மாணவ, மாணவியர் உற்சாகமாக பள்ளியை விட்டு,
தங்கள் வீடுகளை நோக்கி, கூட்டம் கூட்டமாக சிரித்துப் பேசிக் கொண்டே நடக்கத்
தொடங்கினர்.
ஒரு மாணவன் மட்டும், புத்தகப் பையினை தோளில்
சுமந்தபடி, அவ்வூரையும் தாண்டி நடந்து சென்று கொண்டிருந்தான். ஒன்பது வயதே
நிரம்பிய மாணவன் அவன்.
