ஏய், என்ன பண்ணப் போறே? என்று அவள் கையைப்
பிடித்து இழுத்தான் மதி.
இங்கேயிருந்து
குதிக்கப் போகிறேன் என்றாள் அவள் தீர்மானக் குரலில்.
ஒரு நொடி திகைத்துப் போனான் மதி
உனக்கென்ன வெறி புடிச்சுருக்கா? இப்போ நாம எவ்ளோ
உயரத்துல இருக்கோம் தெரியுமா? என்று
கேட்டதும்
பத்தாயிரம்
அடி உயரத்தில் என்று மிரட்சியோடு பதிலளித்தாள் பக்கத்தில் இருந்த பணிப்பெண்.
கேட்டியா? குதிச்சா ஒரு எலும்பு கூடத் தேறாது
பரவாயில்லை, என் மூளை மட்டும் அவங்களுக்கு முழுசாக்
கெடைச்சா போதும்.
மகிழினி அவன் கையை உதறிவிட்டுப் பறக்கும் தட்டின்
உடைந்த சன்னல் வழியாக வெளியே பாய்ந்தாள்.
கதையின் துவக்கத்திலேயே, நம்மை மிரள வைத்து,
நூலுக்குள் நம்மை முழுமையாக இழுத்துவிடுகிறார் இவர்.
முதல் கேள்வியே தப்பு? ஏலியன்ஸ் இருக்காங்களான்னு
கேக்கக் கூடாது. எங்கே இருக்காங்கன்னு கேளு
ஏலியன்ஸ்
வேற்றுக் கிரகவாசிகள்
பறக்கும் தட்டு
எவரையும் எளிதில் ஈர்க்கும் தன்மை வாய்ந்த கதைக்
களத்தைத் தேர்வு செய்ததற்காகவே, இவரைத் தனியாகப் பாராட்ட வேண்டும்.
நீ மியூசியத்துல
டைனோசர் எலும்புக் கூடு பாத்திருக்கியா?
ம் …
பார்த்திருக்கேன் என்றாள் மகிழினி
மத்த
எலும்புக்கூடுகளுக்கும், டைனோசர்ஸ் எலும்புக் கூட்டுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு
தெரியுமா?
மத்த எலும்புகளை சாதாரணமாகத்தான் மெயின்டெயின்
பண்ணுவாங்க.
ஆனா, டைனோசரசோட எலும்புக் கூடுகளுக்கு மட்டும,
ரேடியேஷனைக் கண்ட்ரோல் பண்றதுக்கான ஸ்பெஷல் பெயிண்ட் அடிப்பாங்க மியூசியத்துல தெரியுமா?
என்னது?
எஸ். மனித இனம் பொறக்கறதுக்குக் கோடிக்கணக்கான
வருஷங்களுக்கு முன்னாடி வாழ்ந்த டைனோசர்ஸ் உடம்புல, அணுக்கதிர்வீச்சு எங்கிருந்து வந்தது?
அதுவும் இவ்வளவு காலத்துககு அப்புறமும் நீடிச்சிருக்கிற
அளவுக்கு
சோ, மனித இனம் இங்க பாதுகாப்பா வாழறதுக்காக,
பல காலத்துக்கு முன்னாடியே, யாரோ அணுகுண்டு வீசி அதுங்களை அழிச்சிருக்காங்கங்கிறது தெரியலை?
வியப்பாக இருக்கிறது அல்லவா.
டைனோசர் எலும்புக் கூடுகளில் இருந்து கதிர் வீச்சு
வெளிப்படுகிறதா?
உண்மையா, கற்பனையா என்று தெரியவில்லை.
ஆயினும், வேற்றுலகத்தினர் அணுகுண்டுகளை வீசி
டைனோசர்களை அழித்து, மனிதர்கள் வாழ வழிவகுத்தனர் என்று கூறி, நமது நாடித் துடிப்பை
அதிகமாக்கிக் கொண்டே செல்கிறார் இவர்.
உங்கள் உலகில் மட்டுமல்ல, எல்லையில்லா இந்த அண்டப்
பெருவெளியின் எண்ணற்ற கோள்களில், முதன் முதலாகத் தோன்றிய இயற்கை மொழியானது தமிழ்தான்.
இக்கதையின் எழுத்தாளர், தன் தாய் மொழிப் பற்றை,
தமிழ் மொழிப் பற்றை எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.
வேற்று உலகிலும் தமிழ்
ஆனால் பெயர் மாறுபடும், எங்கள் உலகத்தில் இதன்
பெயர் அமிழ்த மொழி.
நாங்கள் இங்கு பேசுவது, உங்கள் மொழியின் செவ்வியல்
வடிவம்.
நீங்கள் போசுவதோ, கொச்சையான வேற்று மொழிகள் பல
கலந்த மொழி.
தமிழில நாம் பிற மொழிச் சொற்களைக் கலந்து கொச்சைப்
படுத்திவிட்டோம், கலங்கப்படுத்தி விட்டோம் என்பதை வேதனையோடு வெளிப்படுத்துகிறார்.
இது உங்கள் உலகத்தின் இணை உலகம். அதாவது உங்களுக்குப்
புரியும்படி சொன்னால் பேரலல் வேர்ல்டு.
பேரலல் வேர்ல்டுன்னா, ஒரு உலகம் மாதிரியே அச்சு
அசலா, இன்னொரு உலகம் இருக்கும். இங்கே இருக்கிற அத்தனை பேரும் அங்கேயும் இருப்பாங்க.
இங்கே நடக்கிற எல்லாமே அங்கேயும் நடக்கும்னு சொல்வாங்களே அப்படியா.
ஆம். குறிப்பாக காலத்தைப் பொறுத்தவரை, எங்களுக்கும்
உங்களுக்கும் இடையே ஐம்பது ஆண்டுகள் வேறுபாடு. அதனால்தான் உங்களைப் போன்ற இணையுலக மனிதர்களை
நாங்கள் கடத்துகிறோம்.
கடத்துவது எதற்குத் தெரியுமா?
உங்கள் நினைவுகளுக்காக
நினைவுகளுக்காக வேற்றுலகவாசிகள், நம் பூமியின்
மனிதர்களைக் கடத்துகிறார்கள்.
நினைவுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள் என
நீங்கள் நினைப்பது புரிகிறது.
நூலின் அடுத்தடுத்த பக்கங்களில் இதற்கான விடையை
வழங்கி, நம்மை திகைப்பில் ஆழ்த்துகிறார் இவர்.
நம் நினைவுகளை வைத்துக் கொண்டு, வேற்றுலகவாசிகள்
என்னத்தான் செய்கிறார்கள் என்பதை அறிய விருப்பமா?
உடனே இவரது நூலைத் தரவிறக்கம் செய்து படியுங்கள்.
எளிய
நடை
மகிழினி, மதி, அறிவழகன், ழகரன், இன்முனை, கமழ்நன்
என நூலெங்கும், தூய தமிழ்ப் பெயர்கள் விரவிக் கிடக்கின்றன.
இவர் ஒரு தீவிர தமிழ்ப் பற்றாளர்.
இவரது தாய் மொழிப் பற்றும், தமிழினக் கனவுகளும்,
நூலின் துவக்கம் முதல், நிறைவு வரை இழையோடுகின்றன.
13 ஆம்
உலகில் ஒரு காதல்
(கிண்டில் இணைய நூல்)
இவரது தந்தை திரு ந.இளங்கோவன்
தாய் திருமதி இ.புவனேசுவரி
இவர் தன் தந்தை, தாய் இருவர் பெயரின் முன் எழுத்தையும்,
தன் தலைப்பு எழுத்தாக வைத்துக கொண்டவர்.
இவர்தான்
அகச் சிவப்புத் தமிழ்
என்னும்
வலைப் பூவை
கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தி வருபவர்
திரு
இ.பு.ஞானப் பிரகாசன்.
அற்புதமான விமர்சனம் நண்பர் திரு.இ.பு.ஞானப்பிரகாசன் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி கில்லர்ஜி அவர்களே!
நீக்குஆவலைத் தூண்டும் விமர்சனம்... இனிய நண்பருக்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குமிக்க நன்றி தனபாலன் ஐயா!
நீக்குஇதுபோன்ற நூல்கள் அவசியம் தேவை. உங்களைப் போன்றோரின் விமர்சனம் காந்தம் போல. ஈர்ப்பன. வாழ்த்துகள் ஜெயக்குமார்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா! தாங்களும் நூலைப் படிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
நீக்குநூல் விமர்சனம் அருமை.
பதிலளிநீக்குபடிக்க தூண்டும் விமர்சனம்.
//இவர் தன் தந்தை, தாய் இருவர் பெயரின் முன் எழுத்தையும், தன் தலைப்பு எழுத்தாக வைத்துக கொண்டவர்.//
இதற்காக வாழ்த்த வேண்டும் இவரை.
வாழ்த்துக்கள்.
//இதற்காக வாழ்த்த வேண்டும் இவரை// - மிக மிக நன்றி அம்மணி! வாழ்க்கையைத் தந்தவர்களுக்கு ஏதோ நம்மாலான ஒரு சிறு நன்றியறிதல் அவ்வளவுதான்!
நீக்குஇவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆசிரியரே. எதை இவர் செய்தாலும், எதனைப் பற்றி எழுதினாலும், ஒரு கடிதம் வழியே மற்றவர்களுக்கு கடிதம் அனுப்பினாலும் நூறு சதவிகித உழைப்பை கொடுத்து உழைப்பவர். ஒவ்வொரு விசயத்திலும் செய்நேர்த்தியில் மகா கெட்டிக்காரர். இவர் வலையுலக கமல் என்றே நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டதுண்டு. மனமார்த்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஐயா! இந்த அளவுக்கு நீங்கள் என்னைப் புரிந்து வைத்திருப்பது கண்டு வியக்கிறேன். தங்கள் கடைசி வரி சிலிர்க்கிறது. தங்கள் பாராட்டுக்கள் கண்டு உள்ளம் தளும்பும் நன்றி!
நீக்குஇவரது எழுத்துகளுக்கு நான் ஃபாலோஅர்
பதிலளிநீக்குமிக்க நன்றி ஜி.எம்.பி ஐயா!
நீக்குஆர்வத்தைத் தூண்டும் விமர்சனம். இ பு ஞா வெற்றியடைய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம் அவர்களே! நீங்களும் படித்துப் பார்த்து நூல் பற்றிக் கருத்துரைக்க அழைக்கிறேன்.
நீக்குஆகா!... ஆகா!!... ஆகா!!!... ஐயா! எனக்கு என்ன சொல்வதெனவே தெரியவில்லை. நூலைப் படிக்கும் நம் பதிவுலக நண்பர்கள் யாராவது அதைப் பற்றிப் பதிவு எழுத மாட்டார்களா என்று நான் ஏங்கிக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் அது பற்றி எழுதியது மட்டுமில்லாமல் என்னைப் பற்றியும் நீங்கள் அறிமுகப்படுத்தி என் தலைப்பெழுத்துக்களின் விவரத்தைக் கூடப் புரிந்து கொண்டு விளக்கமளித்து எழுதியிருப்பது கண்டு மகிழ்ச்சியிலும் வியப்பிலும் திக்குமுக்காடுகிறேன். எத்தனையோ மாபெரும் தமிழறிஞர்கள், ஆசிரியப் பெருமக்கள், சமுகத் தொண்டர்கள் போன்றோரை அறிமுகப்படுத்திய தங்கள் வலைப்பூவில் தாங்கள் இந்தச் சிறுவனுக்கும் இடமளித்திருப்பது உண்மையில் என் வாழ்வில் கிடைத்த நற்பேறு! இரு கரம் கூப்பிய நன்றி ஐயா!
பதிலளிநீக்குஇந்தக் கதை மூலம் தமிழ் பற்றி நான் எப்படிப்பட்ட கருத்துக்களை மக்களிடம் உணர்த்த விரும்பினேனோ அவற்றையெல்லாம் நீங்கள் விளக்கமாகவே எடுத்துரைத்து விட்டீர்கள். அதற்கு என் தனி நனி நன்றி!
கதையின் முக்கிய இடங்களைப் பற்றி எடுத்துச் சொல்லி மக்களின் படிக்கும் ஆர்வத்தைத் தாங்கள் தூண்டிய விதத்துக்கு இன்னொரு சிறப்பு நன்றி!
டைனோசர் எலும்புக்கூடு பற்றிக் கதையில் நான் சொல்லியிருந்த தகவல் உண்மைதான் ஐயா! நூலின் இறுதிப் பக்கங்களில் நான் நூலை என் அம்மா, அப்பா முதலானோருக்குக் காணிக்கையாக்கி இருப்பதையும் அதையடுத்து இப்படி ஒரு நூலை எழுதக் காரணமாக இருந்த சிலருக்கு நன்றி தெரிவித்திருப்பதையும் பார்த்திருப்பீர்கள். அதில் கதைக்கான கருவையும் தகவல்களையும் வழங்கிய ஹிஸ்டரி டி.வி 18 தொலைக்காட்சியின் ‘ஏன்ஷியண்ட் ஏலியன்ஸ்’ தொடர் குழுவினருக்கும் நன்றி தெரிவித்திருப்பேன். வேற்றுலகினர் பற்றி முழுக்க முழுக்க அறிவியல் அடிப்படையில் ஒளிபரப்பப்பட்ட அந்தத் தொடர்தான் இந்தக் கதையை எழுத அடிப்படையாக இருந்தது ஐயா! டைனோசர் எலும்புக்கூடு பற்றிய அந்தத் தகவலும் அந்தத் தொடரில் சொல்லப்பட்டதுதான். கதை என்னவோ கற்பனைதான். ஆனால் அதில் நீங்கள் குறிப்பிடும் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் (chapter) வரும் வேற்றுலக வாழ்க்கை பற்றிய தகவல்கள் அனைத்தும் உண்மை.
என்றென்றும் மறக்க முடியாத உதவி உங்களுடைய இந்தப் பதிவு! மீண்டும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி ஐயா!
அழகிய விமர்சனம். கதையின் ஆரம்பம் உணமையில் புத்தகம் படிக்கும் ஆவலைத்தூண்டுகிறது. கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி அதிரா! நூலையும் படித்துப் பார்த்து உங்கள் மேலான கருத்துக்களை அளிக்க வேண்டுகிறேன். நூலின் முடிவு உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கும் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி, கிண்டிலில் தேடிப் படிக்கிறேன்.
நீக்குதேட வேண்டியதில்லை அதிரா அவர்களே! இதோ இணைப்பு - https://amzn.to/2qFuL4z
நீக்குமிக்க நன்றி!
நன்றி, படிச்சுப்பார்ப்போமே என புக்கை ஓபின் பண்ணினால் அது 3000 பக்கம் தாண்டுமாமே... நான் 1000 ஐ நெருங்கிட்டேன ஆனா எந்த ஆண்டில் படிச்சு முடிப்பேனோ அந்த புளியடி வைரவருக்கே வெளிச்சம்.
நீக்குஉண்மையில் வித்தியாசமாகவும் ஒருவித பரபரப்பாகவும் நகருது கதை... வாழ்த்துக்கள், வித்தியாசமான சிந்தனைக்கு.
அருமையான நூலாசிரியர்
பதிலளிநீக்குதங்கள் ஆய்வுப் பதிவு சிறப்பு
பாராட்டுகள்
மிக்க நன்றி ஐயா!
நீக்குஇந்த நூல் பற்றி உங்கள் கருத்துக்களைக் கட்டாயம் எதிர்பார்க்கிறேன் யாழ்ப்பாவாணன் ஐயா! ஏன் என்பது நூலைப் படித்து முடிக்கையில் உங்களுக்குப் புரியும். இங்கு பொதுவெளியில் சொல்ல இயலாமைக்கு வருந்துகிறேன்.
நீக்குநல்ல விமர்சனம். நான் தரவிறக்கம் செய்து படிக்கத் தொடங்கி விட்டேன்
பதிலளிநீக்குமிக்க நன்றி கௌசி அவர்களே! படித்து விட்டு உங்கள் மேலான கருத்துக்களையும் தரக்குறியீட்டையும் அமேசானில் அளிக்க வேண்டுகிறேன்.
நீக்குதிருமிகு.இ.பு.ஞானபிரகாசன் அவர்களின் தமிழ்மொழிப் பற்றுக்கும் எழுத்தாற்றலுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.தகவல்களை சுவையாகத்தந்த திருமிகு.கி.ஜெயக்குமார் அவர்களுக்கும் நன்றி பலப்பல
பதிலளிநீக்குமிக்க நன்றி! உங்களுடைய இந்தக் கருத்துரையை நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன். இந்தப் பதிவின் கருத்துரைப் பகுதியில் யார் கருத்துரைத்தாலும் எனக்கு மின்னஞ்சல் வரும்படி செய்திருந்தேன். அப்படியும் உங்கள் கருத்துரை எப்படித் தவறியது எனத் தெரியவில்லை. அதற்காக வருந்துகிறேன்! உங்கள் உளமார்ந்த பாராட்டுக்கு மீண்டும் மிகவும் நன்றி!
நீக்குநெஞ்சார்ந்த பாராட்டுகள் - நன்றி பல
பதிலளிநீக்குமிக்க நன்றி! உங்களுடைய இந்தக் கருத்துரையை நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன். இந்தப் பதிவின் கருத்துரைப் பகுதியில் யார் கருத்துரைத்தாலும் எனக்கு மின்னஞ்சல் வரும்படி செய்திருந்தேன். அப்படியும் உங்கள் கருத்துரை எப்படித் தவறியது எனத் தெரியவில்லை. அதற்காக வருந்துகிறேன்! உங்கள் உளமார்ந்த பாராட்டுக்கு மீண்டும் மிகவும் நன்றி!
நீக்கு