25 மே 2019

தாசனின் தாசன்





     ராஜகோபாலன்

     அந்த இளைஞரின் பெயர் ராஜகோபாலன்

     கவிதைகளின் மீது அளவிலா ஆர்வம்

     பாரதிதாசன் பாடல்களின் மீதோ, தீராத காதல்

     பாரதிதாசனின் பாடல்களைப் படிக்கப் படிக்க, அந்த இளைஞனின் உள்ளத்தில் ஒர் ஆசை, அவரையும் அறியாமல் குடியேறியது


     பாரதிதாசனைப் பார்க்க வேண்டும்

     பாரதிதாசனுக்குப் பணிவிடைகள் செய்து, காலத்தைக் கழிக்க வேண்டும்

     நாள் ஆக, ஆக இந்த ஆசை. இந்த எண்ணம் வலுவாகிக் கொண்டே போனது.

     பாரதிதாசனைப் பார்க்க வேண்டுமானால், புதுச்சேரிக்குச் சென்றாக வேண்டும்.

     ஆனால் கையிலோ காசுக்கு வழியில்லை

     ஏதேனும் வேலை கிடைக்குமா என விசாரித்துப் பார்த்தார்

     ஒரு வீட்டிற்குச் சுண்ணாம்பு அடிக்கும் வேலை கிடைத்தது

     தயங்காமல் சுண்ணாம்பு அடித்தார்

     கூலியைப் பெற்றார்

     புதுச்சேரிக்குப் பேருந்தைப் பிடித்தார்

     பாரதிதாசனை நேரில் கண்டு பரவசப்பட்டார்.

     தங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொண்டு, உங்களோடு இருந்து விடுகிறேனே

     இளைஞனைப் பற்றி விசாரித்த பாரதிதாசன், மென்மையாக மறுத்தார்.

     அப்பா, அம்மாவுக்குச் சொல்லாமல், அவர்களைத் தவிக்க விட்டுவிட்டு, நீ வந்தது தப்பு.

    வேணும்னா அவங்க அனுமதியோடு வா

     பாவேந்தரின், பண்பில், அன்பான வார்த்தைகளில், நெகிழ்ந்துபோன, அந்த இளைஞன், பாரதிதாசனுக்குத் தாசனாகவே மாறிப்போனார்.

     தனது பெயரையும் மாற்றிக் கொண்டார்.

     கனக. சுப்பு ரத்தினம்

     சுப்பு ரத்தினம்

     சுப்பு ரத்தின தாசன்

     சுப்பு த்தின தாசன்

     சுரதா

     இவர்தான் சுரதா

    

உவமைக் கவிஞர் சுரதா.

14 கருத்துகள்:

  1. உவமைக்கவிஞர்... சுரதா... சிறந்த மனிதர்.

    பதிலளிநீக்கு
  2. அறியாத விடயம் தந்தமைக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  3. சுரதா பற்றி எனக்குத் தெரியாத தகவலை வெளியிட்டமைக்கு மிகுந்த நன்றி .

    பதிலளிநீக்கு
  4. தெரிந்து கொண்டோம் .நன்றி.

    பதிலளிநீக்கு
  5. சுரதா வின் பல படைப்புகள் படித்தாலும், அவர் தனக்கு பெயா் வைத்த கதையை உங்கள் மூலமாகத் தான் அறிந்து கொண்டேன். நன்றி இப்படித்தான் கல்யாணசுந்தரத்தின் பெயரில் முதல் இரண்டு எழுத்துக்களையும் தனது பெயரான கிருஷ்ணமூர்த்தியின் பெயரில் முதலெழுத்தான கி எழுத்தையும் இணைத்து “கல்கி” என்னும் பெயரில் பலவற்றை எழுதியதாக எனது தந்தை நான் சிறுவனான இருக்கும்போது சொல்லியதும் நினைவுக்க வருகிறது.

    பதிலளிநீக்கு
  6. உவமைக்கவிஞர் சுரதா அவர்களின் பெயர்க்காரணம் அறிந்தேன். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  7. சுரதா பெயர்க் காரணம் தெரிந்தது நன்றி சார்

    பதிலளிநீக்கு
  8. உவமைக் கவிஞர் சுரதா.
    அவர் எழுதிய பாடல்தானே அமுதும் தேணும் எதற்கு பாடல்?
    மிக அருமையாக இருக்கும் அவர் பாடல்கள்.

    அவரைப் பற்றி சொன்ன விதம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  9. சுரதா அவர்கள் ஓர் அபூர்வம்!

    பதிலளிநீக்கு
  10. சுரதா... கேள்விப்பட்டதுபோல இருக்கு ஆனால் பெயரின் வீவாக்கம் இன்றுதான் தெரியும்..

    பதிலளிநீக்கு
  11. தாசனின் தாசனைப் பற்றி சில கூடுதல் தகவல்களை அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அட... சுப்பு ரத்தின தாசன் என்ற சுரதா இவர்தானா..???? தெரிந்து கொள்ள உதவியமைக்கு நன்றி!!

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு