28 ஜூன் 2019

அப்பா

     எந்தை எம்மை விட்டுப் பிரிந்து, ஓராண்டு ஓடிவிட்டது.

     ஓராண்டு முடிவதற்குள், ஒரு நினைவு மலர் வெளியிட வேண்டும் என்ற ஆவல் எனக்கும், என் மனைவிக்கும்.

     எந்தையின் நட்பு எல்லை பெரியது.

     தான் பணியாற்றிய, புள்ளியியல் துறைக்கு வெளியிலும், பரந்து பட்ட பழக்கம் உடையவர்.

     எந்தையின் அலைபேசியிலும், தொலைபேசிக் குறிப்பேட்டிலும் பதிவாகி இருந்த, நட்புகளைத் தொடர்பு கொண்டேன்.

     நினைவலைகள் கட்டுரைகளாய், கவிதைகளாய், நேரிலும், அஞ்சல் வழியிலும், வாட்ஸ்அப் வாயிலாகவும் வந்து சேர்ந்தன.


உமாமகேசுவர மேனிலைப் பள்ளி ஓவிய ஆசிரியரும், நண்பருமான
திரு சு.கோவிந்தராஜன் அவர்கள்,
நூலுக்கான முகப்பு அட்டையினை,
காண்போர் மகிழும் வகையில், வடிவமைத்துக் கொடுத்தார்.


அப்பா

திரு சி.கிருட்டிணமூர்த்தி
நினைவு மலர்
வெளியீட்டு விழா


கடந்த 18.6.2019 செவ்வாய்க் கிழமை
காலை 11.00 மணியளவில்,
என் இல்லத்தில்
நடைபெற்றது.என் அத்தான்,
சிங்கப்பூர் மேனாள் விரிவுரையாளர்
கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்கள்
விழாவிற்கு முன்னிலை வகித்தார்.கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளர்
செம்மொழி வேளிர்
திரு ச.இராமநாதன் அவர்கள்
தன் உடல்நிலையினையும் பொருட்படுத்தாது
வருகை தந்து,
நூலினை வெளியிட,


சிங்கப்பூர் தமிழ்த் துறை விரிவுரையாளர்
திரு மாரிமுத்து அவர்கள்
முதற்படியினைப் பெற்றுச் சிறப்பித்தார்.


சிங்கப்பூர் தமிழ்த் துறை விரிவுரையாளர்
திரு கோட்டி திருமுருகானந்தம் அவர்கள்
நூலின் இரண்டாம் படியினைப் பெற்றுச் சிறப்பித்தார்.


கரந்தைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர்
திரு இரா.சுந்தரவதனம் அவர்கள்,
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்
முனைவர் கோ.சண்முகம் அவர்கள்,
நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான
திரு வெ.சரவணன் ஆகியோர்
சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

உறவுகள், நட்புகள் என
சுமார் நூற்று ஐம்பது பேர்
அப்பா
நூல் வெளியீட்டு விழாவில்
கலந்து கொண்டு
எந்தைக்குப் பெருமை சேர்த்தனர்.

17 கருத்துகள்:

 1. ஒரு மகனாய் தந்தைக்கு சிறப்பான அஞ்சலி.​ நெகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 2. ஒரு தந்தைக்கு இதைவிட சிறப்பு ஏது ?

  மனம் நிறைந்த வாழ்த்துகள் நண்பரே...

  பதிலளிநீக்கு
 3. "அப்பா" நூல் வெளியீட்டில் சிங்கை தமிழாசிரியகள் முதல் இருபடிகள் பெற்றமை மகிழ்வளிக்கிறது. அடியேன் பெற்ற வாய்ப்புக்காக பெரிதும் நன்றி.

  பதிலளிநீக்கு
 4. மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
  என்னோற்றான் கொல்எனும் சொல்.

  பதிலளிநீக்கு
 5. முனைவர் ஐயா அவர்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்ற நட்புகள், உறவுகள், உடன்பணிபுரிந்தவர்கள் உங்கள் தந்தையைபற்றி சொன்னதை பதிவில் குறிப்பிட்டு இருந்தார்கள்.

  அருமையான நூல் தந்தையை போற்றும் விதமாக வெளியிட்டது மகிழ்ச்சி.
  உங்கள் தந்தைக்கு என் வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 6. தந்தையின் நினைவாக 'அப்பா' உங்கள் கடமையை இனிதே நிறைவேற்றி உள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 7. ஒரு தந்தை அவராக இல்லாமல் நினைவாக மாறி விட்டால் தான் என்ன நல்ல மகனாய் அவர் நினைவை ஆவணமாக்கி இருக்கிறீர்கள் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 8. மிக அருமையான செயல் ...

  மிக மகிழ்ச்சியும்,வாழ்த்துக்களும்

  பதிலளிநீக்கு
 9. இது போன்ற நிகழ்வில் உங்கள் மாணவர்களை வரவழைத்து இருக்க வேண்டும். ஒரு தூண்டுதலாக இருக்கும் அல்லவா? வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. ஒரு முன்மாதிரி செயலைச் செய்துள்ளீர்கள். நிகழ்வில் கலந்துகொண்டபோது நிறைவாக இருந்தது. உங்கள் தந்தையாரிடம் பழகியவர்கள் அவரைப் பற்றி பேசுவதைக் கேட்டு, அதனைப் பாடமாகப் பின்பற்ற உறுதியெடுத்தேன்.

  பதிலளிநீக்கு
 11. அப்பாவுக்கு சிறப்பான அஞ்சலி. அதற்குள் ஓராண்டு காலம் முடிந்து விட்டது. காலம் தான் எத்தனை வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 12. மகன் தந்தைக்காற்றும் என்ற திருக்குறள் நினைவுக்கு வந்தது! நல்ல நிகழ்வு. காலம் பறக்கிறது.

  சிறப்பான அஞ்சலி.

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 13. கல்வியாளர்களின் சொல்லும் செயலும் போற்றதலுக்குரியவை.மகன் தந்தைக்கு ஆற்றும் செயல்..அய்யன் திருவள்ளுவரின் குறள் மனதிற்குள் வந்து செல்கிறது

  பதிலளிநீக்கு
 14. நெஞ்சார்ந்த நிகழ்வாக இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 15. என்னைப் பொறுத்தளவில் எனது அப்பாவும் அம்மாவும் அவர்கள் தேடிய-சேமித்த பொருட்களை மட்டும் பிள்ளைகளுக்கு தரவில்லை. பெற்றுக்கொண்ட அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்திருக்கிறாா்கள். அதனால் ஆரோக்கியமாக-ஆனந்தமாக --அறிவுள்ளவனாக வாழ்கின்றேன். இன்றைய வாழ்வில் சந்தோஷமான தருணங்களில் எங்களுடன் வாழ்ந்த அப்பா-அம்மாவை நினைப்பேன்.சந்தோஷம் பன்மடங்காகப்பெருகுவதையும்-சங்கடமான சந்தா்ப்பங்களில் ”அப்பா-அம்மா” என்றுவாய் விட்டுச்சொல்லும் போது சங்கடங்கள் என்னை விட்டுச் செல்வதையும உணர்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 16. உன்னதமான அஞ்சலி உங்கள் தந்தைக்கு. வாழ்த்துகள் அண்ணா

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு