புதுகைக் கவிஞர், கணினித் தமிழ்ச் சங்க ஒருங்கிணைப்பாளர் அவர்களிடமிருந்து ஓர் உத்தரவு, ஓர் அன்புக் கட்டளை, இணைய வழி பறந்து வந்தது.
மனம்
கவர் பதிவர்கள் பற்றி ஓர் பதிவு எழுதுக.
மீற முடியுமா? கால அவகாசம் மட்டும் கொடுங்கள்
ஐயா? என அனுமதி கேட்டிருந்தேன் .தேர்வுக் காலம் அல்லவா.
இதோ, தங்களின் எழுத்துக்களாலும், சிந்தனைகளாலும்,
செயற்கரியச் செயல்களாலும், என் உள்ளம் கவர்ந்த பதிவர்ககளில், ஒரு சிலரை மட்டும் இப்பதிவில்
சந்திக்கலாம், வாருங்கள்.
இவர்கள் வலையில் புகுந்து, எழுத்துச் சோலைகளில்
அமர்ந்து, தென்றலாய் வருடும், வார்த்தை வரிகளில் நம்மையே மறந்து, மகிழலாம் வாருங்கள்.
பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட ஆராய்ச்சி
அணு உலையான ஸைரஸ் ( C I R U S ) ஆய்வு உலையினை இயக்கியப் பொறியாளர்களுள் ஒருவராய்,
ஒன்றல்ல இரண்டல்ல முழுதாய் எட்டு ஆண்டுகள் பணியாற்றியவர் இவர்.
இவ்வுலையில் மட்டுமல்ல, ராஜஸ்தானின் கான்டு அணுமின்
நிலையம், சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையம், கனடாவின் கான்டு புரூஸ் அணுமின் நிலையம்
என தன் 42 ஆண்டு கால பணிக் காலம் முழுவதையும், அணு உலைகளிலேயே செலவிட்டவர் இவர். இவர் மட்டுமல்ல பொறியியல் படித்த இவரது இரண்டாம் புதல்வி திட்டப் பொறி யாளியாகக் கனடாவில் பிக்கரிங் அணுமின் நிலையத்திலும், மருமகன் டார்லிங்டன் என்னும் வேறோர் அணுமின் நிலையத்தில் திட்டப் பொறியாளராய்ப் பணி செய்து வருகிறார்கள்.
அணு உலையே கதியென்று கிடந்தவர், தற்பொழுது தமிழ்
இலக்கியத்தையே தன் மூச்சாய் சுவாசித்து வருகிறார்.
தன் சுவாசத்தை, தமிழ் மொழி மீதான தன் நேசத்தை,
தன் வாழ்வின் பெரும் பகுதியினை விழுங்கிய அணு உலைகளை, வரிசையாய் தன் வலையில் படைத்து,
விருந்தளித்து நம்மை வியக்க வைக்கிறர், இந்த அணு உலைப் பொறியியல் விஞ்ஞானி.
கூடங்குளம் அணு உலை பற்றிய இவர்தம் பதிவு ஒன்றே
போதும் ,நமது வீண் அச்சங்களைப் போக்க.
அணு உலைகள், வானியல் விந்தைகளைப் பற்றி மட்டுமல்ல,
சீதாயாணத்தையும் இவர் வலையில் நாம் காணலாம்.
இவர்தான் அணு சக்திப் பொறியாளர்
திருமிகு சி. ஜெயபாரதன்
இவரது வலை,
தமிழ்
மணம்
வலைப்
பூவில் நம் அனைவரையும் கவர்ந்த ஒரே சொல்.
நாம்
அனைவரும் விரும்பும் ஒரே சொல்.
தமிழ்
மணம் நிறுவனக் குழுவில் இவரும் ஒருவர். பொள்ளாச்சி என்று இன்று அழைக்கப்படும், பொழில்
வாய்ச்சியில் பிறந்தவர். நாடு விட்டு நாடு பறந்து, இன்று நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றி
வருபவர் இவர்.
விண்வெளி மையத்தில் பணியாற்றினாலும், இவர் மனம்
சிறகடித்துப் பறப்பதென்னவோ, தமிழ் இலக்கண, இலக்கிய வானில்தான்.
இவர்தான்
பொறியாளர்
திருமிகு நா.கணேசன்
இவரது வலை
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய் ,
மனங் கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைக்க அழைக்கும்
எல்லாப்
பிரச்சினைகளைத் தாண்டியும்
எது
என்னை மூச்சுவிடச் செய்து கொண்டிருக்கிறது
எந்த
சந்தேகமும் வேண்டாம்
வாசிப்பு
மட்டுமே என்வை வசிக்க வைத்திருக்கிறது
புத்தகங்கள்
பாராத நாள்
துக்க
நாள்
வாசிக்க
வேண்டும் சக்தி
என்ன
வேண்டுமானாலும் வாசி
வாசிப்பு
இல்லாமல் சுவாசித்துப் பயனில்லை
முதலில்
படி
பின்
தேர்ந்து
படி
பள்ளிப்
பாடங்களைத்
தாண்டியும்
படி
படிப்பொன்றே
காணும்
கடவுள்.
இவரது
ஒவ்வொரு கடிதமும், கவிதையும் என்னை என்றென்றும் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கிறது.
அன்பு மகள்களுக்கு ஒரு பாசக்காரத் தந்தையின் கடிதம்.
ஒரு மகளுக்குக் கவிதை,
மற்றொரு மகளுக்குக் கடிதம்.
உள்ளத்து உணர்வுகளை, எழுத்தாய் வடிக்கத் தெரிந்த
வித்தகர் இவர்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என்தன் தயக்கத்தை
உதறிச் சொல்ல வேண்டும் என்றால், இவரது பதிவினைப் படிக்கப் படிக்க என்னுள், மெல்ல மெல்ல
ஒரு பொறாமை உணர்வு, மெதுவாய் தலை நீட்டி, எட்டிப் பார்ப்பதைத் தவிர்க்க இயலாமல் தவிக்கிறேன்
என்பதுதான் உண்மை.
என் தந்தை இவர் போல் இல்லையே எனும் ஓர் ஏக்கம்.
ஒரு தந்தையாய் நீ எப்படி? எனும் ஒரு சுய பரிசோதனை.
ஒரு தந்தையாய், நானும் இவர் போல் மாற முயற்சித்துக்
கொண்டிருக்கிறேன், முயற்சி செய்து கொண்டே இருப்பேன்.
நண்பர்களே, இவர்யார் தெரியுமா?
உங்களுக்கு நன்கு தெரிந்தவர்தான்.
முதல் மதிப்பெண் வேண்டாம் மகளே
என்று, தன் மகளுக்கு அறிவுறுத்திய
ஆசானின் ஊரைச் சார்ந்தவர்,
கவிஞர்
மீரா.செல்வக்குமார்.
இவரது தளம்
நீங்கள் திருமணம் ஆவனரா? விரைவில் திருமணம் செய்து
கொள்ளப் போகிறவரா? அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய தளம் ஒன்றுள்ளது.
நாம் பேசத் தயங்குகின்றச் செய்திகளை, உரத்துச்
சொல்லும் ஓர் விழிப்புணர்வுத் தளம்
இவர்
சிறகுகள் வேண்டிக் காத்திருப்பவர் …. ஒரு உற்சாகப் பயணத்திற்காக
…
அன்புச் சகோதரி
திருமதி
கௌசல்யா ராஜ்
இவரது தளம்
மூலையிலோர்
சிறுநூலும் புது நூலாயின்
முடிதனிலே
சுமந்து வந்து தருதல் வேண்டும்
எனப்
பாடுவார் பாவேந்தர். என்னப் புத்தகம் வேண்டும் உங்களுக்கு, இவரது வலையில், ஏராளமாய்,
ஏராளமாய், மலையாய், மலை மலையாய் நூல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
வந்து பாருங்கள், வேண்டியதைத் தயங்காமல் தரவிறக்கிக்
கொள்ளுங்கள்.
இவரும், இவரது தளமும்
அன்புறு நேயம், கருணை, இரக்க நல்லின்பம், நிதானம்
முதலிய நன்னடத்தைகளை முதன்மையாய் போதிக்கும் பௌத்தத்தின் அடிச் சுவடு தேடி அலையாய்
அலைபவரின் வலைப் பூ இது.
ஒரு களப் பணியாளரின், அயரா உழைப்பின் உன்னதப்
பதிவேடு இவர்தம் வலை.
இவர்தான்
வலைக்குள், வலை உலகிற்குள் என்னை இழுத்தவர்
முனைவர்
பா.ஜம்புலிங்கம்
இவர்தம் வலை
சருகு
இறகு
இரண்டும்
உதிர்வுகள்
ஒன்று
மரத்தின்
வரலாற்றை
இன்னொன்று
பறவையின்
வரலாற்றை
ஒன்றில்
பூமி
இன்னொன்றில்
வானம்
இரண்டும்
வாழ்வின்
உண்மையை
வானமும்
பூமியும்
என்றும்
நிலையானது
மற்றவை
யாவும்
சருகு
மற்றும இறகு.
எத்துனை பெரிய உண்மை, எத்துனைச்
சிறிய வரிகளில். இச்சிறு கவிதை ஒன்றே போதும் இவரின் மேன்மையை உணர்த்த.
இவர் கவிஞரா? ஆம் கவிஞரும்தான்.
எழுத்தாளரா? ஆம் எழுத்தாளரும்தான்.
கட்டுரை வரைபவரா? ஆம் கட்டுரையும் வரைபவரும்தான்.
சிறு கதை எழுத்தாளரா? ஆம் சிறு கதையும் எழுதுபவர்தான்
நாவலாசிரியரா? ஆம் நாவலாசிரியரும்தான்
இது மட்டுமல்ல,
ஆசிரியர், பேராசிரியர், பல்கலைக் கழகப் பேராசிரியர்
வலையில் எதை எழுதுவது? எப்படி எழுதுவது? என எனக்குப்
போதித்தவர்.
இவர்தான்
முனைவர்
ஹரணி
இவரது வலை
நண்பர்களே, இன்னும் இன்னும் என, என் உள்ளம்
கவர்ந்த பதிவர்கள் நிறைய்ய்ய்ய்ய பேர் இருக்கிறார்கள். ஆனால் எழுதத்தான் எனக்கு நேரம்
இல்லை.
புதுகைக் கவிஞர் உத்தரவிட்ட பிறகும், எழுத எனக்கு
இத்தனை நாட்களாகி விட்டன. பொறுத்தருள வேண்டும் கவிஞரே.
காரணம், தாங்கள் அறிந்ததுதான்
பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு நெருங்கி
விட்டதல்லா? தேர்வுக்கான நாட்கள் சுருங்கி விட்டன அல்லவா.
பல மாணவர்கள் தேர்வு பற்றியச் சிந்தனையே இல்லாமல்,
ஊர் சுற்றிக் கொண்டிருக்க, ஆசிரியர்களாகிய நாங்கள்தான், தேர்வு, தேர்வு, படி, படி எனக்
கூறிக் கூறியே நொந்து நொந்து வாடிக் கொண்டிருக்கிறோம்.
மாணவர்கள் கண் விழித்துப் படிக்கிறார்களோ இல்லையோ?
என் போன்ற ஆசிரியர்களின் இரவுகள், உறங்கா இரவுகளாகவே நீண்டு கொண்டிருக்கின்றன.
எழு,
எழு
படி,
படி
என
உறக்கத்தில் இருந்து எழுப்பி, படிக்க உற்சாகப் படுத்திக் கொண்டே இருக்கிறேன.
எனவே, தேர்வுகள் நெருங்க நெருங்க, வலையில் வலம்
வரும் நேரம் சுருங்கிச் சுருங்கி ரொம்பவே குறைந்துதான் போய்விட்டது.
நண்பர்களே, இந்த எளியேனைப் பொறுத்தருளுங்கள்.
தேர்வு முடிந்தவுடன்,
விடைத்தாள் திருத்தும் பணி நிறைவுற்றவுடன்,
சட்ட மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சாவடி பணி
நிறைவுற்றவுடன்
சட்ட மன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி
நிறைவுற்றவுடன்
முழுதாய் வலைக்கு வருவேன். அதுவரை நேரம் கிடைக்கும்போது,
அவ்வப்போது வலையில் சந்திப்போம்.
புதுகைக் கவிஞரே, தாங்கள் இட்ட பணியைச் செய்துவிட்டேன்.
முதல் மதிப்பெண் வேண்டாம் மகளே? என்றவரே,
தாங்கள் வைத்தத் தேர்வை எழுதிய, இந்த எளியேனின்,
விடைத்தாளினைத் திருத்தி, நான் பெற்ற மதிப்பெண்களைக்
கூறுங்கள் ஐயா.
வெற்றி பெற்றுவிட்டேனா அல்லது உடனடித் தேர்வை
மீண்டும்
எழுத வேண்டுமா என்று அறிந்து கொள்ள
ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா.
அருமை..
பதிலளிநீக்குபுதிய தளங்களின் அறிமுகமாக மலர்ந்திருக்கின்றது - இந்தப் பதிவு..
வாழ்க நலம்..
நன்றி ஐயா
நீக்குவாழ்த்துகள் அனைவருக்கும்.
பதிலளிநீக்குதம வாக்கு பின்னர் கணினிக்கு வந்தபின்னர்...
:)))
நன்றி நண்பரே
நீக்குசில தளங்கள் எனக்குப் புதியவை.
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.
நன்றி ஐயா
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
அவசியம் படிக்க வேண்டிய தளங்கள் அனைவரது தளமும் நான் அறிந்ததே..தேடலுக்கும் சிறப்பாக விளக்கம் தந்து சிறப்பித்தமைக்கு நன்றி ஐயா.
நன்றி
அன்புடன்
ரூபன்
நன்றி நண்பரே
நீக்குஉங்களது வாசிப்பு அகலமானது எனக்கு சிலரைத் தெரியும் சிலரைத் தெரியாது அறிமுகங்களுக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅன்புள்ள ஜிஎம்பீ ஐயா,
நீக்குதிருமிகு ஜெயபாரதன் அவர்களின் 'நெஞ்சின் அலைகள்' பதிவுகளை தவறாமல் வாசிக்க ஆற்றுப்படுத்துதலில் நானும் பங்கு கொள்கிறேன். உங்களின் மனசில் அடிக்கடி முகிழ்க்கும் பதில் கிடைக்காத கேள்விக்களுக்கு ஜெ.பா. அவர்களின் பதிவுகள் விடையாகிப் போகும்.
நன்றி ஐயா
நீக்குநன்றி ஐயா
நீக்குஆஹா தங்கள் எழுத்து நடை எனக்கு ஆச்சிரியமாக இருக்கு சகோ,, அருமை அருமை,, எனக்கு கௌசல்யா ராஜ் தவிர அனைவரும் புதியவர்கள்,, இனி தான் படிக்கனும்,, அருமையான தொகுப்பு, தங்கள் மாணவர்கள் அனைவரும் நல்மதிப்பெண்களுடன் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி தொடருங்கள்.
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஅனைத்தும் சிறந்த தளங்கள்... நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅனைத்தும் சிறந்த தளங்கள்... நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குதங்களது நடையில் பதிவர்களின் அறிமுகம் அழகு நண்பரே அனைவருக்கும் வாழ்த்துகள்
பதிலளிநீக்குதமிழ் மணம் 5
நன்றி நண்பரே
நீக்குஅறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,உங்களுக்கும் :)
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குமனம் கவர்ந்த பதிவர்கள் அறிமுகத்தில் தாங்கள் கூறிய அனைத்து தளங்களும் அற்புதமானவை. பகிர்ந்தமைக்கு நன்றி !
பதிலளிநீக்குபதிவா் அறிமுகம் மிக நன்று.
பதிலளிநீக்குபுதிய பதிவா்கள் அறிந்துகொள்ளவேண்டிய பதிவுகள் இவை.
நன்றி நண்பரே
நீக்குஅன்புள்ள ஜெயகுமார்
பதிலளிநீக்குவணக்கம். மனம் நெகிழ்கிறது.
இன்னும் நிறைய எழுதவேண்டும் தரமாக எழுதவேண்டும் என்று தூண்டுகிறது உங்களின் சொற்கள். உங்களின் அன்பிருக்கும் பெருநதன்மைக்கும் பணிகிறேன்.
நன்றிகள் . பல . மேலும் நீங்கள் அறிமுகப்படுத்திய வலைத் தளங்களுக்கும் சென்று அது குறித்தும் எழுதுவேன்.
உள்ளதைத்தான் சொன்னேன்
நீக்குநன்றி ஐயா
சென்னை தமிழில் கூறுவதென்றால் 'பிச்சி ஒதறிட்டீங்க சாமி'!.. (அது சரி, வலையுலகப் பதிவர்களின் உள்ளம் கவர் கள்வனாம் கரந்தை ஜெயக்குமாரைப் பற்றி யாரும் எழுதப் போவதில்லையே! ஊரறிந்த அந்தணனுக்குப் பூணூல் எதற்கு என்பதுதானே காரணம்?)
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅருமையான அறிமுகங்கள். சிலர் புதியவர்கள். அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே! அனைவருக்கும் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குதங்களின் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். சிறப்பான முறையில் தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள விதம் அருமை. என் வலைப்பூவும் இருப்பதறிந்து மகிழ்ச்சி. எனது மற்றொரு வலைப்பூவினைத் (முனைவர் ஜம்புலிங்கம்)தொடங்க தாங்களே காரணமாக இருந்தீர்கள் என்பதைப் பகிர்வதில் மகிழ்கின்றேன்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குநான் விரும்பித் தொடரும்
பதிலளிநீக்குஅற்புதமான தளங்கள்
அற்புதமாக அறிமுகம் செய்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்
நன்றி ஐயா
நீக்குஅருமையான அறிமுகம் தோழர்
பதிலளிநீக்குநன்றி தோழர்
நீக்குஅருமை அருமை ஜெயக்குமார் சகோ தாங்கள் ஆசிரியரா. சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தொடரட்டும் உங்கள் பணி. ஒரு ஆசிரியராக மிகப் பொறுப்புணர்வுடன் தாங்கள் பகிர்ந்திருப்பவற்றை ரசித்துப் படித்தேன்.
பதிலளிநீக்குஅறிமுகப்படுத்தி உள்ள அனைத்துப் பதிவர்களும் அவர் தம் பதிவுகளும் சிறப்பானவை. வாழ்த்துகள் அனைவருக்கும்
நன்றி சகோதரியாரே
நீக்குஅன்பு நண்பருக்கு, உணர்ச்சிகளின் நெகிழ்வில் இருக்கிறேன்.
பதிலளிநீக்குஇதைநான் எதிர்பார்க்கவில்லை.வலைப்பதிவில் மிகக்குறைந்த அனுபவமே உள்ள என்னை அறிமுகப்படுத்திய உங்கள் பார்வைக்கு என் சிரம்தாழ்ந்த வந்தனங்கள்...நன்றி நண்பரே..
எத்தனை காலம் வலையில் இருந்தோம் என்பதைவிட
நீக்குஇருந்த காலத்தில் என்ன செய்தோம் என்பதுதானே முக்கியம்
தங்களின் எழுத்துக்கள் என்றுமே எனக்கு விருப்பமானவை
நன்றி நண்பரே
திறன்மிகு பதிவர்களைத் தெளிவாக அறிமுகம் செய்துள்ள தங்களின் தீர்க்கச் செயலுக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குபகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅய்யா வணக்கம். தாமத வருகைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குஅய்யா தங்கள் அன்பிற்கு எல்லையில்லை! ஆனால் தயவுசெய்து என்னைப் பற்றிய வரிகளில் அந்த “சக்கரவர்த்தி” என்பதை உடன் எடுத்துவிடுமாறு கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அன்பு கூர்ந்து, தயவுசெய்து எடுத்துவிடுங்கள்... அப்புறம், தாங்கள் அறிமுகப்படுத்திய முதலிரு தமிழறிஞர்களை நான் கணினி வாங்கி வலைப்பக்கம் வரும் முன்னரே அறிவேன். அவர்களது தமிழ்ப்பணி அளப்பரிது. ஹரணி அவர்களை உள்ளிட்ட நம் நண்பர்களின் தளம் சில அறிமுகமானதுதான். மற்றவர்களையும் அறிமுகப்படுத்திய அன்பிற்கு நன்றி. தாங்கள் அறிமுகப்படுத்துவோர் அனைவரும் தகுதியானவர்ளாகத்தான் இருப்பர் என்பதில் சந்தேகமென்ன? இதுபோல அவ்வப்போது நாமே அறிமுகங்களைத் தொடரத்தொடர இது ஒரு சங்கிலி போலப் புதியவர்க்கு உதவும், எழுதுவோர்க்கும் உற்சாகமாகும் என்பதாலேயே இதைத் தொடர வேண்டினேன். தங்கள் பணி எப்போதும்போல இதிலும் சிறப்பே அய்யா. வணக்கம். நன்றியுடன் த.ம.8
தாங்கள் தொடங்கிய தொடர் பதிவு
நீக்குநிச்சயமாக பதிவக்ளுக்குப் பெரும் ஊக்கத்தை
வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது ஐயா
தாங்கள் சக்கரவர்த்திதான் ஐயா அதில் சந்தேகமே இல்லை
ஒரு மாவட்டத்தையே கணினியில் எழுச்சி பெற்ற மாவட்டமாக மாற்றி இருக்கிறீர்கள்,
உலகே வியக்கும் வகையில் பதிவர் சந்திப்பு மாநாட்டை நடத்தி அசத்தியிருக்கிறீர்கள்,தொடர்ந்து கணினித் தமிழ்ச் சங்கம் தழைக்க அல்லும் பகலும் பாடுபட்டு வருகிறீர்கள்,
இபபடிப் பட்டத் தங்களை எவ்வாறு அழைப்பது ஐயா,
நன்றி
அய்யா, மீண்டும் மெத்தப் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன் அந்த அடைமொழியை “ஒருங்கிணைப்பாளர்” என்று மாற்றிவிடுங்கள்...
நீக்குதங்களின் ஆணையினை நிறைவேற்றி விட்டேன் ஐயா
நீக்குவார்த்தையினை மாற்றி விட்டேனே தவிர,
என் மனச் சிம்மாசனத்தில் தாங்கள் என்றும் சக்கரவர்த்திதான்
நன்றி ஐயா
நன்றி அய்யா, மிக்க நன்றி. உங்கள் மனதிலும் நான் தோழமை மிக்க நண்பனாக இடம்பெறவே விழைகிறேன். சக்கரவர்த்தி, அரசு, பேரரசு என்பதெல்லாம் இன்றைய நிலையில் பொருந்தாத வாசகங்கள். நண்பர்களைப் பேர்சொல்லி அழைப்பதே இயல்பானது. இல்லையெனில் நம் அரசியல்வாதிகளின் அடைமொழிபோல அர்த்தமற்றுப் போய்விடும் அபாயமுள்ளது. மீண்டும் நன்றி வணக்கம்.
நீக்குநன்றி ஐயா
நீக்குஅழகிய அறிமுகங்கள்... அவர்களுக்கு வந்தனம்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குசிறப்பான அறிமுகங்கள்
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குநீங்கள் குறிப்பிட்ட அனைவருமே எனக்கு அறிமுகமானவர்கள் தாம். இருந்தாலும் உங்கள் பதிவின் வழியே அறிமுகம் எனும்போது ஒரு சுவாரஸ்யம்தானே.
பதிலளிநீக்குஅவசியம் படிக்க வேண்டிய தளங்கள் சிலதை அறிவேன் சிலர் புதியவர்கள்.
பதிலளிநீக்குவலைப்பூக்களை புத்துணர்வூட்டக்கூடிய வேண்டுகோளை முத்துநிலவன் ஐயா அவர்கள் விடுத்துள்ளார்.நல்ல சான்றோர் பெருமக்களை குறிப்பிட்டு அறிய செய்தமைக்கு நன்றி ஜெயகுமார் சார்
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா
நீக்குதிருமிகு. ஜெயபாரதன் அவர்களின் நெஞ்சின் அலைகள் வலைத்தளத்திற்கு நீண்ட காலமாக தொடர் வாசகன் நான். வியப்பும் ஆர்வமும் கலவையாகக் கொண்ட வாசிப்பு சுகத்தில் ஆழ்ந்து போவேன்.
பதிலளிநீக்குதங்கள் தளத்தில் திருமிகு ஜெயபாரதன் பற்றி பகிர்ந்து கொண்டு அற்புதமான அவர் பதிவுகளைப் பற்றி தெரியாதோருக்கும் தெரியப் படுத்தியமைக்கு நன்றி.
நன்றி ஐயா
நீக்குஎனக்கு புதிய தளங்கள் பல அறிமுகம் செய்த தங்களுக்கு எனது நன்றி.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஆஹா அண்ணா புதிய பதிவர்கள் இவர்கள் எனக்கு.நான் இன்னும் எழுதாமல் இருக்கின்றேன்..அண்ணா திட்டப்போறாங்க...பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுப்பணி என்னை தாமதப்படுத்துகிறது...
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஆஹா அண்ணா புதிய பதிவர்கள் இவர்கள் எனக்கு.நான் இன்னும் எழுதாமல் இருக்கின்றேன்..அண்ணா திட்டப்போறாங்க...பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுப்பணி என்னை தாமதப்படுத்துகிறது...
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஅறிவியலாளர்களின் அறிமுகத்துக்கு நன்றி அய்யா.
பதிலளிநீக்குமற்ற பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே
நீக்குஜெயபரதன் மற்றும் கணேசன் அவர்களின் தமிழார்வமும் பணியும் அறிவேன். மற்றவர்களை உங்கள் பதிவின் வழி அறிந்துகொள்ள முடிந்தது. வரவேற்க வேண்டிய முயற்சி. வாழ்த்துகளுடன்
பதிலளிநீக்குputhiyamaadhavi
நன்றி சகோதரியாரே
நீக்குஅறிமுகமானவர்களுக்கும்,
பதிலளிநீக்குஅறிமுகம் செய்த தாங்களுக்கும்
எம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
இப்பவே தொடர்கிறோம் நண்பரே...
நன்றி நண்பரே
நீக்கு
பதிலளிநீக்குஉயர்ந்த அறிஞர்களின்
சிறந்த பகிர்வு
அருமையான பதிவு
நன்றி ஐயா
நீக்குபதிவர்கள் அறிமுகம் மிக அழகாய்செய்து இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
thanks vanakkam
பதிலளிநீக்குசிலர் எனக்குப் புதியவர்கள். இங்கு அறிமுகமாகும் எல்லோருக்கும் என் வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குஇந்தப் பதிவை பார்த்தபோது நினைவில் வந்தவர் எனது தந்தை...1950 களின் பிற்பகுதி..அந்த நாட்களில் மலிவுப் பதிப்பு மர்மநாவல்களையும் சினிமா புத்தகங்களையும் வாசித்து நேரத்தை பாழாகக்கிக் கொண்டிருந்தேன். படி படி தேர்ந்து படி என்று வழிகாட்டியபடியால் பாக்கட் சைஸ் மர்ம நாவல்களுக்கும் சினிமாப்புத்தகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டு நல்ல அறிவைத் தரும் புத்தகங்கள் மேல் நாட்டம் கொண்டேன். வாழ்வில் உயர்ந்து கெளரவமாக வாழ்கின்றேன்
பதிலளிநீக்கு