19 ஜூலை 2016

பவள விழா

விடுமுறை விண்ணப்பம்

நண்பர்களே, வணக்கம் .நலம்தானே.

    நான் மாணவனாகப் பயின்ற, நான் ஆசிரியராகப் பணியாற்றுகின்ற உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் 75 ஆம் ஆண்டு விழா, எதிர்வரும் 22.7.2016 வெள்ளிக் கிழமை அன்று சிறப்புடன் நடைபெற உள்ளது.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மற்றொரு அங்கமாய் திகழும், தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு விழாவும், எம் பள்ளி விழாவும் ஒன்றிணைந்து கொண்டாடப் பட இருக்கின்றன.

இவ்விழாவின் போது, நானும், நண்பரும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களும் இணைந்து எழுதிய இராமநாதம் என்னும் நூலின் வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், எதிர்வரும் 24.7.2016 ஞாயிறு காலை, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மற்றொரு அங்கமாய் திகழும் இராதாகிருட்டினத் தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா சிறப்புடன் அரங்கேற இருக்கின்றது.

இவ்விழாவின் போது கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்காகப் பணியாற்றிவரும் ஆறு பேருக்கு விருதுகளும் வழங்கப்பெற உள்ளன. அடியேனுக்கும் ஒரு விருது.

இவ்விழா ஏற்பாடுகளின் காரணமாக, கடந்த பல நாட்களாகவே, வலையின் பக்கம் வர இயலா நிலை.  விழா நிறைவு பெறும் வரை இந்நிலையே தொடந்தாக வேண்டிய நிலை.

எனவே, வலையுலக நண்பர்களாகியத் தாங்கள் இன்னும் சில நாட்களுக்கு எனக்கு விடுப்பு வழங்கி உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

 அடுத்த வாரம் முதல், மீண்டும் தங்களை நாடி வலைக்கு தினமும் வருவேன். அதுவரை விடுமுறை வழங்குங்கள் நண்பர்களே.

அன்புடைய தங்களை விழாவிற்கு வந்து சிறப்பிக்குமாறு உள்ளன்போடு அழைக்கின்றேன்.

வருக  வருக  வருக


என்றென்றும் தோழமையுடன்,

கரந்தை ஜெயக்குமார்

 .

31 கருத்துகள்:

 1. விழா சிறப்பாக நடைபெற
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துகள் நண்பரே.பள்ளி மேலும் வளர்ந்து நூற்றாண்டு காணட்டும்.

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துகள் நண்பரே.பள்ளி மேலும் வளர்ந்து நூற்றாண்டு காணட்டும்.

  பதிலளிநீக்கு
 4. விழா சிறப்புற எமது வாழ்த்துகள் நண்பரே நூல் வெளியீட்டிற்கும் வாழ்த்துக்கள் தாங்கள் நிறைய வேலையில் இருக்கின்றீர்கள் என்பது அறிந்ததே...
  த.ம.3

  பதிலளிநீக்கு
 5. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  நாம் பயின்ற பள்ளியின் 75 ஆம் ஆண்டு விழாவில் நம்முடைய பங்காக அணில் போன்று உழைத்து வருகிறோம். அதிலும் தங்களின் பங்கு அளப்பரியது என்பதை அருகில் இருந்து கண்டு வரும் எனக்கு நன்கு தெரியும். விழா வெற்றி பெற நல் உள்ளங்களின் ஆசியை நானும் இப்பதிவின் மூலம் வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 6. விழா சிறப்புற வாழ்த்துகள் !!!

  பதிலளிநீக்கு
 7. நும் பள்ளி வாழ்க; பள்ளி வாழ்வோர் வாழ்க; நூல் யாத்த நீவிரும் நும் தலைமையாசானும் வாழ்க; விருது பெற்ற நீவிர் பல்லாண்டு பயனுற வாழ்க.

  பதிலளிநீக்கு
 8. விழா சிறப்புற நிகழ்வதற்கு அன்பின் நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 9. அருமை நிகழ்வு சிறக்க வாழ்த்துகள் சகோ. இராமநாதம் புத்தக வெளியீட்டுக்கும் சிறப்பு வாழ்த்துகள். வெல்க.வளர்க. வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 10. விருது பெற்றமைக்கு வாழ்த்துகள். விழா சிறப்பாக நடைபெறப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துக்கள். உங்கள் எல்லோரின் பணி மென்மேலும் சிறக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 12. விழா சிறக்க வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 13. விழா சிறப்புடன் நடந்தேற இனிய நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 14. good leave letter from a good teacher. thanks.leave sanctioned from a social worker

  பதிலளிநீக்கு
 15. வாழ்த்துகள். ஆசிரியர் அல்லவா? விடுமுறை விண்ணப்பம், புதிய பாணியில்.

  பதிலளிநீக்கு
 16. விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.விருதுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. உங்களை அங்கமாகக் கொண்டிருக்கும் விழாக்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 18. கரந்தையார் அவர்களுக்கு

  உங்களை போன்று ஞானத்தெளிவும் ஆழ்ந்த அறிவும் பெற்ற ஆசிரியர்களை கொண்ட உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் 75 ஆம் ஆண்டு விழாவிற்கு எமது நல் வாழ்த்துக்கள். தங்கள் சீரிய பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  பேராசிரியர் மகேஸ்வரி பாலச்சந்தரன் அவர்களுக்கும்எமது வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள்.
  கோ.

  பதிலளிநீக்கு
 19. விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 20. தாமதமாக வந்துவிட்டோம்....விழா சிறக்க வாழ்த்துகள் நண்பரே!

  பதிலளிநீக்கு
 21. மரியாதைக்குரிய ஐயா,வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்கள் பல..
  என வாழ்த்தும் அன்பன்,
  C.பரமேஸ்வரன் டிரைவர்,
  http://konguthendral.blogspot.com
  தாளவாடி-ஈரோடு மாவட்டம்.

  பதிலளிநீக்கு
 22. தங்களின் தேடலுக்கும் உழைப்புக்கும் விருது. வாழ்த்துக்கள். விழா இனிது நடைபெறவும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 23. விழாச் சிறக்க எனது வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 24. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு