21 ஜூன் 2020

வலைச் சித்தருக்கு ஜெ
     நண்பர்களே, வணக்கம்.

     2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் நாள்.

     நான் வலை உலகினுள் நுழைந்த நாள்.


     எட்டு வருடங்களும், பத்து மாதங்களும் கடந்திருக்கின்றன.

     இதுவரை 449 பதிவுகள் மட்டுமே எழுதியிருக்கிறேன்.

     தொடக்கத்தில் மாதம் ஒரு பதிவு.

     தற்பொழுது வாரம் ஒரு பதிவு.

     வலையுலக வாழ்வு மகிழ்வாகத்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.

     இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா என நாட்டு எல்லைகளைக் கடந்து, உலகு முழுவதும், எண்ணற்ற சகோதர, சகோதரிகளை இந்த வலையுலகு ஒன்றாக இணைத்திருக்கிறது.

     வலையுலகின் பலமே இதுதான்.

     உலகு முழுவதும் பரவி இருக்கும், தமிழ்ச் சொந்தங்களின், உற்சாக வாழ்த்துகளும், உத்வேகமூட்டும் ஊக்குவிப்புகளும்தான், வாழ்வின் அன்றாட சோதனைகளுக்குள் மூழ்கி மூச்சுத் திணறாமலும், வேதனைகளின் மடியில் வீழ்ந்து பலியாகாமலும் என்னைக் காத்து வருகிறன.

     நினைத்தால் எனக்கே வியப்பாக இருக்கிறது.

     இந்த வலையுலகின் பயனாய், இதுவரை பத்து நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறேன்.

     சில நாட்களுக்கு முன், திண்டுக்கல்லில் இருந்து, ஓர் அழைப்பு, அலைபேசி வழி அழைத்தது.

     வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் ஐயா.

     இவரை வலைப்பூவின் நடமாடும் கலைக் களஞ்சியம் என்று கூட அழைக்கலாம்.

     அன்று முதல், இன்று வரை, வலைப்பூவில் ஏதேனும் சிக்கல் எனில், திண்டுக்கல்லாரே சரணம் என்பது வழக்கமாகிவிட்டது.

     எத்துணை முறை அழைத்தாலும், அத்துணை முறையும், கொஞ்சமும் சலிக்காமல், அன்பொழுகப் பேசும் உன்னத மனிதர்.

     அமேசானுக்கு வாருங்கள். வலைப் பூ பதிவுகளை எல்லாம், மின்னூலாக்கி. அமேசான் இணைய தளத்தில் பதிவேற்றுங்கள். ஆவணப்படுத்துங்கள் என்றார்.

     வலைச்சித்தரின் வார்த்தையை மீற முடியுமா?

     அமேசான் தளத்தில் நுழைந்து, முயன்று பார்த்தேன்.

     எளிமையாகத்தான் இருந்தது.

     இதோ, இன்று எனது நான்கு மின்னூல்கள், அமேசான் தளத்தில் இடம் பிடித்துள்ளன.

பயணங்கள்


வாழ்க்கைப் பயணத்தில், பார்த்து பரவசப்பட்ட, ஒரு சில பயணங்களின் தொகுப்பு

 வெற்றிவேல் முருகன் பேசுகிறேன்


பிறவியிலேயே ஒளியில்லாக் கண்களுடன் பிறந்தும், சோர்ந்துவிடாமல், மூலையில் முடங்கிவிடாமல், விடாது முயன்று, தன்னந்தனியே அமெரிக்கா பறந்து, வாழ்வில் வெற்றிபெற்ற மனிதரின் கதை


போர்க்கள கடிதங்கள்


பொதுப்பணித் துறையில், பொறியாளராய் தான் வகித்தப் பதவியினை துச்சமாய் எண்ணி, தூக்கி எறிந்துவிட்டு, இராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.
இரண்டு போர்க்களங்களில் பங்கு பெற்று. துப்பாக்கிக் குண்டினைப் பரிசாய் பெற்றவர்.
போர் முனையில் இருந்து, தன் குடும்பத்தினருக்கும், தனது நண்பருக்கும் இவர் எழுதிய கடிதங்கள்தான் இந்நூல்.


உறைபனி உலகில்


நாமெல்லாம் பயணங்கள் பலவற்றை மேற்கொண்டவர்கள்தான். அடுத்த ஊருக்குச் சென்றிருப்போம், அடுத்த மாநிலத்திற்குச் சென்றிருப்போம், நம்மில் சிலர் அடுத்த நாட்டிற்கும் சென்றிருப்போம்.
நாம் மேற்கொண்ட பயணங்களின் எல்லை குறுகியது. காலமும் குறுகியது
ஆனால் இவரோ, கடலிலேயே 12,000 கிமீ பயணித்து, உலகின் தென் துருவமாம் அண்டார்டிகாவில், முழுதாய் 480 நாட்களைச் செலவிட்டிருக்கிறார்.
வாருங்கள் இவரோடு சேர்ந்து நாமும் இவரது பயணத்தை, பயணித்துப் பார்ப்போம்


     எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில், நான்கு நூல்களையும், கட்டணம் ஏதுமின்றித் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

     தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள் நண்பர்களே.

     மீண்டும் ஒருமுறை சொல்லிக் கொள்கிறேன்.

     வலைச்சித்தருக்கு ஜெ.

ஒலிப்பேழை

47 கருத்துகள்:

 1. மனம் நிறைந்த வாழ்த்துகள் நண்பரே மேலும் தொடர்ந்து... மின்நூல்கள் வரட்டும்.

  தற்சமயம்கூட சித்தரிடம் டவுட்டு கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்.

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
 3. அறிவை விரிவு செய்து அகண்டமாக்கிய தங்களுக்கும் அதற்குத் தூண்டுகோலாய் இருந்த வலைச்சித்தருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! இனிய பாராட்டுக்கள்!!

  பதிலளிநீக்கு
 5. திண்டுக்கல் தனபாலனுக்கும் கரந்தையாருக்கும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா. மேலும் பல மின்னூல்கள் வெளியிட எனது வாழ்த்துகள்.....

  பதிலளிநீக்கு
 7. நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் பலப்பல...முயற்சி மேலும் மேலும் தொடர்ந்து பெருகட்டும். வாழ்த்துக்கள்

  உடுவை.எஸ்.தில்லைநடராசா---இலங்கை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வாழ்த்து பெரு மகிழ்வினை அளிக்கிறது
   நன்றி ஐயா

   நீக்கு
 8. வணக்கம் ஐயா உண்மையில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்க வேண்டும் தொடர்ந்து தமிழோடு இணைந்திருங்கள்

  பதிலளிநீக்கு
 9. இதற்கு காரணமான அண்ணன் ஜோதிஜி அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...

  மேலும் பல மின்னூல்கள் பெருக வாழ்த்துகள் ஐயா... உங்களின் பல பதிவுகள் ஆவணப்படுத்த வேண்டும் என்று எனக்கு விருப்பம்... அவ்வளவே... நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தனபாலன். ஆணி வேர் வெளியே எப்போதும் தெரியாது.

   நீக்கு
  2. நன்றி ஐயா
   தங்களால்தான் மின்னூல் வெளியிட எண்ணமே வந்தது

   நீக்கு
  3. உண்மைதான் ஐயா
   ஆணிவேர் வெளியே தெரியாதுதான்
   நன்றி ஐயா

   நீக்கு
 10. வாழ்த்துக்கள் ஜயா .மென்மேலும் நீங்கள் நிறைய மின் நூல்கள
  பதிக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன் .....

  பதிலளிநீக்கு
 11. களத்தில் இறங்கிவிட்டீர்கள். உங்களுடைய அபார முயற்சியும், ஆர்வமும் போற்றத்தக்கதாகும். உங்களின் வித்தியாசமான நடையை ரசிப்பவர்களின் நானும் ஒருவன். நூல்களை வாசிப்பேன். தொடர்ந்து எழுத மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்துகள். உங்களுடைய தரமான பதிவுகள் மின்னூலாக வேண்டியது அவசியம்தான். அச்சுப்பிரதிக்கான மாற்றான மின்னூல்கள் உலகை அடையச் செய்வதில் அமேசான் போன்ற தளங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. நல்ல் ஆலோசனை தந்த டிடிக்குபாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 13. வாழ்த்துகள்! பாராட்டுகள்!

  துளசிதரன்

  கீதா

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்துகள் சார். வலைசித்தர் பற்றி நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மைதான்

  பதிலளிநீக்கு
 15. வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துக்கள் எல்லாம் மின்னூல் ஆக வாழ்த்துக்கள்.

  திண்டுக்கல் தன்பாலன் அவர்கள் ஆலோசனைக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 16. தாங்கள் வலை பூவுக்குள் நுழைந்த தேதியை ஞாபகம் வைத்திருப்பது அருமை நண்பரே . இப்போது கூட வலை சித்தரிடம் உதவி கோரினேன். வழக்கம் போல் எனக்கும் உதவினார். அவரை பற்றி சொன்னது உண்மை தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைச்சித்தர்
   நமக்க வரமாகக் கிடைத்த சித்தர்
   நன்றி நண்பரே

   நீக்கு
 17. நானும் வலைப்பூவில் எதாவது பிரச்சனைன்னா தனபாலன் அண்ணாவைதான் கேட்பேன்..

  பதிலளிநீக்கு
 18. மின்னூல் வெளியிட்டதற்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் சார்.

  4    புத்தகங்களை அமேசான் தளத்தில் வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்
  தங்களுக்கு ஆலோசனை கொடுத்து  புத்தகம்  வெளியிட உதவிய டீடீ சாருக்கும் வாத்துக்கள்.

  ***

  வெற்றிவேல் முருகன் பேசுகிறேன்  இந்த பெயர் எங்கோ கேள்விபட்டதாக இருக்கிறதே என
  உடனடியாக கிண்டிலில் புத்தகம் வாங்கி கையோடு வாசித்தும் முடித்துவிட்டேன்.

  தற்போது  தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னேற்றத்தின் காரணமாக
  பார்வையற்றோரது வாழ்க்கை முறை எவ்வளவோ  மாறி இருக்கிறது.

  இன்றைக்கு ஒரு பாற்வையற்றவர் தனியாக  வெளிநாடுகளுக்கு செல்வது பெரிய விசயம்
  கிடையாது.

  இருபது ஆண்டுகளுக்கு முன்பு
  அமேரிக்காவிற்கு தனியாகச் சென்று   ஒரு பக்கம் கல்லூரிக்கு சென்று இன்னொரு
  பக்கம் கல்லூரியில்  உதவி பேராசிரியராக பணி புரிந்த
  வெற்றிவேல் முருகன் ஐயா அவர்கள் என்னை போன்ற பார்வையற்றவர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் மனிதர்.

  தங்களது மற்ற புத்தகங்களையும் வாசித்துவிட்டுச் சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்து கண்டு மகிழ்ந்தேன் நண்பரே
   தாங்களும் வாழ்வின் உச்சம் தொட வாழ்த்துகள்

   நீக்கு
 20. கரந்தையார் அவர்களுக்கு,.
  மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
  தனபால் ஒரு நல்ல சேவகர்.

  பதிலளிநீக்கு
 21. மிக்க மகிழ்ச்சி கரந்தையாரே! தங்களின் நான்கு மின் நூல்களையும் தரவிறக்கம் செய்துகொண்டேன். முதல் பார்வையாகப் பார்த்தும் விட்டேன். அழகாக வந்துள்ளன.

  இன்னும் சில மேம்பாடுகளையும் செய்யவேண்டும். தங்களுக்கு நேரம் இருப்பின் என்னை அலைபேசியிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாமே!

  (இதுவரை நீங்கள் எழுதியுள்ளவை ஏராளம். அவற்றிலிருந்து பத்து அல்லது பதினைந்து கட்டுரைகள் வீதம் தேர்ந்தெடுத்தாலும் இன்னும் பத்து நூல்களாவது உருவாக்க முடியும். எனவே வலைப்பதிவுகளை ஒரு மாதத்திற்கு ஒத்திப்போடுங்கள். நூல்களை உருவாக்குங்கள். தாமதித்தால் நம்மை அறியாமலேயே காலம் ஓடிப்போய்விடும்.)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வாழ்த்து மிகுந்த மகிழ்வினை அளிக்கிறது ஐயா
   அவசியம் தங்களைத் தொடர்வு கொள்கிறேன் ஐயா
   நன்றி

   நீக்கு
 22. மனம் நிறைந்த வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு