எதற்காகச்
சுதந்திரம் வாங்கினோம்? எல்லோரும் வாழ. எப்படி
வாழனும்? ஆடு, மாடுகள் மாதிரி உயிரோடு இருந்தால் போதுமா? மனிதர்களாக வாழனும். அதற்குப்
படிப்பு வேணும். பட்டினியாக இருந்தால் படிப்பு வருமா? வராது. ஏழைகளுக்கெல்லாம் பள்ளிக்
கூடங்களிலேயே சாப்பாடு போடனும். அப்பதான் படிப்பு ஏறும். இதுவே முதல் வேலை. முக்கியமான
வேலையும் கூட.
அன்னதானம்
நமக்குப் புதியதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்குப் போட்டோம். இப்போது பள்ளிக்
கூடத்தைத் தேடிப் போய் போடச் சொல்கிறோம். அப்படிச் செய்தால் உயிர் காத்த புண்ணியம்,
படிப்பு கொடுக்கும் புண்ணியம் இரண்டும் சேரும். இதை உணர்ந்து இப்பகுதியில் பல ஊர்க்காரர்கள்
தாங்களாகவே பகல் உணவுத் திட்டத்தை நடத்த ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். இவர்களைப்
பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
என்
மனதில், எல்லோர்க்கும் கல்விக் கண்ணைத் திறப்பதைவிட முக்கியமான வேலை இப்போதைக்கு இல்லை.
எனவே எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர் ஊராக வந்து பகல் உணவுத் திட்டத்துக்காகப்
பிச்சையெடுக்க சித்தமாக இருக்கிறேன்.
படிக்கப்
படிக்க நெஞ்சம் நெகிழ்கிறது அல்லவா?
இப்படியும்
ஒரு மனிதர் இருந்திருக்கிறார்,
இப்படியும்
ஒரு முதல்வர் இருந்திருக்கிறார்
நம்மை,
நம் சந்ததிகளைப் படிக்க வைப்பதற்காகப் பிச்சை எடுக்கக் கூட தயாராக ஒரு முதல்வர் இருந்திருக்கிறார்.
கை
எடுத்து வணங்கத் தோன்றுகிறதல்லவா?
இவரைப்
பார்த்துத்தான் சிலர் கேட்டார்கள்
இவர்
படித்திருக்கிறாரா? மழைக்காகவாவது கல்லூரிக்குள் ஒதுங்கினாரா என்று கேட்டார்கள்.
காமராசர்
கல்லூரியில் படித்தாரா? கல்லூரிக்குள் மழைக்காகவாவது ஒதுங்கினாரா, என்று கேட்கிறார்கள்.
நான் கல்லூரியில் படிச்சேன்னோ, கல்லூரிக்குள் கால் வச்சேன்னோ எப்போது சொன்னேன்? நாம்தான்
படிக்காத பாமரன்னு உலகத்திற்கே தெரியுமே. நான் படிச்சதில்லேன்னு பச்சையாச் சொல்றேன்.
அதுக்கப்புறமும் காமராஜர் படிச்சாரான்னு நீ ஏன் வீணாகக் கேக்கிற?
நான்
கல்லூரியில் படிக்கல. கல்லூரி வாசல்ல கால் வைக்கல. வாஸ்தவம். அதனால்தான் நான் படிக்காத
கல்லூரியில் நம்ம பிள்ளைகள் எல்லாம் படிக்கட்டும்னு பாடு பட்டேன். எனக்கு கிடைக்காத
கல்வி எல்லாருக்கும் கிடைக்கனும்னுதான் ஊர் ஊரா பள்ளிக் கூடம் கட்டினேன்.
எப்பேர்ப்பட்ட
மனிதர்.
இவரில்லாமல்
இருந்திருப்பாரேயானால், இன்று நம் நிலை.
நினைக்கவே
நெஞ்சம் நடுங்குகிறதல்லவா?
இவரைப்
போற்றாமல், நாம் யாரைப் போற்றப் போகிறோம்.
இவரை
வணங்காமல், நாம் யாரை வணங்கப் போகிறோம்.
ஜுலை 15 கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள்
கல்வி வளர்ச்சி நாள்.
![]() |
1959ஆம் ஆண்டு எம் பள்ளிக் கட்டிடத்தை கர்மவீரர் திறந்து வைக்கும் காட்சி |
![]() |
கர்மவீரரால் திறந்து வைக்கப்பெற்ற எம் பள்ளிக் கட்டிடம் அருணாசல நிலையம் |
பள்ளித் தலைமையாசிரியர் திரு வெ.சரணவன் அவர்கள் கர்மவீரரின் சாதனைகளை,
அவர்தம் கல்வித் தொண்டுகளை, தன்னலமற்ற சேவையினை மாணவர்கள் அனைவரும் உணரும் வண்ணம் எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு வகுப்பிலும், காமராசர்
பற்றிய பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என பள்ளியே, நாள் முழுதும், காமராசரின் பெயரினை
உச்சரித்த வண்ணம் இருந்தது.
எனது வகுப்பிலும் பேச்சுப் போட்டியும், கட்டுரைப்
போட்டியும் நடத்தினேன்.
பேச்சுப் போட்டியிலும் கட்டுரைப் போட்டியிலும்
வெற்றி பெற்ற என் வகுப்பு மாணவியருக்கு, நண்பரும் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்கள், எனது வகுப்பிற்கே
வருகை தந்து, பரிசில்களை வழங்கி, மாணவியரை வாழ்த்தினார்.
தங்கமே….. தண்பொதிகைச் சாரலே…
தண்ணிலவே
சிங்கமே…. என்றழைத்துச் சீராட்டுந்
தாய்தவிரச்
சொந்தமென்று ஏதுமில்லை, துணையிருக்க
மங்கையில்லை
தூயமணி மண்டபங்கள் தோட்டங்கள்
ஏதுமில்லை
ஆண்டிகையில் ஓடிருக்கும் அதுவும்
உனக்கில்லையே
கவியரசு கண்ணதாசன்.
தனக்கென வாழமல் நமக்கென வாழ்ந்த
கர்மவீரரைப்
போற்றுவோம், வாழ்த்துவோம்
வணங்குவோம்
மிகவும் சிறப்பான நிகழ்வு அய்யா...
பதிலளிநீக்குகர்ம வீரரை நினைவுகூர்ந்தமைக்கும், விழா நிகழ்வுகளைப் பகிர்ந்தமைக்கும் நன்றி.
பதிலளிநீக்குசிறப்பானதொரு நிகழ்வு ஐயா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
கர்மவீரரைப் போற்றுவோம்.
இப்படிப்பட்ட மாமனிதரை மக்கள் ஏன் தோற்கடித்தார்கள் என்றுதான் புரியவில்லை !
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபெருந்தலைவரின் அரும்பணிகளை மறக்கவும் ஆகுமோ?..
பதிலளிநீக்குதாங்கள் முன்னெடுத்துச் செல்லும் பணி வாழ்க.. வளர்க!..
ரசித்தேன்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஜெயக்குமார் அவர்களே.
பதிலளிநீக்குமீண்டு சில கர்ம வீரர்கள் உருவாகட்டும்.
பெருந்தலைவரின் அரும்பணிகளை மறக்கவும் ஆகுமோ?..
பதிலளிநீக்குதாங்கள் முன்னெடுத்துச் செல்லும் பணி வாழ்க.. வளர்க!.நன்றி.
ஒரு சிறந்த மனிதரைப் பற்றிய பதிவு பொருத்தமான நேரத்தில்..
பதிலளிநீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குஜுலை 15. மனதில் பல குழப்பங்களுக்கு மத்தியில் இன்று கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற சிந்தனையுடன் வீட்டிலிருந்து புறப்பட்டேன். தாங்களும் நமது ஆசிரிய மக்களும் கர்மவீரர் காமராசரைப் பற்றி பல கருத்துகளை (ஒருவர் கூறிய செய்தியை மற்றொருவர் கூறாமல்) மாணவர்களிடையே கூறி ஒரு எழுச்சியை ஏற்படுத்தியதற்கு முதலில் நன்றி கூறுகிறேன்.
சரியான நேரத்தில் கர்மவீரரைப் பற்றிய பதிவினை அருமையாக பதிவிட்டு சிறப்பு செய்தது நன்று.
திரு.பகவான்ஜி அவர்களின் கேள்விக்கு இங்கு பதில் சொல்கிறேன். ஒரு திராவிடக் கட்சி தங்களின் ஆட்சி பிடிக்கும் தந்திரங்களில் ஒரு உத்தியாக கர்மவீரர் காமராசர் வாழ்ந்த வாடகை இல்லத்தினை புகைப்படமாக எடுத்து ”ஏழைப் பங்காளனின் வீட்டைப் பாரீர்” என்று தமிழகமெங்கும் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்யலாம் என்பது போன்று (உண்மையில் ஆயிரம் பேரிடம் போய் சொல்லி திருமணம் செய் என்பதுதான் உண்மை) ஆயிரம் பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்தார்கள். எனவே கர்மவீரரும் தோற்கடிக்கப்பட்டார்.
மனதை தொட்ட பதிவு!
பதிலளிநீக்குகல்வி_தந்தை_காமராசர்.....
பதிலளிநீக்குகல்விதந்த காமராஜர்
கல்விதந்தை காமராஜர்,,
பட்டிதொட்டுக்கும் கல்விதந்தார்
பாலகருக்கு மதிய உணவு தந்தார்
சாலைகள் இல்லாத
கிராமத்தில்கூட
கல்விச்சோலைகளை
உருவாக்கித்தந்தார்
மின்சாரமில்லா
ஊர்களில்கூட
கல்வியின்
சாரல் தந்தார்
அரசுப்பள்ளிகளின்
அவசியத்தை
அன்றே
சொன்னவர் காமராஜர்
கல்வியை
அரசுடமையாக்கினார்
ஏழைக்கும் கல்வி
எட்டும் கனியாகக்கிடைக்கசெய்தார்
ஆயிரக்கணக்கில்
ஆரம்பப்பள்ளிகள்
நல்ல இடங்களில்
நடுநிலைப்பள்ளிகள்
அவர்பாதம் படாத
கிராமம் தமிழகத்தில் இல்லை
அவரின் சாதனைகளுக்கு ஒரு
எல்லையே இல்லை
நெய்வேலியை உருவாக்கிய
நல் மனிதர் நெல் விளைச்சலுக்காய்
அணைகளைக்கட்டிய
அறங்காவலர்
இந்திராக்காந்தியும்
மதித்த கருப்புக்காந்தி
எளிமையின் சின்னமாக
வாழ்ந்த தமிழ்காந்தி
மாடுமேய்க்கும் குழந்தயை
மதிய
உணவுகொடுத்து
பள்ளிக்கு அழைத்தார்
மக்களின் மனதில் கல்வியின்
அவசியத்தை உணரச்செய்தார்
கல்விதந்த காமராஜர்
கல்விதந்தை காமராஜர்,,
அ.முத்துவிஜயன் கல்பாக்கம்
கர்மவீரரைப்பற்றிய அருமையான தொகுப்பு நண்பரே புகைப்படங்களின் அணிவகுப்பு நன்று மீண்டுமொரு காமராஜர் பிறந்தல் வேண்டும் வேண்டுவோம்.
பதிலளிநீக்குத.மக 5
தக்க சமயத்தில் பொருத்தமான பதிவு. காமராஜரைப் பள்ளிப் படிப்பு முடிந்த சமயம் நேரில் பார்க்க நேர்ந்தது. ஓரிரு வார்த்தைகளும் பேசினார்.
பதிலளிநீக்குபெருந்தலைவர் காமராஜருக்கென்று ஒரு மரியாதை. மதிப்பு எப்போதும் உண்டு. அவற்றை போற்றும் வண்ணம் ஒரு பதிவு. நன்றி.
பதிலளிநீக்குபடிப்பு போதும். அப்புறம் அவனே தன் கண் திறந்த கல்வியின்மூலம் சிந்தித்து வளர்ந்துவிடுவான் என்ற தொலை'நோக்குப் பார்வையில் எல்லோருக்கும் இலவச கல்வி, அதை ஊக்குவிக்க காலை, மதியம் உணவு என்று சிந்தித்து செயல்பட, கர்மவீரருக்கு பட்டப்படிப்பு தேவையிருக்கவில்லை. நாட்டுக்கு உழைக்கவேண்டும், மக்களை மேம்படுத்தவேண்டும் என்ற நல்ல சிந்தனை மட்டுமே வேண்டியிருந்தது. "படித்தவர்கள்தான் தேர்தலில் போட்டியிடவேண்டும்" என்பதுபோல் சிந்திப்பவர்கள், ஏழைகள்தான், அதுவும் சேவை செய்யும் மனம் கொண்டவர்கள்தான் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கொள்ளவேண்டும். அவருக்கு வானளாவிய நினைவிடம் தேவையில்லை, சதுக்கங்கள் தேவையில்லை. அவரை நினைவுகூற அவருடைய கட்சி அடையாளம் தேவையில்லை. மக்கள் தாமாகவே அவரை நினைவுகூறுகிறார்கள். இதைத்தவிர வேறு என்ன பெருமையை அவரது தாயார் சிவகாமி அம்மையார் பெற்றுவிடமுடியும்?
பதிலளிநீக்குஆசிரியர்களும், முன்னாள், இன்'நாள் மாணவர்களும் அவரை எப்போதும் நினைவுகூறுவார்கள்.
இவரை, கக்கன் அவர்களை, ஜீவா அவர்களை, நாமக்கல் கவிஞரை மற்றும் சேவையே வாழ்க்கை என்று வாழ்ந்து காசு சேர்ப்பது என்ற எண்ணம் இல்லாமல் வாழ்ந்தவர்களை எத்தனை முறை நினைவுகூர்ந்தாலும் தகும்.
தங்களைப்போன்ற ஆசிரியர்கள், இவர்களைப்பற்றி awareness மாணவச்செல்வங்களிடம் கொண்டுசேர்க்கவேண்டும். இன்றைய இளையவர்களால்தான் நாளை மாற்றத்தைக் கொண்டுவரமுடியும் (அவர்கள் கொண்டிருந்த கட்சி மற்றும் கொள்கைகளைப் பற்றிக் கவலைப்படாமல். அதாவது அரசியல் சார்பு வந்துவிடுமோ என்று எண்ணாமல். இதில் வாழும் நல்லக்கண்ணு போன்றவர்களும் அடங்கும்)
சிறப்பான நிகழ்வு. அருமையான கட்டுரை.
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வு.
பதிலளிநீக்குத.ம. 7
நிகழ்வுகள் சிறக்கட்டும்
பதிலளிநீக்குமுதல் பகுதியை அப்படியே பேச்சுப் போட்டிக்கும் பயன்படுத்தலாம் இல்லையா
தம +
மிகவும் சிறப்பான நிகழ்வு
பதிலளிநீக்குநானும் எழுதினேன். சில வரிகள். பக்கத்தில் போடுவேன்.
https://kovaikkavi.wordpress.com/
அற்புதமான மனிதருக்கு அழகான நினைவுப் பகிர்வு.
பதிலளிநீக்குgreat man always to remember. good guide and role model to lead the country and Government.
பதிலளிநீக்குமிகவும் தரமான பதிவு பகிர்விற்கு பாராட்டுக்கள்
பதிலளிநீக்குஇப்படி ஒருவர் தமிழ்நாட்டில்வாழ்ந்தார் என்பது நமக்குப் பெருமை. இன்றைய அரசியல் தலைவர்கள் காமராஜரை கொஞ்சமேனும் பின்பற்றினாலும் நாடு முன்னேறும்
பதிலளிநீக்குஇப்படி ஒருவர் தமிழ்நாட்டில்வாழ்ந்தார் என்பது நமக்குப் பெருமை. இன்றைய அரசியல் தலைவர்கள் காமராஜரை கொஞ்சமேனும் பின்பற்றினாலும் நாடு முன்னேறும்
பதிலளிநீக்குஅய்யா வணக்கம். தங்கள் வகுப்பளவில் நடத்திய காமராசர் விழாப் போட்டிகளுக்காக உங்களுக்கு என் தனி வணக்கம். அதில் கலந்து கொண்ட மாணவ-மாணவியர்க்கு என் வாழ்த்துகளும், பங்கேற்றுப் பரிசளித்த த.ஆ.திரு சரவணன் அவர்களுக்கு என் வணக்கம் கலந்த நன்றியும்.
பதிலளிநீக்கு“உண்டால் அம்ம இவ்வுலகம்” எனும் சங்கப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. உங்கள் பணிகள் தொடர்க.வணக்கம்
பணி தொடர வாழ்த்துகள்
பதிலளிநீக்குஉங்கள் வகுப்பில் ஆண்பிள்ளைகளும் பெண்களும் படிக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன் பரிசு பெற்றவர் அனைவரும் பெண் குழந்தைகள் என்பது மகிழ்ச்சி தருகிறது காமராஜர் பற்றிய தொகுப்பு உமக்கே உரிய பாணியில் நன்று வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு