17 மார்ச் 2019

சீனா தானா


     நேரில் பார்த்த அடுத்த நொடி, விரைவாய் விரிவும் அன்புப் புன்னகை.

     தன்னை அறியாமலேயே நீண்டு, நம் கரம் பற்றி மகிழும் மெல்லியக் கரங்கள்.

     பாசம் கலந்த நேசக் குரல்


     சிறு, குறு, புது எழுத்தாளர்களைக் கூட, உச்சானிக் கொம்பில் ஏற்றி வைத்து, அழகு பார்த்த நல் இதயம், தன் துடிப்பை நிறுத்தி, நம்மையெல்லாம் துடி துடிக்க வைத்திருக்கிறது.

வலையுலகப் பிதாமகர்
வலைச்சர நிறுவுநர்

சீனா தானா
என உறவுகளாலும், நட்புகளாலும்
பெருமையோடு அழைக்கப்படும்
நம்


அன்பின் சீனா
இன்று இல்லை.

கடந்த 16.3.2019 சனிக்கிழமையன்று,
இயற்கையோடு இணைந்து விட்டார்.

     நினைத்துப் பார்க்கிறேன்.

     ஐந்து ஆண்டுகளுக்கும் முன், பெரியவர் சீனா தானாவை, மழலையாக, மாணவனாகப் பார்க்கும், ஓர் அற்புத வாய்ப்பு எனக்கு, எனக்கு மட்டுமே கிடைத்ததை நினைத்துப் பார்க்கிறேன்.

     சீனா தானா

    

தன் அன்புத் துனைவியார், திருமதி மெய்யம்மை ஆச்சி அவர்களுடன், தஞ்சைக்கு வந்து, இந்த எளியேன் வீட்டில், இரண்டு நாட்கள் தங்கியிருந்த, நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன்.

    சீனா தானா

    பிறந்ததும், தவழ்ந்ததும், எட்டாம் வகுப்புவரைப் படித்ததும் தஞ்சையில்தான்.

     தான் பிறந்த வீட்டின் நினைவுகளை, அடையாளங்களைக் கூற, அவ்வீட்டினைத் தேடிக் கண்டுபிடித்து, அவரை அவ்வீட்டிற்கே அழைத்தும் சென்றேன்.

    


     ஆம், இது, இதுதான் நான் பிறந்த வீடு

     நான் தவழ்ந்த வீடு

     நான் வளர்ந்த வீடு

     குழந்தையானார்.

     தான் ஐந்தாம் வகுப்பு வரைப் படித்தது, சுப்பையா நாயுடு தொடக்கப் பள்ளி.

     ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு வரைப் படித்தது வீரராகவா உயர்நிலைப் பள்ளி என்றார்.

     


   
     அவ்விரு பள்ளிகளுக்கும் அழைத்துச் சென்றேன்.

     ஒவ்வொரு வகுப்பாய் நுழைந்து, நுழைந்து பார்த்தார்.

      நான் படித்த பள்ளி

     இதோ இதுதான் என் வகுப்பறை

     மாணவனாகவே மாறினார்

அன்பின் சீனா

இன்று இல்லை.


ஆனாலும் அவரின் நினைவுகள்
என்றும், என்றென்றும் நம்மோடிருக்கும்.

தமிழ் வலையுலகு என்று ஒன்றிருக்கும்வரை,
அன்பின் சீனா
என்னும் பெயரும் நிலைத்திருக்கும்.

அன்பின் சீனா அவர்களின் நினைவினைப் போற்றுவோம்

37 கருத்துகள்:

 1. சீனா ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

  பதிலளிநீக்கு
 2. உலகில் உள்ள பலருக்கும் எண்ணற்ற நட்புகளை உருவாக்கியவர்... மனம் கனக்கிறது...

  பதிலளிநீக்கு
 3. அன்பின் என்பதற்கு இவர் ஒன்றே அடையாளம்... வலைச்சரம் வலையுலகத்தின் பொக்கிசம்...

  பதிலளிநீக்கு
 4. இறப்பு இயற்கைதான் எனினும், நல்லோர்க்கு அது நேரும்போது மனம் மிக மிக வருந்துகிறது.

  என் ஆழ்ந்த இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
 5. என்றென்றும் ஐயா அவர்களின் நினைவுகள் நம்மோடு இருக்கும்...

  பதிலளிநீக்கு
 6. நானும் அவரை சந்தித்து இருக்கிறேன் மதுரையில்.
  அன்பான மனிதர்.
  ஆழ்ந்த இரங்கல்கள்.

  நினைவுகள் என்றும் நம்முடன் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 7. அன்பான மனிதரான நம் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 8. தமிழ் பதிவுலகம் சந்தித்திருக்கும் மிக மோசமான இழப்பு இது.
  வார்த்தைகள் இல்லை

  பதிலளிநீக்கு
 9. மிகவும் வருத்தமான செய்தி. :(

  அவர் மிகவும் நல்ல மனிதர். என்றும் நம் நினைவுகளில் நீங்காமல் இருப்பார். அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

  http://gopu1949.blogspot.com/2013/10/61-2-2.html

  பதிலளிநீக்கு
 10. தகப்பன் சாமிக்கு என் அஞ்சலி.

  பதிலளிநீக்கு
 11. அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு
  ஆழ்ந்த அஞ்சலி!

  பதிலளிநீக்கு
 12. சீனா ஐயாவின் இழப்பு பதிவுலகில் உள்ள அனைவருடைய இழப்பு. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  பதிலளிநீக்கு
 13. திரு சீனா ஐயா அவர்களுடைய மறைவு மிக்க வேதனையைத்தந்தது. என் ஆழ்ந்த அஞ்சலிகளை ச்மர்ப்பித்துக்கொள்கிறேன்!

  பதிலளிநீக்கு
 14. அன்பின் சீனா அவர்களின் மறைவு வலையுலகுக்கு இழப்பே...

  பதிலளிநீக்கு
 15. பல எழுத்தாளர்களை உருவாக்கியவர். பழக இனியவர். பார்க்கும் முதல் சந்திப்பிலேயே எவரையும் ஈர்த்துவிடுபவர். வலைச்சரத்திற்கு எழுதுவது பற்றி ஒரு முறை அதிக நேரம் என்னிடம் பேசிய நினைவுகள் மனதில் நிழலாடுகின்றன. வயது வேறுபாடு இன்றி மிகவும் அணுக்கமாகப் பழகுவார். வலைத்தளம் உள்ளவரை ஐயாவின் நினைவு அனைவர் மனதிலும் நிற்கும்.

  பதிலளிநீக்கு
 16. எனக்குசீனா அயாவை அறி முகப்படுத்தியது மதுரை சரவணன்சரவண ந் என்வீட்டுக்குவந்தபோதுதொலை பேசியில் சீனாசாரை கூப்பிட்டு அறி முகப்படுத்தினார் அ சீனா ஐயாவை மதுரை வலைப்பதிவட் சந்திப்பில் நேரில் கண்டேன் எனக்கு மதுரை விழாவில் பேச சந்தர்ப்பம்கொடுத்ததும் அவரே என்பேரன் எனக்கு வலை பூ தயார்செய்து கொடுத்தான் என்று கூறியபோது முதல் பின்னூட்டம் எழுதியவரும் சீனா ஐயாதான்/ அன்பின் ஜிஎம்பி

  பேரனிடம் கற்றுக்கொள்வதில் தவறில்லை- நல்வாழ்த்துகள் பேரனுக்கு
  நட்புடன் சீனா/வாழ்வின் நியதி பிறப்பதும் மறைவதும் மறைந்துமவரை நினைப்பவர்கள் ஏராளம் அவருக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள்

  பதிலளிநீக்கு
 17. ஐயா அவர்களைப்பற்றி மிக அருமையான நினைவலைகளை பகிர்ந்துள்ளீர்கள் .

  அவரது ஆன்ம சாந்திக்காகவும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உறவினர் நட்புகள் அனைவருக்கும் ஆறுதலும் தேறுதலும் தரவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்

  பதிலளிநீக்கு
 18. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. அவரை நினைவுகொண்ட விதம் மனதில் பதிந்தது.

  பதிலளிநீக்கு
 19. பதிவர்கள் நினைவில் என்றும் வாழ்வார். அவரது பின்னூட்டங்களே அன்பின் வெளிப்பாடாக ​இருக்கும்.

  பதிலளிநீக்கு
 20. மிக அருமையாக எழுதி உள்ளீர்கள். வலைச்சரத்தில் பல புதிய பதிவர்களைத் தொடர்ந்து சீனா சார் அறிமுகப் படுத்தினார். என் போன்ற பழைய பதிவர்களையும் 2,3 முறை வலைச்சரத்திற்கு ஆசிரியர் ஆக்கி உள்ளார். நேரில் அவர் மனைவியுடன் ஒரு முறை சந்தித்திருக்கிறேன்.உண்மையிலேயே அவர் இழப்பு பேரிழப்பு தான். நம்பவும் முடியவில்லை. அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
 21. சீனா சார் பதிவெழுத வரும் முன்னரே 2006 ஆம் ஆண்டிலிருந்து வலைச்சரம் இயங்குகிறது. அதன் நிறுவனரும் விரைவில் அகால மரணம் அடைந்தார். பின்னர் கயல்விழி முத்துலக்ஷ்மி பொறுப்பேற்று நடத்தி வந்தார். கயல்விழி பொறுப்பில் இருந்த சமயம் ஒரு முறை நான் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருக்கிறேன். அதன் பின்னரே சீனா அவர்கள் வலைச்சரப் பொறுப்பை ஏற்றார்.

  பதிலளிநீக்கு
 22. ஆழ்ந்த இரங்கல்கள். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கப் பிரார்த்தனைகள்.

  வலைச்சரம் மூலமாகவும், தன் பின்னூட்டங்கள் மூலமாகவும் பதிவர்களுக்கு ஊக்கம் தந்தவர்.

  பதிலளிநீக்கு
 23. வலைச்சரம் மூலம் நம்மை இணைத்தவர்..

  ஆழ்ந்த இரங்கல்கள்

  பதிலளிநீக்கு
 24. எனது வருத்தங்களும் ...

  பதிலளிநீக்கு
 25. காலம் பலரை அழித்து விடுகிறதே. மிக்க வேதனையாக இருக்கிறது. அறிவித்தலுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 26. நானா நீனா என்று பாராமல் சீனா தானா அவர்கள் அனைவரிடமும் ஒத்த அன்பைக் கொட்டினார் என அறிந்து மனம் நெகிழ்ந்து போனேன். அன்னாரது ஆன்மா அமைதியடையட்டும்.

  பதிலளிநீக்கு
 27. அய்யா சீனா தானா அவர்களின் ஆத்மா சாந்தி பெறட்டும். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 28. வலைச்சரம்
  என்னையும் அறிமுகம் செய்து வைத்தது.
  வலைச்சரம் ஊடாகப் பலரையறிய முடிந்தது.
  ஏழலுக்கு ஒரு வலைச்சரம் ஆசிரியராகப் பலர்
  தமிழ் வலைப்பதிவர்களை அறிமுகம் செய்திட
  வலைப்பதிவர்களின் சிறந்த பதிவுகளை அரங்கேற்ற
  கடின உழைப்பை வழங்கிய தமிழ் பற்றாளர்
  சினா ஐயாவைத் தான்
  வலையுலகம் ஒருபோது மறவாது! - அவரது
  ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்!

  பதிலளிநீக்கு
 29. அன்பின் சீனா ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

  பதிலளிநீக்கு
 30. சீனா ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
 31. பெயரில்லா30 மார்ச், 2019

  For Education Related Updates of of TN SSLC Result 2019 check on this website Thanks for latest news about results of 10th Public 2019 exam.

  பதிலளிநீக்கு
 32. அந்த நாள் நினைவுகள ஆனந்தமானவை

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு