19 ஜூலை 2013

கரந்தை - மலர் 16

----- கடந்த வாரம் ------
நம் பல்கலைக் கழகம் தமிழ் பல்கலைக் கழகம் அன்று,
தமிழ் (பேசும்) மாவட்டங்களுக்கு உரிய பல்கலைக் கழகம் அவ்வளவுதான்
---------------------------

      இந்த இரங்கத்தக்க நிலை இன்று, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மட்டுமன்று, தமிழகத்தின் பல்கலைக் கழகங்கள் அனைத்திலும், நீடிக்கின்றது.

     மருத்துவம், பொறியியல், வேளாண்மை முதலிய அறிவியல் கலைகளைத் தமிழில் கற்பிக்க முறையான முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப் படவில்லை. பட்டப் படிப்பு அளவில் தமிழில் கற்பிக்கபபடும் இயற்பியல், வேதியியல், விலங்கியல் முதலிய அறிவியல் பாடங்கள் கூட, பட்ட மேற்படிப்பில், தமிழில் கற்பிக்கப் படுவதில்லை. அதனால்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கமானது, தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப்பெற வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், கட்டுரைகள் மூலம் வலியுறுத்தியும் வந்தது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் கனவானது, அறுபத்து மூன்று ஆண்டுகள் கடந்த பின்னர், 1981 ஆம் ஆண்டில், அன்றைய முதல்வர் மாண்புமிகு டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் நிறைவேறியது. உமாமகேசுவரனார் கூட, தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் திருச்சியில் நிறுவிட வேண்டும் என்றுதான் தீர்மானம் இயற்றினார். ஆனால் உமாமகேசுவரனார் வாழ்ந்த தஞ்சையிலேயே, தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய பெருமைக்கு உரியவர் எம்.ஜி.ஆர்.

     பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் வள்ளல் தன்மையினையும், பெருந்தன்மையினையும் நாடே அறியும். தமிழுக்காக ஒர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை உருவாக்கியதோடு, அப்பல்கலைக் கழகத்திற்கு இடம் ஒதுக்கிய நிகழ்விலும், தான் வள்ளல்தான் என்பதை நிரூபித்தவர் எம்.ஜி.ஆர்.

     தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தஞ்சையில் நிறுவுவது என்று முடிவு செய்த அன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், அப்பணி தொடர்பாக தமிழறிஞர்களின் கூட்டம் ஒன்றினைக் கூட்டினார். தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு எவ்வளவு இடம் தேவை? என தமிழறிஞர்களிடம் வினவினார். ஒரு தமிழறிஞர் 50 ஏக்கர் ஒதுக்கினால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். மற்றொருவார் தயங்கியவாறே 100 ஏக்கர் ஒதுக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கூறினார். பெருவள்ளல், பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் புன்னகைத்தவாறே, தமிழுக்கு என்று ஒரு பல்கலைக் கழகத்தைத் தனியே அமைக்கவிருக்கின்றோம். இப்பல்கலைக் கழகம் சீரும் சிறப்புமாகச் செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். எனவே இப் பல்கலைக் கழகத்திற்கு 1000 ஏக்கர் இடத்தினை ஒதுக்குகிறேன் என்று கூறி தமிழறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார். கூறியபடியே 1000 ஏக்கர் நிலத்தினை ஒதுக்கி தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய பெருந்தகை எம்.ஜி.ஆர்.
தமிழ்ப் ப்லகலைக் கழக நூலகம் திறப்பு விழாவில் எம்.ஜி.ஆர்
தமிழ்ப் பல்கலைக் கழக நூலகம்

     மேலும் தமிழுக்கு என்று தனியே ஓர் பல்கலைக் கழகம் தேவை என்று முதன் முதலில் குரல் எழுப்பிய, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டும் வகையில், தமிழ்ப் பல்கலைக் கழக சட்டப் பிரிவு 18(a) வகுப்பு II (6) ன் படி, தமிழ்ப் பல்கலைக் கழகப் பேரவையில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு என்று நிரந்தரமாக, ஓர் இடத்தினையும் வழங்கிய வள்ளல் எம்.ஜி.ஆர் அவர்களாவார்.

பெத்தாச்சி புகழ் நிலையம்

     கரந்தைத் தமிழ்ச் சங்கக் கலா நிலையம் என்னும் பெயரில், உமாமகேசுவரனார் தொடங்கிய நூலகம் தொடர்பான நிகழ்வுகளை முன்னரே கண்டோம். இந்த சங்க நூல் நிலையத்தின் பயனை இனிதுணர்ந்த, சென்னை அரசாங்க மேல் சபை உறுப்பினரும், சங்க ஆதரிப்பாளருமான, காநாடு காத்தான் பெருந்திருவர் தமிழ் வள்ளல் திவான் பகதூர், மு.சித.பெத்தாச்சி செட்டியார் அவர்கள், 1922 ஆம் ஆண்டு நடைபெற்ற, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பதினோராவது ஆண்டு விழாவில் உரையாற்றிய போது, தம்பால் உள்ள நூல்கள் முழுவதையும், சங்க நூல் நிலையத்துடன் சேர்த்துவிட விரும்புவதாக குறிப்பிட்டார். ஆண்டுவிழாவின் போது குறிப்பிட்ட வண்ணம், சில மாதங்கள் கடந்த நிலையில், சங்க உறுப்பினர் சிலரைத் தமது இல்லத்திற்கு வரவழைத்து, தனது நூல்கள் முழுவதையும், தாமே தனது திருக்கரங்களால் எடுத்து வழங்கினார்.

      பெத்தாச்சி செட்டியார் அவர்களால் வழங்கப் பட்ட நூல்களின்  தொகை எண்ணிறந்தவையாகும். எட்டு மர பீரோக்களையும், அதிலிருந்த நூல்கள் முழுவதையும் சங்கத்திற்கு வழங்கியருளினார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கக் கலா நிலையத்தில், பெத்தாச்சி செட்டியார் வழங்கிய நூல்களைத் தனிப் பகுதியாக வைத்து, அப்பகுதிக்கு பெத்தாச்சி புகழ் நிலையம் என்று பெயரிட்ட உமாமகேசுவரனார் அவர்கள், 22.9.1923 ஆம் ஆண்டு நடைபெற்ற, சங்கத்தின் பன்னிரண்டாம் ஆண்டு விழாவிற்கு, தமிழ் வள்ளல் மு.சித.பெத்தாச்சி செட்டியார் அவர்களைத் தலைமையேற்கச் செய்து,

              இம்மையு  மறுமையும்  ஈறி  லின்பமும்
              செம்மையி  னளிக்கும்   சிவன்சே  வடியிணை
              என்றும்  மறவா  நன்றறி  யுளத்தினை
              கருவூ  ரானிலை  யரனார்  திருவிழாச்
              செப்புதற்  கரிய  சிறப்புட  னிகழ்த்தி
              இயலிசைப்  புலவர்  எண்ணிலார்  மகிழப்
              புயலெனப்  பொன்மழை  பொழியுங்  கோமான்
              மதுரைத்  தமிழவை  மாட்சியிற்  புரப்போய்
              கரந்தையெம்  சங்கம்  காதலித்  தளிப்போய்
              இன்னபல்  சீரும்  எண்ணி ஆங்கில
              மன்னவர்  சூட்டு  திவான்பக  தூரினை
              ஆண்டிப்  பட்டிநா  டாளுங்  காவல
              வருக  பெத்தாச்சி  மாண்  பெயரோய்  நலம்
              பெருக  எம்சங்கத்  திருவிழாப்  பீடுற
              வருக  தலைமையின்  வாழியர்  வருகவே

என்று வாழ்த்தி மகிழ்ந்ததோடு மட்டுமன்றி, அவ்விழாவின் போதே, தமிழ் வள்ளல் பெத்தாச்சி செட்டியார் அவர்களின் சகோதரரும், சென்னை அரசாங்க சட்டமன்ற உறுப்பினருமாகிய, சர் மு.சித.முத்தையாச் செட்டியார் அவர்களை அழைத்து,

              சென்னைமா  நகரின்  சிறப்பினன்  என்னும்
              பன்னருஞ்  சீரொடு  பகர்  சர்ப்  பட்டமும்
              பெற்றொளிர்  பெருமைய,  பிறங்கும்  இந்திய
              அரசியல் உறுப்பினன்  ஆயஎம்  அண்ணால்
              இந்திய  நாட்டுட  னேனையாங்  கிலமா
              நாடும்நின்  சீரினை  நன்கறிந்  திடுமெனின்
              முன்னுநின்  சீர்கள்  முழுதுரைப்  பனவோ
              ஆயமாப்  புகழினை  மேவியச்  சங்கத்
              தெளிமை  எண்ணா  தெம்பியின்  நல்லருள்
              வாய்ந்தொளிர்  சங்கம்  மன்னுநம்  அருளையும்
              எய்வதற்  குரித்தென  எண்ணிவந்  தருளினை
              பெத்தாச்சி  வள்ளல்  பெரும்புகழ்  நிலையம்
              திறந்தருள்  செய்க  செம்மாஅல்  நீணிலத்
              தெத்திசை  யும்புகழ்  முத்தையப்  புரவல
              மாநில  நிதிபதி  மான
              ஊழி  ஊழி  வாழி  வாழியரே

என வாழ்த்தி வரவேற்று, அவர்தம் திருக்கரங்களாலேயே, பெத்தாச்சி புகழ் நிலையத்தினைத் திறந்திடச் செய்தார்.

     ஆண்டுதோறும் வளர்ச்சியடைந்த இந்நூலகத்தில், 1926 ஆம் ஆண்டில், 2120 தமிழ் நூல்களும், 1286 ஆங்கில நூல்களும், 144 வட மொழி நூல்களும் இருந்தன. சங்க அன்பர்கள் வ.தங்கவேல் பிள்ளை அவர்களும், சி.வேதாசலம் அவர்களும், நூலக மேற்பார்வையாளருடன் இணைந்து, பல நாட்கள் அரும்பாடு பட்டு, நூல் நிலையத்தில் உள்ள நூல்களை வரையறை செய்து, நூல் நிலைய சுவடிகளின் பெயர் பட்டியலை அச்சாக்கம் செய்து வெளியிட்டனர்.

இடம் வாங்குதல்

     அமிழ்தினும் இனிய தமிழ் அன்னைக்கு, வடவேங்கடம் முதல் தென்குமரி இடைப்பட்ட இடங்கள் யாவும், உரியனவாக இருந்தும், கரந்தையம் பதியில் தமிழன்னைக்கு இல்லம் எடுக்க, ஓர் அடி நிலம் கூட சொந்தமாய் இல்லையே என்று எண்ணிய உமாமகேசுவரனார் பெருங் கவலை அடைந்தார். சங்கமானது தோன்றிய நாளில் இருந்து, கந்தப்ப செட்டியார் சத்திரத்திலேயே செயல்பட வேண்டிய நிலையே நீடித்தது.

     விழாக் காலங்களிலும், திருமண நாட்களிலும், கந்தப்ப செட்டியார் சத்திரம்,  வாடகைக்கு விடப்படும். அத்தகைய நாட்களில், சங்கப் பணிகளை அச்சத்திரத்தில் செய்வது இயலாத காரியம். எனவே சங்கத்திற்கென்று சொந்தமாய ஓர் இடத்தினை வாங்கியே தீருவது என்று எண்ணி முயற்சியில் இறங்கினார்.
வள்ளல் பெத்தாச்சி செட்டியார்

     உமாமகேசுவரனாரின் மனக் குறையினைப் போக்க எண்ணிய, வள்ளல் பெத்தாச்சி செட்டியார் அவர்கள், சங்கத்திற்கு இடம் வாங்குவதற்காக ஒரு பெருந் தொகையினை அன்பளிப்பாக வழங்க முன்வந்தார்.

      சங்கத்திற்கு இடம் வாங்கும் பொருட்டு, வள்ளல் பெத்தாச்சி செட்டியார் அவர்கள், 1923 ஆம் ஆண்டின் மத்தியில், உமாமகேசுவரனாரை அழைத்துக் கொண்டு, தஞ்சையில் பல இடங்களையும் சுற்றிப் பார்த்தார்.

     இறுதியில் கரந்தை வடவாற்றின் வடகரையில் அமைந்திருந்த, ஒரு பெரும் இடத்தினை வாங்குவதென்று முடிவு செய்தனர். அவ்விடம் கரந்தை பாவா மடத்திற்குச் சொந்தமானதாகும். பாவா மடத்தினரிடமிருந்து, இவ்விடத்தினை நேரடியாக வாங்குவதற்கு உரிய பொருளில்லாத காரணத்தாலும், மேலும் மடத்திற்குச் சொந்தமான இடத்தினை விலைக்கு வாங்குவதால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சட்டச் சிக்கல்கலையும் மனதில் நிறுத்தி ஆராய்ந்தார் உமாமகேசுவரனார்.


…….. வருகைக்கு நன்றி நண்பர்களே, மீண்டும் சந்திப்போமா

42 கருத்துகள்:

 1. பெத்தாச்சி செட்டியார் என்ற பெருமகனாரைப் பற்றியும், அவருடைய பணியைப் பற்றியும் இதுவரை தெரிந்திராத செய்திகளைப் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெத்தாச்சி பெருமகனார் அவர்களை சங்கத்தின் தூண், வேர் என்றால் மிகையாகாது.தங்களின் வருகையும் வாழ்த்தும் பெரு மகிழ்வினை அளிக்கின்றன அய்யா. நன்றி. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 2. அன்பின் கரந்தை ஜெயக்குமார்

  தஞ்சைத் தமிழ்ப் பலகலைக் கழகம் நிறுவப்பட்ட வரலாறு - அதற்காகப் பாடுபட்ட பெருமகனார்கள் - உதவிய அரசு - முதல்வர் - இவ்வளவு தகவல்களையும் சேகரித்து பதிவிட்டமை நன்று - தமிழ்ப் பல்கலைக் கழகப் பேரவையில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கென்று ஒரு நிரந்தர இருக்கையை அளித்த பொன் மனச்செம்மல் - எவ்வளவு தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - தொடர்க - நல்வாழ்த்துகள் - நட்புட்ன் சீனா

  பதிலளிநீக்கு
 3. பொன்மனச் செம்மலின் தகவலுடன் பல சிறப்பான தகவல்களை அறிய முடிந்தது... நன்றி ஐயா... தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் பெரு மகிழ்வினை அளிக்கின்றன அய்யா. நன்றி. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு

 4. எண்ணங்களும் அபிலாக்ஷைகளும் நிறைவேற்றுவதில் பலரதுமுனைப்புகளும் ஒத்துழைப்புகளும் இன்றியமையாதது. தமிழ்பல்கலைக்கழக வரலாறு இதை நன்கு உணர்த்துகிறது. நுணுக்கமாக செய்திகள் சேகரித்துப் பதிவிட்டுப் பகிர்வதற்கு நன்றி ஜெயக்குமார் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் பெரு மகிழ்வினை அளிக்கின்றன அய்யா. நன்றி. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 5. நூலக மேற்பார்வையாளருடன் இணைந்து, பல நாட்கள் அரும்பாடு பட்டு, நூல் நிலையத்தில் உள்ள நூல்களை வரையறை செய்து, நூல் நிலைய சுவடிகளின் பெயர் பட்டியலை அச்சாக்கம் செய்து வெளியிட்டனர்.

  தகவல் பகிர்வுகள் பிரமிக்கவைக்கின்றன ..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் பெரு மகிழ்வினை அளிக்கின்றன சகோ. நன்றி. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 6. //தமிழுக்கு என்று ஒரு பல்கலைக் கழகத்தைத் தனியே அமைக்கவிருக்கின்றோம். இப்பல்கலைக் கழகம் சீரும் சிறப்புமாகச் செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். எனவே இப் பல்கலைக் கழகத்திற்கு 1000 ஏக்கர் இடத்தினை ஒதுக்குகிறேன் என்று கூறி தமிழறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார். கூறியபடியே 1000 ஏக்கர் நிலத்தினை ஒதுக்கி தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய பெருந்தகை எம்.ஜி.ஆர்.//

  படங்களும் தகவல் பகிர்வுகளும் பிரமிக்க வைக்கின்றன. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் பெரு மகிழ்வினை அளிக்கின்றன அய்யா. நன்றி. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 7. அறியாத தகவல்களை அறிய தந்தமைக்கு மிகவும் நன்றி

  பதிலளிநீக்கு
 8. எம்ஜியார் வள்ளல் மட்டுமில்லை தமிழ் வளர்க்க, தமிழ் மீது இணையற்ற பற்று கொண்டிருந்தார்...!

  அறியாத தகவல்கள் சொன்னமைக்கு நன்றி...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் பெரு மகிழ்வினை அளிக்கின்றன அய்யா. நன்றி. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 9. வள்ளல் பெருந்தகை திரு. பெத்தாச்சி செட்டியார் அவர்களைப் பற்றிய சீர்மிகு தகவல்களுடன் தமிழுக்குப் பல்கலைக் கழகம் கண்ட பொன்மனச் செம்மலின் பெருங்குணத்தையும் ஒருசேர அறிந்தோம்!... நன்றி!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் பெரு மகிழ்வினை அளிக்கின்றன அய்யா. நன்றி. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 10. தமிழ் பல்கலைக்கழகம் அமைத்த நினைவுகள் சிறப்பாக இருந்தது! பயனுள்ள தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் பெரு மகிழ்வினை அளிக்கின்றன அய்யா. நன்றி. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 11. தமிழ் என்ற மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
  என்று திரைபடத்தில் பாடி நடித்தார் எம் ஜி ஆர்
  அதன் பின்னணி இதுதானோ?
  நல்ல தகவல்கள்.
  பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் பெரு மகிழ்வினை அளிக்கின்றன அய்யா. நன்றி. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 12. அன்புள்ள ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு வணக்க்ம.! மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் தமிழ்ப்பல்கலைக் கழகம் தஞ்சையில் நிறுவிய தகவல்களை விரிவாகவே சொன்னீர்கள். இன்றைய எனது வலைப்பதிவில் உங்களது இந்த பதிவினை மேற்கோள் காட்டியுள்ளேன்
  ( http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_20.html ) நன்றி! அதன் சுருக்கம் கீழே
  // இன்னொரு குறிப்பிடத்தக்க செய்தி ஒன்று. தமிழ்ப்பல்கலைக் கழகம் அமைந்த இடம் வாகையூர் என்று அழைக்கப் படுகிறது. அங்குள்ள கட்டிடங்களின் அமைப்பு வானத்திலிருந்து பார்க்கும்போது “தமிழ் நாடு ” என்ற எழுத்துக்கள் தோன்றும்படி தொடங்கப்பட்டது. ஆனால் “மி” மற்றும் “ழ்” – என்ற இரண்டு எழுத்துக்கள் வடிவில் மட்டுமே கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன. என்ன காரணத்தினாலோ மற்ற எழுத்துக்களின் வடிவில் கட்டடங்கள் கட்டப்படவே இல்லை. இப்போதும் இதனை ” விக்கிமேப்பியா” மூலம் காணலாம். “மி” மற்றும் “ழ்” என்ற இரண்டு எழுத்துக்கள் வடிவில் கட்டிடங்களைக் காணுங்கள்.
  http://wikimapia.org/#lang=en&lat=10.742521&lon=79.093795&z=16&m=b
  இங்கு எம்ஜிஆர் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தினைக் .காணலாம். விட்டுப் போன எழுத்துக்கள் வடிவங்களில் கட்டிடங்களை கட்டினால் “தமிழ் நாடு ” நிறைவுறும். //

  பதிலளிநீக்கு
 13. அய்யா தங்களின் பகிர்வும் , வேண்டுகோளும் மனதிற்கு மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன அய்யா. எனது வலைப் பூவில், தமிழ்ப் பல்கலைக் கழகத் தோற்றம் குறித்த செய்திகளைத் திரட்டுவதற்காக, தமிழ்ப் பலகலைக் கழகத்தின் இணைய தளத்திற்கு சென்று பார்த்தேன். அதிர்ச்சிதான் மிஞ்சியது. தமிழ்ப் பல்கலைக் கழக இணைய தளத்தில் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்தை எவ்வளவு தேடியும் கண்டே பிடிக்க முடியவில்லை. தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் துவக்கியவரின் பெயரே இல்லை அய்யா.
  பல ஆண்டுகளுக்கு முன்னர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, தமிழ்ப் பல்கலைக் கழகப் பேரவை உறுப்பினராக இருந்தவர் எனது ஆசிரியர் புலவர் மீனா.இராமதாசு என்பவர். அவர் பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய, எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப் படத்தினை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மாட்டிட வேண்டும் என்பதே அத்தீர்மானம் ஆகும். தீர்மானம் நிறைவேறியது.ஆனால் எம்.ஜி.ஆர் அவர்களின் திரு உருவப் படம் இன்றுவரை மாட்டப் பட்டதாகத் தெரியவில்லை அய்யா.நினைக்க நினைக்க வருத்தம்தான் மேலிடுகிறது அய்யா.

  பதிலளிநீக்கு
 14. அன்புள்ள ஜெயக்குமார்

  ஒவ்வொரு வாரமும் உங்கள் பதிவு நிறைய புதிதான செய்திகளோடு பல வினாக்களையும் விவாதங்களையும்கூட எழுப்புவது மிக நலமானது.

  தற்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் .....மி.... எழுத்திலும் டு .... எழுத்திலும் கட்டடங்கள் கட்டத் தொடங்கி திசம்பரில் முடிப்பதாகத் திட்டமிடப்பட்டுளள்து. (இன்றைய செய்தித்தாளில் விவரம் காணலாம்.).

  தொடர்ந்து வாசிப்பேன். கவனப்படுத்துவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் பெரு மகிழ்வினை அளிக்கின்றன அய்யா. நன்றி. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 15. அன்புச் சகோதரர் அவர்களுக்கு,
  தஞ்சை வருவதால் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் சந்திக்க ஆவலாயுள்ளேன். தங்கள் தொலைபேசி எண்ணை என் ஈமெயில் விலாசத்திற்குத் தெரியப்படுத்தவும். ஊருக்கு வந்ததும் தங்களை தொடர்பு கொள்கிறேன்.

  smano26@gmail.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேரன்பிற்குரிய சகோதரி அவர்களுக்கு,
   தங்களின் தஞ்சை வருகை மட்டில்லா மகிழ்வினை அளிக்கின்றது. தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் சந்திக்க ஆர்வமுடன் காத்திருக்கின்றேன்.
   வருக வருக என அன்போடு அழைக்கின்றேன்,

   எனது அலை பேசி எண்,
   94434 76716

   நீக்கு
 16. Dear KJ,
  A relationship between TAMIL UNIVERSITY and KARANTHAI TAMIL SANGAM is very wonderful news for whom living in karanthai and THANJAVUR area. Thank you.

  பதிலளிநீக்கு
 17. தாமதமாக வந்துவிட்டேன். எவ்வளவு தகவல்கள்! எம்.ஜி ஆர் இது போன்ற செயல்களால்தான் வள்ளல் என்று அறியப் படுகிறார்.
  இடம் கிடைத்ததா என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை தாமதமான வருகை அல்ல அய்யா. தங்களின் பல்வேறு அலுவல்களுக்கு இடையில் கணினிமுன் அமர நேரம் கிடைப்பதே பெரிய விசயம்தான். அநேகமாகத் தாங்களுக்கு இரவிலும், அதிகாலையிலும் தான் நேரமே கிடைக்கும் என்று நினைக்கின்றேன்.
   தங்களின் தொடர் வருகைக்கும் , ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்து மகிழ்கின்றேன் அய்யா.தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 18. நானும் தாமதம்... தமிழ் பல்கலைக் கழகம் பற்றி நிறைய செய்திகள் அறிந்துகொண்டேன்...

  பாராட்டுகள், நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாமதமானால் என்ன? தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 19. பெயரில்லா22 ஜூலை, 2013

  வணக்கம்
  ஐயா

  பதிவில் ஒரு வரலாற்றை அருமையாக சொல்லிவிட்டிர்கள் நான் பதிவை படித்த போதுதான் அறிந்தேன் எம்ஜீஆர் காலத்தில் இப்படியா? என்று பதிவு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் பெரு மகிழ்வினை அளிக்கின்றன அய்யா. நன்றி. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
  2. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 20. மதிப்பிற்குரிய திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு, மிக்க பயனுள்ள செய்திகள். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துவக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற கவிதைப்போட்டியில் எனது தந்தை மறைந்த கவிஞர் மீனவன் (நாகை), முதற்பரிசினை மக்கள் திலகம் கையால் பெற்றுக்கொண்டார். கடந்த வருடம் எனது தந்தை மரணமடைந்து விட்டார். பரிசு பெரும் புகைப்படம் எங்களிடம் இல்லை. எப்படி அதை பெறுவது என்று தெரியவில்லை, உங்கள் அறிவுரைக்கு காத்திருக்கின்றேன்.

  என்றும் அன்புடன்
  கவியரசன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் தந்தையின் இழப்பு ஆழ்ந்த வருத்தத்தைக் கொடுக்கின்றது அய்யா. புகைப்படம் தொடர்பாக தகவல் கிடைக்குமாயின், தங்களைத் தொடர்பு கொள்ளுகின்றேன் அய்யா. நன்றி

   நீக்கு
 21. தொடர்ந்து நீங்கள் தரும் தகவல்கள் வியக்கும்படி உள்ளது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் பெரு மகிழ்வினை அளிக்கின்றன அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு