஆண்டு அறிக்கை

     பழைய தமிழ் நூற்களைப் பரிசோதித்துப் பிரசுரித்து அவைகளை இறந்துபடாது காத்தலும், ஆங்கிலமாதிய பாஷைகளிலுள்ள பற்பல சாத்திர நூற்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலும், பின்னும் நம் தமிழ்ச் சகோதரர்களுக்கு ஏற்றன நாடி எழுதி வெளியிடுதலும் யாம் கொண்ட நோக்கங்களுள் மிக முக்கியமானவாயினும், ஊதியக் குறைவால் இத்துணையும் யாம் இவ்வழியில் நெடிது சென்றிலம். எனினும், தமிழவள் கமழ் மொழி என்றோர் வரிசைப் பிரசுரம் தொடங்கி, அவ்வரிசையில் முதன் முதலாக திருவனந்தபுரம் காலஞ்சென்ற கனம் சுந்தரம் பிள்ளையவர்கள்,எம்.ஏ., எழுதியுதவியதூஉம், கல்லையும் உருக்கவல்லதூஉமாகிய அருமைத் தமிழ்த் தெய்வ வணக்கத்தினை அச்சிட்டு வெளியிட்டோம்.
சங்கத்தின் ஆறாம் ஆண்டு அறிக்கை

     இதுமட்டுமல்ல, இதோ இப்பக்கத்தைப் பாருங்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆறாம் ஆண்டு அறிக்கையே (1917), நீராருங் கடலுடுத்த என்னும் பாடலுடன்தான் தொடங்குகின்றது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தாய்ச் சங்கமாகக் கொண்டு பல ஊர்களிலும் , சங்கத்தின் கிளைகள் தோன்றி நடைபெற்ற காலம் அது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் அக் கிளைச் சங்கங்கள் நடத்தும் விழாக்களிலும், நீராருங் கடலுடுத்த பாடலே தமிழ்த் தாய் வாழ்த்தாக முன்னிலைப் படுத்தப் பெற்று பாடப் பெற்றது.

      கரந்தைத் தமிழ்ச் சங்கத்து, ஆண்டு விழாக்களில் கலந்து கொள்ளாத தமிழறிஞர்களே இல்லை என்று கூறத்தக்க வகையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் சங்க விழாக்களில் பங்கு கொண்டனர். இவ்வாறு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்து, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் விழாக்களில் கலந்து கொண்ட தமிழறிஞர்கள், தங்கள் பகுதிகளில், தாங்கள் நடத்தும் விழாக்களிலும் நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் பாடலை முதல் நிகழ்வாகப் பாடி விழாவினை நடத்தத் தொடங்கினர். இதன் விளைவாக நீராருங் கடலுடுத்த பாடலானது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது.

அரசு ஆணை

     1967 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. 6.3.1967 இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராய் பொறுப்பேற்றார்.

     பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராய் பொறுப்பேற்றபின் அரசு விழாக்கள், தமிழ் மொழியினைச் சிறப்பிக்கும் பாடல் ஒன்றுடன் தொடங்கப்படுமேயானால், தமிழ் மொழியின் சிறப்பு பாமரர்களையும் சென்றடையும் என்று எண்ணினார். அதற்குரிய பாடலைத் தேர்ந்தெடுக்க எண்ணி, பல பாடல்களை ஆராய்ந்த பொழுது, இரண்டே இரண்டு பாடல்கள்தான் அண்ணாவின் கவனத்தையும், மனதையும் ஒருசேரக் கவர்ந்திழுத்தன.

     முதல் பாடல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால், தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகம் செய்யப் பெற்ற, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய நீராருங் கடலுடத்த என்னும் பாடல்.

     இரண்டாவது பாடல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சொந்தப் பாடல். ஆம், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர், கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம் பிள்ளை இயற்றிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல்தான் அது..

          வானார்ந்த  பொதியின்மிசை  வளர்கின்ற  மதியே
                மன்னியமூ  வேந்தர்கடம்  மடிவளர்ந்த  மகளே
          தேனார்ந்த  தீஞ்சுனைசால்  திருமாலின்  குன்றம்
                தென்குமரி  யாயிடைநற்  செங்கோல்கொள்  செல்வி
          கானார்ந்த  தேனே  கற்கண்டே  நற்கனியே
                கண்ணே  கண்மணியே  அக்கட்புலம்சேர்  தேவி
          ஆலாத  நூற்கடலை  அளித்தருளும்  அமிழ்தே
                அம்மே  நின் சீர்முழுதும்  அறைதல்யார்க்  கெளிதே?

....... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.

51 கருத்துகள்:

 1. அரிய தகவல்கள்! அற்புதமான பதிவு! வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி! இவர்போன்றோர் தான் இன்னும் படைப்புகளால் வாழ்கின்றனர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அய்யா தமிழ் ஒன்றினையே சிந்தனையாய் செயலாய் சுவாசமாய் தன் வாழ்வின் நோக்கமாய் கொண்டவர்தான் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள். தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகைதர அன்போடு அழைக்கின்றேன்,

   நீக்கு
 2. நீராரும்கடலுடுத்த_என்றகடவுள்வாழ்த்துபாடல்இல்லாமல்_தமிழ்நாட்டில்_எந்தஒருவிழாவும்_தமிழனால்தொடங்கப்படுவதில்லை.அந்தமாபெரும்பாடலைபாடிய_சுந்தரநாரை_நாம்வணங்கவேணடும்.அந்தஒப்பற்றதிராவிடனின்_பாடலகைடவுள்வாழ்த்துபாடலாகமுதலில்பாடவேண்டும்_என்றுகூனறி_கரந்தைதமிழ்ச்சங்கவிழாவில்அரங்கேற்றிய_சங்கத்திற்கும்_சங்க்கத்தாற்கும்_ஒவ்வொருதிராவிடதமிழனும்நன்றிசொல்லகடமபைட்டிருக்கிறோம்.இந்தவாழ்த்துபாடலை_தமிழகஅரசின்கடவுள்வாழ்த்துபாடலாகஅறிவித்த_பேரரிஞர்அண்ணா_அவர்களுக்கும்தமிழர்கள்நன்றிசொல்லியாகவேண்டும்.இதற்குமேலாகஇந்தகாலத்தில்தமிழ்அறிஞர்களை_கரந்தைதமிழ்ச்சங்கத்தின்_பெருமைகளைதேடிதொகுத்து_ஒருஇனையதளத்தைஉருவாக்கிவழங்கிவரும்_உங்களுடையதமிழ்பனிக்குஇணைஒன்றுமில்லை.மிக்கநன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி பாலு.வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 3. அழகான தமிழ்ப் பாடல்களின்
  ஆரம்பம் கூறும்
  அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தொடர்ந்து வருகைதர அன்போடு அழைக்கின்றேன்,

   நீக்கு
 4. ஆஹா புதிய புதிய தகவல்கள் ஆச்சர்யமாக இருக்கிறது மிக்க நன்றி...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகைதர அன்போடு அழைக்கின்றேன்,

   நீக்கு
 5. வீரத்துறவி விவேகானந்தர் 1892 இல் திருவனந்தபுரம் வந்திருந்தபோது, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை விவேகானந்தரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது என்ற புதிய செய்தியை தங்களின் கட்டுரையின்மூலம் அறிந்தேன். இரு பெரும் இமயங்களின் சந்திப்பினை எங்கள்முன் கொணர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அய்யா இமயங்கள் தான்.தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகைதர அன்போடு அழைக்கின்றேன்,

   நீக்கு
 6. படிக்க படிக்க ஆர்வம் மிகுந்துகொண்டே போகிறது ஐயா..
  எவ்வளவு விஷயங்கள்...
  சிறந்த தமிழறிஞர்கள் பற்றியும்..
  சமூகவாதிகள் பற்றியும் சொல்லும் சிறப்புப் பதிவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழையே சுவாசமாய் சுவாசித்தவர்கள் அய்யா இவர்கள். தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகைதர அன்போடு அழைக்கின்றேன்,

   நீக்கு
 7. செந்தமிழும் .. சமூகம் சார்ந்த ஆன்மீகமும்
  சந்தித்த பொழுதுகள் இனி என்றும் மறவாது மனதினின்று...

  பதிலளிநீக்கு
 8. // சங்க விழாக்கள் அனைத்திலும், முதல் நிகழ்வாக நீராருங் கடலுடுத்த பாடல் பாடப் பெற்றது. //

  இதுவே பின்னாளில் தமிழ்நாட்டில் எல்லா அரசுவிழாக்களிலும் பாட முன்னோடி என்னும்போது தமிழ்ச் சங்கம் ஆற்றிய மகத்தான பணி பெருமைபடத் தக்கது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ் இன்றும் தளைத்திருக்கின்றதென்றால், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பணியும் ஓர் முக்கிய காரணம் அய்யா.தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகைதர அன்போடு அழைக்கின்றேன்,

   நீக்கு
 9. தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலின் உண்மையான நிலையை அறிய வைக்கும் பகிர்வு...

  சிறப்புகளை தொடர வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகையும் வாழ்த்தும் மனதிற்குப் பெருமகிழ்வினை அளிக்கின்றன அய்யா.நன்றி. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 10. பிரமிக்க வைக்கும் செய்திகள்.. தமிழும் தமிழ் சார்ந்த இடமும் என்று - கரந்தை தமிழ்ச் சங்கம் அறிவிக்கப்படவேண்டும்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாகச் சொன்னீர்கள் அய்யா.தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகைதர அன்போடு அழைக்கின்றேன்,

   நீக்கு
 11. “நீராரும் கடலுடுத்த” பாடலை விட, “வானார்ந்த பொதியின்மிசை” என்று தொடங்கும் கரந்தைக் கவியரசு அரங்க வெங்கடாசலம் பிள்ளையவர்களின் பாடல் சிறப்பானதாகத் தோன்றுகிறது. எம். எஸ். விஸ்வனாதனிடம் இதை முதலில் கொடுத்திருந்தால் அவரது அற்புதமான இசையில் இதுவே பிரபலமாகியிருக்கும். “நீராரும் கடலுடுத்த” தேர்ந்தெடுக்கப்பட ஒரே காரணம் அதில் வடமொழியைக் குறை கூறி வரும் செய்தி தான். மற்ற மொழியை மட்டம் தட்டி, தமிழ் தான் உயர்ந்தது என்பது போல் எழுத அரங்க வெங்கடசலம் பிள்ளையவர்களுக்கு யாரும் சொல்லிக் கொடுத்திருக்கவில்லையே, என் செய்வது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அய்யா. தாங்கள் கூறுவது சரிதான். நீராரூங் கடலுடுத்த என்ற பாடலில் உள்ள திராவிட நற்திருநாடும் என்ற வரிகள்தான் , அப் பாடல் தேர்வுக்கான காரணம் அய்யா, தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 12. அறியாதன அறிந்திக்கவேண்டிய
  பல அரிய தகவல்கள் அறிந்தோம்
  பகிர்வுக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும், மட்டில்லா மகிழ்வினையும், பெரு ஊக்கத்தினையும் அளிக்கின்றன அய்யா. நன்றி. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 13. இன்னும் நான்கே நாட்களில் (அதாவது மே மாதம் 15-ம் நாள்) 102-வது ஆண்டு விழா கொண்டாட இருக்கும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு எனது பணிவான வாழ்த்துக்கள். வெறும் கல்லாலும் மண்ணாலும் ஆன சங்கமல்ல; கன்னித் தமிழாலேயே கட்டிய சங்கம், இது. பஃறுளி மணலினும் பல்லாண்டு நிலைத்திருக்கட்டும்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அய்யா. பஃறுளி ஆற்றின் கரையில் அமைந்திருந்த பஃறுளியாற்றுத் தமிழ்ச் சங்கம் போல், வடவாற்றின் வடகரையில் அமைந்திருக்கும்,கரந்தைத் தமிழ்ச் சங்கம், தங்களின் வாழ்த்துப் போல் வாழட்டும், தொண்டு செய்து நீடித்து நிலைக்கட்டும் அய்யா. நன்றி

   நீக்கு
 14. தமிழ் தாய் வாழ்த்து தந்த சுந்தரம் பிள்ளையின் வரலாறும், கரந்தை தமிழ் சங்க வரலாறும் சுவையாகவும் அரிய தகவல்களையும் தந்தது! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா. தங்களின் வருகையும் வாழ்த்தும் தொடரட்டும் அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 15. அன்புள்ள ஜெயக்குமார்..

  அருமையாகப் போய்க்கொண்டிருக்கிறது. அனுபவித்துப் படித்துக்கொண்டிருக்கிறேன். விவேகானந்தர் கோத்திரம் கேட்ட பின்னணியின் விரிவு இருக்கிறது வரலாற்றில்? அறிய ஆர்வம்.. அப்படிப்பட்ட ஞான மனிதர் எதற்காக அப்படியாரு கேள்வியை இன்னொரு ஞானியனிடம் கேட்டார்?

  பதிலளிநீக்கு
 16. விரிவு இருக்கிறதா வரலாற்றில் ? என்று திருத்தி வாசிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுவாமி விவேகாந்தருக்கு, சுந்தரம் பிள்ளை பற்றி ஒரு கருத்து இருந்தது. சுந்தரம் பிள்ளை மிகச் சிறந்த கற்றறிந்த மேதை என்பது உண்மைதான். ஆனால் அவர் இன வேற்றுமைக்கு இடம் அளித்திருக்கிறார். திராவிட இன உணர்வு கொண்டிருக்கிறார் என்ற தன் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இது விவேகாநத்ர் அவர்களின் முதல் கருத்து.
   திருவனந்தபுரத்திலிருந்து சென்ற விவேகானந்தர், சுந்தரம் பிள்ளைக்கு ஐம்பதுக்கும் மேற்பட்டக் கடிதங்களை எழுதியுள்ளார்.அன்று வாலிய நிலையில் இருந்த, ராஜாஜி, இராமசாமி அய்யர், ரங்காச்சாரியார் , சுந்தரம் அய்யர் போன்றவர்களிடம், திருவனந்தபுரம் சுந்தரம் பிள்ளையின் பல தத்துவக் கருத்துக்களும், உணர்வுகளும் தவறற்றவை எனத் தெரிகிறது. அன்னாரின் ஆழ்ந்த அனுபவ அறிவால் ஆணிவேரென அவரது இதயத்தில் அக்கருத்துக்கள் உறைந்தமைக்குக் காரணங்கள் உண்டு. தங்களில் நம்பிக்கை கொண்ட மனிதர்களின் சரித்திரம்தான் உலக சரித்திரம். நம்பிக்கையானது, ஒவ்வொருவருக்குள்ளும் அடங்கியிருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துகின்றது என பின்னர் கூறியிருக்கிறார்.
   பதிவில் குறிப்பிட்டுள்ள செய்தியினையும், மேற்கண்ட செய்திகளையும், சாகித்ய அகாதெமி வெளியீடாகிய, ந.வேலுசாமி அவர்கள் எழுதிய மனோன்மயீம் சுந்தரம் பிள்ளை என்னும் நூலில் இருந்து பயன்படுத்தியுள்ளேன்.
   தங்களின் தொடர் வருகையும், வாழ்த்தும் மிகுந்த மன மகிழ்வினை அளிக்கின்றன. தொடரந்து தங்களின் மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கி உதவிட வேண்டுகிறேன்.

   நீக்கு
 17. அறியாத தகவல் பல அறியும் பகிர்வு நன்றி ஐயா சேவைக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது அய்யா. தொடரந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன். நன்றி

   நீக்கு
  2. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 18. எத்தனை அரிய தகவல்கள்! மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை பற்றி, அவருடனான விவேகானந்தரின் சந்திப்பு பற்றி, 'நீராடுங்கடலுடுத்த' பாடல் அரசினால் தேந்தெடுக்கப்பட்ட‌ காரணம் பற்றி‍ அனைத்துமே அற்புதமான தகவல்கள்! திரு.அரங்க வேங்கடாசலம் எழுதிய பாடல் எத்தனை இனிமை! இன்னும் சிறப்பாக இருக்கிறது. அத்தனையும் படிக்க பதிவாய்க் கொடுத்ததற்கு இனிய நன்றி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும், மட்டில்லா மகிழ்வினையும், பெரு ஊக்கத்தினையும் அளிக்கின்றன அய்யா. நன்றி. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 19. அரிய தகவல்கள். உங்கள் சிறப்பான இந்த பணிக்கு மிக மிக நன்றி!
  த.ம-5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும், மட்டில்லா மகிழ்வினையும், பெரு ஊக்கத்தினையும் அளிக்கின்றன. நன்றி. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 20. பெயரில்லா12 மே, 2013

  வணக்கம்
  ஐயா

  அறிய முடியாத பல அறியவகை கருத்துக்களை வலைத்தள உறவுகளுக்கு அறியவைத்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா அருமையான பகிர்வு
  தொடருங்கள் பயணத்தை

  குறிப்பு-உங்கள் வலைப்பக்கம் வருவது இதுதான் முதல் தடவை ,இனி என்வருகை தொடரும்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும், மட்டில்லா மகிழ்வினையும், பெரு ஊக்கத்தினையும் அளிக்கின்றன அய்யா. நன்றி. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 21. பெயரில்லா12 மே, 2013

  வணக்கம்
  ஐயா

  அறிய முடியாத பல அரியவகை கருத்துக்களை வலைத்தள உறவுகளுக்கு அறியவைத்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா அருமையான பகிர்வு
  தொடருங்கள் பயணத்தை

  குறிப்பு-உங்கள் வலைப்பக்கம் வருவது இதுதான் முதல் தடவை ,இனி என்வருகை தொடரும்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 22. தமிழின் பெருமை உலகுக்கு உணர்த்திய கரந்தை தமிழ் சங்க செய்திகள் பல உண்மையில் ஆச்சசர்யம் அளிக்கின்றன. எத்தனை தகவல்கள்! அத்தனையும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் பதிவுகள் சிறப்பாக அமைந்து வருகின்றன.பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகையும் வாழ்த்தும், மட்டில்லா மகிழ்வினையும், பெரு ஊக்கத்தினையும் அளிக்கின்றன அய்யா. நன்றி. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 23. அருமையான கருத்துக்கள் ! வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 24. சிறப்பான தவகவல் பகிர்வுக்கு மிக்க நன்றிகள் அண்ணா

  பதிலளிநீக்கு
 25. நன்றி சகோ. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்.

  பதிலளிநீக்கு

 26. தமிழ்த்தாய் பாடலாக இன்னொரு பாடலும் பரிசீலிக்கப் பட்டது என்பது அறியாத செய்தி.பல சிறப்பான தகவல்களுகாக நன்றி.

  பதிலளிநீக்கு
 27. தங்கள் பணி தொடர்க! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 28. ஐயா, கரந்தை தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா மலரில் வந்த ‘இறைச்சிப் பொருள்’ எனும் கட்டுரை கிடைக்குமா?
  நன்றி

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு