12 அக்டோபர் 2018

முத்தன் பள்ளம்





     ஒரு திருப்பத்தில் நான்கு ஆண்கள், தலைக்கு மேலாகக் கட்டிலைத் தூக்கிக் கொண்டு விரைந்து வந்து கொண்டிருந்தார்கள். நான்கு பேரும், கட்டிலின் நான்கு கால்களைப் பிடித்திருந்தார்கள்.

      அவர்களுக்குப் பின்னே இரண்டு பெண்கள், தலைவிரி கோலமாக ஓடி வந்தார்கள். அவர்களின் தலைமயிர்கள் கலைந்து விரிந்து கிடந்தன. அவர்களின் அழுகுரல் அத்தனை தூரம் தாண்டியும் சன்னமாகக் கேட்டது.


     நான் நடையை நிறுத்தி, அருகிலிருந்த ஒரு கருவேல மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு நின்றேன். அவர்கள் இடுப்பளவு தண்ணீரைக் கிழித்துக் கொண்டு என்னை நோக்கி வந்தார்கள்.

     அவர்கள் என்னை மிகவும் அருகினில் நெருங்கியிருந்தார்கள்.

     நான் அவர்களின் முகத்தைப் பார்த்தேன்.

      முகத்தில் பதற்றம் தெரிந்தது.

      கட்டிலில் ஒரு பருவப் பெண் படுத்திருந்தாள்.

     அவள் மீது ஒரு போர்வை கிடந்தது

     பாதங்கள் வெள்ளையாக இருந்தன.

     வெளியே நீண்டு கிடந்த கைகளில், களிமண் உலை காய்ந்தும், காயாமலும் இருந்தது.

     என்ன நடந்தது?

     கட்டிலின் முன்னம் கால்களைப் பிடித்திருந்தவர்களிடம் கேட்டேன்.

     அவர் நடையில் முழுக் கவனத்தையும் செலுத்தியிருந்ததால், நான் கேட்டிருந்த கேள்விக்கான பதில், பின் கால்களைப் பிடித்திருந்த ஒருவரிடமிருந்து வந்தது

     பாம்பு தீண்டிருச்சு ……

     என்ன பாம்பு

     நல்லது

     எங்கே கொண்டுக்கிட்டுப் போறீங்க ….?

     லைலன் கோன் பட்டிக்கு

     ஆஸ்பத்திரி இருக்கா?

     மந்திரிக்க …

----

     படிக்கப் படிக்க வேதனை மனதைக் கவ்விப் பிசைகிறது.

     இக்காலத்தில் இப்படியும் ஒரு கிராமமா?

     முத்தன் பள்ளம்

     தஞ்சாவூர், புதுக்கோட்டை சாலையில், அமைந்திருக்கும் கந்தர்வக் கோட்டைக்கு அருகில், இப்படியும் ஒரு கிராமம்.

     அறிவியல் வளர்ச்சியின் வாசனையினைத் துளியும் அறியாத கிராமம்.

     மனித வாழ்விற்குரிய அடிப்படை வசதிகள், ஏதுமற்ற ஒரு கிராமம்.

     நம்புவதற்கு மனம் மறுக்கிறது

     ஆனாலும் இது உண்மை, இப்படியும் ஒரு கிராமம் இருக்கிறது, என அடித்துச் சொல்கிறார் ஆசிரியர்.

     அதுமட்டுமல்ல,

முத்தன் பள்ளம் கிராமத்திற்கு ஒரு சாலை வசதி, மழைக்கும் வெயிலுக்கும் ஒழுகாத கூரை, பருவப் பெண்களுக்கேனும் ஒரு பொதுக் கழிப்பறை, குடியிருப்பதற்குப் பட்டா, அங்காடி, அங்கன் வாடி, பள்ளிக் கூடம், தேர்தல் காலத்திலேனும் வேட்பாளர்கள் வந்துபோக, ஒரு பொது வழிப்பாதை, வாழும் சந்ததியினருக்கு குறைந்தபட்ட மரியாதை, ஒன்றிய வரைபடத்தில் தனித்த இடம், இவற்றில் ஒன்றேனும், இக்கிராம மக்களுக்குக் கிடைக்க, யாரேனும் ஒருவர் காரணமாக இருப்பாராயின், அவரது திருவடிக்கு …..

     தன் நூலைப் படைத்திருக்கிறார்.

அண்டனூர்
சு.ராஜமாணிக்கம்



அண்டனூர் சுரா

நண்பரின் எழுத்தால்,
முத்தன் பள்ளம், முதன் முறையாக வெளிச்சம் பெற்றிருக்கிறது

நல்லது ஏதேனும் நடக்கட்டும்

வாழ்த்துகள் நண்பரே



20 கருத்துகள்:

  1. வெளிச்சமிட்டமைக்கு நன்றி. கிடைக்குமிடம்?

    பதிலளிநீக்கு
  2. படிக்கும் ஆர்வத்தை தூண்டும் துள்ளியமான விமர்சனம். ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. எத்தனை இடங்கள் வெளிச்சத்துக்கு வராமலேயே இருக்கிறதோ பகிர்வுக்கு ஆசிரியருக்கு வாழ்த்துகள் ஆசிரியரின் பெயர் படித்ததும் என்னுள் எங்கோ பல்ப் எரிந்ததே

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான விமர்சனம் புத்தகத்தை உடனேயே படிக்கும் ஆவலைத்தூண்டுகிறது!

    பதிலளிநீக்கு
  5. நல்ல விமர்சனம்.
    ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
    முத்தன் பள்ளம் கிராமத்திற்கு எல்லா வசதிகளும் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  6. முத்தன் பள்ளம் விரைவில் சகல வசதிகளையும் பெறப் பிரார்த்தனைகள். ஆசிரியருக்கும் உங்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. நம்புவது கடினமாகத்தான் இருக்கிறது..முத்தன் பள்ளம் விரைவில் ஒளிபெறட்டும்..பகிர்விற்கு நன்றி அண்ணா. நூல் படிக்க ஆவல் தூண்டும் பகிர்வு.

    பதிலளிநீக்கு
  8. சீக்கிரம் விடிவு பிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  9. எழுத்தாளனின் கடமை, நடக்கவேண்டியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டியதே. இன்று நடவாதவை நாளை நடக்கலாம். எந்த சிறு முயற்சியும் வரவேற்கத்தக்கதே.அண்டநூர் சுரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    -இராய செல்லப்பா சென்னை

    பதிலளிநீக்கு
  10. எழுத்தாளர், சிந்தனையாளர், பழக இனிய நல்ல நண்பர். அவருடைய எழுத்திற்கு வெற்றி கிடைக்கும் என நம்புவோம். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வலிகள் நிறைந்த வாழ்க்கையை பதிவு செய்த
    அண்டனூர் சுரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்,,/

    பதிலளிநீக்கு
  12. சுரா போன்றோரின் எழுத்து வன்மை இன்னும் உலக உச்சத்தை எட்டும் நாள் தொலைவில் இல்லை. தரமும் தகுதியும் மிக்க எழுத்தாளர்.

    பதிலளிநீக்கு
  13. நண்பரின் எழுத்தால்,
    முத்தன் பள்ளம், முதன் முறையாக வெளிச்சம் பெற்றிருக்கிறதுக்கு நன்றி! நன்றி!!

    பதிலளிநீக்கு
  14. //ஆனாலும் இது உண்மை, இப்படியும் ஒரு கிராமம் இருக்கிறது, என அடித்துச் சொல்கிறார் ஆசிரியர்.//
    வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. நல்ல அறிமுகம். சமூகப்போராளி எழுத்தாளனாகவும்
    இருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  16. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. ஆசிரியருக்கும் உங்களுக்கும் பாராட்டுகள்.
    https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு
  18. இலங்கையிலும் அடிப்படை வசதிகள் அற்ற கிராமங்கள் பல உண்டு. ஆனால் அந்தக்கிராமங்களில் கல்வியில் முன்னணியில் திகழும் மாணவர்களையும் பண்பில் சிறந்து விளங்கும் மனிதர்களையும் கண்டுள்ளேன். 1994 ல் அவுஸ்திரேலியாவில் வாழும் லெ.முருகபூபதி எழுத்தாளர் பணம் சேர்த்து வறுமையில் வாடினாலும் பள்ளிப் பரீட்சைத் தேர்வில் அதிக புள்ளிகள் பெற்ற மாணவனின் எதிா்கால கல்வித்தேவைகளுக்காகப் பெற்றோரிடம் பணத்தைக் கையளிக்கும் படி பணத்தை அனுப்பியிருந்தாா்.சிரமத்தின் மத்தியில் பின்தங்கிய கிராமத்தில் வாழும் மாணவனின் வீட்டை அடைந்தது தான் தாமதம். மாணவனின் தந்தை முற்றத்துக் கொடியில் உலர்ந்து கொண்டிருந்த சால்வையும் தூக்கிக் கொண்டு எங்கோ வேகமாக ஓடிச்சென்றாா். அவா் திரும்பி வரையும் தங்கி இருந்து செல்லும் படி வீட்டிலிருந்த மற்றவா்களின் அன்பு வேண்டுகோளை என்னால் மறுக்க முடிய வில்லை. சுமார் அரை மணி நேரம் கழித்து மாணவனின் தகப்பன் ஓட்டமாக வந்தார். அவர் கையில் 100 கிறாம் சீனி பாா்சல். எனக்கு தேநீர் தயாாிபதற்கு வெகு தூரத்திலிருந்த கடைக்குச் சென்று சீனி வாங்கிக் கொண்டு வந்திருந்தார்.அவா்களின் மனம் வருந்தக்கூடாது என்பதற்காகக் கலங்கிய கண்களுடன் தேநீர் சிறிது அருந்தி விட்டு, லெ.முழுகபூபதியின் நிதி அன்பளிப்புக்கு மேலாக ஒரு சிறிய தொகையை எனது அன்பளிப்பாகக் கொடுத்த போது ஏற்க மறுத்து விட்டனர். வற்புறுத்திக் கொடுத்தபோதும் ஏற்க மறுத்ததால்-வீட்டு முற்றத்தில் பணத்தைப்போட்டு விட்டு, எடுங்கோ என்று சொல்லிக் கொண்டு நான் அந்த இடத்திலிருந்து வேகமாக ஓடினேன். அது போல ஒரு நாளும் ஓடிய அனுபவம் இல்லை.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு