23 ஆகஸ்ட் 2011

தமிழவேள்

பெற்றோர் 
இழந்தான் இல்லத்
துணையாள்
இழந்தான்  உடன்
பிறந்த  தமையன்
சங்கம் நிறுவிய துங்கன்தனை
இழந்தான்  அருமை
மகன் பஞ்சாபகேசன்தனை
இழந்தான்

துன்பங்கள்
தொடர்ந்து வரினும்
துயரங்களைச் 
சுமந்து வரினும் உள்ளம்
தளராதிருந்தான்  என்றும்
தமிழ்  நினைவோடிருந்தான்
எங்கள் 
முண்டாசு முனிவன்
உமாமகேசன்,