23 நவம்பர் 2016

வைத்தீசுவர பிரபு

தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
     சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு

என வாழும் எண்ணிலடங்கா மனிதர்களுக்கு இடையே, இவர் ஓர் உன்னத மனிதராக உயர்ந்து நிற்கிறார்.

    ஆசிரியர் பணி என்பது அறப் பணிதான். ஆனாலும் ஆசிரியர்கள் இன்று, சந்திக்கும் சவால்கள் ஏராளம் ஏராளம்.


     அதிலும் குறிப்பாக பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது வகுப்பு ஆசிரியர்களின் மன அழுத்தமானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் காலம் இது.

     ஆண்டுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்ச்சி சதவீதத்தினை உயர்த்தியாக வேண்டும். மாணவர்களை எப்பாடு பட்டாவது படிக்க வைத்தாக வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெற வைத்தாக வேண்டும்.

      தீபாவளி, பொங்கல் என பண்டிகைகள் நெருங்கினால், மாணவர்கள் எவ்வளவு மகிழ்கிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு, ஆசிரியர்களின் தவிப்பு அதிகமாகிறது.

       ஐந்து, ஆறு நாள் தொடர் விடுமுறை வந்துவிட்டதே, மாணவர்கள் வீட்டில் படிப்பார்களா? இதுவரை படித்ததை நீனைவூட்டிப் பார்ப்பார்களா, நினைவில் நிறுத்தி வைப்பார்களா, படிப்பின்றிப் பல நாட்கள் வீணாகிறதே என்னும் கவலைதான் ஒவ்வொரு, ஆசிரிய, ஆசிரியைகளையும் வாட்டி வதைக்கிறது.

       பெரும்பாலும் ஆசிரியர்களின் முதல் இலட்சியம், தனது வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்பதுதான். அதன் பிறகுதான் பள்ளியின் தேர்ச்சி.

      இதுதான் இன்றைய யதார்த்த நிலை.

      இதுபோன்ற சூழ்நிலையில், தன் வகுப்பு மட்டும் பெரிதல்ல, தன் பள்ளி மட்டும் பெரிதல்ல, தமிழகத்து அனைத்து மாணவர்களுமே முன்னேற வேண்டும் என்பதனை இலட்சியமாகக் கொண்டு, வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு, ஒரு ஆசிரியர் செயல்படுகிறார் என்றார், அவரைப் பாராட்டுவது, போற்றுவது நமது கடமையல்லவா.


திரு எஸ். வைத்தீசுவர பிரபு,
பட்டதாரி நிலை கணித ஆசிரியர்,
அரசு மேனிலைப் பள்ளி, வளப்பக்குடி, தஞ்சாவூர்

        கடந்த 21.11.2016 முதல் எதிர்வரும் 25.11.2016 வரையிலான ஐந்து நாட்களுக்கு, கணித ஆசிரியர்களுக்கானப் பணியிடைப் பயிற்சியானது, தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

      

  இப்பணியிடைப் பயிற்சியில்தான் திரு பிரபு அவர்களைச் சந்தித்தேன்.

      தஞ்சாவூர், அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடைபெற்று வரும், பணியிடைப் பயிற்சியில், எம் பள்ளியில் இருந்து நானும், நண்பர் திரு அ.சதாசிவம் அவர்களும் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகிறோம்.

       இப்பணியிடைப் பயிற்சியின்போது, எங்களுக்குப் பயிற்சி அளிக்க வந்தவர்தான் இந்த திரு எஸ்.வைத்தீசுவர பிரபு.


இவர்


மற்றும்எனும் இரு வலைப் பூக்களை நடத்தி வருகிறார்.

      இவரது வலைப் பூவில், கல்வி தொடர்பான, அனைத்துத் தகவல்களும் நிரம்பி வழிகின்றன. தமிழ்நாடு பணியார் தேர்வாணையத் தேர்வா, நீட் தேர்வா, எந்த அரசுத் தேர்வாயினும், அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய், வினா விடைகள் கொட்டிக் கிடக்கின்றன.

    


வலைப் பூ மட்டுமல்ல, அதையும் தாண்டி, யூ ட்யூப்பில் இவரது, நூற்றுக் கணக்கானக் காணொளிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.


     எளிமையாய் கணக்குகளைப் புரிந்து கொள்வது எப்படி, வாய்ப்பாடுகளை, சூத்திரங்களை, தேற்றங்களை அறிந்து கொள்வது எப்படி, என வகுப்பு மாணவ, மாணவியரைக் கொண்டே வெகு இயல்பாக, வெகு எளிமையாய், வெகு இனிமையாய் காட்சிப் படுத்தி, காணொளியில் விருந்து வைக்கிறார்.

     ஒவ்வொரு பள்ளியிலும் இவரது காணொளிகள் திரையிடப்படுமானால், மாணவர்களின் கல்வித் தரமும், உற்சாகமும் உயர்வது உறுதி.

சிறு வயதிலேயே
பெரும் செயல்களை
முன்னெடுத்துச் செயலாற்றிவரும்
திரு எஸ். வைத்தீசுவர பிரபு அவர்கள்
போற்றுதலுக்கு உரியவர், பாராட்டுதலுக்கு உரியவர்
போற்றுவோம்,   பாராட்டுவோம்.


34 கருத்துகள்:

 1. வியப்புகுறிய மனிதர்தான் திரு எஸ். வைத்தீசுவர பிரபு அவர்கள் போற்றப்பட வேண்டியவர் அவரது தளம் செல்கிறேன் நண்பரே....
  த.ம.1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரது தளம் சென்று வந்தேன் நண்பரே பல அரிய விடயங்கள் கொட்டிக் கிடக்கின்றது உண்மையே...

   நீக்கு
 2. அவர் தளம் ,இல்லை இல்லை ....அவ்வுலகம் சென்று வந்தேன் அமுதம் குடித்துவந்தேன் :)

  பதிலளிநீக்கு
 3. என்னால் இயன்றதை செய்துகொண்டிருக்கிறேன் ஐயா உஙகளது ஆதரவுக்கு நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 4. திரு.வைத்தீஸ்வர பிரபு அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

 5. "தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
  சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு" என
  எல்லோரும் இருந்து விட்டால்
  உலக அமைதி வந்துவிடுமே!

  பயனுள்ள வலைப்பூக்கள் இரண்டு
  பயன்தரும் ஒளி-ஒலி வெளியீடுகள்
  பாராட்டுவோம் ஆசிரியரை!

  பதிலளிநீக்கு
 6. நற்தொண்டாற்றி வரும் திரு எஸ்.வைத்தீசுவர பிரபுவிற்கு என் மனதார்ந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 7. பாராட்டப்பபடவேண்டியவர் திரு வைத்தீஸ்வர பிரபு. பாராட்டுவோம்.

  பதிலளிநீக்கு
 8. போறப்படவேண்டிய ஆசிரியர். அவர் சேவை வாழ்க!
  த ம 4

  பதிலளிநீக்கு
 9. நிச்சயம் அறப்பணிதான். திரு வைத்தீஸ்வர பிரபுவுக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள் சகோ

  பதிலளிநீக்கு
 10. திரு.வைத்தீஸ்வர பிரபு அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்... அவரின் தள அறிமுகத்திற்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 11. திரு வைத்தீஸ்வர பிரபு அவர்களுக்கு அன்பின் நல்வாழ்த்துகள்..

  (இரண்டு நாட்களாக Blogger திறக்கவில்லை.. அதற்கு என்ன கோபமோ தெரியவில்லை.. எப்படி சரி செய்வது என்று புரியவில்லை..)

  நல்லதொரு பதிவு கண்டு மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 12. நல்லவர்களை இனம் கண்டு பாராட்டும் உங்கள் எண்ணம் போற்றுதலுக்குரியது. வைத்தீஸ்வர பிரபு போன்றவர்கள், ஆசிரியப் பணி அறப் பணி என்பதற்கேற்ப வாழ்பவர்கள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 13. திரு.வைத்தீஸ்வர பிரபுவிற்கு வாழ்த்துகள். சாதனையாளர்களை அறிமுகப்படுத்தும் சாதனையாளரான தங்களுக்கு மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்துகளும் பாராட்டுகளும் திரு வைத்தீஸ்வரப் பிரபுவிற்கு.

  பதிலளிநீக்கு
 15. வைதீஸ்வர பிரபு நிச்சயம் அசத்தல் ஆசிரியர்தான்

  பதிலளிநீக்கு
 16. கோபித்துக் கொள்ளாதீர்கள். நான் படித்த போது என் ஆசிரியர் அவர் வீட்டு வேலைக்கு போகாமல் மறந்துவிட்டதால் பிளஸ்2வில் பிராடிக்கல் பரிட்சையில் முட்டை மார்க் போட்டு என்னை பெயிலாக்கி விட்டார்.

  பதிலளிநீக்கு
 17. கோபித்துக் கொள்ளாதீர்கள். நான் படித்த போது என் ஆசிரியர் அவர் வீட்டு வேலைக்கு போகாமல் மறந்துவிட்டதால் பிளஸ்2வில் பிராடிக்கல் பரிட்சையில் முட்டை மார்க் போட்டு என்னை பெயிலாக்கி விட்டார்.

  பதிலளிநீக்கு
 18. நற்பணிசெய்பவர் போற்றப்பட வேண்டியவரே

  பதிலளிநீக்கு
 19. தமிழகத்து அனைத்து மாணவர்களுமே முன்னேற வேண்டும் என்பதனை இலட்சியமாகக் கொண்டு, வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு, ஒரு ஆசிரியர் செயல்படுகிறார் என்றார், அவரைப் பாராட்டுவது, போற்றுவது நமது கண்டிப்பான கடமை.

  ஆசிரியர் பிரபு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  கோ

  பதிலளிநீக்கு
 20. திரு . வைத்திஸ்வப் பிரபு அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
  உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 21. திரு . வைத்தீஸ்வர பிரபுவுக்கு வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 22. வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 23. ஒரு நல்ல அறிமுகம்
  அற்புதமாக பதிவிட்டமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
  தொடர்கிறேன்..

  பதிலளிநீக்கு
 24. உபயோகமான இரண்டு தளங்களையும் ட்ரைனிங் தந்த ஆசிரியரையும் அறிமுகம் செய்தது வரவேற்கத் தக்கது

  பதிலளிநீக்கு
 25. நற்பணி செய்யும் நாயகருக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 26. வாழ்த்த வேண்டிய மனிதர்...
  வாழ்த்துவோம்...

  பதிலளிநீக்கு
 27. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  ஒரு அருமையான ஆசிரிய சகோதரரை எங்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி. அவருடைய இரண்டு தளங்களையும் நம் பள்ளி மாணவர்களுக்கு பயன்படுத்துவோம்.

  பதிலளிநீக்கு
 28. அருமையான ஓர் ஆசிரியரை இங்கு எங்கள் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியமைக்கு முதலில் நன்றி வாழ்த்துகள் நண்பரே!

  ஆசிரியர் அவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்! அவரது தளங்கள் சென்று பார்வையிடுகிறோம்...மிக்க நன்றி

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு