23 நவம்பர் 2013

இருளில் இணைந்த இதயங்கள்

அவனுக்குப் பின்னால் வெளிர்நிறக் கடல்
அவனுக்கு முன்னால் கரையற்ற கடல்.

நல்ல நண்பன் கூறினான், நாம் பிரார்த்திக்கலாமா இப்போது?
ஐயோ நட்சத்திரங்களைக் கூட காணவில்லை
வீரனே .... தலைவனே, பேசு. நான் என்ன சொல்லட்டும்
ஏன் பேசுகிறாய்? பயணம் செல், தொடர்ந்து பயணம் செல்.

காற்று தொடர்ந்து வீச அவர்கள் பயணம் தொடர்ந்தது
இறுதியில் களைத்த நண்பன் கூறினான்,
ஏன், நானும் என் மாலுமிகளும் இறக்கத்தான் வேண்டுமா?
இந்தக் காற்று தன் வழியை மறந்துவிட்டது, ஏனெனில்
பயங்கரமான இக்கடலில் இருந்து கடவுள் விலகிவிட்டார்
வீரனே, தலைவனே, பேசு இப்போது பேசு
அவன் கூறினான் பயணம் செல், தொடர்ந்து பயணம் செல்

வீரனே தலைவனே ஒரு நல்ல வார்த்தை சொல்
நம் நம்பிக்கை போனால் நாம் என்ன செய்வது?
பாயும் கத்திபோல வார்த்தைகள் பாய்ந்து வந்தன
பயணம் செல், பயணம் செல், தொடர்ந்து பயணம் செல்

வெளுத்து சோர்ந்த அவன் தன் மேடை ஏறினான்
இருளின் ஊடே பார்த்தான். ஆ... அந்த இரவு
இரவுகளில் எல்லாம் இருண்டது. பிறகு ஓர் ஒளி
வெளிச்சம், வெளிச்சம் இறுதியில் ஒளி தோன்றியது
அது வளர்ந்து நட்சத்திர ஒளியில் கொடி விரிந்தது
அது வளர்ந்து காலத்தின் விடியலாக வெடித்தது

அவன் ஓர் உலகை வென்றான். அவன் உலகிற்கு
மாபெரும் பாடம் சொன்னான்
பயணம் செல். தொடர்ந்து பயணம் செல்.
-          ஜோரூன் மில்லர்

     நண்பர்களே, வாழ்க்கை என்பதே ஒரு பயணம்தானே. மேடு, பள்ளங்கள், சோதனைகள், சாதனைகள், குறுக்கீடுகள், பந்த பாசங்கள், உறவுகள், பிரிவுகள், நட்புகள், நம்பிக்கைத் துரோகங்கள் என அனைத்தையும் கடந்துதானே, வெற்றி கண்டுதானே, நிலை குலையாமல் நாம் பயணிக்கிறோம்.

     பிறப்புண்டேல் இறப்புண்டு என்றனர் நம் முன்னோர். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட வாழ்வினில்தான் எத்தனை எத்தனைப் பயணங்கள், எத்தனை எத்தனை சோதனைகள்.

     நண்பர்களே, நாமும் பல சோதனைகளைச் சந்தித்தவர்கள்தான். சோதனைகளை எதிர்கொண்டு போராடி வென்றவர்கள்தான். ஆனால் வாழ்வே போராட்டமானால்?

வாழ்வு முழுவதும் சோகம் என்றாலும் கலங்காதே
உன் துக்கத்தினால் காலை உதயம் தன் அழகை இழந்துவிடாது
ஓடைநீர் தனது பளபளப்பான நிலையான அழகை
அசோக மர இலைக்கோ தாமரை மலருக்கோ தராமல் போகாது.

வாழ்க்கை இருண்டது , சிக்கலானது என்றாலும் கலங்காதே
நேரம் நிற்காது. உன் துக்கத்திற்காக தாமதிக்காது.
-             சரோஜினி நாயுடு

     சோதனையினையே மூச்சுக் காற்றாய் சுவாசித்தபோதும், சற்றும் தளராமல் போராடி, வாழ்வில் இணைந்த இரு இதயங்களை, திருமணம் என்னும் உன்னத உறவில் ஒன்றிணைந்த இரு நல் உள்ளங்களை, அவர்களின் திருமண விழாவின்போது, சில நாட்களுக்கு முன்னர் சந்தித்தேன் நண்பர்களே.

      நண்பர்களே, இவர்கள் இருவரும் காதலுக்காகப் போராடியவர்கள் அல்ல. பிறந்தது முதல் வாழ்வதற்காகப் போராடி வருபவர்கள். வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நொடியினையும் போராடிப் போராடியே கடந்து வருபவர்கள்.

      நண்பர்களே இன்னும் விளங்கவில்லையா? மனதினைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள் நண்பர்களே, மனதினைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். திருமண விழாவின் மூலம் இணைந்த இவ்விருவரும், பிறப்பு முதலே கண் பார்வை அற்றவர்கள்.
 
நண்பர் துரை. நடராசன்
      நண்பர் துரை.நடராசன் அவர்கள், நான் ஆசிரியராகப் பணியாற்றும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், உடற் கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர். இவர் தஞ்சையை அடுத்த இரும்புத் தலை என்னும் சிற்றூரைச் சார்ந்தவர்.

     நண்பர்களே, நண்பர் துரை.நடராசன் அவர்கள், இரும்புத் தலை என்னும் எழிலார்ந்த பூமியின் வளர்ச்சிக்காக, அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருபவர். இரும்புத் தலையில் மட்டுமல்ல, அதன் சுற்றுவட்ட கிராமங்களிலும், எதாவது ஒரு வீட்டில் மங்கல நிகழ்ச்சி என்றால் அவர்கள் அழைக்கும் முதல் நபரும்,, ஏதாவது ஒரு சிறு பிரச்சினை என்றால் அதனைத் தீர்க்க அவர்கள் அணுகும் முதல் நபரும் துரை நடராசன் அவர்கள்தான். பள்ளி நேரம் போக, இவர் செலவிடும் நேரம் முழுவதும் ஊருக்காகத்தான்.

      நண்பர் துரை நடராசன் அவர்களுடன், ஆசிரியர் அறையில் பேசிக் கொண்டிருந்த பொழுது, இத்திருமணம் பற்றிக் கூறினார். மணமகள் இவரது மைத்துணரின் மகள். இவர் ஏற்பாடு செய்து, முன்னின்று நடத்தும் திருமணம் இது.

     மணமக்கள் பற்றி இவர் பேசப் பேச, மனதில் இனம் புரியாத ஓர் உணர்வு. அதனை எவ்வாறு மொழிப்படுத்துவது என்று தெரியவில்லை. மணமக்களைக் காண வேண்டும், நானும் இத்திருமணத்திற்கு வருகிறேன் என்றேன்.

      கடந்த வியாழக்கிழமை 14.11.2013 அன்று காலை, கும்பகோணம், சுவாமி மலையில், அம்பாள் சன்னதியில் இவர்கள் திருமணம்  எளிமையாய் அரங்கேறியது.

      நண்பர்களே, மணமக்களைப் பார்த்தேன். அமைதி தவழும் மலர்ந்த முகங்கள். குழந்தைபோல் இருவரும் சிரித்த சிரிப்பினைக் காண கண் கோடி வேண்டும்.



போற்றி போற்றி ஓர் ஆயிரம் போற்றி நின்
    பொன்ன டிக்குப்பல்  லாயிரம் போற்றிகாண்
சேற்றி லேபுதி  தாக முளைத்த தோர்
     செய்ய  தாமரைத்  தேமலர்  போலாளி
தோற்றி  நின்றனை  பாரத நாட்டிலே
     துன்பம்  நீக்கும்  சுதந்திர  பேரிகை
சாற்றி  வந்தனை, மாதரசே எங்கள்
     சாதி செய்த  தவப்பயன்  வாழி  நீ
என புதுமைப் பெண்ணை வாழ்த்துவாரே மகாகவி பாரதியார், அந்த மகாகவி கண்ட புதுமைப் பெண்ணாகவே மணமகள் நித்யா எனக்குத் தோன்றினார். தனக்குப் பார்வையில்லையே என நித்யா வீட்டின் ஓர் மூலையில் முடங்கிவிடவில்லை. பார்வையற்றவர்களுக்கானப் பள்ளிக்குச் சென்றார். படித்தார். நண்பர்களே ஒரு செய்தி சொல்லட்டுமா?. நித்யா எம்.ஏ., பி.எட்., பட்டம் பயின்ற பட்டதாரி. இப்பொழுது சொல்லுங்கள் நண்பர்களே, நித்யா அவர்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்தானே.



கண்உடையார்  என்பவர் கற்றோர்  முகத்துஇரண்டு
புண்உடையார்  கல்லா தவர்

    கல்வி கற்காதவரின் கண்கள், கண்களே அல்ல புண்கள் என்பார் திருவள்ளுவர். திருவள்ளுவர் வழி நின்று சொல்வதானால், மணமகன் வெற்றிவேல் முருகன் அவர்களும் கண்ணுடையாரே ஆவார். ஆம் நண்பர்களே, கண் இல்லையே என்று கலங்காமல் கல்வி கற்றார். இவர் படித்த படிப்பு என்ன தெரியுமா? எம்.ஏ., எம்.ஃ.பில்., பிஎச்.டி.,. ஆம் நண்பர்களே, ஆம் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றவர் வெற்றிவேல் முருகன். இவர் டாக்டர் பட்டத்திற்கான ஆராய்ச்சியினை மேற்கொண்டது எங்கு தெரியுமா? நண்பர்களே, இங்கல்ல, இந்தியாவிலேயே அல்ல, அமெரிக்காவில், நியூயார்க்கில். நம்பமுடியவில்லையா நண்பர்களே, உண்மை. இத்தனைக்கும் இவர் ஒன்றும் வசதிபடைத்த வீட்டில் பிறந்தவர் அல்ல. நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். பிறகு எப்படி அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்தார் என்று தோன்றுகிறதா? உழைப்பு நண்பர்களே உழைப்பு. ஆர்வத்துடன் படித்து, ஒவ்வொரு நிலையிலும், கல்வி உதவித் தொகையினைப் பெற்றே, நியூயார்க் வரை சென்று வந்துள்ளார். தற்பொழுது, பாட்னா மத்திய பல்கலைக் கழகத்தில், பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். இவர்களின் தன்னம்பிக்கை எத்தகையது என்பது இப்பொழுது புரிகிறதா நண்பர்களே.

       வெற்றிவேல் முருகனின் தங்கையின் பெயர் செந்தமிழ்ச் செல்வி. இவர் ஒரு பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். நண்பர்களே, விதி, விதி என்று சொல்கிறார்களே, அந்த விதி இவர்கள் குடும்பத்தில் எப்படி முழுமையாக விளையாடியிருக்கிறது தெரியுமா? ஆம் நண்பர்களே செந்தமிழ்ச் செல்வியும் கண் பார்வை அற்றவர். மனந்தளராமல் படித்து ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். நல் மனதுக்குச் சொந்தக்காரர் ஒருவரை மணந்து கொண்டு, நல்லறமே இல்லறமாய் வாழ்ந்து வருகிறார்.

       நண்பர்களே, அம்பாள் சன்னதியில், திருமணம் முடிந்து, மணமக்கள் இயல்பாய், சிரித்தபடியே பேச, பேச மனதில் ஓர் ஆயிரம் கேள்விகள் வலம் வந்தபடியே இருந்தன.
     என்ன பாவம் செய்தார்கள் இவர்கள். இயற்கை ஏன் இவர்களிடம், தனது திருவிளையாடலை, தனது கொடூர குணத்தினைக் காட்டியுள்ளது. கருப்பு சிகப்பு என்ற வார்த்தைகளின் வித்தியாசத்தினைக் கூட அறியாதவர்கள் அல்லவா இவர்கள். தாங்கள் என்ன நிறம் என்பது கூட தெரியாதவர்கள் அல்லவா இவர்கள். நிறம் என்ன நிறம், நாம் எப்படியிருக்கிறோம், மனிதன் என்றால் எப்படி இருப்பான், கால் எப்படியிருக்கும், கை எப்படியிருக்கும், முகம் என்றால் என்ன, அது எப்படி இருக்கும், உண்ணுகின்றோமே உணவு, அது எப்படி இருக்கும், சட்டை என்கிறார்களே, வேட்டி, சேலை என்கிறார்களே அவையெல்லாம் எப்படி இருக்கும், என்பதையே அறியாதவர்கள் அல்லவா இவர்கள்.



      நாம் வாழும் உலகில் எத்தனை எத்தனை மதங்கள். அவை அனைத்தும் போதிப்பது அன்பு என்ற ஒன்றைத்தானே. மதங்கள் போதிப்பதைப் படித்து அறிந்த பிறகும், அதனைப் பின்பற்றாது, கண்ணிருந்தும் குருடர்களாய் துப்பாக்கியையும், வெடிகுண்டுகளையும் சுமந்து, பேரழிவை உண்டாக்கி வாழும் மக்கள் பலரிருக்க, அவர்களைத் தண்டிக்காது, இவர்களை மட்டும் ஒளியற்றவர்களாய் பிறக்க வைத்து, ஏன் தண்டிக்க வேண்டும்?. கண்ணற்ற மனிதர்களைப் படைப்பதற்கும் ஒரு கடவுளா?. இக்கடவுள் முற்றும் உணர்ந்தவரா? அனைத்தும் அறிந்தவரா? மனதில் கேள்விகள் தோன்றுகின்றனவே தவிர, பதில்தான் கண்ணா மூச்சு ஆடிக்கொண்டேயிருக்கிறது.

     நண்பர்களே, சொன்னால் நம்ப மாட்டீர்கள், திருமணம் முடிந்த பிறகு, சுவாமிமலை தேவஸ்தான அலுவலகத்திலே, திருமணப் பதிவேட்டில், மாப்பிள்ளை தன் கையெழுத்தினைப் பதிவு செய்தார் என்று கூறினால் நம்புவீர்களா? எனது இரண்டு கண்களாலும் பார்த்தேன்.

     படிவத்தைக் கொடுத்ததும், தனது வலது கையால், போனாவினைப் பெற்றுக் கொண்டு, கையெழுத்துப் போட வேண்டிய இடத்தில், கைபிடித்து போனாவின் முனையினை வைக்கச் சொன்னார். பேனாவை குறித்த இடத்தில் வைத்ததும், தனது இடது கை, ஆள் காட்டி விரலையும், நடு விரலையும், அகல விரித்து, பேனாவின் முனையில் சொருகினார்.

     நண்பர்களே, நாமெல்லாம் சிறு வயதில், இரண்டு கோடு நோட்டில் எழுதியிருப்போமே நினைவில் இருக்கிறதா? பக்கம் முழுவதும் இரண்டிரண்டு கோடுகளாக அச்சிடப் பெற்றிருக்கும். நாம் அதன் இரண்டு கோடுகளுக்கும் இடையில், குண்டு குண்டாக எழுதிப் பழகினோமே ஞாபகத்திற்கு வருகிறதா?


     நண்பர்களே, இவரும் அப்படித்தான் கையொப்பமிட்டார். இவரைப் பொறுத்தவரை, நடு விரல் மேல் கோடு, ஆள் காட்டி விரல் கீழுள்ள கோடு. கையெழுத்திட வேண்டிய இடத்தின் எல்லைகளாக, மேலும் கீழும் விரல்கள். விரல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தெளிவாகக் கையெழுத்திட்டார். மலைத்துப் போய்விட்டேன் நண்பர்களே, மலைத்துப் போய்விட்டேன்.

          வாழ்வின் எக்காலத்தும் மறக்க இயலா திருமணம் இத் திருமணம்.

     நண்பர்களே, கண்பார்வை அற்றவர்கள் இருவர் இணைந்து, ஒரு புதுவாழ்வினைத் துவக்கியிருக்கிறார்கள். இருவரின் தன்னம்பிக்கையும், தைரியமும், நெஞ்சுரமும் போற்றப்பட வேண்டியவை.

     இருளிலேயே இருந்து வாழப் பழகிவிட்ட, இவ்விருவரின் எதிர்கால வாழ்வு ஒளிமயமானதாக அமைய, மனதார வாழ்த்துவோமா நண்பர்களே.

     இவர்களது இல்லறத்தின் பயனாய், நாளை இவ்வுலகில் தோன்றவிருக்கும் மழலை ஒளிவீசும் கண்களோடு தோன்றி, இவ்விருவரையும் கண்ணே போல் போற்றிப் புரக்க, நெஞ்சார வாழ்த்துவோமா நண்பர்களே.

மணமக்கள் நல்வாழ்வு வாழட்டும்
நாளை வரும் மழலை
இவ்வுலகைக் கண்ணாரக் காணட்டும்.

    
      

    



67 கருத்துகள்:

  1. //மணமக்கள் நல்வாழ்வு வாழட்டும்
    நாளை வரும் மழலை
    இவ்வுலகைக் கண்ணாரக் காணட்டும்.//

    நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. இதுவரை வந்த தங்களின் பதிவுகளில் மனதை அதிகம் பாதித்துவிட்டது இப்பதிவு. இப்பதிவின் மூலமாக பலருடைய கண்களைத் தாங்கள் திறந்துவிட்டீர்கள் என்பதே உண்மை. மன உறுதியுடன் எதையும் எதிர்கொள்ளலாம் என்பதற்கு இப்பதிவின் கதாநாயகரும் கதாநாயகியும் எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றனர். அவர்களிடமிருந்து நாம் கற்கவேண்டியது இன்னும் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. இவர் சொன்னததுதான் நான் சொல்லவருவதும்.... tha.ma 12

      நீக்கு
    2. இவர்களிடம் கற்பதற்கு நமக்கு ஏராளம் இருக்கிறது. ஐயா நன்றி

      நீக்கு
  3. நண்பர்களே, கண்பார்வை அற்றவர்கள் இருவர் இணைந்து, ஒரு புதுவாழ்வினைத் துவக்கியிருக்கிறார்கள். இருவரின் தன்னம்பிக்கையும், தைரியமும், நெஞ்சுரமும் போற்றப்பட வேண்டியவை.

    மணமக்கள் நல்வாழ்வு வாழட்டும்
    நாளை வரும் மழலை
    இவ்வுலகைக் கண்ணாரக் காணட்டும்

    இனிய வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  4. இந்த பதிவு மனதை நெகிழ செய்துவிட்டது. அதுலும் //என்ன பாவம் செய்தார்கள் இவர்கள். இயற்கை ஏன் இவர்களிடம், தனது திருவிளையாடலை, தனது கொடூர குணத்தினைக் காட்டியுள்ளது. கருப்பு சிகப்பு என்ற வார்த்தைகளின் வித்தியாசத்தினைக் கூட அறியாதவர்கள் அல்லவா இவர்கள். தாங்கள் என்ன நிறம் என்பது கூட தெரியாதவர்கள் அல்லவா இவர்கள். நிறம் என்ன நிறம், நாம் எப்படியிருக்கிறோம், மனிதன் என்றால் எப்படி இருப்பான், கால் எப்படியிருக்கும், கை எப்படியிருக்கும், முகம் என்றால் என்ன, அது எப்படி இருக்கும், உண்ணுகின்றோமே உணவு, அது எப்படி இருக்கும், சட்டை என்கிறார்களே, வேட்டி, சேலை என்கிறார்களே அவையெல்லாம் எப்படி இருக்கும், என்பதையே அறியாதவர்கள் அல்லவா இவர்கள்.// - இந்த கேள்விகளும்.... // நாம் வாழும் உலகில் எத்தனை எத்தனை மதங்கள். அவை அனைத்தும் போதிப்பது அன்பு என்ற ஒன்றைத்தானே. மதங்கள் போதிப்பதைப் படித்து அறிந்த பிறகும், அதனைப் பின்பற்றாது, கண்ணிருந்தும் குருடர்களாய் துப்பாக்கியையும், வெடிகுண்டுகளையும் சுமந்து, பேரழிவை உண்டாக்கி வாழும் மக்கள் பலரிருக்க, அவர்களைத் தண்டிக்காது, இவர்களை மட்டும் ஒளியற்றவர்களாய் பிறக்க வைத்து, ஏன் தண்டிக்க வேண்டும்?. கண்ணற்ற மனிதர்களைப் படைப்பதற்கும் ஒரு கடவுளா?. இக்கடவுள் முற்றும் உணர்ந்தவரா? அனைத்தும் அறிந்தவரா? மனதில் கேள்விகள் தோன்றுகின்றனவே தவிர, பதில்தான் கண்ணா மூச்சு ஆடிக்கொண்டேயிருக்கிறது.// இந்த கேள்விகளும் என்ன சொல்வதென்று படிப்பவர் மனதை உலுக்கி கொண்டு இருக்கிறது.

    மனமிணைந்த தம்பதியர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் மணமக்களை வாழ்த்தியமைக்கும் நன்றி சகோதரியாரே

      நீக்கு
  5. மனம் கொண்டது மாளிகை என்பார்கள்....வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
  6. மிக்க மகிழ்ச்சி...

    வாழ்த்துக்கள் ஐயா...

    power cut....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரண்ட் இல்லாவிட்டாலும் கச்சிதமாய் வருகை தரும் தங்களுக்கு என் நன்றி ஐயா.

      நீக்கு
  7. பெயரில்லா23 நவம்பர், 2013

    வணக்கம்
    ஐயா
    முதலில் உள்ள கவிதை எம் இதயங்களை நனைய வைத்து விட்டது...மனதுக்கு பிடித்தது வாழ்க்கை.. வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. அந்தத் தம்பதியினரைப் பற்றி நினைக்கும்போது வரும் எல்லா உணர்வுகளும் உங்கள் வார்த்தைகள் மூலமே வந்துவிட்டன. நெகிழ்ச்சி மட்டுமல்ல பெருமிதமாகவும் உள்ளது. அவர்கள் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அற்புதமான, நெஞ்சை நெகிழ வைக்கும் பதிவு. அவர் கலந்து கொண்ட திருமணம் பற்றி எழுதுகிறார். எங்களது மனமார்ந்த வாழ்த்துகள், அவர்கள் தைரியத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    நண்பர்களே இன்னும் விளங்கவில்லையா? மனதினைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள் நண்பர்களே, மனதினைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். திருமண விழாவின் மூலம் இணைந்த இவ்விருவரும், பிறப்பு முதலே கண் பார்வை அற்றவர்கள்.

    எனது பக்கத்தில் பகிர்கிறேன். நீங்களும் வாழ்த்துங்கள் தைரியமிக்க மணமக்களை. நல்ல பதிவுக்கு வாழ்த்துங்கள் நண்பர் திரு கரதை ஜெயக்குமார் அவர்களை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முக நூலில் பகிர்ந்ததோடு, தொலைபேசி வழி தொடர்பு கொண்டும், அக்கறையோடு விசாரித்து மணமக்களை வாழ்த்தியமைக்கு மனமார்ந்த நன்றி ஐயா.

      நீக்கு
  10. //இவ்வுலகைக் கண்ணாரக் காணட்டும்.//

    நிச்சயம் நடக்கும் அய்யா

    நல்ல பதிவு...

    பதிலளிநீக்கு
  11. பஞ்சபூதங்களின் வாழ்த்துகளுடன், மணமக்களுக்கு மனமார்ந்த என் வாழ்த்துக்கள்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணமக்களை வாழ்த்தியமைக்கு மனமார்ந்த நன்றி நண்பரே

      நீக்கு
  12. மனதை நெகிழ வைத்த பதிவு சார்... இவ்விருவரின் வாழ்விலும் ஒளி வீசட்டும்...

    பதிலளிநீக்கு
  13. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணமக்களை வாழ்த்தியமைக்கு மனமார்ந்த நன்றி ஐயா

      நீக்கு
  14. கண்கலங்க வைத்துவிட்டீர்கள் ஜெயகுமார் சார்.கண்ணிருந்தும் குருடராய் வாழ்பவர் பலபேர். குறையை பொருட்படுத்தாமல் சாதித்துக் காட்டி இருக்கும் இவர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. பல்லாண்டு வாழ்க. சிறப்பாக பதிவு செய்திருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணமக்களை வாழ்த்தியமைக்கு மனமார்ந்த நன்றி ஐயா

      நீக்கு
  15. மணமக்கள் நல்வாழ்வு வாழட்டும்
    நாளை வரும் மழலை
    இவ்வுலகைக் கண்ணாரக் காணட்டும்.


    அருமையான பகிர்வு ஐயா....

    பதிலளிநீக்கு
  16. சுயநலத்தால் சொந்தங்களைத்தொலைத்து,ஊர்மெச்ச கைதட்டலுக்கு எதையும் சொல்லும் நபர்கள் உள்ள இந்தக்காலத்தில் ,நீங்கள் வித்தியாசமானவராய் ,மணநிகழ்வில் உங்கள் எழுத்தால் எங்களையும் கலந்துகொள்ள வைத்து கண்கலங்கவைத்துவிட்டீர்கள் .இலட்சியம் இருந்தால் இச்ககத்தையும்வெல்லாம் எபதர்க்கு இந்த இணையர்தான் எடுத்துக்காட்டு .நன்றி தோழர் .இவர்களை மனத்தால் கண்டுகொள்ளவைத்தமைக்கு .

    பதிலளிநீக்கு
  17. அருமையான பாடம் நடத்தி எங்களுக்கும் நீங்கள் வாத்தியார் ஆகிவிட்டீர்கள் ...
    #பயணம் செல், தொடர்ந்து பயணம் செல்.#இந்த வாசகம் எனக்காகவே சொல்லப் பட்டதென நினைக்கிறேன் !
    ஜோக்காளியின் நன்றியைக் காண>>>http://jokkaali.blogspot.com/2013/11/blog-post_3165.html
    த.ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பதிவில் அடியேனையும் குறிப்பிட்டு நன்றிபாராட்டியமைக்கு மனமார்ந்த நன்றி நண்பரே.
      தமிழ் மணம் ஓட்டுப் போடுவது எப்படி என்று கற்றுக் கொடுத்து நீங்கள்தான் எனக்கு வாத்தியார் ஆகிவிட்டீர்கள்.
      நன்றி நண்பரே

      நீக்கு
  18. சகோதரருக்கு வணக்கம்,
    பயணம் செல் தொடர்ந்து பயணம் செல் அற்புதமான தன்னம்பிக்கை கொண்ட வரிகள். மனதை உருக வைத்து விட்டு விட்டீர்கள் தம்பதியினரும் இன்னும் பல சாதனைகள் இணைந்தே செய்து வளமான வாழ்வை வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அவர்கள் கண்டிப்பாக இந்த உலகைக் கண்களால் காண்பார்கள். அழகான நடை ஒவ்வொரு பதிவிலும் தங்கள் உழைப்பு தெரிகிறது. பகிர்வுக்கு நன்றிகள் சகோதரர்.

    பதிலளிநீக்கு
  19. //இவர்களது இல்லறத்தின் பயனாய், நாளை இவ்வுலகில் தோன்றவிருக்கும் மழலை ஒளிவீசும் கண்களோடு தோன்றி, இவ்விருவரையும் கண்ணே போல் போற்றிப் புரக்க, நெஞ்சார வாழ்த்துவோமா நண்பர்களே.// அவர்களது தன்னம்பிக்கையை வார்த்தையில் வடிக்கவே முடியாது இருப்பினிம் நீங்கள் பதிந்த விதம் அருமை. அவர்களுக்கும் அவர்களது குழந்தைச்செலவங்களுக்கும் அழகான ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துப்படியே தம்பதியினருக்கு ஒளிவீசும் குழந்தை செல்வங்களும், நல் வாழ்வும் அமையட்டும். நன்றி நண்பரே

      நீக்கு
  20. திருமணத்தைப் பொறுப்போடு நடத்திய தங்கள் நண்பர் துரை.நடராஜன் அவர்களுக்கும் இவர்களது வாழ்விற்கும் ஏற்றம் அளிக்கும் கல்விக்கு உதவிய அனைத்தும் உள்ளங்களுக்கும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் மீண்டும் வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே. தங்களின் வாழ்த்துக்களை நண்பர் துரை நடராசன் அவர்களிடம் நிச்சயம் சேர்ப்பிப்பேன்.

      நீக்கு
  21. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  22. உள்ளத்தை அப்படியே உலுக்கிவிட்ட பதிவு!

    இன்னமும் நான் என் நிலைக்குத் திரும்பவில்லை ஐயா!

    அந்தத் தம்பதிகள் நீடூழி நிறைவான வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்!

    அரிய பதிவொன்றைத் தந்த உங்களுக்கும்
    நன்றியுடன் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா!

    த ம.7

    பதிலளிநீக்கு
  23. மணமக்களுக்கு என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  24. இரு மனம் கலந்தால் திருமணம்

    மனம் போலே மாங்கல்யம்

    எங்கும் எதிலும்
    மனம்தான் ஆட்சி செய்கிறது

    மனம் புலன்களின் மூலம்தான்
    புற உலகில் இயங்குகிறது.

    புலன்களின் குறைபாடு
    மனதை பாதிப்பதில்லை

    அத்தகைய மனிதர்களை சுற்றியுள்ள மூட
    மனிதர்கள்தான் அந்த குறைபாட்டை பெரிதுபடுத்தி அவர்களின் மன உறுதியைக் குலைக்கின்றார்கள் என்பதுதான் நிதரிசனமான உண்மை.

    உண்மையில் பார்த்தல் ஏதாவது ஒரு புலன் குறைபாடு உள்ளவர்கள்தான் செயற்கரிய சாதனைகளை செய்கிறார்கள்.

    எந்த குறைபாட்டிற்கும்
    இறைவன் காரணம் இல்லை.

    ஒரு குறையை அவன் வைத்தால் அதை வேறொரு திறமை மூலம் அவன் நிறைவு செய்து விடுவான்
    .
    அவர்களுக்கு தேவை தன்னம்பிக்கையும் விடா முயற்சியுமே .
    மற்றவர்கள் செய்யவேண்டியது அதில் அவர்களின் மூக்கை நுழைக்காமல் இருந்தால் போதும்

    அதை கொடுக்காவிட்டால் பரவாயில்லை . கெடுக்காமல் , அந்த குறையை சுட்டிக் காட்டி, சொல்லி காயப்படுத்தாமல் இருந்தால் அதுவே அவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் பெரிய உதவி

    வாழ்க மணமக்கள் !
    அவர்கள் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி மழை பொழியட்டும் .
    பதிவுக்கு நன்றி பாராட்டுக்கள் . KJ

    பதிலளிநீக்கு
  25. தங்களின் பதிவைப் படித்து முடித்தவுடன் என்ன எழுதுவது என்று எனக்கு தோன்றவில்லை. நம்பிக்கைதான் வாழ்க்கை! மணமக்களுக்கு வாழ்த்துக்கள்! தங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  26. உங்கள்கட்டுரையைப் படித்தபிறகு எனக்குத்தோன்றுகிறது: கவியரசரின் ஒரு பாடலை இப்படிப் பாடலாமா என்று:
    "கண்ணோடு கண் சேர்க்கும் காலங்களே,
    கல்யாண சங்கீதம் பாடுங்களே".
    கண்மூடி உறங்கும்போதும் நாம் காணுகிறோமே, அது இதயத்தினால் அல்லவா? எப்போதுமே கண்கள் உறங்கிவிட்ட இவ்விருவருக்கும் அந்த இதயங்கள் நாள் முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கட்டும் என்று வாழ்த்துவோம்! இதுபோன்ற மனித உணர்வுகளை மேம்படுத்தும் பாசிட்டிவ் எழுத்தைத் தொடர்ந்து வெளியிடும் தங்களுக்கும் ஓர் வாழ்த்து!

    பதிலளிநீக்கு
  27. அன்புள்ள ஜெயக்குமார்...

    சமூகத்திற்கு நம்பிக்கை வார்ப்பவனே உண்மையான படைப்பாளி. உங்களின் எழுத்துக்கள் எப்போதும் நம்பிக்கையை வாழ்வில் அழுத்தமாக விதைக்கின்றன.

    வாழ்த்துக்கள். தொடர்ந்து பயணம் மேற்கொள்ளுங்கள் கடவுள் அந்தப் பாதையைவிட்டு விலகுவதற்கு இனி அவர் உதவி தேவையில்லை என்பதை உணர்த்தும் நம்பிக்கையே.

    பதிலளிநீக்கு
  28. மணமக்கள் நல்வாழ்வு வாழட்டும்
    நாளை வரும் மழலை
    இவ்வுலகைக் கண்ணாரக் காணட்டும்

    இனிய வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  29. //காதலுக்காகப் போராடியவர்கள் அல்ல. பிறந்தது முதல் வாழ்வதற்காகப் போராடி வருபவர்கள்//

    நிதர்சனமான வார்த்தைகள்!.

    ஒருவருக்கு கண்ணில்லை என்றாலே கடினமான ஒன்று, இதில் இருவருமே பார்வை அற்றவர்கள் என்கின்றபோது, நினைக்கவே துயர் கொள்கிறது மனது. இருவரும் இணைந்து நீடுடி வாழ் வாழ்த்துகிறேன் அய்யா.

    பதிலளிநீக்கு
  30. மனதை நெகிழ வைத்த பதிவு.....

    மணமக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  31. பெயரில்லா25 நவம்பர், 2013

    ''..மணமக்கள் நல்வாழ்வு வாழட்டும்
    நாளை வரும் மழலை
    இவ்வுலகைக் கண்ணாரக் காணட்டும்...'''
    மனமுருகும் திருமணம்.
    மிக்க நன்றி.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்


    பதிலளிநீக்கு
  32. உழைப்பு நண்பர்களே உழைப்பு. இமையில்லாதபோதும் இயன்றவரை உழைப்பு . கண்ணிருந்தும் நாமெல்லாம் குருடர்கள்.

    பதிலளிநீக்கு
  33. நெஞ்சம் கனக்கின்றது. அவர்களுடைய மனதில் எத்தகைய உறுதி இருந்தால் இது சாத்தியமாகி இருக்கும்!..

    தமக்குப் பார்வை இல்லையே என அவர்கள் வருந்தியிருந்தால் - சிகரத்தை எட்டியிருக்க முடியாது தானே!..

    இத்தனை தூரம் நடத்தி வந்த இறைவன்
    இனியும் வழி நடத்துவான்!..

    ''..மணமக்கள் நல்வாழ்வு வாழட்டும்
    நாளை வரும் மழலை
    இவ்வுலகைக் கண்ணாரக் காணட்டும்!..''

    அன்பில் நிறைந்த மணமக்கள்
    நலம் பல பெற்று நல்வாழ்வு வாழ்க!..

    பதிலளிநீக்கு
  34. மனமிணைந்த தம்பதியர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  35. மணமக்கள் பல்லாண்டு வாழட்டும்

    பதிலளிநீக்கு
  36. மிகவும் அருமையான எழுத்துநடை .. பதிவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  37. Powercut என்பதால் மறுபடியும்...

    என்ன சொல்வதென்றே தெரியவில்லை... மனம் கலங்க வைத்தது ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் கலங்கித்தான் போய்விட்டது ஐயா. மணமக்களை வாழ்த்துவோம். நன்றி ஐயா

      நீக்கு
  38. என் இனிய நண்பர் ஜெயகுமார் அவர்களுக்கு, தங்களின் இந்த பதிவு கல் மனம் கொண்டோரையும் கலங்க செய்து விடும் என்றால் அது மிகையாகாது. தாங்கள் வேண்டுவதை நாங்களும் வழி மொழிதல் செய்கிறோம்.அதாவது இந்த தம்பதியரின் குழந்தை கண்ணிலும் அறிவிலும் ஒளியுடன் பிறந்து வாழ்வாங்கு வாழ்ந்து தனக்கும் தன் பெற்றோர்க்கும் தன் சமுதாய்த்திற்கும் தன் நாட்டிற்கும் பெருமை சேர்க்க்ட்டும் என வாழ்த்துகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே தங்களின் வழி மொழிதல் பலிக்கட்டும்.

      நீக்கு
  39. என் இனிய நண்பர் ஜெயகுமார் அவர்களுக்கு, தங்களின் இந்த பதிவு கல் மனம் கொண்டோரையும் கலங்க செய்து விடும் என்றால் அது மிகையாகாது. தாங்கள் வேண்டுவதை நாங்களும் வழி மொழிதல் செய்கிறோம்.அதாவது இந்த தம்பதியரின் குழந்தை கண்ணிலும் அறிவிலும் ஒளியுடன் பிறந்து வாழ்வாங்கு வாழ்ந்து தனக்கும் தன் பெற்றோர்க்கும் தன் சமுதாய்த்திற்கும் தன் நாட்டிற்கும் பெருமை சேர்க்க்ட்டும் என வாழ்த்துகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே தங்களின் வழி மொழிதல் பலிக்கட்டும்

      நீக்கு
  40. மிக அருமையான பதிவு.மணதில் இப்பதிவு ஒரு இனம்புரியாத மணநெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.மணமக்கள் பல்லாண்டு வாழ்ந்து எல்லா செல்வங்களையும் பெறவேண்டும் என்று மணதாரவாழ்த்துகின்றேன்.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் வாழ்த்தியது போலவே மணமக்கள் பல்லாண்டு வாழட்டும். அதிகாலை வந்த தங்களின் கருத்துரை மனதில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. நன்றி நண்பரே

      நீக்கு
  41. உங்கள் கேள்விகளில் எத்தனை சீற்றம், எத்தனை மன வேதனை? ஆற்றாமையுடன் வெளிப்பட்டிருந்த உங்கள் எழுத்து மனதை நெகிழ்த்தி விட்டது. நல்ல மனம் படைத்தோரும் அப்பழுக்கில்லாத‌ குணம் படைத்தோரும் இது போன்ற எல்லையற்ற துன்பங்களை ஏன் அனுபவிக்க வேண்டும் என்ற கேள்வி வாழ்க்கையில் நெடுக வந்து கொண்டே தான் இருக்கிறது. விடை மட்டும் தான் கிடைப்பதில்லை. கவலைப்படாதீர்கள். அவர்கள் நிச்சயம் சிறப்பாக வாழ்வாங்கு வாழ்வார்கள்.

    பழைய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. மகனையும் மருமகளையும் அவர்கள் பார்வையற்றவர்களாய் பேச முடியாதவர்களாய் துன்பங்கள் அனுபவிப்பதைப்பார்த்து பெற்ற‌வர் வேதனையுடன் பாட, அவர்களின் குழந்தை அழகாய் பதிலளிக்கும் உங்கள் கேள்விகளுக்குக்கூட பதில் இதிலேயே இருக்கிறது.

    தாத்தா பாடுவது:

    வெய்யில் என்ன, மின்னல் என்ன,
    வெண்மை என்ன, மஞ்சள் என்ன‌

    காணாத கண்கள் இரண்டில் எல்லாமே ஒன்றடா!
    தென்றல் பாட்டும் ஊமை காற்று
    தேவன் பாட்டும் ஊமை பாட்டு
    அவன் தானே நம்மைச் செய்தான், துன்பங்கள் ஏனடா?

    பேரன் பதிலுக்குப் பாடுவது:

    உங்களுக்காக நானே சொல்வேன்
    உங்களுக்காக நானே கேட்பேன்
    தெய்வங்கள் கல்லாய்ப்போனால் பூசாரி இல்லையா?
    தந்தை பேச்சு தாய்க்கு புரியும்,தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும்
    உள்ளத்தில் நல்லோர் எல்லாம் உயர்ந்தவர் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான ஆழமான பாடல் .
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

      நீக்கு
  42. அன்பின் ஜெயக்குமார் -மணமக்கள் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறோம் - திருமணம் சிறப்பாக நடைபெற்றது குறித்து பாராட்டுகள் - ந்ல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  43. அன்பின் ஜெயக்குமார், இந்தப் பதிவை நான் எப்படித் தவறவிட்டேன் என்று நினைத்து என் மீதே குறை படுகிறேன். உங்கள் அடுத்தபதிவைப் பார்த்தபின் தான் இங்குவந்தேன். மணமக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு