நண்பர்களே, வணக்கம்.
நான் ஒரு ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும்.
கோடை காலம் என்றாலே, மாணவர்களுக்குக் கொண்டாட்டம்.
ஆனால் ஆசிரியர்களுக்கோ, திண்டாட்டம்.
ஆசிரியர்கள் கொடுத்து வைத்தவர்கள், சம்பளத்துடன்
கூடிய அதிக விடுமுறை நாட்களை அனுபவிப்பவர்கள் என்று, பொது வெளியில் ஒரு கருத்து நிலவுகிறது.
ஆனால் உண்மை, வேறுமாதிரியாகத்தான் இருக்கிறது
சனிக்கிழமைகளில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள்
காலாண்டு, அரையாண்டு விடுமுறை நாட்களில் பயிற்சி
வகுப்புகள்
முழு ஆண்டு விடுமுறையில், தேர்வுத்தாள் திருத்தும்
பணி, தேர்தல் பணி, பத்து, பதினொன்று மற்றம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்
சான்றிதழ் வழங்கல், மாற்றுச் சான்றிதழ் வழங்கல், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்தல், மாணவர் சேர்க்கை, மாணவர் சேர்க்கைக்கானக் களப்பணி என விடுமுறையெல்லாம் வியர்வையில்
நனைந்தே கரைகிறது.
மாணவர் சேர்க்கைக்காக, ஒவ்வொரு கிராமம், கிராமமாகப்
படையெடுத்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த 24.4.2019 புதன் கிழமையன்று காலையிலேயே,
பள்ளித் தலைமையாசிரியரும், நண்பருமான திரு வெ.சரவணன் அவர்கள் தலைமையில், ஒரு குழுவாய்
புறப்பட்டோம்.
பள்ளியக்கிரகாரத்தின் வெண்ணாற்றங்கரையை ஒட்டி
அமைந்துள்ளச் சிற்றூர்களை நோக்கிப் பயணித்தோம்.
ஒரு சிறு கிராமம்.
ஊரின் முகப்பிலேயே சிறு கடை.
திண்பண்டங்கள் கிடைக்கும்
மளிகைப் பொருட்கள் கிடைக்கும்
தேநீரும் கிடைக்கும்
கடை உரிமையாளரின், இரு மகள்களும், எங்கள் பள்ளியில்
படித்தவர்கள்.
எனவே நல்ல வரவேற்பு
தெருத் தெருவாய், வீடு வீடாய், பள்ளிப் பருவ
மாணவர்களைச் சந்தித்தோம்.
அந்த கிராமத்தின் அத்துணை வீடுகளையும் பார்த்துவிட்டு,
இரு சக்கர வாகனங்களை எடுக்க வந்தபொழுது, எங்களுக்காகத் தேநீர் காத்திருந்தது.
கடையின் உரிமையாளர், எங்கள் அனைவருக்கும் தேநீர்
கொடுத்துவிட்டு, காசு வாங்க முடியவே முடியாது என மறுத்துவிட்டார்.
தேநீர் குடித்தபடியே பேசிக்கொண்டிருந்தோம்
கடையை ஒட்டி ஒரு கிணறு
விறகுகளாலும், குப்பை மூட்டைகளாலும் மூடப்பட்டக்
கிணறு
கிணற்றை மூடிவிட்டார்களே என்னும் வருத்தம் உள்ளத்தில்
குடியேறியது
கிராமப்புறங்களிலேயே கிணற்றை மூடுகிறீர்களே?
தண்ணீர் இல்லையா? என்றோம்.
இக்கேள்விக்குத் திரும்பி வந்த பதிலைக் கேட்டு,
அனைவருமே அதிர்ந்துதான் போனோம்.
கிணற்றில்
நீர் இருந்தது.
எங்கள் ஊரில், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பெற்ற
மிகவும் வயதானப் பெற்றோர்கள் பலர், குச்சு ஊன்றி நடந்து வந்து, குச்சியை கிணற்றின்
சுவற்றில் வைத்துவிட்டு, கிணற்றுக்கள் விழுந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தொடர்ந்து, பலர் இதுபோல், தற்கொலை செய்து கொள்ளவே,
கிணற்றையை மூடிவிட்டேன் என்றார்.
எங்களுக்குப் பேச்சே வரவில்லை
என்ன கொடுமை இது?
நகர்புறங்களில், மெத்தப் படித்தவர்கள், மலைமலையாய்ச்
சம்பாதிக்கும் பலருக்குத்தான், பெற்றோரைக் கவனிக்க நேரமில்லாமல், முதியோர் இல்லங்களில்
தள்ளிவிடுகிறார்கள் என்றால், கிராமப் புறங்களில், கிணற்றுக்குள் பாய்கிறார்களே
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
என்னும்
நம் முன்னோர் உரைத்த வரிகள், வலுவிலந்து, பொருளிழந்து விட்டனவே.
இவர்களெல்லாம் என்ன பிள்ளைகள்
வயிற்றிற்குக் கஞ்சி
மனதிற்கு இதமாய் சில வார்த்தைகள்
இவற்றைக்கூடத் தர இயலா பிள்ளைகள் என்ன பிள்ளைகள்.
கால் வயிற்றிற்றுக் கஞ்சி கொடுக்க மறுக்கின்ற
மனம் என்ன மனம்.
பெற்றெடுத்து, வளர்த்து, ஆளாக்கிவிட்ட, கைதூக்கி
விட்ட தந்தையிடம், அன்பாய் நாலு வார்த்தை பேச மறுக்கின்ற மனம் கொடூரம் அல்லவா?
இவர்கள் மனிதர்களே அல்ல
வேதனையோடு வீடு திரும்பினோம்.
வேதனையான தகவல்.
பதிலளிநீக்குஆசிரியர் பாடு மிகவும் கஷ்டமாய் தான் இருக்கிறது.
பதிலளிநீக்குபடிக்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது.
கிணற்றின் உயரத்தை அதிக படுத்தி இருந்தால் வயதானவர்களால் ஏற முடியாதே! உயரம் குறைச்சலாக இருப்பதால் உள்ளே எளிதாக விழுந்து விடுகிறார்கள்.
மிகவும் வேதனையான செய்தி நண்பரே. தலைப்பும் மிக பொருத்தம்
பதிலளிநீக்குவேதனைதான்!
பதிலளிநீக்கு"வயிற்றிற்குக் கஞ்சி, மனதிற்கு இதமாய் சில வார்த்தைகள், இவற்றைக்கூடத் தர இயலா பிள்ளைகள் என்ன பிள்ளைகள். கால் வயிற்றிற்றுக் கஞ்சி கொடுக்க மறுக்கின்ற மனம் என்ன மனம்." என்ற அருமையான கேள்விகள் இந்தக்காலப் பிள்ளைகளின் உள்ளத்தைத் துளைக்குமா?
பதிலளிநீக்குஆம் சிவகங்கை மாவட்டத்திலும் இதே நிலை தான்.
பதிலளிநீக்குபலர் வேறு வேறு வழிகளைக் கையாண்டு தற்கொலை செய்துகொள்கிறார்கள். குடும்பத்தாராலேயே கொலை செய்யப்படுவதும் உண்டு. கணிசமான எண்ணிக்கையினர்
பதிலளிநீக்குகாணாமல் போகிறார்கள்.
பல நிகழ்வுகள் பிறர் அறியாமல் மறைக்கப்படுகின்றன.
பெரியவர்கள் மதிக்கப்படுவது வெறும் பேச்சளவிலும் ஏட்டளவிலும்தான்.
புதைக்குழியைவிட கொடுமையானது மரணக்கிணறு...
பதிலளிநீக்குஎன் பெரியப்பா, மற்றும் இன்னொரு உறவினர் இருவருக்குமே மனைவி இல்ல. இரண்டு பெரியப்பாக்களும் அவங்களே சமைச்சு சாப்பிடுறாங்க இத்தனைக்கும் அந்த வீட்டிலேயே அவங்க மருமகள்கள் இருந்தும் இந்நிலை....
நல்ல உடல்நிலையில் இருப்பதால் சமைச்சு சாப்பிட்டுக்கிறாங்க. முடியாமல் போனப்பின்?! அவங்க ஊரிலும் இதுமாதிரி கிணறு இருக்காந்னு தேடனும்..
ஒரு பக்கம் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க விடியற்காலையிலேயே பள்ளியில் வரிசையில் நிற்பார்கள் என்று கேட்டிருக்கிறேன் ஆனால் பள்ளிஆசிரியர்கள்தேடிச் சென்று பிள்ளைகளப் பள்ளியில் சேர்க்க முயற்சிக்கின்றனர் என்று பதிவு சொல்கிறது இதுமுரணாகத் தெரிகிறதே
பதிலளிநீக்குஆசிரியர் பணி இப்போது மிகவும் சிரமமான பணியாகத்தான் மாறி இருக்கிறது! அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைந்து கொண்டிருக்கிறது.சேருகின்ற மாணவர்களின் தரமும் சரியில்லை! பெரும் போராட்டம்தான்! பெற்றவர்களை தற்கொலை செய்து கொள்ள வைக்கும் பிள்ளைகள் கிராமங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்குத்தெரிந்து ஒரு கிராமத்தில் குளத்தில் விழுந்து ஒரு மூதாட்டி இறந்து போனார். கிணற்றை மூடியது நல்லதற்கே! ஆனால் வருத்தமான ஒன்றுதான்!
பதிலளிநீக்குமிகவும் வேதனை தரும் தகவல்...
பதிலளிநீக்குஇன்றைய அரசு ஆசிரியர்கள் விடுமுறை நாட்களிலும் படுகின்ற அவஸ்தைகள் எனக்கும் முழுமையாகத் தெரியும். என் சகோதரி மருமகள் அரசுப்பள்ளி ஆசிரியை. தேர்தலுக்கு முன் பயிற்சிக்காக புதுக்கோட்டை அருகிலுள்ள கிராமத்தில் போட்டார்கள். அப்புறம் தேர்த்தல் டியூட்டி. இப்போது கோச்சிங் கிளாஸ் என்று பள்ளிக்கு மீண்டும் சென்று கொண்டிருக்கிறார். காலை ஐந்து மணிக்கு எழுந்து வீட்டிலிருக்கும் வயதானவர்களுக்கு சமைத்து வைத்து விட்டுத்தான் பள்ளிக்கும் போக வேண்டும்.
பதிலளிநீக்குஇன்றைக்கு அன்புக்கும் மரியாதைக்கும் தானே பஞ்சமாக இருக்கிறது! பொங்கி வரும் கண்ணீரை விழிகளுக்கு வராமல் தொண்டையிலேயே நிறுத்தி குமைந்து கொன்டிருக்கும் பல வயதானவர்களைப்பார்த்து பார்த்து மனம் கசந்து விட்டது.
வயதான பெரியவர்கள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்கிறார்கள் என்பதை இப்போதுதான் கேள்விபடுகிறேன்.....வேதனையான விஷயம்...
பதிலளிநீக்குஎஸ் ரா வின் கங்கை பயண அனுபவம் ஒன்று நினைவில் வந்தது.
பதிலளிநீக்குஒவ்வொரு ஊரிலும் இப்படி ஒரு அதிர்ச்சி இருக்கும்.
மிக நேர்த்தியாக அதை பதிவு செய்திருகிறீர்.
இதை தழுவி ஒரு சிறுகதையை எழுதலாம்.
நம் முன்னோர் உரைத்த வரிகள், வலுவிலந்து, பொருளிழக்க வைத்துவிட்டாரகள்...டிஜிட்டல் உலகத்தார்கள்தான் முதல்காரணம்..
பதிலளிநீக்குஒரு பிள்ள சிறப்பாக வளர மாதா பிதா குரு காரணம் என்ற போது..அந்த ஒரு பிள்ளை கெட்டு போக..மாதா பிதா..குரு..தானே காரணம்..
வேதனையான விடயம் நண்பரே.
பதிலளிநீக்குசற்றே அவரவர் குடும்பத்தை சற்றே உற்று நோக்குங்கள் வீட்டுக்கு வீடு வாசப்படி.
கில்லர்ஜி... நான் மனப்பூர்வமா நல்ல பின்னூட்டம் என்று நினைத்தது உங்களின் பின்னூட்டம்..
நீக்குவேதனையைத் தருகின்ற பதிவு. மனம் கனத்துவிட்டது.
பதிலளிநீக்குவேதனை மிகுந்த கிணறு.... கிராமத்திலேதானே பெற்றோரை அதிகம் பேணுவார்கள்... இது வித்தியாசமாக இருக்கே...
பதிலளிநீக்குமனம் கனக்கும் பதிவு .
பதிலளிநீக்குமனத்தைக் கலங்கடிக்கும் பதிவு.
பதிலளிநீக்கு1. பொதுப் புத்தி, (பெரும்பான்மை) ஆசிரியர்கள் ஜாலியா வேலை எதுவுமில்லாமல் வருடத்துக்கு இரண்டு மாத விடுமுறையோடு நல்ல சம்பளத்தில் இருக்காங்க என்று இருப்பதுதான். (நானும் அப்படிப்பட்ட மனநிலையில்தான் இருந்தேன், என் அப்பா ஆசிரியப்பணி செய்திருந்தபோதும்). சில மாதங்களுக்கு முன்பு, உறவினர் வீட்டில் கணவன் மனைவி இருவரும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியப்பணி, இப்போதைய ஆசிரியப்பணியின் பிரச்சனைகளெல்லாம் விரிவாகப் பேசினார்கள். அப்புறம்தான் தெரிந்தது, வெளியில் இருந்துகொண்டு ஒரு துறையைத் தவறாக நினைக்கக்கூடாது என்று.
2. வயதானவர்களைப் பற்றி நீங்கள் சொல்லியிருந்தது மனவேதனையைத் தந்தது. ஆனால் இந்த மாதிரி நிலையில் பலப்பல குடும்பங்களைக் காண்கிறேன். முன்னைப்போல் கூட்டுக் குடும்பம் என்று ஒன்று இல்லாதிருப்பது, முன்னைப்போல் சாதாரண வாழ்க்கையை பெரும்பாலானோர் வாழாதது (டிவி, சினிமா, வெளியிடங்களில் சாப்பாடு, வித வித துணி என்று வாழ்க்கை முறை மாற்றம்), பெற்றோரை கூட இருந்து கவனித்துக்கொள்ளமுடியாத நிலைமை (ஆரம்பகாலத்தில் மாமியார், மருமகளை நன்றாக நடத்தியிருக்கமாட்டார்... பிறகு மருமகள் மாமியார் உறவு சரிப்படுத்த முடியாத அளவு சேதமடைவது போன்று பல காரணங்கள்)
ஐயா...தங்கள் பதிவான மரணக்கிணறு படித்து மனம் நொந்தேன். இலங்கையில் பல ஆண்டுகளுக்கு முன் ஏறக்குறைய எல்லா ஆசிரியர்களும் வேதனத்தையோ வேறு சலுகைகளையோ கவனத்தில் கொள்ளாது திறமையான ஒழுக்கமான சமூகத்துக்குத் தேவையான மாணவர்களை உருவாக்கினாா்கள். இன்றும் சில ஆசிரியர்கள் அப்படி நேர்மையாகக் கடமையாற்றுகின்றார்கள். இன்னும் சிலர் கல்லூரிகளில் கடமையாற்ற சம்பளம் வாங்கிக்கொண்டு அதிக பணத்தை சம்பாதிப்பதைக்குறிக்கோளாகக் கொண்டு தனிப்பட்ட ரியுசன் வகுப்புகளை நடாத்துகின்றாா்கள். முன்பு சினிமாப்பட விளம்பரங்களில் கதாநாயகா்களின் படங்களைச் சேர்த்துக்கொள்வது போல இப்போது முக்கியமான இடங்களில் தனியார் வகுப்புகளை நடாத்தும் ஆசிரியா்களின் படங்களை (சில இடங்களில் சற்று கவா்ச்சிகரமாக) இணைத்து விளம்பரம் செய்து மாணவர்களையும் பெற்றோா்களையும் மயக்குகின்றாா்கள். இது ஒருபுறம் இருக்க இலங்கையில் எண்பதுகளுக்கு பின் இடம் பெற்ற விரும்பத்தகாத விளைவுகளால் பல் வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த்தோா் ஏதோ சில காரணங்களுக்காக பெற்றோா்களை தாங்கள் வாழும் நாட்டுக்கு அழைத்துச் சென்றாலும் அங்கே வாழமுடியாமல் பலர் சிரமப்படுகின்றாா்கள். இன்னும் சிலா் பெற்றோரை முதியோா் இல்லங்களில் சோ்த்து அவ்வப்போது பணம் செலுத்தினாலும் வயதான காலத்தில் பிள்ளைகளிடமிருந்து எதிா்பாா்க்கும் அன்பும் ஆதரவும் இன்றி இன்றி அனாதைகளாக அவதிப்படுவதை அவதானித்து ஆதங்கப்படுகின்றேன்.
பதிலளிநீக்குmy mother spent 20 years after my father's end until her end with so much of attention.
பதிலளிநீக்குGreat job for publishing such a beneficial article. Your blog information isn’t only useful but it is additionally creative with high content too. Thanks..
பதிலளிநீக்குkalviseithi
வேதனைதான்!
பதிலளிநீக்குI blog quite often and I really thank you for your content.
பதிலளிநீக்குThis article has really peaked my interest. I am going to book mark your site
and keep checking for new details about once a
week. I subscribed to your Feed as well.
avast parallels desktop 16 crack
ashampoo burning studio crack
internet download manager idm crack
Thanks for sharing such a great post. Nice Post I Enjoy! Awesome site you have here but I was curious if you knew of any message boards that cover the same topics talked about here? I’d really like to be a part of a group where I can get opinions from other experienced people that share the same interest. If you have any suggestions, please let me know. Bless you!
பதிலளிநீக்குJihosoft File Recovery Crack
vcracks.com
thanks for sharing!!!
பதிலளிநீக்குNetBalancer Crack
I'm the Blogger and the owner of this:
பதிலளிநீக்குactivatedlink
avast-cleanup-premium-crack-serial-key
iobit-uninstaller-crack-license-key
fl-studio-crack-registration-key
microsoft-office-2016-crack-product-key
adobe-illustrator-crack
பதிலளிநீக்குI like your all post. You have done really good work. Thank you for the information you provide, it helped me a lot. I hope
allpcprocrack
transmac-crack
ccleaner-professional-key-crack
avast-premium-security-crack
atomic-email-hunter-crack
There is a natural way to lose weight and it is a combination of diet and exercise. Losing weight is as simple as elementary math: calories you consume minus calories you burn. IBKEYGEN If the difference is negative, you will lose weight. If the difference is positive, you will gain weight. The more you exercise, the more calories you will burn. In fact, if you can control the number of calories you consume, you can still lose weight even without exercising. Let's take a few examples:
பதிலளிநீக்குHTML Compiler Crack
Exif Pilot Crack
TeraCopy Pro Crack
DVDFab Crack
Inpixio Photo Studio Ultimate Crack
I'm the owner of this website. I'll provide the service of all types of crack software for PC. You can also download it.
பதிலளிநீக்குfreeactivationkeys.org
avg-pc-tuneup-crack
vlc-media-player-crack
/winrar-crack
microsoft-office-pro-plus-crack
smadav-pro-rev-crack
avast-antivirus-premier-2020-crack
https://crackmark.com/universal-usb-installer-crack-with-activation-key/
பதிலளிநீக்குVery good article! We will be linking to this particularly great post on our website. Keep up the good writing.
Thanks for the post. Very interesting post. This is my first-time visit here. I found so many interesting stuff in your blog.
பதிலளிநீக்குMINItool Partition Wizard Crack
transmac Crack
Adob Photoshop Crack
Ccleaner Pro Crack
Thanks for the post. Very interesting post. This is my first-time visit here. I found so much interesting stuff in your blog.
பதிலளிநீக்குIB KEYGEN
ccleaner pro crack
Thanks for the post. Very interesting post. This is my first-time visit here. I found so much interesting stuff in your blog.
பதிலளிநீக்குPGWare GameBoost Crack
Zoner Photo Studio X Crack
Adobe Camera Raw Crack
FL Studio Crack