ஆண்டு 2008.
அக்டோபர் 22. இந்தியாவின் முதல் நிலவு விண்கலத்தை ஏந்திச் செல்லும் ராக்கெட்
விண்ணில் சீறிப் பாய்கிறது.
சந்திரயான்.
இந்த நூற்றாண்டின், மிகப் பெரிய விஞ்ஞான
சாகசம், சாதனை என உற்சாகத்தோடு உச்சரிக்கப்படும், வெற்றிப் பயணம் சந்திரயான்.
நிலவிலும் நீருண்டு என்பதை கண்டுபிடித்து, உலகிற்கு அறிவித்த, நிரூபித்த நிகரற்ற
பயணம் சந்திரயான்.
இந்தியாவின் மூவர்ணக் கொடியை, நிலவில் நிலை
நாட்டியது.
இந்திய விண்வெளித் திட்டத்திற்கு வித்திட்ட,
அந்த உன்னத மனிதருக்கு, வழங்கப் பெற்ற மாபெரும் மரியாதை இது.
திட்ட
இயக்குநர்
மயில்சாமி
அண்ணாதுரை.
---
பெங்களூர். காலை நேரம். சாய்வு
நாற்காலியில் அமர்ந்தவாறு, அந்தப் பெரியவர், அன்றைய செய்தித் தாளினைப் படித்துக்
கொண்டிருக்கிறார்.
கடந்த ஒரு வார காலமாகவே, சந்திரயான் பற்றிய
செய்திகளே, முதல் பக்கத்தில்.
மயில்சாமி அண்ணாதுரையின் படம் ஒவ்வொரு
நாளும், ஒவ்வொரு புத்தம்புது செய்திகளுடன் வெளி வந்து கொண்டிருந்தது.
சந்திரயான் பற்றிய செய்திகளை, மிகுந்த
ஆர்வமுடன் படித்துக் கொண்டிருக்கிறார், அந்த ஓய்வு பெற்ற, இயற்பியல் பேராசிரியர்.
வீட்டுத் தொலைபேசி ஒலிக்கத் தொடங்குகிறது. நாற்காலியில் இருந்து,
எழுந்து, நடந்து சென்று, தொலைபேசியை கையில் எடுத்து, காதருகே கொண்டு செல்கிறார்.
ஹலோ
பேராசிரியர்
குண்டு ராவ் அவர்களின் இல்லம்தானே?
ஆமாம்,
பேராசிரியர் குண்டுராவ்தான் பேசுகிறேன்
ஐயா, வணக்கம்.
நான் உங்கள் முன்னாள் மாணவன் பேசுகிறேன். நலமாக இருக்கிறீர்களா ஐயா.
நலமாய்
இருக்கிறேன், முன்னாள் மாணவரா?
ஆம் ஐயா, நான்
உங்கள் முன்னாள் மாணவன். பெயர் அண்ணாதுரை
எந்த
அண்ணாதுரை?
ஐயா, என்னை
நேரில் பார்த்தால் கூட, உங்களுக்கு என்னை அடையாளம் தெரியாது. என்னுடைய பெயரும்
உங்களுக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை.
பேராசிரியர்
யோசிக்கவே, மறுமுனைனில் குரல் தொடர்ந்து ஒலிக்கிறது
கடந்த ஒரு வார காலமாக,
செய்தித் தாட்களில் மயில்சாமி அண்ணாதுரை என்ற பெயர் வருகிறதல்லவா? அது நான்தான்
ஐயா.
கொஞ்சம் கொஞ்சமாக, பேராசிரியரின் முகம்
மகிழ்ச்சியால் மலர்கிறது, கண்கள் வியப்பால் விரிகின்றன.
விஞ்ஞானி
மயில்சாமி அண்ணாதுரை என்னுடைய முன்னாள் மாணவரா? மயில்சாமி அண்ணாதுரை என்னுடைய
மாணவரா?
திரும்பத்
திரும்பக் கேட்கிறார்.
எத்தனையோ ஆண்டுகளுக்கு
முன் உங்களிடம் படித்தேன் ஐயா. கடந்த மூன்று நாட்களாக, பெரு முயற்சி செய்தும்,
உங்கள் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எப்படியோ, இப்பொழுதுதான்,
உங்கள் எண் கிடைத்தது. இதில் வியப்பு என்னவென்றால், தாங்களும் பெங்களூரில்தான்
இருக்கிறீர்கள்.
பேராசிரியரின் உதடுகள் துடிக்கின்றனவே தவிர, வார்த்தைகள் வெளிவர
மறுக்கின்றன. கண்களில் ஆனந்தக் கண்ணீர் மெதுவாய், எட்டிப் பார்க்கிறது.
ஐயா, நான்
உங்களை சந்திக்க விரும்புகின்றேன், வீட்டு முகவரியைக் கூறுங்கள்.
பேராசிரியரின் துடிக்கும் உதடுகளில் இருந்து, வார்த்தைகள், மெதுவாக,
மிக மெதுவாக வெளிப்படுகின்றன.
இவ்வுலகமே
வியந்து பாராட்டுகின்ற, செயலை சாதித்துக் காட்டியவர் நீங்கள். உங்களைப் பார்க்க,
உங்களைப் பாராட்ட, நான் வருகிறேன், இதோ இப்பொழுதே கிளம்புகிறேன்.
ஊர்க் குருவி
எவ்வளவுதான் உயரே, உயரே பறந்தாலும் பருந்து ஆகி விட முடியாது ஐயா. என்றென்றும்,
எப்பொழுதும் தாங்கள் என் ஆசிரியர்தான். எவ்வளவு காலங்கள் கடந்தாலும், நான் தங்கள்
மாணவன்தான்.
அன்று மாலையே, பேராசிரியர் குண்டு ராவ்
அவர்களின் இல்லத்திற்கு வருகிறார் மயில்சாமி அண்ணாதுரை.
பேராசிரியரை நேரில் கண்டதும், முகம் மலர,
இரு கரம் கூப்பி வணங்கி, அவரின் திருவடிகளில் விழுந்து வணங்குகிறார்.
பதறிப்போன பேராசிரியர், அண்ணாதுரையின்
தோள்களைப் பிடித்துத் தூக்கி, மார்புற அணைத்து நெகிழ்ந்து போகிறார்.
ஐயா, தாங்கள்
பணியாற்றிய பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர்
மகாலிங்கம் கல்லூரியில், ஓராண்டு பி.யு.சி படித்தேன்.
சிறு வகுப்பு
முதலே, எனக்கு ஆர்வமில்லாத பாடம் என்று ஒன்று இருந்ததென்றால், பெயரைக் கேட்ட
மாத்திரத்திலேயே வேப்பங்காயாக கசந்தது என்றால், அது இயற்பியல்தான்.
தாங்கள்
இயற்பியலைப் போதித்த விதம், ஒவ்வொரு இயற்பியல் கோட்பாடுகளையும் விவரித்த விதம்,
என்னுள், இயற்பியல் மேல், ஒரு வித காதலையே உருவாக்கி விட்டது ஐயா.
அன்று
இயற்பியல் மேல் நான் கொண்ட காதல், இன்று வரை தொடர்ந்து வளர்ந்தே வருகிறது.
இன்று
சந்திரயானின் விண்வெளிப் பயணம் வெற்றி பெற்றதற்கு அடிப்படைக் காரணம் இயற்பியல்.
என்னுடைய
இயற்பியல் அறிவின் தொடக்கப் புள்ளியே தாங்கள்தானே ஐயா.
அதனால்தான்,
சந்திராயன் திட்டம் வெற்றி பெற்றவுடன், என் முதல் வணக்கத்தை, என் முதல் மரியாதையை,
என் குருவிற்குக் காணிக்கையாக்க விரும்பினேன்.
குருவே, என் முதல் வணக்கத்தையும், முதல்
மரியாதையினையும் ஏற்றருளுங்கள்.
ஒரு
ஆசிரியருக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்.
குரு
போற்றுவோம்.
----
----
Im coming after....
பதிலளிநீக்குபணி முடிந்ததும் வாருங்கள் நண்பரே
நீக்குநன்றி
இதுவல்லவோ சிறப்பு...
பதிலளிநீக்குகுருவே சரணம்...
நன்றி ஐயா
நீக்குநெகிழவைக்கும் அறிய செயல்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
கோ
நன்றி நண்பரே
நீக்குகுரு பக்தி என்பதற்கு இது ஒரு முன் உதாரணம். மற்றவர்கள் இதனைப் பாடமாகக் கொள்ளவேண்டும். இவை போன்ற நன்னெறிகள் சமுதாயத்தில் எங்கும் காணப்படவேண்டும். இத்தகைய உணர்வுகளைப் பரப்பும் தங்களின் பணி போற்றுதற்குரியது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஎவ்வளவு உயரம் சென்றபோதும் ஏற்றிவிட்ட ஏணியை நினைத்துப் பார்த்து நெகிழ வைத்து விட்டார் மயில்சாமி அண்ணாதுரை மேன்மக்கள் மக்களே
பதிலளிநீக்குஅண்ணாதுரை மேன்மக்கள் மக்களே
நீக்குநன்றி ஐயா
ஆம்! மிக மிக அருமையான இடுகை! ஒரு ஆசிரியருக்கு இதை விட வேறு எந்த பரிசும் வேண்டாம்....குருவைப் போற்றுவோம்..!!
பதிலளிநீக்குஎங்களால் ஓட்டு அளிக்க முடியவில்லையே நண்பரே! ஓட்டுப்பட்டையும் வரவில்ல எங்கள் தளத்தில் எல்லாம். உங்களுக்கு வந்திருக்கின்றது ஆனால் ஓட்டு அளிக்க முடியவில்லையே! ஆனால் ஒரு ஓட்டு காட்டுகின்றது....மீண்டும் வர பார்க்கின்றோம்...
நன்றி நண்பரே
நீக்குஎன்றென்றும் -
பதிலளிநீக்குகுருவே.. என் முதல் வணக்கத்தையும்,
முதல் மரியாதையினையும் ஏற்றருளுங்கள்!..
மனம் நிறைவான பதிவு கண்டு மகிழ்ச்சி..
நன்றி ஐயா
நீக்குகுரு இன்றி நானும் இல்லை என்பது தத்தாத்திரேயர் வரலாறு. திரு அண்ணாதுரை விஞ்ஞான உலகில் மட்டும் அல்ல, நடைமுறை வாழ்க்கையிலும் உண்மையில் போற்றத்தக்க மனிதரே.
பதிலளிநீக்குமயில்சாமி அண்ணாதுரை போற்றுதலுக்கு உரியவர்தான் ஐயா
நீக்குநன்றி
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை - என்று சொல்லுவார்கள். கெட்டிக்கார மாணவன் என்றாலும் அவன் மென்மேலும் சிறந்தும் விளங்கிட ஒரு குரு தேவை. அந்த காலத்தில் இருந்த குருகுலக் கல்விமுறை வேறு. இந்த காலத்து கல்விமுறை வேறு. ஆனாலும், உயர்நிலையில் உள்ள ஒவ்வொருவர் வாழ்விலும், அவர்கள் இன்று அடைந்த நிலைமைக்கு யார் காரணம் என்று கேட்டால் ஒரு குருவைத்தான் சொல்லுவார்கள். அந்த வகையில் ஒரு குருவின் பெருமையைச் சொல்லிய கட்டுரை இது. நல்ல செய்தியைச் சொன்ன ஆசிரியருக்கு நன்றி.
பதிலளிநீக்குத.ம.6
நன்றி ஐயா
நீக்குமனம் நெகிழ வைத்த பதிவு. பதிவுக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குநல்ல செய்தி
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஉளம் நெகிழும் பதிவு.
பதிலளிநீக்குஅருமை.
பாரம்பரியம் காக்கும் குரு வணக்கம்
நன்றி சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
நன்றி சகோதரியாரே
நீக்குமிக நல்ல மாணவர் .............. வாழ்க .. வளர்க
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குசிறப்பான பதிவு...
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குநெகிழ வைத்த பதிவு. குருவைப் போற்றுவதும் போற்றுதலுக்கு உரியதே.
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குகுருவை மதித்து போற்றுபவர்கள் வாழ்வில் உயர்வது நிச்சயம்.
பதிலளிநீக்குகுருவை போற்றும் சிஷ்யர் வாழ்க!
அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி சகோதரியாரே
நீக்குபடிக்கும்போது எனக்கே சிலிக்கின்றது பேராசிரியர் குண்டுராவ்தான் அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும். எந்த நிலையிலும் குவை மறக்க கூடாது அருமையான பதுவி நண்பரே,,,
பதிலளிநீக்குஇந்த பதிவை நான் காலையிலேயே செல்போணில் படித்து விட்டேன் கருத்துரை இடமுடிய வில்லை நண்பரே,,,,
தமிழ் மணம் – 10
பதிவினைப் பார்த்தவுடன் அலைபேசியில் படித்தமைக்கு நன்றி நண்பரே
நீக்குஆசார்ய தேவோ பவ.
பதிலளிநீக்குநெகிழ வைத்தது. நிறைகுடம் அவர்.
நன்றி நண்பரே
நீக்குஅருமையான பதிவு.நெகிழவைத்தது திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் குரு பக்தி.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குசிறப்பான தகவலுக்கு நன்றி அண்ணா..
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குமழைமேகத்தைக் கண்டு தோகை விரித்தாடும் மயிலின் அழகை கண்டேன் ,'மயில்'சாமி அண்ணாதுரை அவர்களின் குருவந்தனத்தில் !
பதிலளிநீக்குகுருவுக்கு என் காணிக்கை தமிழ் மண மகுடம் :)+11
நன்றி நண்பரே
நீக்குஅண்ணாதுரை அவர்கள் உண்மையிலேயே போற்றுதலுக்கு உரியவர். எங்கள் ஊர்க்காரர் என்ற வகையில், அவரால் எனக்கும் பெருமையே! சிறப்பான பதிவு ஐயா.
பதிலளிநீக்குதங்கள் ஊர்க்காரரா
நீக்குமகிழ்ந்தேன்
நன்றி நண்பரே
மயில்சாமி அண்ணாத்துரையாரின் உயர்வின் ரகசியத்தை உடைத்துச் சொல்லிவிட்டீர்கள்..“பணியுமாம் என்றும் பெருமை!” படிக்கும்போது ஏற்பட்ட மகிழ்ச்சி, அந்த ஆசிரயர் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடானது.நன்றி
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஆசிரியர்களை கொண்டாட வேண்டும் என்ற உணர்வை தூண்டும் விதமாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஆஹா ஆசிரியரைக் கொண்டாடும் மாணவர்...
பதிலளிநீக்குபகிர்வு அருமை ஐயா...
நன்றி நண்பரே
நீக்குகுருவிற்கு முதல்மரியாதை. அருமை ஐயா பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅன்பின் ஜெயக்குமார்
பதிலளிநீக்குஅருமையான பதிவு - இன்றும் தங்களின் ஆசிரியர்களை நினைவு கூறும் மாணவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மனம் நெகிழ்கிறது.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
நன்றி ஐயா
நீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குஅற்புதமான இந்தப் பதிவினை படித்தவுடன் என் இரண்டு கண்களிலும் கண்ணீர் ததும்பியது. சிறப்பான இயற்பியல் ஆசிரியர் திருமிகு.குண்டுராவ் அவர்கள், நன்றி மறக்காத மாணவச் சுடர் திரு,.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் ஆகியோரின் குரு-சிஷ்ய உறவினை அற்புதமாக கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய தங்களின் ஒப்பற்ற நடை என் மனதை விட்டு நீங்காதவையாக மாறி விட்டன.
நன்றி நண்பரே
நீக்குகுரு வணக்கம்!
பதிலளிநீக்குஅருமையான பதிவு
த ம 13
நன்றி நண்பரே
நீக்குநன்றி மறப்பது நன்றன்று என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டும்
பதிலளிநீக்குவேண்டுமா? நீங்கள் கூறிய விதம் அருமை சகோ.
நன்றி சகோதரியாரே
நீக்குநல்லதோர் தகவல்...
பதிலளிநீக்குபெரிய செய்தி...
தம +
நன்றி நண்பரே
நீக்குஅந்த சிந்தனை வந்ததே நல்ல விஷயம்தான்/முக்கியமாய் பெரியவர்களைப்போற்றுகிறமனோ நிலை இங்கு அவசியமாகித்தெரிகிறது,கிட்டத்தட்ட மறந்து போன குணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்,வாழ்த்துக்கள்/
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குகுரு வணக்கம் இப்போ எங்கே ? எவ்வளவு உயரப்பறந்தாலும் குருவுக்கு அடங்கிய மாணவன், நன்றி. இன்றைய காலத்திற்கு வேண்டும் இது. ஆசிரியர்கள் நம் நலம் காண்பவர்கள் என்ற சிந்தனை மாறி விட்டது, நாமும் தான் மாறிவிட்டோமோ?. அருமையான பதிவு. நன்றி சகோ.
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குநல்ல செய்தி
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஒவ்வொரு செடியும், விதையூன்றியவரையும், வேர்களுக்கு நீர் பாய்ச்சியவரையும் நினைவு கூறும்போது, எத்தகைய நெகிழ்சியை அது ஏற்படுத்துகிறது. நான் இந்தச் செய்தியை இந்தக் கட்டுரையில்தான் வாசித்தேன். எழுத்தறிவித்தவன் இறைவனாகும் என்று சும்மாவா சொன்னார்கள்? திரு மயில்சாமி அண்ணாத்துரை அவர்கள் மற்றவர்களுக்கு ஒரு பாடம் எடுத்திருக்கிறார்.
பதிலளிநீக்குஆம் நண்பரே மயில்சாமி அண்ணாதுரை மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக் காட்டு
நீக்குநன்றி நண்பரே
நிலை உயரும் பொது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும். உதாரணம் அண்ணாத்துரை மயில்சாமிதான்
பதிலளிநீக்குஉண்மையான உதாரணம் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்தான்
நீக்குநண்பரே
நன்றி
ஆசிரியர் என்பவர் ஒரு மைல் கல் போன்றவர். கடந்து செல்பவர்கள் மைல் கல்லை அடையாளம் காணலாம். ஆனால் மைல் கல்லுக்கு இயலுமா. மயில்சாமி அண்ணாதுரையின் ஆசிரியர்பால் கொண்ட மதிப்பு மகிழ்வளிக்கிறது. நல்ல விஷயங்களைத் தேடிப்பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநல்ல குரு. குரு மேல் பக்தி கொண்ட மாணவர்.
பதிலளிநீக்குசிறப்பான மனிதர்கள் பற்றிய உங்கள் பதிவுகள் தொடரட்டும்.
திரு மயில்சாமி அண்ணாதுரை நல்ல விஞ்ஞானி மட்டுமல்ல, சிறந்த பண்பாளரும் கூட. தாய்மொழி வழிக்கல்வியின் மாண்புகளை தன் சொந்த அனுப்வம் கொன்டும் வலியுறுத்துபவர். சிறந்த பதிவு
பதிலளிநீக்குகுருவை வணங்க வேண்டும் என்பதற்கு இதைவிட ஒரு பதிவு தேவையா. மதிக்கும் பண்பு இருந்ததனாலேயே அவர் முயற்சியும் வெற்றி பெற்றது.
பதிலளிநீக்குஇனிய பாராட்டுகள்
பதிலளிநீக்கு//அன்று மாலையே, பேராசிரியர் குண்டு ராவ் அவர்களின் இல்லத்திற்கு வருகிறார் மயில்சாமி அண்ணாதுரை.
பதிலளிநீக்குபேராசிரியரை நேரில் கண்டதும், முகம் மலர, இரு கரம் கூப்பி வணங்கி, அவரின் திருவடிகளில் விழுந்து வணங்குகிறார்.
பதறிப்போன பேராசிரியர், அண்ணாதுரையின் தோள்களைப் பிடித்துத் தூக்கி, மார்புற அணைத்து நெகிழ்ந்து போகிறார்.//
மெய்சிலிர்க்கும் இந்தக்காட்சியினை, அருகில் அமர்ந்து பார்த்தவர்போல அருமையாக உணர்ச்சிபூர்வமாக எழுதியுள்ளீர்கள்.
இயற்பியல் விஞ்ஞான மேதை திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் பணிவும் குரு பக்தியும் மிகவும் போற்றத்தக்கது. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.
ஆண்டுகள் பல கடந்தாலும்....ஆசிரியர்களை காணும் போது அடையும் மகிழ் சிச்கு அளவேது......நல்ல படைப்பு....வாழ்த்துக்கள்.......உடுவை
பதிலளிநீக்குஎந்தச் சிகரத்தைத் தொட்டாலும் குருவை மறவாத மாணவர்கள் இருப்பதால் ஆசிரியர்களின் சேவையை மற்றவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.....உடுவை
பதிலளிநீக்கு