01 ஜனவரி 2020

விழாத இடத்தில் விழுந்த மழைத்துளி



தொட்டியில் நீந்துகிறது
மீன்
மனசுக்குள்ளிருக்கு கடல்.

     படிக்கும்போதே மனது வலிக்கிறதல்லவா. மனித மனங்களை மட்டுமல்ல, விலங்குகளின் மனங்களையும், உணர்வுகளையும், உணர்ந்தவராய் இவர் இருப்பதை, இவரது கவிதைகள் நமக்கு உணர்த்துகின்றன.


     மனிதர்கள் தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகக் குலதெய்வக் கோயிலில், ஆடுகளைப் பலியிடுவதை, உயிர் வதைச் செய்வதை, வேதனையோடு இவர் வெளிப்படுத்தும் பாங்கைப் பாருங்கள்.

குலதெய்வ வேண்டுதல்
ஐந்தாடுகள்
பிஞ்சாட்டுக் கறி ருசி

     அமாவாசை மற்றும் விரத நாட்களில், காக்கைக்கு மட்டுமே சோறு படைக்கப்படும் பழக்கத்தை இவர் சாடும் அழகே அழகு.

விரதச்சோறு
அணிலை விரட்டுங்கள்
முதலில் காக்கை.

     நாம் பலமுறைப் பார்த்த காட்சிதான். பேருந்தில் நாம் பயணிக்கும் பொழுது, பேருந்தானது சில கோயில்களைக் கடக்கும் பொழுது, பயணிகள் பலரும், சன்னல் வழியாகக் காசுகளை வீசி எறிந்துவிட்டு, கடவுளின் அருளைப் பெற்றுவிட்ட உணர்வோடு பயணிப்பதைப் பார்த்திருப்போம்.

     இக்காட்சியினை, இக்கவிஞரும் கண்டு மனம் நொந்து போயிருக்கிறார்.

பேருந்திலிருந்து
வீசப்படும் காசுகள்
கோபமாய் கருப்புசாமி.

     கோயிலுக்குச் செல்லும் பொழுதெல்லாம், கோயில் வாசலில் பிச்சைக் காரர்களைப் பார்த்திருப்போம். இவரும் பார்த்திருக்கிறார்.

கோயில் மணியோசை
பிச்சைத் தட்டில் காசோசை
இரண்டும் ஒன்றுதான்.

     மரங்களிலிருந்து இலைகள் உதிர்வதையும், உதிர்ந்த இலைகள் காய்ந்து சருகுகள் ஆவதையும் பார்ததிருக்கிறோம். இதோ இவரும் தன் கவிக் கண்களால் பார்த்திருக்கிறார்.

விடைபெறுகிறது சருகு
வழியனுப்புகிறது மரம்
அழுகிறது காற்று

     துளிப் பா எனப்படும் ஹைக்கூ. மூன்றே மூன்று  வரிகளில், இலக்கிய ஈடுபாடு அற்றவரையும் எளிதில் முழுவதுமாய் தன்வசப்படுத்தும், எளிமையான வார்த்தைகளால், வலிமையானத் தாக்கத்தை ஏற்படுத்துவதில் வல்லவர் இவர்.

யாரும் வரலாம்
மௌனம் சம்மதம்
ஆலமர நிழல்.

     தொகுப்பு முழுவதுமே, மனித உணர்வுகளும், மனிதநேயமும், சூழ்நிலைச் சிதைவுகளும், அதனால் ஆன இழப்புகளுமே ததும்பி வழிகின்றன.

     எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் நூலிலை கூட இடை வெளி இல்லாதப் படைப்பாளி இவர்.

     தினமும் இருநூறு கிலோ மீட்டர் பயணம். தினமும் இருநூறு பக்கங்களாவதுப் படிப்பது. தினமும் குறைந்தது ஐம்பது பக்கங்களாவது எழுதுவது எனத் தன் வாழ்வை வடிவமைத்துக் கொண்டவர் இவர்.

     இவர் இதுவரை ஐம்பது நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். மேலும் ஐம்பது நூல்களுக்கானக் கையெழுத்துப் பிரதிகள், அச்சகம் நோக்கியத் தங்களின் பயணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றன.

      இவரது ஐம்பது நூல்களும் வெளியீட்டு விழா, காணாமலேயே, வெளிவந்த வேகத்தில் தீர்ந்து போனவை என்பதுதான் இவரது தனிப் பெருமை.

     கடந்த 22.12.2019 ஞாயிற்றுக் கிழமை காலை இவரது ஐம்பத்து ஒன்றாவது நூல், வெளியீட்டு விழா கண்டது.

     மிக மிக எளிமையாய்.

     தஞ்சாவூர், சரபோசி நகர், அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயத்தில், இறைவியின் திருமுன் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பல்கலைக் கழக
அகராதியியல் துறை
மேனாள் தலைவர்
முனைவர் எச்.சித்திர புத்திரன் அவர்கள்
வெளியிட

தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரி
தமிழ்த் துறைப் பேராசிரியர்
முனைவர் கண்ணம்மாள் அவர்கள்
முதற் படியினைப் பெற்றுக் கொண்டார்.




இவர்தான்
பேராசிரியர், எழுத்தாளர், கவிஞர்
ஹரணி

இவரது
ஐம்பத்தி ஒன்றாவது நூல்


விழாத இடத்தில் விழுந்த மழைத்துளி

19 கருத்துகள்:

  1. திரு. ஹரணி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளும் கூடி...

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான பகிர்வு.   எடுத்துக் காட்டி இருக்கும் வரிகள் யாவும் வெகு சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள ஜெயக்குமார்
    வணக்கம். கொடுத்து வைத்தவன். தங்கள் விமர்சனத்திற்கு மனத்தின் ஆழத்திலிருந்து நன்றியுரைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. எழுத்தை வசப்படுத்தியவர். அதன் மூலம் பலரின் இதயங்களையும். நல்ல மனசுக்கும் படைப்புகளுக்கும் சொந்தக்காரர்.
    நலமோடு வாழ்க.. எல்லாச் சிறப்புகளும் அடைக என மனப்பூர்வமாய் வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. கவிதைகள் அருமை.வாழ்த்துக்கள் ஹரணி அவர்களுக்கு.
    விமர்சனம் மிக அருமை.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. அற்புதமாக எழுத்தாளர் ஹரணி பற்றி தெரிய வேண்டிய விடயங்களைச் சொல்லி இருக்கிறீர்கள். தினமும் ஐம்பது பக்கங்களை யாவது வாசிப்பது எழுதுவது என்று இருக்கும் அவருடைய கொள்கை மிகவும் பிடித்திருக்கின்றது. நன்றி சார்

    பதிலளிநீக்கு
  7. ஒவ்வொரு வரிகளும் அருமை...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா...

    பதிலளிநீக்கு
  8. பெரும்பலும் குறும்பாக்கள் சரியாகப் புரிந்துகொள்ளப் படுவதில்லை அதுவே அட்வாண்டேஜும் டிஸட்வாண்டெஜும்அவரது பின்னூட்டங்கள் உற்சாக மூட்டுபவை அன்னாருக்கு என் மனங்கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. இன்று சில கவிஞர்கள் காதல் என்று எதையெதையோ எழுதிக்குவிக்கும் போது கவிஞர் ஹரணி மற்றவர்கள் பார்க்காத பக்கங்களை உள்ளத்தை நெருடும் வகையில் உண்மையாக அவதானித்தவற்றை அருமையான கவி வரிகளில் அழகாகத்தந்துள்ளார்.பாராட்டுகள். அவரைப்பற்றிய அறிமுகமும் மிகவும் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்....உடுவை.எஸ்.தில்லைநடராசா-இலங்கை

    பதிலளிநீக்கு
  12. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
    திரு.ஹரணி அவர்களின் சாதனைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. Happy New Year

    அருமை

    www.nattumarunthu.com
    nattu marunthu kadai online
    nattu marunthu online

    பதிலளிநீக்கு
  14. எடுத்துக் காட்டியிருக்கும் வரிகள் சிறப்பு. ஹரணி அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிவிட்ட உங்களுக்கும் நன்றி. சிறப்பான பகிர்வு - பாராடுகள்.

    பதிலளிநீக்கு
  15. மனதை கவரும் நடை। அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  16. அருமையான தலைப்பு

    பதிலளிநீக்கு
  17. இந்நூலை எந்த பதிப்பகம் வெளியிடுகிறது சார்

    பதிலளிநீக்கு
  18. இனிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு